ஹஜ்ஜின் அர்க்கான்களும் வாஜிப்களும் சுன்னதாகழும்

869

ஹஜ்ஜின் அர்க்கான்களும் வாஜிப்களும் சுன்னதாகழும்

ஹஜ்ஜின் ருகூன்கள்

01-இஹ்ராம் :

நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «நிச்சயமாக செயற்கலெல்லாம் என்னங்களை கொண்டே அமைகின்றன ஒவ்வெரு மனிதனுக்கும் அவன் என்னியது கிடைக்கும் அவனுடைய ஹிஜ்ரத் இந்த உலகத்திற்காகவும் தான் மனக்க இருக்க்ம் பென்னுக்காகவும் இருந்தால் அவருடைய ஹிஜ்ரத்தின் மூலமாக அவன் நாடியது கிடைக்கும்»(ஆதாகம் புகாரி)

02-ஸபா மர்வாக்கு மத்தியில் தொங்கோட்டம் ஓடுதல்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «நீங்கள் தொங்கோட்டம் ஓடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் தொங்கோட்டத்தை கடமைய்யாக்கியுள்ளான்» (ஆதாரம் அஹ்மத்)

03- ஹஜ் என்பது அறபாவாகும்

அரபாவில் தரித்தல் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «ஹஜ் என்பது அறபாவாகும் ».(ஆதாரம் திர்மிதி)

04-தவாபுல் இபாலா

அல்லாஹ் கூறுகிறான் {(அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை 'தவாஃபும்' செய்ய வேண்டும்.} [ஹஜ் - 29].

வாஜிபாதுல் ஹஜ்

யார் ஹஜ்ஜின் ருகுன்களில் இருந்து ஓர் ருகுனை விடுகிறாரோ அவர் இஹ்ராமுடன் இருந்தாலும் அவரின் செயற்பாடுகள் வணக்கம் ஆகமாட்டாது. நிச்சயமாக அவர் நிய்யத்து வைக்கவில்லை. நிய்யத்து இல்லாமல் வணக்கம் கிடையாது. ருகுனாக அல்லது வேறு எதுவாக இருந்தாலும் திரும்ப அவர் செய்ய வேண்டும்.

வாஜிபாதுல் ஹஜ்

01-மிகாத்தில் இருந்து இஹ்ராம் அனிதல். மிகாத்தை குறிப்பிட்ட பின்னர் நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «அவைகளிடம் வேறு இடங்களில் இருந்து ஹஜ் உம்ராக்காக அவைகள் வருபவர்களுக்கானது»
.
(ஆதாரம் புகாரி)

02- அரபாவில் தரித்தல். பகலில் நிப்பவர் சூரியன் மறையும் வரை அரபாவில் தரிக்க வேண்டும். நிச்சயமாக நபியவர்கள் சூரியன் மறையும் வரை அரபாவில் தரித்தார்கள்

03-முஸ்தலிபாவில் தரித்தல். நபி ஸல் அவர்கள் முஸ்தலிபாவில் தரித்து விட்டு சொன்னார்கள் «என் சமூகம் அவர்களின் வணக்கமாக எடுக்கட்டும் இந்த வருடத்தின் பின்னர் அவைகளை நான் சந்திக்க மாட்டேன்»(ஆதாரம் இப்னு மாஜா), நிச்சயமாக நபி ஸல் அவர்கள் முஸ்லிம்களில் பலவீனமானவர்களுக்கு நடு நிசித்து பிறகு முஸ்தலிபாவில் செல்வதற்கு அனுமதியளித்தார்கள்.

04-அய்யாமுத்தஸ்ரிக்கில் மினாவில் தரித்தல். நபியவர்கள் «ஆட்டு இடையர்களுக்கு மினாவில் தங்குவதற்கு அனுமதியளித்தார்கள்.»
(ஆதாரம் அபூ யுஃதி அவரது முஸ்கதில்.).இது மினாவில் தரிப்பதுதான் அடிப்படை என்பதை குறிக்கின்றது.

05-ஜ்மராத்துக்கு கல் எரிதல். அல்லாஹ் கூறுகிறான் {குறிப்பிட்ட நாட்களில்}[பகரா- 203].குறிட்ட நாட்கள் என்பது அய்யாமுத் தஷ்ரீகை குறிக்கின்றது.

கல் எரிவது இறைவனை ஞாபகம் செய்வதற்காகும். நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «கஃபாவை தவாப் செய்வதும் ஸபா மர்வாக்கிடையில் தொங்கோட்டம் ஓடுதலை நிறைவேற்றுவது அல்லாஹ்வை ஞாபகம் செய்வதற்காகும்»(ஆதாரம் அபூதாவுத்)

06-தலையை சிரைத்தல் அல்லது குறைத்தல். அல்லாஹ் கூறுகிறான் {உங்களுடைய தலையை சிரைத்தவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள்} [பத்ஹ் - 27].

07-தவாபுல் வதாஃ : இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள் «மனிதர்கள் இறுதி வணக்கமாக தவாப் செய்வது அவர்களின் காலத்தில் மாதவிடாய் பெண்களுக்கு இலகு படுத்துவதற்காக ஏவப்பட்டது»(ஆதாரம் முஸ்லிம்)

ஹஜ்ஜின் சுன்னத்கள்

01-இஹ்ராமுக்காக குளித்தல் மேலும் நறுமனம் பூசுதல்.

02-வெள்ளை நிற வேட்டியையும் போர்வையையும் அணிதல்.

03-இஹ்ராம் அணிந்ததில் இருந்து ஜமரதுல் அகபாவிற்கு செல்லும் வரை தல்பியா சொல்லுதல்

04-முப்ரதும், காரினும் தவாபுல் குதூம் செய்தல்.

05-தவாபுல் குதூமின் ஆரம்ப மூன்று சுற்றிலும் விரைந்து செயற்படுதல்

06-தவாபில் குதூமில் புஜத்தை வெளிப்படுத்தல்: போர்வையின் நடுப்பகுதியை வலது தோளின் கீழ் வைப்பார் இரண்டு ஓரத்தையும் இடது தோளின் கீழ் வைப்பார்

07-அரபா இரவு மினாவில் தரித்தல்

08-ஹஜருல் அஸ்வதை முத்தமிடுதல்

09-முஸ்தலிபாவில் இஷாவையும் மஃரிபையும் சேர்த்து முற்படுத்தி தொழுதல்.

10- முடியுமானால் பஜ்ரில் இருந்து சூரியன் உதயமாகும் வரை முஸ்தலிபா மஸ்அரில் ஹராமில் தரிப்பார். முடியாவிட்டால் முஸ்தலிபா எங்கிலும் தரிப்பார்

ஹஜ்ஜின் சுன்னத்கள்

யார் ஹஜ்ஜின் சுன்னத்திலுருந்து ஒன்றை விடுகிறாரோ அவர் மீது குற்றமில்லை. அவரது ஹஜ் சரியானதாகும்.

வாஜிபுல் ஹஜ்

யார் ஒரு வாஜிபை விடுகிறாரோ அவர் விட்ட குறைக்காக கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டும்