வுழு

7716

வுழு

மொழி ரீதியில் வுழு

அழகும், சுத்தமும் ஆகும்

இஸ்லாமிய பரிபாஷையில்

தூய எண்ணத்துடன் குறிப்பிட்ட சில உறுப்புக்களை தண்ணீரால் சுத்தம் செய்வதை குறிக்கின்றது.

வுழுவின் சட்டங்கள்

வுழுவானது சில வேளை வாஜிபாக ஆக்கப்பட்டுள்ளது. சிலவேளை ஆகுமாக்கப்பட்டுள்ளது.

(அ) மூன்று சந்தர்ப்பங்களில் வுழுச் செய்வது வாஜிபாகும்.

1. தொழுகையின் போது

அல்லாஹ் கூறுகிறான்.{”முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்}[மாயிதா – 06]

தொழுகைக்காக வுழுச் செய்தல்

2. கஃபாவை தவாப் செய்யும் போது

நபியவர்கள் கூறினார்கள் «நீங்கள் சுத்தமாகும் வரை கஃபாவை தவாப் செய்ய வேண்டாம்.»(ஆதாரம் புஹாரி).

தவாப் செய்யும் போது வுழுச் செய்தல்

3. குர்ஆனை தொடும் போது

அல்லாஹ் கூறுகினறான் {தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்}[அல்வாகிஆ 79]

குர்ஆனை தொடும் போது வுழுச் செய்தல்

(ஆ) வுழு ஆகுமாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்

நபியவர்கள் கூறினார்கள் «ஒரு முஃமினுக்கு வுழுவே பாதுகாப்பாகும்.»(ஆதாரம் அஹ்மத்). ஒவ்வொரு தொழுகையின் போதும் வுழுச் செய்தல், அல்லாஹ்வை திக்ர் செய்யும் போது அல்லது துஆ செய்யும் போது, குர்ஆனை ஓதும் போது, தூங்கச் செல்லும் போது, குளிக்கும் முன்னர், மய்யத்தை சுமந்து சென்றவர், சிறு தொடக்கின் பின்னர் சந்தர்ப்பங்களில் வுழுச் செய்வது ஆகுமாக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வை திக்ர் செய்யும் போது வுழுச் செய்தல்

தூங்கும் போது வுழுச் செய்தல்

குர்ஆன் ஓதும் போது வுழுச் செய்தல்

குர்ஆனை சுமந்த பின்னர் வுழுச் செய்தல்

வுழுவின் சிறப்புகள்

1. அல்லாஹ்விடம் விருப்பத்தை ஏற்படுத்தித் தருகின்றது

அல்லாஹ் கூறுகிறான் {இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான் }[அல்பகறா – 222]

2.நபியவர்களுடைய சமுதாயத்திற்கு அடையாளமாக நாளை மறுமையில் முகம் பிரகாசமுடையவர்களாக வருவார்கள்.

நபியவர்கள் கூறினார்கள் «எனது சமுதாயத்தவர்களுடைய முகங்கள் நாளை மறுமையில் வுழுச் செய்ததன் காரணமாக பிரகாமாகவர்களாக வருவார்கள். உங்களில் யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர்கள் தங்களுடைய முகத்தின் ஒளியை அதிகரிக்க அப்படி செய்யட்டும். »
(புஹாரி முஸ்லிம்).

3. தவறுகளுக்கும் பாவங்களுக்கும் மன்னிப்பு

நபியவர்கள் கூறினார்கள். «யார் ஒருவர் சிறந்த முறையில் வுழுச் செய்கிறாரோ! அவருடைய நகங்களில் இருந்து நீர் வழியும் வரை அவருடைய உடம்பிலிருந்து பாவங்கள் வெளியேறுகின்றன.»
(ஆதாரம் முஸ்லிம்).

4. நன்மைகள் அதிகரிக்கின்றது.

நபியவர்கள் கூறினார்கள் «பாவங்களை இல்லாமல் செய்யும், அந்தஸ்தை உயர்த்தும் ஒரு விடயத்தை நான் அறிவித்து தரட்டுமா என கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் ஆம் என்றார்கள். அதற்கு நபியவர்கள் ”கஷ்டமான நேரங்களில் வுழுவை பூரணமாக செய்வது,(வெறுப்பு – மக்கள் வெறுக்க கூடிய விடயங்களை குறிக்கின்றது. ) பள்ளிவாயல்களுக்கு அதிகமான எட்டு வைத்துச் செல்வது., ஒரு தொழுகைக்கு பின்னால் அடுத்த தொழுகையை எதிர்பார்த்திருப்பது, இவற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.»
(ஆதாரம் முஸ்லிம்).

வுழுச் செய்யும் முறைகள்

1. மனதால் நீயத்து வைத்தல்.

2. பிஸ்மி சொல்லி ஆரம்பித்தல் (பிஸ்மில்லா என கூறல்)

3. இரண்டு மணிக்கட்டு மூன்று முறை கழுவுதல்.

4. மிஸ்வாக் செய்தல்

5. வாய் கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தி சிந்தி விடுதல். வாய்க்கு நீர் செலுத்துதல் – வாய்க்குள் நீர் செலுத்தி வாயை அசைத்தல். நாசிக்கு நீர் செலுத்ததுல். வாய் கொப்பளித்தல் நாசிக்கு நீர் செலுத்தல் ஆகியன ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். சிந்துதல் – நாசியில் உள்ள நீரை வெளியே சிந்துதல்.

6. முகம் கழுவுதல் (மூன்று தடவை செய்தல்) இதன் போது தாடியை குடைந்து கழுவுதல். முகத்தினுடைய எல்லை – நீளமாக நெற்றியில் முடி முளைத்தள்ள இடத்தில் இருந்து கீழுள்ள கழுத்து வரை கழுவுதல், அகலமாக வலது காது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இடது காது ஆரம்பிக்கும் இடம் வரையிலாகும்.

7. பின்னர் வலக்கையை அதன் முழங்கை வரை மூன்று முறை கழுவுதல். இதே போன்று இடக் கரத்தையும் கழுவுதல்.

8. தலையை மஸ்ஹ் செய்தல். தலையின் முற்பகுதியிலிருந்து பிடரி முடி வரை சென்று மீண்டும் முன்னர் ஆரம்பித்த இடத்தில் நிறுத்தல். (இதனை ஒரு முறை மாத்திரம் செய்ய வேண்டும்.)

9. காதின் உட்பகுதியை விரல்களால் மஸ்ஹ் செய்தல்.

10. வலது காலை கரண்டை வரை கழுவுதல். இதே போன்று இடது காலிலும் செய்தல் (இதனையும் மூன்று முறை செய்தல்)

11. இறுதியில் பின்வரும் துஆவை ஓத வேண்டும். «அஷ்ஹது அன்லாயிலாக இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக லஹூ. வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹு, (ஆதாரம் முஸ்லிம்)

அல்லாஹூம்ம அஜ்அல்னி மினத் தவ்வாபீன வஜஅல்மினி மினல் முததஹ்ஹிரீன். (ஆதாரம் திர்மிதி)

சுபஹானக அல்லாஹூம்ம வபி கம்திக அஸ்ஹது அன் லாயிலாக இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலய்க. »(ஆதாரம் நஸாயி)

வுழுச் செய்யும் முறை

இரண்டு மணிக்கட்டு வரை கழுவுதல் (மூன்று தடவை)

வாய் கொப்பளித்தல் (மூன்று தடவை)

நாசிக்கு நீர் செலுத்துதல் (மூன்று தடவை)

நாசிக்கு நீர் செலுத்துதல்

சிந்தி விடுதல் (மூன்று தடவை)

மூக்கில் உள்ள நீரை சிந்தி விடுதல்

முகம் கழுவுதல் (மூன்று தடவை)

தாடியை குடைந்து கழுவுதல்

முழங்கை வரை கைகளை கழுலுதல் (மூன்று தடவை)

தலையை மஸ்ஹ் செய்தல்

காதின் நடுப்பகுதியை கழுவுதல் (ஒரு தடவை)

கால்களை கரண்டை வரை கழுவுதல் (மூன்று தடவை)

கால் இரண்டையும் நன்றாக கழுவுதல்

வுழுவின் நிபந்தனைகள்

1. நீர் சுத்தமாக இருத்தல்

2. தண்ணீர் ஆகுமானதாக இருக்க வேண்டும். திருடிய தாக இருக்கக் கூடாது.

3. உடலில் தண்ணிர் படாமல் இருப்பவைகளை நீக்குதல்.

4. கஷ்டமான நேரங்களில் வுழுவை பூரணமாக செய்தல்

வுழுவின் பர்ளுகள்

1.எண்ணம் – அதனுடைய இடம் உள்ளமாகும். அதனை மொழிவது கூடாது. வுழு செய்வதற்கான எண்ணம் வைக்கவில்லையாயின் அதற்கு கூலி வழங்கப்பட மாட்டாது.

2.முகம் கழுவுதல். அதோடு சேர்த்து வாய் கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்துதல்.

3.முழங்கை வரை கையை கழுவுதல்

4. தலையை மஸ்ஹ் செய்தல் அதோடு காதையும் மஸ்ஹ் செய்தல்.

5.கரண்டை வரை இரு கால்களையும் கழுவுதல்

6. ஒழுங்கு முறைப்படி செய்தல்.

வுழுவின் சுன்னத்துகள்

1.முதலாவது வுழுவில் மூன்று முறை மணிக்கட்டுவரை கைகளை கழுவுதல்

2.பற்துலக்குதல்.

3.வுழுவுடைய உறுப்புக்களை மூன்று முறை கழுவுதல். தலையையும் காதையும் ஒரு தடவையை அதிகரிக்காமல் மஸ்ஹ் செய்தல்.

4.வுழுவுடைய உறுப்புக்களில் வலதை முற்படுத்தல்.

5.முழங்கையையும் கரண்டிகாலையும் கழுவும் போது கொஞ்சம் அளவை அதிகரித்தல்.

6.தாடியை குடைந்து கழுவுதல்

7. கை, கால் விரல் இடைகளை நன்கு கழுவுதல்.

8.கையை பொறுத்த வரை அதில் நீரால் தெளிப்பது கூடாது.

பெயிண்ட் போன்றவற்றை நீக்குதல்

பற்துலக்குதல்

உறுப்புக்களை நீட்டுதல்.

விரல் இடைகளை கழுவுதல்

9. தண்ணீரை வீண் விரயம் செய்தல்.

நபியவர்கள் கூறினார்கள் «எனது உம்மத்தில் சிலர் தண்ணீர்வை வீண்விரயம் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்»(ஆதாரம் அபூ தாவுத்) அதாவது வுழு செய்யும் தண்ணீரை வீண் விரயம் செய்வார்கள்.

10.வுழுச் செய்த பின் துஆ செய்தல். நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் ஒருவர் வுழுச் செய்தால் அதனை தொடர்ந்து பின்வரும் துஆவை ஓதட்டும். ” அஷ்ஹது அன்லாயிலாக இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக லஹூ. வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹு, அல்லாஹூம்ம அஜ்அல்னி மினத் தவ்வாபீன வஜஅல்மினி மினல் முததஹ்ஹிரீன். அவருக்கு சுவர்க்கத்தினுடைய எட்டு வாயில்கள் திறக்கப்படும். அதின் அவர் நாடியவாறு நுழையலாம். »(ஆதாரம் திர்மிதி).

11.வுழு செய்த பின் இரண்டு ரகஅத் சுன்னத் தொழுதல். நபியவர்கள் கூறினார்கள் «யார் நான் செய்தது போன்று வுழுச் செய்து கொண்டு இரண்டு ரக்ஆத்கள் சுன்னத் தொழுகிறாரோ அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்»
(புஹாரி முஸ்லிம்) என கூறினார்கள்.

வுழுவை முறிக்கும் காரியங்கள்.

1.முன்,பின் துவாரங்களால் ஏதேனும் வெளியாகுதல். (முன்,பின் துவாரம்) உதாரணம் சிறுநீர், மலம், துர்நாற்றம் போன்றன. நபியவர்கள் கூறினார்கள். «வுழுச் செய்யாதவரை உங்களில் ஒருவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது»
(ஆதாரம் முஸ்லிம்).

2.ஆழ்ந்த தூக்கம். தன்னை மறந்து ஆழ்ந்து தூங்குவதால் வுழு முறிவடையும்.

3.ஒட்டக இறைச்சி சாப்பிடுதல். ஜாபிர் இப்னு ஸம்ர ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் ” நபியவர்களிடம் «ஒருவர் வந்து ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் வுழு செய்ய வேண்டுமா? என கேட்டார். அதற்கு நபியவர்கள் ஆம்»என்றார்கள். (ஆதாரம் முஸ்லிம்).

4.நேரடியாக மர்ம உறுப்பை தொடுதல் ” புஷ்ரா பின்த் ஸப்வான் ரழி அவர்கள் நபியவர்கள் கூறியதை கேட்டதாக அறிவிக்கிறார்கள் «யாராவது தனது மர்ம உறுப்பை தடவினால் வுழுச் செய்து கொள்ளட்டும்»(ஆதாரம் அபீதாவுத்) என்றார்கள்.

ஆழ்ந்த தூக்கம்

ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்

கேள்வி

1. ஒரு முஸ்லிம் தூக்கத்திலிருந்து எழுந்து வுழுச் செய்ய சென்றால் தனது கையை மூன்று முறை கழுவாமல் பாத்திரத்தில் கையை நுழைக்க வேண்டாம். நபியவர்கள் கூறினார்கள். «ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்தால் தனது கைகளை மூன்று முறை கழுவாமல் பாத்திரத்தில் நுழைக்க வேண்டாம். ஏனனில் இரவு நேரங்களில் அவரது கை எங்கிருந்தது என அவருகே தெரியாமல் இருக்கும்»(புஹாரி முஸ்லிம்).

2.கட்டாயம் கழுவ வேண்டிய பகுதிகள் கழுவப் பட்டுள்ளதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கை,கால் விரல் இடைகள், தாடி, காதின் உட்பகுதி, முழங்கை, கரண்டைக்கால் (காலின் முற்பகுதி) போன்ற கழுவப்பட்டுள்ளனவா என்பதை கவனமாக பார்க்க வேண்டும். நபியவர்கள் கூறினார்கள் «கால்களை (சரியான முறையில்) கழுவாதவர்களுக்கு கேடுதான்».
(ஆதாரம் முஸ்லிம்)

3. ஒருவர் உறுதியாக சுத்தம் செய்த பின்னர் வுழு முறிந்ததா? என சந்தேகம் ஏற்பட்டால் அவர் சுத்தம் என்றே முடிவெடுக்க வேண்டும். அதே போன்று அவர் சுத்தமில்லாத நிலையில் வுழு செய்தேனா? இல்லையா? என சந்தேகம் என்றால் சுத்தமில்லை என்றே முடிவெடுக்க வேண்டும்.

4. ஒரு தடவை அல்லது இரண்டு தடவை உறுப்புக்களை கழுவலாம். அல்லது சிலதை ஒரு தடவையும்,சிலதை இரு தடவையும் கழுவலாம். அல்லது மூன்று தடவையும் கழுவலாம்.

5.ஒருவர் மறதியாக வுழுச் செய்யாமல் தொழுது, பின்னர் அவருக்கு வுழுச் செய்யவில்லை என்பது ஞாபகம் வந்தால் அவர் தொழுகையை மீட்டித் தொழ வேண்டும்.

6.ஒருவர் வுழுச் செய்த பின் நஜீஸ் பட்டால் நஜீஸை மாத்திரம் நீக்கினால் போதுமானது. மீண்டும் வுழுச் செய்ய தேவையில்லை. ஏனனெனில் அது தொடக்கு கிடையாது

காதிற்கும், தாடிக்கும் இடைப்பட்ட பகுதி

தூங்கி எழுந்த பின் பாத்திரத்தில் கையை நுழைக்காமல் இருத்தல்

கால் விரல்களின் இடைகளை கழுவுதல்

கரண்டை கால்

வுழுவும் பொதுவான தேகாரோக்கியமும்.

ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட மூல இதழில் வெளியான ஒரு கட்டுரையில்: “மூன்றாம் உலக நாடுகளில் குருட்டுத்தன்மைக்கு பிரதான காரணமாக விளங்கும் டிரோகோமாவின் பரவுதலைக் குறைப்பதற்காக முஸ்லீம் சமூகங்களில் தொழுகை்காக வுழுச் செய்தல், நேர்த்தியாக குளித்தல் ஆகியவை உதவுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 500 மில்லியன் மக்கள் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். முஸ்லிம்கள் போன்று தொழுகைக்காக சுத்தமாகுவது போன்றவற்றை பின்பற்றினால் இப்படியான நோய்கள் முஸ்லிம் சமூகத்தை விட்டும் நீங்கியது போன்று ஏனைய சமூகங்களை விட்டும் நீங்கி விடும்.(நவீன விஞ்ஞான ஒளியில் நபியவர்களது மருத்துவம். (கியாதுல் அஹ்மத்).

அவசியமில்லை

தண்ணீரை வீண்விரயம் செய்தல்

1.வுழுவின் போது நீயத்தை வெளிப்படுத்துவது அவசியமில்லை.

2.நீரை வீண்விரயம் செய்தல்.

3. உடலுறுப்புக்களை மூன்று முறைக்கு மேல் கழுவுதல்.

«ஒரு நாட்டுப்புற அரபி ஒருவர் நபியர்களிடம் வந்து வுழுவைப்பற்றி கேட்டார். நபியவர்கள் மூன்று தடவை (உறுப்புக்களை கழுவி) வுழுச் செய்து காட்டினார்கள். பின்னர் இதுவே வுழுவாகும். யார் இதற்கு மேல் அதிகப்படுத்துகிறாரோ அவர் பிழையாக செய்கிறார் அல்லது திரிவுபடுத்துகிறார் அல்லது அநியாயம் செய்கினறார்»(ஆதாரம் அபூதாவுத்).என்றார்கள்.

என்றாலும் மூன்று முறை கழுவி வுழுவுடைய உறுப்பு சுத்தமடையவில்லை என்னில் அதற்கு அதிகமாக கழுவுவது ஆகுமானது. உதாரணமாக ஒருவருடைய கையில் பெயிண்ட் பட்டிருப்பின் அது நீங்கும் வரை கழுவுதல்.

கஷ்டமான நேரத்திலும் நேர்த்தியாக வுழு செய்தல். ஒரு மனிதர் வுழுச் செய்தார்

காலின் நகப்பகுதியை அவர் கழுவாமல் விட்டார். இதனைப் பார்த்த நபியவர்கள் திரும்ப «உனது வுழுவை நல்ல முறையில் ஒழுங்குற செய்»
(ஆதாரம் முஸ்லிம்). என்றார்கள். பின்னர் அவர் வுழுச் செய்துவிட்டு தொழுதார்.

வுழு பூரணமடையாமல் இருப்பதில் உள்ளடங்குபவைகள்

(அ) கால்களை பூரணமாக கழுவாமல் இருத்தல்.

(ஆ) இரண்டு கைகளையும் ஆடையின் பட்டுன்கள் இறுக்கமாக இருக்கும் போது பூரணமாக கழுவாமல் இருத்தல்.

(இ) தாடிக்கும் காதிற்கும் இடைப்பட்ட பகுதிகளை பூரணமாக கழுவாமல் இருத்தல்.

(ஈ) வலக்கையுடன் சேர்த்து இடக்கரத்தை பூரணமாக கழுவாமல் இருத்தல்.

(உ) பெயிண்ட் உள்ள நிலையில் வுழு செய்தல்.

(ஊ) பெண்கள் வுழுச் செய்யும் போது விரல்களில் தண்ணீர் படாதவாறு அழகுபடுத்தப்பட்ட நிலை.

(எ) தண்ணீர் கடக்காதவாறு கால் விரல்களை வைத்துக் கொள்ளல்.

5. பிடரியை கழுவுதல்

- ஆனால் வுழுச் செய்ய முன்னர் அல்லது பின்னர் தேவையனின் கழுவிக் கொள்ளலாம்.

6. பிரத்தியோகமான எந்த துஆவும் வுழுவுடைய நேரத்தில் இல்லை.

- ஒவ்வொரு வுழுவுடைய உறுப்பையும் கழுவுகின்ற போது பிரத்தியோகமாக துஆ ஓதல்.

- வுழுவுடைய உறுப்புக்களை கழுவும் போது ஸம்ஸம் என்ற பிரத்தியோகமான துஆவை ஓதுதல்

7. உள்ளத்தில் ஏற்படும் ஊசலாட்டங்கள் – இதனை

பொறுத்தவரை செய்தான் அடியார்களோடு விளையாடும் செயலாகும். வுழு முறிந்ததா? அல்லது எதனையும் விட்டுவிட்டேனா என்ற சந்தேகத்தை ஷைத்தான் உள்ளத்தில் தோற்றுவிக்கிறான்.