ஹஜ் உம்ரா செய்யும் முறை

3718

ஹஜ் உம்ரா செய்யும் முறை

ஹஜ் செய்யும் முறை

யார் ஹஜ்ஜை நாடி வருகிறாரோ அவர் தமத்து அடிப்படையில் வருவார் அல்லது கிரான் அடிப்படையில் வருவார் அல்லது முப்ரதாக வருவார் தமத்து அடிப்படையில் வருபவர் உம்ராவுக்குப் பின்னால் இஹ்ராமுடைய ஆடையை களைவார் .கிரான் அடிப்படையில் அல்லது முப்ரதாக வருபவர் இஹ்ராமுடன் தொடர்ந்து இருப்பார்கள் ஹஜ் உடைய செயல்கள் எட்டாவது நாள் ஆரம்பித்து 13வது நாள் முடிவடையும் இவைகள் தான் இந்த நாட்களுக்கு ஏற்ற விளக்கமாகும்

துல்ஹஜ் எட்டாவது நாள் (யவுமுத்தர்வியாவாகும்)(இந்த நாளைக்கு யவ்மு தருவியா என்று சொல்லப்படும். நிச்சயமாக ஹாஜிகள் தேவையான அளவு நீரை மினாவிலும் அரஃபாவிலும் தங்குவதற்காக எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில் நிச்சயமாக அவ்விரண்டிலும் நீர் கிடையாது)

01- எட்டாவது நாள் ளுகருக்கு முன்னாள் ஹஜ்ஜுக்கான இஹ்ராம் ஆடையை அணிவது சுன்னத்தாகும். அவர் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்வார் .அவர் மக்காவில் இருந்தால் மக்காவிலிருந்து அணிந்து கொள்வார். அவர் மினாவில் இருந்தால் மினாவிலிருந்து அணிந்து கொள்வார். அவர் குளிப்பார் .நறுமணங்களைப் பூசிக் கொள்வார். மேலும் இஹ்ராமுடைய ஆடையை அணிந்து கொள்வார் மேலும் ஹஜ்ஜுக்காக தல்பியா சொல்லுவார் «லப“பைக“கல“லாஹூம்ம ஹஜ்ஜன், லப்பாக் அல்ஸாகும்மா லப்பைக் லா சரீக்க லக லப்பைக் இன்னல் ஹம்த வன்நிவுமத லக வல் முல்க லா சரீக்க லக» (ஆதாரம் புகாரி).

02-மினாவுக்குச் சென்று மினாவிலேயே லுஹரையும் அஸரையும் மஃரிபையும் இஷாவையும் தொழுவார். மறுநாள் சுபஹ் தொழுகையயும் தொழுவார் .தொழுகைகளை அதனுடைய நேரத்திற்கு தொழுவதார். நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்குவார். ஒன்பதாவது நாள் சூரியன் உதயமாகும் வரை மினாவிலேயே இருப்பார் அந்த நேரத்தில் தல்பியாவை அதிகமாகச் சொல்வது சுன்னத்தாகும்

இஹ்ராமுடாய ஆடையை அணிவது

நறுமணம் பூசுவது

குளிப்பது

துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (யவுமு அரபாவாகும்)

01-இந்த நாளில் சூரியன் உதித்தால் ஹாஜிகள் எல்லாம் தல்பியா சொன்னவர்களாக அரபாவுக்கு விரைந்து செல்வார்கள். மேலும் அவருக்கு முடியுமாக இருந்தால் நமிராவுக்கு சென்று சூரியன் சாய்கினற வரை இருப்பது சுன்னத்தாகும். எனவே சூரியன் சாய்ந்தால“ ளுஹருடைய நேரமாக ஆகிவிடும் முஸ்லிம்களின் இமாமிற்கு அல்லது அவர்களுடைய உதவியாளருக்கு நிலைமைக்கு ஏற்ற முறையில் உபதேசிப்பது சுன்னத்தாகும். அதிலே தவ்ஹீதை மீட்டி மீட்டி கூறுவார். ஹஜ்ஜின் சட்டங்களை மீட்டி மீட்டி கூறுவார். இந்த மார்க்கத்தின் முக்கியமான விடயங்களையும் கூறுவார்.

02-பின்னர் லுஹரையும் அஸரையும் சேர்த்து சுருக்கி தோழுவிப்பார் . இந்த நாளிலே ஹாஜிகளுக்கு கிப்லாவை முன்னோக்குமாறு அவசரப்படுத்துவார். அதிகமாக முயற்சி செய்து அமைதியோடும் பணிவோடும் பலவீனத்தோடும் பிரிந்து துவா கேட்குமாறு சொல்லுவார்.

நபி அவர்கள் சொன்னார்கள் «துஆக்களில் மிகச் சிறந்தது அரஃபா அன்றில் கேட்கின்ற துஆ ஆகும் மேலும் நான் கூறுவதிலும் எனக்கு முன் இருந்த நபிமார்கள் கூறுவதிலும் மிகச் சிறந்தது லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்» (ஆதாரம் திர்மிதி ).

03-சூரியன் மறைந்ததன் பின்னால் ஹஜ் செய்யக் கூடியவர் தன்னுடைய அறையில் இருந்து முஸ்தலிஃபாவுக்குச் செல்வார். சூரியன் மறைய முன்னர் செல்வது அவருக்கு கூடாது. சூரியன் மறைய முன்னர் அவர் சென்றிருந்தாலும் இரவிலே திரும்பி வருவார். அவர் திரும்பவில்லை ஆயின் ஒரு ஆட்டை பரிகாரமாக கொடுக்க வேண்டும்.

மினா

நமிரா

அரபா

முஸ்தலிஃபா

வழிகாட்டல்கள்

01-ஹஜ் செய்யக் கூடியவர் அரபாவில் இருந்தாலும் ஒன்பதாவது நாள் அரபாவில் இருப்பதாக உறுதி கொள்ளுவார். அவர் நின்றாலும் அல்லது இருந்தாலும் அல்லது உறங்கினாலும் அல்லது பிரயாணம் செய்தாலும் சரியே.

02-அரபாவில் தரித்தல் என்பது ஹஜ் உடைய ருகண்களில் இருந்து ஒரு ருகுன் ஆகும். அது இல்லாமல் ஹஜ்ஜு சீராக மாட்டாது. அரபாவில் தரிப்பது இல்லாமல் போனால் ஹஜ்ஜு இல்லாமல் போய்விடும். நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «ஹஜ்ஜு என்பது அரபாவில் தடுப்பதாகும்»
(ஆதாரம் அஹ்மத்).

03-அரபாவில் தருகின்ற நேரம் ஒன்பதாவது நாள் பஜ்ரு உதயமானதிலிருந்து பத்தாவது நாள் ஃபஜ்ரு உதயமாகும் வரை ஆகும். இந்த நேரத்தில் ஒருவர் ஒரு வினாடி தரித்தாலும் அவருடைய ஹஜ்ஜு சரியானதாகும். யார் தரிக்க வில்லையோ அவருடைய ஹஜ்ஜு சீரற்றதாக ஆகிவிடும். இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் சொன்னார்கள் «யார் ஃபஜ்ரு உதயமாக முன்னர் அறபாவை அடைந்து கொள்கிறாரோ அவர் ஹஜ்ஜை அடைந்து கொண்டார்»
(அல்பானி ரஹ் அதனை ஸஹீஹ் என கூறுகின்றனர்.).

04-அரபா அனைத்தும் இருக்கக்கூடிய இடங்களாகும் நபி அவர்கள் பாலைவனத்திற்கு அண்மையில் இருக்கும் கிப்லாவை முன்னோக்கி வராக மலையிலே இருந்தார்கள். அதிலே அவர் ஏறவில்லை. நபி அவர்கள் சொன்னார்கள் «நான் இங்கே இருந்தேன் அரபா எங்கெங்கிலும் இருக்க முடியும்»(ஆதாரம் முஸ்லிம்).அவருக்கு முடியும் என்றால் நபி அவர்கள் இருந்த இடத்தில் இருப்பார் இல்லாவிடின் வேற ஒரு இடத்தில் இருப்பார் . அரபாவுக்கு முன்னால் இருக்கின்ற அருணா என்ற ஓடைஓடையிலே இருக்க முடியாது. பாலைவனத்திலும் இருக்க முடியாது. மலையிலும் இருக்க முடியாது. அரஃபாவுக்கு குறிப்பிட்ட எல்லை இருக்கிறது. பழைய எல்லைகளும் இருக்கின்றன. தற்போது புதிய எல்லைகளும் தெளிவாக இருக்கின்றன. அனைத்து பக்கத்திலிருந்தும் அதனுடைய இல்லை தெளிவாக விளங்கும்.

5-ஹாஜ்ஜுக்கு இந்த நாள் உடைய மகத்துவத்தையும் சிறப்பையும் ஞாபகம் செய்வது அவசியமாகும். நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய அடியார்களை பாதுகாத்து இருக்கிறான். அவன் நினைத்தவர்களை மலக்குகள் விரும்புகின்றவர்களையும் பாதுகாக்கிறான். நபி ஸல் அவர்கள் சொன்னாரகள் «இறைவன் நரகத்தில் இருந்து அதிகமாக அடியார்களை வெளியாக்குகின்ற வேறு எந்த நாழும் இல்லை என்றார்கள். பின்பு மலக்குகலை நெருங்கி அவர்கள் விரும்புகின்றவர்களையும் பாதுகாக்கிறான்.»
(ஆதாரம் முஸ்லிம்). இந்த நாலால் இருக்கின்ற சிறப்பான நேரங்களை பயன்படுத்துவது ஹாஜ்ஜூக்கு அவசியமாகும். புதிதாக தவ்பா கேட்பார் தன்னை சுய பரிசோதனை செய்வார் . சுற்றாத்திரிந்தும், வீண் பேச்சு, விவாதம் போன்றவைகளில் நேரங்களை களிக்க மாட்டார் .

பத்தாவது நாள் முஸ்தலிபாவுக்குச் பிரிந்து சென்று அங்கே தங்குவார்

01-சூரியன் மறைந்த்தன் பின்னர் அரபாவில் இருந்து முஸ்தலிபாவுக்கு அமைதியாகவும் கன்னியத்தோடும் இறவனை தல்பியா சொல்லியவராக செல்வது சுன்னத் ஆகும்.

02-முஸ்தலிபாவை வந்தடைந்தவுடன் பொருட்களை இறக்க முன்னர் இசாவையும் மஃரிபையும் சேர்த்து இஷாவை சுருக்கி தொழுவார்.

03-இன்றிரவு முஸ்தலிபாவில் தரிப்பவருக்கு நேரகாலத்தோடு பஜ்ரை தொழுவது அவசியமாகும். பஜ்ருக்கு முன்னர் வெளியாகுவது கூடாது. தேவைகள் இருந்தால் பிரச்சினையில்லை. பலவீனமானவர்கள், பெண்கள், சிறுவர்கள் அவர்களை கண்கானிப்பவர்கள். அல்லது ஹாஜூகளுக்கு பணிவிடை செய்வார்கள். இவர்களுக்கு சந்திரன் மறைeதால் முன்னர் போக முடியும்

04-ஹாஜிகள் பஜ்ரை தொழுதால் மஸ்அரில் ஹராமிடத்தில் வருவது விறும்பத்தக்கதாகும். மேழும் கிப்லாவை முன்னோக்குவார். துஆவையும் தக்பீரையும் கையை உயர்த்தி அதிகமாக்குவார். சூரியன் நன்றாக மஞ்சலாகும் வரை அவ்வாறு தொடர்ந்திருப்பார். இது முஸ்தலிபாவில் எந்த இடத்தில் இருந்தாழும் கூடும் நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «இதோ நான் இங்கே இருந்தேன் எங்கிலும் இருக்க முடியும்»(ஆதாரம் முஸ்லிம்). ஜம்உ என்றால் முஸ்தலிபா ஆகும்

05-முஸ்தலிபாவிலிருந்து திரும்பியவுடன் முதலாவதுக ஜமராத்துக்கு மாத்திரம் எறிய ஏழு கற்களை புறக்குவது அவசியமாகும். ஏனைய நாட்கள் மினாவிலோ அல்லது எந்த இடத்திலிருந்தும் கற்களை புறக்கி எரிவது கூடும்

துல் ஹஜ் பத்தாவது நாள் (பெருநாள் தினம்)

01-பஜ்ரை தொழுவார். பின்னர் சூரியன் உதயமாக முன்னர் துஆவுக்காகவும், திக்ருக்காகவும் பிரிந்து விடுவார் .

02-ஹாஜிகள் சூரியன் உதயமாக முன்னர் முஸ்தலிபாவில் இருந்து பிரிந்து மினாவை நோக்கி வருவார். அப்பாதையிலே அதிகமாக தல்பியா சொல்வார். அவர் ஓடயை அடைந்தால் அவசரமாக செல்வார். அந்த ஓடை மினாவிற்கும் முஸ்தலிபாக்கும் இடையில் இருப்பதாகும். அவர் மினாவை அடைந்தால் பெருநாழுக்கான செயல்களை செய்வார்

அவைகள் சுருக்கமாக: ஜம்ரா அகபாவிற்கு கல் எரிதல். பலியிடல் .முடியை சிரைத்தல். அல்லது குறைத்தல். தவாப் செய்தல். தொங்கோட்டம் ஓடுதல்.

03-ஹாஜிகள் மினாவை அடைந்த பின்னர் ஜம்ரதுல் அகபாவிற்கு செல்வார். அது தான் ஜம்ராக்களில் மினா பக்கம் இறுதியானது ஆகும் .முதலாவது மக்கா பக்கம் இருப்பது ஆகும். அவ்விடத்துக்கு வந்தவுடன் தல்பியாவை நிறுத்தி விடுவார். ஜமராத்துக்கு ஏழு கற்களையும் தொடர்ச்சியாக எரிவார். அதனுடைய விரும்பத்தக்க நேரம் பெறுநாள் தினம் பஜ்ரில் இருந்து ஆரம்பமாகிறது. பஜ்ருக்கு முன்னர் இரவின் இருதிப்பகுதியில் எறிவதும் கூடும் .எறிவதற்கான நேரம் 11வது நாள் பஜ்ர் வரை தொடர்ந்திருக்கும்

வழிகாட்டல்கள்

-முஸ்லிமுக்கு அவனுடைய சகோதர்களாகிய ஏனைய ஹாஜ்களுக்கு கல் எரியும் போதும் ஏனைய வனக்கங்களின் போதும் நோவினை கொடுக்காமல் இருப்பது அவசியமாகும்.

-கல் எரியக்கூடியவர் கற்கல் கற்தடாகத்தில் விழுகிறது என்று உறுதி கொல்வது அவசியமாகும். சில மனிதர்கள் எரியும் கற்கல் இன்னுமொருவரது பக்கம் செல்கிறது. அல்லது எரியப்படும் இடத்துக்கு செல்லாது என்று நினைத்தல். இன்னும் சில மனிதர்கள் நாங்கள் தூரத்தில் இருந்து எரிகிறோம் அவைகள் எரியப்படும் இடத்துக்கு செல்லாது என்று நினைத்தல் இப்படிப்பட்ட எண்னங்களால் அக்கடமை நிறைவேறமாட்டாது

கல்லறியும் ஒரு முஸ்லிம் அதில் பெரிய கற்கள், பாதணிகளை மிதமிஞ்சி வீசுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் சிரிய அளவிலான கற்களை வீசுவதே சுன்னத்தாகும். ஜாபிர் ரழி அறிவிக்கும் செய்தியில் «நபியவர்கள் ஜம்ராத்தில் சிறிய கற்களால் எறிவதை நான் பார்த்தேன்»
(ஆதாரம் முஸ்லிம், ஆள்காட்டி விரலுக்கிடையில் வைத்து வீசப்படும் கற்கள்.)

-அனைத்து கற்களையும் ஒரே தடவையில் எரிந்தால் அது ஒரு கல்லாகத்தான் கருதப்படும். எரியப்படும் இடத்தில் விழுந்தால் சீராகாது உரிய இடத்தில் எறிவதுதான் அவசியமாகும்.

04-தலைமுடியை சிரைபார் அல்லது குறைப்பார். சிரைப்பது என்பது மிகச் சிறந்ததாகும். பெண்கள் ஒரு மூட்டின் அளவு குறைப்பார்கள்.

05-மக்காவுக்கு வந்து தவாஃபுல் இஃபாளாவை செய்வார். இந்த தவாஃபுக்கு பின்னால் இரண்டு ரக்அத்துகள் தொழுவார். இஹ்ராமுடைய ஆடையை கழட்டி அதன் பின்னால் தவாஃப் செய்வது மிகச் சிறந்ததாகும். முடியை சிறை வைத்ததற்கும் கல்லெறிந்து அதற்கும் பின்னால் வழமையாக ஆடையை அணிந்து கொள்வார். மேலும் நறுமணம் பூசிக் கொள்வார். ஆயிஷா ரலி அவர்கள் சொன்னார்கள் «நபி ஸல் அவர்கள் இஹ்ராமுடைய ஆடையை அணிகின்ற போதும், இன்னும் தவாஃப் செய்வதற்கு முன்னால் கழற்றும் போதும் நறுமணம் பூசி விட்டேன்»(புஹாரி முஸ்லிம்)

06-தவாஃப் உடைய நேரம் பெருநாள் தினத்தில் ஃபஜர் உதயமான பின்னால் ஆரம்பமாகும். முஸ்தலிபாவிலிருந்து வரும் பலவீனமானவர்கள் அடுத்த நாள் பஜ்ர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிற்படுத்தி செய்து கொள்ளலாம்.எனின் பெருநாளின் பின்னர் பிற்படுத்துவது ஆகுமானது.

07- தவாஃபுல் இஃபாளாவை முடித்த பின்னர் தமத்து செய்தவர் ஸஃபா மர்வா மலைகளுக்கு மத்தியில் தொங்கோட்டம் ஓடுவார். இப்ராத், கிரான் முறையில் செய்தவர் தவாஃபுல் குதூம் இற்கு பின்னால் தொங்கோட்டம் ஓடினால் அவர்களுக்கு தவாஃபுல் இஃபாளா வுக்கு பின்னால் தொங்கோட்டம் கிடையாது. தவாஃபுல் இஃபாளாவை தோங்கோட்டத்தையும் முடித்ததன் பின்னர் அவர் தொங்கோட்டம் ஓடவில்லை என்றால் தொங்கோட்டம் ஓடுவார். பெருநாள் தினத்தில் செய்கின்ற கிரியைகள் எல்லாம் பூரணமாகி விட்டால் பதினோராவது நாள் மினாவிலேயே தரிப்பதற்கு திரும்பி வருவார்

ஒழுங்குபடுத்தப்பட்ட பெருநாள் தின கிரியைகள்

முந்திய ஒழுங்குமுறையில் செய்வது நபிவழியாகும். கற்களை எறிதல் பின்பு பலியிடல் பின்பு முடிகளை சிரைத்தல் பின்பு தவாஃப் செய்தல் பின்பு யார் தொங்கோட்டம் ஓடவில்லையோ அவர் தொங்கோட்டம் ஓடுவார். சிலதை விட சிலதை முட்படுத்துவது கூடும். நபி ஸல் அவர்கள் அதற்கு அனுமதி அளித்தார்கள். ஒருவர் முடியை சிரைத்து பின்னர் கல்லெறிந்தால் அது கூடுமானது. அறுத்துப் பலியிடல் செய்து விட்டு தவாப் செய்து பின்னர் கல்லெறிந்தாலும் ஆகுமானது. நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «நீங்கள் செய்யுங்கள் குற்றம் கிடையாது »(பு ஹாரி முஸ்லிம்).

ஜம்ரதுல் அகபா விற்கு கல்லேரிதல்

ஹத்யு கொடுத்தல்

சிரைத்தல் அல்லது குறைத்தல்

தவாபு செய்தல்

ஸபா மர்வாகிடையில் தொங்கோட்டம் ஓடுதல்

மினாவில் தரித்தல்

முதலாவது தடை நீங்குதல் இரண்டாவது தடை நீங்குதல்

முதலாவது தடை நீங்குதல் : இஹ்ராமினால் உண்டான அனைத்து தடைகளை விட்டும் நீங்குவதாகும். பெண்களுடன் உடலுறவு கொள்வதையும் அவர்களுடைய அவர்களை கட்டிப்பிடிப்பது, திருமண உடன்படிக்கைகளை மேற்கொள்வதை செய்ய முடியாது. பின்னால் வருகின்ற இரண்டு விடயங்களையும் செய்வார் ஜம்ரதுல் அகபாக்கு கல் எறிவார். முடியை சிரையைப்பார். தவாப் செய்வார். தொங்கோட்டம் அவசியம் என்றால் தொங்கோட்டம் ஓடுவார் .

இரண்டாவது தடை நீங்குதல் : இது இஹ்ராமினால் உண்டான அனைத்து தடைகளையும் நீங்குவதாகும் . இரண்டாவது தடவை நீங்கல் என்பது முன்னர் சொன்ன அனைத்து காரியங்களையும் நீக்குகின்றது.

- தடை நீங்குவதற்கும் அறுத்துப் பலியிடுவதற்கும் தொடரபு கிடையாது. அவர் 11 ம் நாளில் ஹதி கொடுத்தாலும் சரியே. இன்னும் பெருநாள் தினத்திற்குரிய கடமைகளை செய்தாலும் சரியே. அவர் அறுத்துப் பலியிடவில்லையன்றாலும் அவர் தடைநீங்கப்பட்டவராவார்.

1-அய்யாமுத் தஷ்ரீக்

துல்ஹஜ் மாதம் 11,12,13, ஆகிய நாட்களுக்கு அய்யாமு தஷ்ரிக் சொல்லப்படும். ஏனனில் அந்த நாட்களில் உழ்ஹிய்யா இறைச்சி கயவைக்கப்படும். அல்லது சூரிய ஒளியில் காயவைப்பதை குறித்து நிற்கின்றது.

மேலும் நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அந்த நாட்கள் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் இறைவனை ஞாபகம் செய்வதற்குரிய நாட்களாகும்»(ஆதாரம் அபூதாவூத்).

பதினோராவது நாளும் அதன் இரவும்

பதினோராவது நாள் மினாவில் தரிப்பது அவசியமாகும். பதினொராவது நாள் சூரியன் மறைந்த பிறகு மூன்று ஜம்ராவிற்கும் ஏழு கற்கல் எறிவது அவசியமாகும்.(அவைகள் மூனறு ஹவ்ல்கள். அவைகழுக்கு நிலையான தூன்கள் உள்ளன. அவைகள் மினாவின் இறுதிப்பக்கமும் மக்காவின் முதல் பக்கமும் உள்ளன . முதலில் சிறியது பின்னர் நடுத்தரமானது, பின்னர் பெரியது என அமையப் பெற்றுள்ளது. மினாவிலிருந்து மக்கா நோக்கி அதன் எல்லைகளாகும்.)

கல் எறிவதன் அமைப்பு

முதலாவது ஜமராவில் மூலமாக ஆரம்பிப்பார். ஏழு முறை எரிவதையும் தொடர்ச்சியாக எறிவார். ஒவ்வொரு எரிவதற்கும் இடையில் தக்பீர் சொல்லுவார். எறிகின்ற கற்கள் உரிய இடத்தில் விழுவது அவசியமாகும். அவ்விடத்திலேயே சற்று முன்னோக்கி சென்று கைகள் இரண்டையும் உயர்த்தி இறைவனிடம் பிரார்த்திப்பார்.

நடுத்தர ஜம்ரத் - முதலாவதை அறிந்த அடிப்படையில் ஜம்ரதுல் உஸ்தாக்கு எரிவார். பின்பு கைகள் இரண்டையும் உயர்த்தி துஆ கேட்பார் .

ஜம்ரதுல் அகபா விற்கு எறிவார் துவா கேட்பதை விட்டு விடமாட்டார்.

ஜம்ரத் ஊலா

ஜம்ரதுல் வுஸ்தா

ஜம்ரதுல் அகபா

பன்னிரெண்டாவது நாளும் பன்னிரண்டாவது நாள் இரவும்

பன்னிரண்டாவது நாள் மினாவில் தரிப்பது அவசியமாகும். பின்னர் முன்னர் குறிப்பிட்டது போன்று சூரியன் சாயந்ததன் பின்னால் பதினோராவது நாள் எரிந்ததைப் போல மூன்று ஜம்ராத்திற்கும் கல்லெரிவார்.

அவர் அவசரத்தை நாடினால் ஜம்ராத்திற்கு கல் எறிந்துவிட்டு அவர் மினாவிலிருந்து சூரியன் மறைவதற்கு முன்னர் சென்றுவிடுவார். சூரியன் மறைந்து விட்டால் அவர் அங்கேயே தங்க வேண்டும். மறுநாளும் (பதின் மூன்றாம் நாளும்) அவர் எறிவது அவசியமாகும். அதிலே அவருக்கு அதிகமான நலவுகள் இருக்கின்றன. அல்லாஹ் கூறுகிறான் {குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்}[பகறா – 203]. அதாவது அய்யாமுத் தஷ்ரீக் உடைய முதல் இரண்டு நாட்களை முற்படுத்தல் அல்லது பதிமூன்றை தாமதிப்பதாகும்.

பதின் மூன்றாவது நாளும் அந்த நாள் இரவும்

பதின்மூன்றாவது நாள் சூரியன் சாய்ந்து தன் பின்னால் முந்தையநாள் எறிந்ததை போன்று அவர் எறிவார். இந்த நாளுடன் சூரியன் மறைந்த பின்னால் கல் எரிவதற்கான நேரம் முடிவடைகிறது

கல்லெறிவதைப் பிற்படுத்தல்.

ஹாஜிகள் கல்லெறிவதை எரியாமல் அவர் பிற்படுத்தினால் அவருக்கு பின்பு எறிய முடியும். அந்த மூன்று நாட்களுக்குள் கல் எறிவது அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தினால் எப்படி கல்லெறிவது.

மூன்று ஜமராத்திற்கும் முதலாவது நாளிலே எரிய ஆரம்பிப்பார் . பின்னர் ஜமரது சுஃராவுக்கு போவார். அங்கும் அபடியே எறிவார். சூரியன் சாய்ந்த பின்னர் அங்கு அவர் இருக்கமாட்டார்.

தவாபுல் வதாஃ

ஹாஜ்fள் மக்காவில் இருந்து வெளியாக நினைத்தால் தவாபுல் வதாஃ செய்வார். அது ஹஜ்ஜின் வாஜிப்களில் உள்ளதாகும். அதற்கு பிறகு தவாப் கிடையாது .மாதவிடாயுடன், மகப்பேறு இரத்தம் உள்ள பென்கள் தவாபுல் வதாஃ செய்ய மாட்டார்கள்

தவாபுல் இபாலாவை தவாபுல் வதாஃ வரை பிற்படுத்தல்

ஹாஜ் தவாபுல் இபாலாவை தவாபுல் வதாஃ நேரத்துக்கு பிற்படுத்த முடியும். ஆனால் மிகச்சிறப்புக்கு மாற்றமானது. தவாபுல் இபாலாவின் எண்ணத்துடன் இரண்டு தவாபுகளையும் செய்வது சரியானதாகும். தவாபுல் வதாக்குப்பின்னால் தொங்கோட்டம் ஓடவும் முடியும்

தவாபில் உள்ள நுட்பம் (பயன்கள்)

தவாபிலும் தொங்கோட்டத்திலும் கல்லேரிவதிலும் அல்லாஹ்வின் ஞாபகம் ஏற்படுகின்றன.

உம்றா செய்யும் முறை

01-உம்ரா செய்கின்றவர் மீகாத்திற்கு வந்தால் குளிப்பார். நருமணம் பூசுவார். இஹ்ராம் ஆடையை அணிவார். உம்ராவிற்கான நீய்யத்தை வைத்து “லப்பைக் உம்ரா” என கூருவார்.

இஹ்ராமாடையை அணிவது

நருமணம் பூசுதல்

குளிப்பது

02-தல்பியா சொல்வதில் மார்க்கமாக்கப்பட்டது. «லப்பைக் அல்லாஹிம்ம லப்பைக் லப்பைக் லா சரீக்க லக லப்பைக் இன்னல் ஹம்த வந்நிவ்மத லக வலமுல்க லா சரீக்க லக்» (ஆதாரம் புகாரி) அவர் கஃபாவை காணும் வரையும் ஹஜருல் அஸ்வதை சந்திக்கும் வரை தல்பியா சொல்லுவார் .

03-மஸ்ஜிதுல் ஹராமுக்கு நுழைய செல்வார். அவரின் வலது பக்கத்தால் செல்வார். பள்ளிக்குள் நுழையும் துவாவை ஓதுவார் .

04-தல்பியாவை நிறுத்தி தவாபை ஆரம்பிப்பார். ஹஜருல் அஸ்வதையும் அவருக்கு முடியுமென்றால் சந்தித்து முத்தமிடுவார். இல்லையென்றால் அதனை சுட்டிக்காட்டுவார் .

05-கஃபாவை அவருக்கு இடது பக்கமாக்கி 7 சுற்றுக்கள் சுற்றுவார்கள். ஹஜருல் அஸ்வதில் ஆரம்பித்து அவ்விடத்திலே முடிப்பார் .

06-ரமல் என்றால் பாய்ச்சல் அல்லாத அவசர நடைக்கு சொல்லப்படும். அனைத்து தவாபிலும் வலது தோல் புஜத்தை வெளிக்காட்டுவது சுன்னத்தாகும். அவருடைய இரண்டு போர்வையின் இரு ஓரங்களையும் இடது தோல் புயத்துக்கு கீழே வைப்பார்

தவாபின் நிபந்தனைகள்

பின்வருவன தவாபின் நிபந்தனைகளாகும். நிய்யத்தும் சுத்தமும் அவ்ரத்தை நீக்குவதும், ஏழு தவாப் செய்வதும், ஹஜருல் அஸ்வதால் ஆரம்பித்தல். அவருக்கு இடது பக்கத்தில் கஃபாவை நோக்குதல். தொழுகையும் ஜனாஸாவும் எதிரில் வராவிட்டால் தொடர்ச்சியாக செய்வார். தொழுகை நேரமானால் தொழுதுவிட்டு தவாபை ஆரம்பிப்பார். ஹஜருல் அஸ்வதிலிருந்து கஃபாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் தவாப் செய்யலாம்.

07-தவாபில் அவர் விரும்புவதை இறைவனிடம் கேட்பார். ருக்நுல் யமானுயை தான்டும் நேரத்தில் தக்பீர் சொல்லுவார். அவருக்கு முடியாமல் போனால் தக்பீர் சொல்லாமல் சுட்டிக்காட்டுவார் .ஹஜருல் அஸ்வதற்கும் ருக்நுல் யமானிக்குமிடையில் «ரப்பனா ஆதினா பித்துந்யா ஹஸநதன் வபில் ஆகிரதி ஹஸநதன் வகினா அதாபந்நார் என்று ஓதுவார் » (ஆதாரம் அபூதாவுத்)

07-தவாபில் அவர் விரும்புவதை இறைவனிடம் கேட்பார். ருக்நுல் யமானுயை தான்டும் நேரத்தில் தக்பீர் சொல்லுவார். அவருக்கு முடியாமல் போனால் தக்பீர் சொல்லாமல் சுட்டிக்காட்டுவார் .ஹஜருல் அஸ்வதற்கும் ருக்நுல் யமானிக்குமிடையில் (ரப்பனா ஆதினா பித்துந்யா ஹஸநதன் வபில் ஆகிரதி ஹஸநதன் வகினா அதாபந்நார் என்று ஓதுவார் ) 80

08- ஏழாவது தவாபை சுற்றி முடிந்தால் அவருடைய தோல் புஜத்தை மூடிக்கொள்வார். வெளிப்படுத்துவது உம்ராவின் தவாபிலும் தவாபில் குதூமிலும் சுன்னத்தாகும். பின்னர் மகாமு இப்ராஹீமை நோக்கி முடிந்தால் இரண்டு ரக்ஆத்கல் தொழுவார் முதலாம் ரக்காதில் பாத்திஹாவின் பின்னர் காபிரூனை ஓதுவார். இரண்டாவதில் இஹ்லாசை ஓதுவார் .முடியாவிட்டால் விரும்பிய நேரத்தில் தொழுவார்.

வழிகாட்டுதல்கள்

01-முஸ்லிமுக்கு ஏனையவர்களை நெருக்காமல் இருப்பது அவசியமாகும். ஒருவருக்கொருவர் முட்டி மோதி ஹஜருல் அஸ்வதை முத்தமிடச்சென்று கஷ்டத்தை ஏற்படுத்தாமல் இருப்பதும் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்றால் முத்தமிடாமல் இருப்பதும் அவசியமாகும்

02-முடியுமானதை தவாபிலே கேட்பார். தவாபுக்கு என்று குறிப்பிட்ட துஆ கிடாயாது. அவர் தவாபில் குர்ஆன் ஓதினாலும் பிரச்சினை கிடாயாது.

03-தோள் பக்கத்தை வெளிப்படுத்துவது உம்ராவின் தவாபிலும், தவாபுல் குதூமிலும், ஏழு சுத்துக்களிலும் சுன்னத்தாகும்

04-பெண்ணுக்கு தவாபில் அழகை வெளிப்படுத்திவதும், நறுமன வாசனைகளை வெளிப்படுத்துவதும், திக்ராலும் துஆவாலும் சத்தத்தை உயர்த்தாமல் இருப்பது சுன்னத்தாகும்

9-ஸபா மலைக்கு செல்லும் போது அதனை நெருங்கியவருடன் ஓதுவார். அல்லாஹ் கூறுகிறான் {நிச்சயமாக 'ஸஃபா' 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும்இ (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்}. [பகறா – 158].

10-ஸபா மலையில் ஏரி, கிப்லாவை முன்னோக்கி, கைகளை உயர்த்தி தக்பீர் சொல்லி, அல்ஹம்து சொல்லி, «லாஇலாஹ வஹ்தகு லா சரீக்கலகு லகுல் முல்கு வலகுல் ஹம்து வகுவ அலா குல்லி சைய்யின் கதீர் ல் இலாஹ இல்லல்லாஹு வஹ்தஃ வநசர அப்தஃ வஹசமல் அஹ்சாப வஹ்தாஃ» (ஆதாரம் புகாரி) என்று மூன்று முறை கூறி துஆ கேட்பார்.

நபியவர்களிகளின் அறிவிப்பில் «ஸபாவில் செய்த்தை போன்று மர்வாவிலும் செய்வார்»
(ஆதாரம் முஸ்லிம்)

11-ஸபாவில் இருந்து மர்வாவை நோக்கி இறங்கி விரைந்து செல்வார். பச்சை அடையாளங்கள் உள்ள இடங்களில் சற்று வேகமாக ஓடுவார். (அவை இரண்டு இடங்களும் ஹாஜரா அலை அவர்கள் ஓடிய இடங்களாகும்.) மேலும் மர்வாவில் ஏறி ஸபாவில் செய்தவைகளை செய்வார்.

12-ஸபாவுக்கும் மர்வாக்குமிடையில் தோங்கோட்டம் ஓடுவார் (போவது ஒரு சுற்றாகும் வருவது ஒரு சுற்றாகும்) .

- தோங்கோட்டம் ஓடுபவர் சுத்தமாக இருப்பது சுன்னத்தாகும் .அவர் தொடக்குடன் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் .

தொடர்ச்சியாக செய்வது தொங்கோட்டத்திலும் தவாபிலும் சுன்னத்தாகும்

ஸபா மர்வாக்கிடையில் தொங்கோட்டம் ஓடுதல்

13-தொங்கோட்டம் ஓடியதன் பின்னர் தலை தெளிவாக விளங்கும் வரை முடிகளை குறைப்பார். பெண்கள் ஒரு இன்ச் அளவு குறைப்பார்கள். ஆண்கள் சிரைப்பது மிகச்சிகந்ததாகும். அபூ ஹுரைரா ரழி அவர்கள் கூறினார்கள் நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «தலையை சிரைப்பவர்களை நீ மன்னிப்பாயாக தோழர்கள் கேட்டார்கள் முடியை குறைப்பவர்கள் சொன்னார்கள் தலையை சிரைப்பவர்களை நீ மன்னிப்பாயாக இவ்வாறு 3 முறை கேட்டதன் பின்னர் சொன்னார்கள் தலையை குரைப்பவர்களை நீ மன்னிப்பாயாக என்று சொன்னார்கள் ». (ஆதாரம் புகாரி) அவர் முதமத்தியாக இருந்தால் உம்ராக்கு பின்னர் ஹஜ் செய்பவர் இவருக்கு நேரம் இருக்கிறது. உம்றாவில் முடியை குறைப்பது ஏற்றமானதாகும். பின்னர் ஹஜ்ஜின் போது தலையை சிரைப்பார்.

14-இஹ்ராமிலிருந்து வெளியாவுதல் அது உம்ராவை முடிப்பதாகும். பெண் தவாப் செய்வதிலும் தொங்கோட்டம் ஓடுவதிலும் ஆண்களை போன்றவர்கள் தான். தொங்கோட்டத்தில் பச்சை தூன்களுக்கு மத்தியில் விரைந்து செல்லமாட்டார். தலையை சிரைக்கமாட்டார். தனது முடியிலிருந்து1இஞ்சளவு குறைப்பாள் . அது விரலின் 1மூட்டின் அளவாகும்