ஹஜ்ஜின் இடம், கால எல்லைகள்

1684

ஹஜ்ஜின் இடம், கால எல்லைகள்

அரபு மொழியில் ஹஜ்ஜின் இடம், கால எல்லைகள் என்றால் என்ன?

இரண்டு பொருட்களுக்கிடையில் உள்ள எல்லை

நடைமுறை வழக்கில் ஹஜ்ஜின் இடம், கால எல்லைகள் என்றால் என்ன?

அடியார்களுக்காக வேண்டி இஸ்லாம் வரையறை செய்துள்ள இடம், காலம் சார்ந்த எல்லைகள்

காலம், இடம் சார்ந்த எல்லைகளின் வகைகள்

முதலாவது : இடம் சார்ந்த எல்லைகள்

இடம் சார்ந்த எல்லைகள்

இஸ்லாம் இஹ்ராம் கட்டுவதற்காக வேண்டி வரையறுத்த இடங்கள்

ஹஜ், உம்ரா செய்ய விரும்புபவர் இஹ்ராம் ஆடையை அணியாமல் அந்த இடங்களை கடக்க முடியாது, அதன் வகைகள் ஐந்து ஆகும் (அல்மவாகீத் வஅப்ஆதுஹா – அஷ்ஷைக் அப்துல்லாஹ் அல்பஸ்ஸாம், மஜாள்ளது மஜ்மஈல் பிக்ஹில் இஸ்லாமி, எண்ணிக்கை 3, பாகம் – 3, பக்கம் 1553 )

1-துல்ஹுலைபா

இது தற்போது மதீனாவுக்கு தெற்கே உள்ளதாகும், இதற்கு அப்யார் அலி என்று சொல்லப்படும், மக்காவிலிருந்து சுமார் 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகும். இது மதீனாவாசிகளின் இஹ்ராம் ஆடை அணியும் எல்லையாகும்.

துல்ஹுலைபா

2-ஜுஹ்பா

இது மதீனது ராபிஹ் என்பதற்கு அண்மையில் உள்ளதாகும். மக்காவிலிருந்து சுமார் 186 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகும், இது ஷாம், எகிப்து, மொரோக்கோ வாசிகளின் இஹ்ராம் ஆடை அணியும் எல்லையாகும்.

ஜுஹ்பா

3- யலம்லம்

இது யமனிலிருந்து மக்கா நோக்கி வரும் பாதையில் உள்ள பெரிய பள்ளதாக்காகும், தற்போது இதற்கு சஹ்திய்யா என்று அழைக்கப்படும், மக்காவிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகும், இது யமன் பகுதி மக்களின் இஹ்ராம் ஆடை அணியும் எல்லையாகும்.

யலம்லம் ( சஹ்திய்யா )

4- கர்னு மனாஸில்

தற்போது இதற்கு சைல் கபீர் என்று சொல்லப்படும், மாக்காவில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகும், இது தாயிப், மற்றும் நஜ்த் பகுதி மக்களின் இஹ்ராம் ஆடை அணியும் எல்லையாகும். இதேபோன்று ஹதா பகுதியில் தாயிப் வழியாக மஹ்ரம் என்ற பள்ளத்தாக்கு உள்ளது, இது இரண்டும் தாயிப் வழியாக வருபவர்களுக்கும்,நஜ்த் பகுதி மக்களுக்கும் இஹ்ராம் ஆடை அணியும் எல்லையாகும்,

கர்னு மனாஸில் ( சைல் கபீர் )

5- தாது இர்க்

இது தற்போது லர்பிய்யா, அல்லது ஹர்பிய்யாத் என்று அழைக்கப்படும், மக்காவுக்கு கிழக்கு பக்கமாக உள்ள பகுதியாகும், சுமார் மக்காவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகும். இது தற்போது

இது ஈராக், ஈரான், அதை அண்டிய பகுதி மக்களின் இஹ்ராம் ஆடை அணியும் எல்லையாகும். நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரழி) அறிவிக்கிறார்கள்: «நபியவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைபாவையும் ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்பாவையும் நஜ்த் பகுதி மக்களுக்கு கர்னு மனாசிலையும் யமன் பகுதி மக்களுக்கு யலம்லம் என்ற இடத்தையும் எல்லையாக ஆக்கினார்கள், அந்த எல்லைகள் ஹஜ், உம்ரா செய்ய வருகின்ற அந்த பகுதி மக்களுக்கும் அந்த வழியாக வருகின்ற அவர்களல்லாத ஏனையவர்களுக்கும், அந்த இடங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள்,» (புஹாரி, முஸ்லிம் )

தாது இர்க் என்ற எல்லை இந்த ஹதீஸில் குறிப்பிடப்படவில்லை, இதனை உமர் ( ரழி ) அவர்கள் (நூல் : புஹாரி )

|

தாது இர்க் ( ஹர்பிய்யாத் )

இரண்டாவது காலம் சார்ந்த எல்லைகள்

மீயாகாத்தின் காலங்கள்

ஹஜ் உம்ராவின் காலம்

1. ஹஜ்ஜுடைய காலத்துக்கான மீயாகாத்

ஹஜ்ஜுடைய மாதங்கள்:

ஸவ்வால்,துல்கவுதா,துல் ஹஜ்ஜின் 10 நாட்கள்

2. உம்ராவுடை காலத்துக்கான மீயாகாத்

அனைத்து வழிமுறைகளும்

சில சட்டங்கள்

-இந்த இடங்களில் இஹ்ராமுடைய ஆடையை அனியாமல் யார் தான்டிச்செல்கிராரோ அவருக்கு முடியுமென்றால் திரும்பி வந்து இஹ்ராமுடைய ஆடையை அனிவது அவசியமாகும். அவருக்கு திரும்பி வர முடியாதென்றால் பித்யா

கொடுப்பது அவசியமாகும். பித்யா- மக்காவிலே ஓர் ஆட்டை பலியிட்டு ஹரத்திலே உல்ல ஏழைகளுக்கு கொடுப்பது அவசியமாகும்.

-அந்த ஊர் வாசிகளை தவிர யார் மீகாத்தை கடந்து செல்கின்றார்களோ அவர்கள் அங்கிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும். நஜ்தை சேர்ந்த யாராவது மதீனாவினூடாக மக்காவிற்கு வந்தால் அவர் அப்யாரில் வைத்து இஹ்றாம் கட்டுவார்.

-மீக்காத்தில் அல்லாது மக்காப் பகுதியில் எவர்களுடைய இருப்பிடம் இருக்குமோ அவர்கள் அவர்களுடைய இடத்திலிருந்தே ஹஜ்ஜிற்காகவும் உம்ராவிற்காகவும் இஹ்றாம் அணிவார். உதாரணம் – ஜித்தா வாசிகள்,புஹ்ரா, அஷ்ஷராய் வாசிகள்

- தரைமார்க்கமாக அல்லது கடல், ஆகாய மார்க்கமாக ஒருவர் சென்று அவர்கள் மீகாத்தை கடக்கவில்யாயின் அவர்கள் அவர்களுக்கு அருகில் உள்ள மீகாதில் இஹ்றாம் அணிந்து கொள்ளட்டும். உமர் ரழி அவர்கள் கூறினார்கள்.«அவர்கள் உற்று நோக்கட்டும் பின்னர் அவர்களது பாதையில் உள்ளவற்றை எடுத்துக் கொள்ளட்டும்». (ஆதாரம் புஹாரி)

- மக்கா வாசிகளோ அல்லது மக்காவில் உள்ளவர்களோ ஹஜ்ஜிற்காக நீய்யத் வைத்திருந்தால் அவ்விடத்திலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். ஆனால் உம்ராவை பொறுத்தவரையில் யார் நீயத்து வைக்கிறாரோ அவர்கள் தன்யீம், ஜஃரானா போன்ற ஹரத்தின் எல்லையில் உள்ள இடத்தில் இஹ்றாம் அணியட்டும்.