ஹஜ் பற்றிய அடிப்படைகள்

1129

ஹஜ் பற்றிய அடிப்படைகள்

வரலாற்று ரீதியாக மக்கா

மக்கா

பக் என்ற சொல்லில் இருந்து வந்ததாகும், அதன் அர்த்தம் பள்ளத்தாக்கு

மக்கா என்ற பெயர் பக்கா என்ற சொல்லாக வந்துள்ளது, அல்லாஹ் கூறுகின்றான் - {(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான் }[ஆல இம்ரான் : 96 ].

மக்காவின் வரலாறு கி.மு 19 நூற்றாண்டுகளை கடந்தது, இப்ராஹிம், இஸ்மாயில் போன்ற நபிமார்களின் காலத்தை சார்ந்தது, அவர்கள் தான் அங்கு ஆரம்பமாக வாழ்ந்தார்கள். அல்லாஹ் கூறுகிறான் {எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்}[இப்ராஹிம் : 37 ].

இப்ராஹிம் ( அலை ) அவர்களின் துஆவின் காரணமாக இஸ்மாயீல் ( அலை ) அவர்கள் தனது தாயிடம் நீரும் உணவும் அற்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் காலுக்கடியில் சம்சம் ஊற்று உருவானது, அதன் பின் அந்த இடத்தை நோக்கி பல கோத்திரங்கள் வந்தடைந்தது, அங்கேயே வாழ்கையை ஆரம்பித்தனர்.

அதன் பின் பல கோத்திரங்கள் அங்கே வந்தடைந்தது, குரைசிகள் நபி ( ஸல் ) அவர்கள் வரும் வரை அங்கே ஆட்சி அதிகாரம் செய்தனர், நபி ( ஸல்) அவர்களின் வருகை மக்காவிலும் உலகத்திலும் பாரிய தாக்கம் செலுத்தியது, நபி ( ஸல் ) மக்காவுக்கு அனுப்பப்பட்டார்கள், மக்கா முஸ்லீம்களின் கிப்லாவாக மாறியது, இஸ்லாமிய அழைப்புப் பணியின் தாயகமாக மாறியது, என்றாலும் மக்கள் அதனை விட்டும் விரண்டோடக்கூடியவர்களாக இருந்தனர், இஸ்லாத்தை ஏற்றவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லும் அளவுக்கு அவர்களை துன்புருத்தக்கூடியவர்களாக இருந்தனர், அங்கே இஸ்லாமிய தேசம் உருவானது, பின்பு நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டார்கள், அதன் பின் இற்றை வரைக்கும் மக்கா பெரிய இஸ்லாமிய தேசமாக மாறியது. மக்கா குறிப்பாக ஹரம் கலீபாக்கள், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் செலுத்தும் இடமாக மாறியுள்ளது, அவர்கள் அதனை விசாலப்படுத்தினார்கள், இஸ்லாமிய ஒளி உலகமெங்கும் பரவ அதனை கேந்திர நிலையமாக பயன்படுத்தினார்கள்.

மக்காவின் சிறப்பு

1-யார் அங்கே நுழைகிறாரோ அவர் அச்சம் தீர்ந்தவராக மாறிவிடுகிறார்.

இறைவன் கூறுகிறான் : {மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்}. [ஆல இம்ரான் : 97 ], மக்கா

2-அங்கே தஜ்ஜால் நுழைய மாட்டன், ( தாஊன் என்ற ) தோற்று நோயும் ஏற்படாது.

நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ( ரழி) அறிவிக்கிறார்கள்: «மக்காவும் மதீனாவும் மலக்குமார்களால் சூழ்ந்திருக்கும், அதில் ஒவ்வொரு வாயிலுக்கும் (பாதை) மலக்கு இருப்பார், அங்கே தஜ்ஜால் நுழைய மாட்டான், ( தாஊன் என்ற ) தோற்று நோய் ஏற்படாது,» (நூல் : அஹ்மத் )

3-மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது ஒரு இலட்சம் தொழுகை தொழுவது போன்றதாகும்.

ஜாபிர் ( ரழி ) அறிவிக்கிறார்கள் : «நிச்சயமாக நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விட சிறந்ததாகும். »(நூல் : இப்னு மாஜா )

4-அது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான இடமாகும்

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : «அல்லாஹ் மீது அணையாக நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் சிறந்த இடத்தில், இன்னும் அல்லாஹ்வுக்கு விருப்பமான அல்லாஹ்வின் இடத்தில் இருக்கிறீர்»(நூல் : திர்மிதி )

மக்கா

மக்கா, ஹரம் பற்றிய குறிப்பிட்ட சட்டங்கள்

1- யார் ஹரதிலே தீங்கு செய்ய நினைகிறாரோ அதனை அவர் செய்தாலும் சரி செய்யாது விட்டாலும் சரி அவருக்கு கடுமையான தண்டனை உண்டு

இறைவன் கூறுகிறான்: {மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.}[சூரத்துல் ஹஜ் : 25 ].

அல் இல்ஹாத் : அல்லாஹ்வுக்கும் செய்யும் பாவமான காரியங்கள்.

நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரழி ) அறிவிக்கிறார்கள் «மனிதர்களிலே அல்லாஹ்வுக்கு கோபமானவர்கள் மூன்று நபர்கள் அவர்களில் ஒருவர் ஹரதிலே இருக்கும் பொழுது தீங்கு செய்ய நினைப்பவர் »(நூல் : புஹாரி )

2-போர் செய்து, இரத்தம் சிந்த வைப்பது ஹராமாகும்.

இறைவன் கூறுகிறான் : {(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;}[சூரத்துல் பகரா : 125 ]. யார் அதிலே நுழைகிறாரோ அவர் பாதுகாப்பு அளிக்கப்படுகிறார். அதனால் தான் நபியவர்கள் கூறினார்கள் : «உங்களில் ஒருவர் மக்காவுக்குள் ( ஹரம்) ஆயுதத்தை சுமந்து சொல்வது ஹராமாகும்,»(நூல் : முஸ்லிம் ) நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்: «நிச்சயமாக் இறைவன் மக்காவை ஹராமாக்கி இருக்கிறான், மக்கள் அதனை ஹராமாக்க வில்லை, யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அதிலே இரத்தம் சிந்த வைப்பது, அங்கே இருக்கும் மரங்களை பிடுங்குவது (வெட்டுதல்) ஹராமாகும் »( நூல் : புகாரி ).

போர் புரிதல், இரத்தம் சிந்த வைத்தல்

3- இணை வைப்பாளர்கள், காபிர்கள் ஹரத்திற்குள் நுழைவது ஹராமாகும்

இறைவன் கூறுகிறான்: { ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; }[சூரத்து தௌபா : 28 ].«இந்த வருடத்திற்கு பிறகு இணை வைப்பாளர்கள் எவரும் ஹஜ் செய்ய கூடாது, நிர்வாணமாக எவரும் கஃபாவை தவாப் செய்ய கூடாது என்று அறிவிக்குமாறு நபியவர்கள் மினாவில் இருக்கும் போது ஏவினார்கள். »(நூல் : புகாரி )

4 – வேட்டையாடுவது, மரங்களை பிடுங்குவது, ஹரதிலே உரியவரின்றி தொலைந்து கிடக்கும் பொருட்களை எடுப்பது ஹராமாகும்(உரியவர் இன்றி காணப்படும் பொருள்)

நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரழி ) அறிவிக்கிறார்கள் : «அல்லாஹ் மக்காவை ஹராமாக்கி இருக்கிறான் எனக்கு முன்னாலோ, பின்னாலோ எந்த ஒருவருக்கும் ஹலாலாக்கவில்லை, பகல் பொழுதில் குறிப்பிட்ட ஒரு நேரம் ( இரத்தம் சிந்த வைக்க ) ஹாலாலாக்கப்பட்டது, (மரங்களை வெட்டுவது) அங்கே நடப்பட்டிருக்கும் மர கன்றுகள், மரங்களை பிடுங்க (வெட்டுதல் ) முடியாது, அங்கே மிருகங்களை ( வேட்டையாட ) விரட்ட முடியாது, (( பிராணிகளை ) விரட்டுதல் ) உரியவரின்றி தொலைந்து கிடக்கும் பொருட்களை எடுக்க கூடாது.»(நூல் : புகாரி ).

ஹஜ்ஜின் இடங்கள்

ஹஜ்ஜின் இடங்கள்

ஹஜ் வணக்கம் மேற்கொள்ளும் பிரதான இடங்கள்

1-அரபாத்

அரபாத் என்ற சொல்லின் ஒருமை அரபதுன் என்பதாகும், அரபாத் என்று பெயர் வர காரணம் அங்கேதான் ஆதம், ஹவ்வா அலை ஒருவரையொருவர் சந்தித்தனர், அல்லது அந்த இடத்தில் வைத்து மனிதர்கள் தங்களின் பாவங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

அராபத் ஹரத்தின் எல்லைக்கு வெளியே உள்ள இடமாகும். மஸ்ஜிதுல் ஹராமின் தென்கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகும், அதன் பரப்பளவு 10. 4சதுர கிலோமீட்டர் ஆகும். அதிலே துல்ஹாஜ் ஒன்பதாம் நாளில் மக்கள் ஒன்ருசேர்கின்றனர் .

மஸ்ஜிதுன் நமிரா

நமிரா என்பது பள்ளிக்கு மேற்கில் உள்ள மலையாகும், அதனால் அந்த பள்ளிக்கு மஸ்ஜிதுன் நமிரா என்று பெயர் வந்தது.

நபியவர்கள் உரனா பள்ளத்தாக்கு வழியாக அங்கே வந்தார்கள், பிரசங்கம் செய்து தொழுகை நடாத்தினார்கள், அவர்கள் பிரசங்கம் செய்து தொழுகை நடாத்திய இடத்தில் அப்பாஸிய ஆட்சிக்காலத்தில் முதல் வருடத்திலே பள்ளிவாசல் கட்டப்பட்டது, அதன் பரப்பளவு 110 ஆயிரம் சதுர மீட்டர் அளவிற்கு சவூதி அரேபியாவின் ஆட்சிக்காலத்தில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது, அதிலே துல்ஹாஜ் ஒன்பதாம் நாளில் மக்கள் ஒன்ருசேர்கின்றனர் .

மஸ்ஜிது நமிரா

மஸ்ஜிது சஹராத்

இது அரபாத்தில் உள்ள ஜபலு ரஹ்மாவிற்கு பின்னால் உள்ளதாகும், அங்கே நபியவர்கள் அரபா நாளின் மாலைப்பொழுதை அங்கே கழித்தார்கள், அதிலே துல்ஹாஜ் ஒன்பதாம் நாளில் மக்கள் ஒன்ருசேர்கின்றனர் .

மஸ்ஜிது சஹராத்

ஜபலு ரஹ்மா

பெரிய கற்களை கொண்ட சிறிய மலையாகும், மக்காவிற்கு கிழக்கு பக்கமாக இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகும், நன்கு விசாலமான சுமார் 640 மீட்டர் மேற்பரப்பை கொண்டதாகும், அதிலே துல்ஹாஜ் ஒன்பதாம் நாளில் மக்கள் ஒன்ருசேர்கின்றனர் .

ஜபலு ரஹ்மா

2- மினா

இது மஸ்ஜிதுல் ஹராமின் வடகிழக்கு பக்கமாக சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் மக்காவுக்கும், முஸ்தளிபாவுக்கும் இடையில் உள்ளதாகும், இதில் அவசரமாக ஹஜ்ஜை முடிக்க வேண்டும் என நினைக்கும் ஹஜ்ஜாஜிகள் துல்ஹஜ் மாத பிறை 11, 12 ம் ஆகிய இரவுகளில் தங்குவார்கள், அவசரம் இல்லையனில் 13 ம் இரவிலும் தங்குவார்கள், இது ஹரத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும், இங்கே மஸ்ஜிது ஹைப், ஜமராத் போன்றவைகள் காணப்படுகிறது.

மினா

ஜமராத்

ஜமராத் என்பது ஜம்ராஹ் என்ற சொல்லின் பன்மையாகும், இதற்கு சிறிய கற்கள் என்று பொருள் சொல்லப்படும்,

மினாவிலே இவ்வாறு மூன்று ஜமராத் காணப்படுகிறது, அவையாவன : ஜமராத் சுஹ்ரா, ஜமராத் வுஷ்தா, ஜமராத் அகபா, இவைகள் அங்கு இருக்கும் மூன்று தூண்களுக்கு சொல்லப்படும் பெயராகும். இவைகள் இப்ராஹீம் ( அலை ) அவர்கள் சைத்தானுக்கு கல் எரிந்ததற்கு அடையாளமாக உள்ளவையாகும், ஜம்ரத்துல் அகபா மற்றும் ஜம்ரத்துல் வுஷ்தா ஆகியவற்றுக்கிடையில் சுமார் 247 மீட்டர் தூரமும், ஜம்ரத்துல் வுஷ்தா மற்றும் ஜம்றது சுஹ்ரா ஆகியவற்றுக்கிடையில் சுமார் 200 மீட்டர் தூரத்தினை கொண்டதாகும்.

மஸ்ஜிது ஹைப்

ஜம்றது சுஹ்ராவிற்கு அண்மையில் மினாவின் வடக்கு பக்கமாக உள்ள மலைக்கு பக்கத்தில் உள்ளதாகும்.

மஸ்ஜிது ஹைப்

3-முஸ்தலிபா

முஸ்தலிபா என்பது அரபா, மினா ஆகியவற்றுக்கிடையில் உள்ள இடமாகும். அரபாவில் ஹஜ்ஜாஜிகள் ஒன்று கூடியதன் பின் மினாவில் தங்குவார்கள், முஷ்தளிபாவிற்கு நடுவிலே, அந்த இடத்தில் தங்குவது ஹஜ்ஜாஜிகளுக்கு சுன்னத்தாகும், அங்கே இருந்து கொண்டு இறைவனை பிரார்த்திப்பார்கள், அவனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்துவார்கள், ஹஜ்ஜாஜிகள் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் சூரியன் மறைந்ததன் பின் அரபாவில் இருந்து வெளியாகி முஸ்தலிபாவில் இரவை கழிப்பார்கள்.

முஸ்தலிபா

4- மஜிதுல் ஹராம்

கஃபா

கஃபா சதுர வடிவிலான ஓர் இடமாகும்.

ஹிஜ்று இஸ்மாயில்

இது கஃபாவிலிருந்து வடக்கு பக்கத்தில் உள்ள பகுதியாகும். குறைஷிகள் கஃபாவை கட்டும் போது அதனை பூரணமாக கட்டமுடியாமல் வருமானம் குறைவாக இருந்தது, அது கஃபாவின் ஒரு பகுதி என்பதை காட்டுவதற்காக வளைவு போன்ற ஒரு சுவரை வைத்திருக்கிறார்கள். இந்தப்பெயர் மார்க்கம் அல்லாமல் மக்கள் மத்தியில் உருவான பெயராகும்.

ஹஜருல் அஸ்வத்

இது கஃபாவின் கதவுக்கு இடது பக்கமாகவும் கஃபாவின் தெற்கு பக்கமான தூணில் உள்ளதாகும். இந்தக் கல் சுவர்கத்தின் கல்லாகும். இந்தக் கல் நன்கு உடைக்கப்பட்டு தற்போது ஈத்தம் பழத்தின் அளவை போன்று எட்டு சிறிய கற்களாக காணப்படுகிறது.

ஹஜருல் அஸ்வத்

ருக்னுல் யமானி

இது கஃபா தென் மேற்கு பகுதியில் உள்ள தூணாகும். அது எமன் நாட்டை நோக்கி இருப்பதால் அதனை ருக்னுல் யமானி என்று அழைக்கப்படும், அதன் சிறப்பம்சம் என்னெவெனில் இப்ராஹீம் (அலை ) கஃபாவை கட்டிய ஆரம்ப கால தூணாகும்.

ருக்னுல் யமானி

முல்தசம்

கஃபாவின் கதவுக்கும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கும் இடைப்பட்ட சுமார் இரண்டு மீட்டர் அளவை கொண்டதாகும், அந்த இடத்தில் துஆ கேட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படும், துஆ கேட்கும் போது இரு தோல் புயத்தையும், நெஞ்சையும் முடங்கைகளையும், உள்ளங்ககையும் சேர்த்து வைத்து துஆ கேட்க வேண்டும்