ஸகாதுல் பித்ர்
ஸகாதுல் பித்ர்
இந்த ஸதகாவை நோன்பு பெருனால் தினத்தில் கொடுக்குமாரு நபி ஸல் அவர்கள் கடமையாக்கினார்கள்
நோன்பு பெருநாளைக்காக வேண்டி சகாத் பித்ர் கடமையாக்கப்பட்டதால் அது ஸகாதுல் பித்ர் என்று கூறப்பட்டது.
பெருநாளுடைய நாளில் தன்னுடைய தேவையை விடவும் தன்னுடைய குடும்பதாரின் தேவையை விடவும் ஒரு சாஃவையாவது சொந்தமாக்கியிருக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஸகாதுல் பித்ர் கடமையாகும்.
ஸகாத் கொடுக்க கூடியவர் தனக்காகவும், தனது மனைவிக்காகவும், தான் செலவளிப்பது யார் மீது கடமையோ அவர்களுக்கம் ஸகாத் பித்ர் கொடுப்பது கடமையாகும். வயிற்றிலிருக்கும் பிள்ளைக்கு கொடுப்பது விரும்பதக்கதாதும்.
அது கடமையாவதற்கான ஆதரம்: இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் «நபி ஸல் அவர்கள் பேரீத்தம் பழத்திலிருந்து ஒரு சாஃ அல்லது தொழிக்கோதுமையிலிருந்து ஒரு சாஃ முஸ்லிம்கள்லிருந்து ஒவ்வொரு அடிமை மீதும் சுவந்திரவாதி மீதும் ஆணின் மீதும் பெண்ணின் மீதும் சிரியவர் மீதும் பெரியவர் மீதும் கடமையாக்கிருக்கின்றார்கள். அதனை மனிதர்கள் தொழுகைக்கு வெளியாகுவதற்கு முன்னர் கொடுக்குமாறு ஏவினார்கள்.»(முத்தபகுன் அலைஹி).
காய்ந்த பழங்கள்
தொலிக் கோதுமை
சூரியன் உதித்த பின்னர் பெருநாளில் ஸகாதுல் பித்ரை கொடுப்பது மிக சிறந்ததாகும்,நபி ஸல் அவர்கள் செய்ததற்காக வேண்டி அதனை பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முதல் கொடுப்பது ஆகுமானதுளூ அதனை மனிதர்கள் தொழுகைக்கு வெளியாகுவதற்கு முன்னர் கொடுக்குமாறு நபி ஸல் அவர்கள் கூறியதற்கு இனங்க பெருநாள் தொழுகையை விட அதனை பிற்படுத்துவடுது கூடாது.; இப்னு அப்பாஸ் ரழி அவர்களின் ஹதீஸில் யார் அதனை தொழுகைக்கு முன் நிறைவேட்டுகிறாறோ அது ஏற்று கொள்ளப்பட்ட ஸகாத்தாகும், யார் அதனை தொழுகைக்கு பின் நிறைவேற்றுகிறாறோ அது ஏனைய ஸதகாவை போனற ஒரு ஸதகாவாகும்»(ஆதாரம் அபீதாவுத்).
ஓவ்வொரு தனிநபர்களுக்கும் ஒரு சாஃ (சாஃ : தெலிக்கோதுமையில் 2.040 கிலோ கிராமாகும்), மேலும் அது அரிசி,பழம்,கோதுமை போனற மனிதர்களுடைய உணவாக இருக்க வேண்டும். அபூ சயீதில் ஹூத்ரி ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் «நாங்கள் நபி ஸல் அவர்களின் காலத்தில் உணவிலீரந்து ஒரு சாஃவை ஸகாத்துல் பித்ரை கொடுக்க கூடியதாக இருந்தோம்.
அபூ சயீத் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள்: எங்களுடைய உணவாக தொலிக்கோதுமை, காய்ந்த திராட்சை (அகித் :அவிக்கூடிய காய்ந்த பால் (புகாரி)), னை, பழம் போன்றன கானப்பட்டது»(ஆதாரம் புஹாரி). ஹனபிய்யிடத்தில் சாஃ என்பது 3.25 கிலோ கிராம். ஏகோபித்த கருத்தின் படி 2.040 கிலோ கிராமாகும். ஒரு நடு நிலமையான மனிதனுக்கு நான்கு கையளவு கொடுக்க வெண்டும் என்றும் கணக்கடப் படுகிறது.
ஸகாத் கொடுக்கினற எட்டு கூட்டங்களுக்கு ஸகாதுல் பித்ர் வினியோகிக்க வேண்டும். {அல்லாஹ் கூறுகிறான் - ஸகாத்தை பரம ஏழைகள், ஏழைகளுக்கு கொடுங்கள்; } [தவ்பா - 60], .
01-நோன்பாளி வீன் வேடிக்கையிலிருந்து தூய்மையடைகிறார்;இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: «ஸகாபத்துல் பித்ர் நோன்பாலியை வீன் வேடிக்கையிலிருந்து (வாயிலிருந்து வெளிப்படும் கெட்ட வார்த்தைகள்) தூய்மையடைகிறது மேலும் ஏழைகளுக்கு உணவாகிறது.»,
(ஆதாரம் அபூதாவுத்) அநேகமான நோன்பாளிகள் அமல்களை அலி;க்க கூடிய நோன்பை இல்லாமல் செய்ய கூடிய வீன் வேடிக்கையிலிருந்தும் பிரயோசனமல்லாத பேச்சுகலிருந்தும் விடுபடுவதில்லை. ஆனால் ஸகாபத்துல் பித்ர் இவைகளை துய்மைபடுத்துகிறது.
02-ஏழைகளுக்கு உதவி செய்தல், பெருநாளுடைய தினத்தில் இழிவான யாசகம் கேட்காமல் ஏனைய மனிதர்களை போன்று சந்தோசமாக பெருநாளை களிக்க உதவுல்.