லைலதுல் கத்ர் (புனித இரவு)

3410
லைலதுல் கத்ர் (புனித இரவு) லைலதுல் கத்ர் எனப் பெயர் வரக் காரணம் என்ன? 1. கண்ணியமிக்க இரவு என்பதால், அல்லாஹ் கூறுகின்றான் : {இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை} [அல்குர்ஆன் 6 : 91]. அதாவது, அல்குர்ஆன் அவ்விர வில் இறக்கப்பட்டதாலும், வானவர்கள் இறங்குவதுடன், பரகத், அல்லாஹ்வின் அருள், பாவமன்னிப்பு போன்றன இறங்குவதாலும் அவ்விரவு கண்ணிய மானதாக இருக்கின்றது. அல்லது அவ்விரவை உயிர்ப்பிப்பவர் கண்ணியத் திற்குரியவராக மாறுகின்றார் என்ற காரணத்தினாலும் இதற்கு அப்பெயர் வந்திருக்கலாம். 2. இங்கு கத்ர் என்பதற்கு நெருக்கடி என்ற அர்த்தமும் உண்டென மற்றுமொரு கருத்துள்ளது. அல்லாஹ் கூறுகின்றான்: {எவர் மீது அவருடைய உணவு வசதி நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ...}[அல்குர்ஆன் 65 : 07]. இங்கு நெருக்கடி என்பது அவ்விரவு எதுவெனக் கூறப் படாமல் மறைக்கப்பட்டிருப்பதாகும். அல்லது வனவர்களின் அதிக வருகையால் பூமி அவ்விரவில் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பதாகும். 3. இங்கு கத்ர் என்பது விதி என்ற மூன்றாவது கருத்தும் உள்ளது. அதாவது அவ்விரவில்தான் அவ்வருடத்திற்கான விதிகள் தீர்மானிக்கப்படுகின்றன. அல்லாஹ் கூறுகின்றான் : {அதில் முக்கியமான ஒவ்வொரு விடயமும் தீர்மானிக்கப்படுகின்றது} [அல்குர்ஆன் 44 : 04.]

லைலதுல் கத்ரின் சிறப்பும் மதிப்பும்

1. அதில்தான் அல்குர்ஆன் இறக்கப் பட்டது. அல்லாஹ் கூறுகின்றான் : {நிச்சயமாக அதனை (குர்ஆனை) கண்ணியமிக்க இரவில் இறக்கினோம்} [அல்குர்ஆன் 97 : 01] 2. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. அல்லாஹ் கூறுகின்றான் : {கண்ணிய மிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது} [அல்குர்ஆன் 97 : 03]. அதாவது லைலதுல் கத்ர் இரவு இல்லாத ஆயிரம் மாதங்களில் நற்கருமங்கள் செய்வதை விட அவ்விரவில் செய்வது சிறந்தது. 3. ஜிப்ரீல் (அலை) அவர்கள் உட்பட வானவர்கள் அவ்விரவில் இறங்கு கின்றனர். அல்லாஹ் கூறுகின்றான்:{அதில் வானவர்களும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங் களுடனும் இறங்குகின்றனர்} [அல்குர்ஆன் 97 : 04] நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «லைலதுல் கத்ர் 27 அல்லது 29ம் இரவிலாகும், அவ்விரவில் வானவர்கள் பூமியிலுள்ள கற்களின் எண்ணிக்கையை விட அதிகமானோர் இறங்குவார்கள்» (ஆதாரம் இப்னு ஹூஸைமா). 4. அது சாந்தியானது. அல்லாஹ் கூறுகின்றான்: {சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்} [அல்குர்ஆன் 97 : 05]. அதாவது அவ்விரவு முழுவதும் நலவுதான் நடைபெறும், அதன் ஆரம்பத்திலிருந்து அதிகாலை வரை எவ்வித கெடுதிகளும் இல்லை.. 5. அது பரகத் செய்யப்பட்ட இரவு அல்லாஹ் கூறுகின்றான் : {ஹா மீம், தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக, நாம் அதனை பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கினோம்} [அல்குர்ஆன் 44 : 01- 3]. என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். «அது லைலதுல் கத்ர் இரவுதான் ». 6. அதில்தான் வருடத்தின் விதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அல்லாஹ் கூறுகின்றான் : {அதில் முக்கியமான ஒவ்வொரு விடயமும் தீர்மானிக்கப்படுகின்றது} [அல்குர்ஆன் 44 : 04]. 7. லைலதுல் கத்ர் இரவில் விசுவாங் கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் நின்று வணங்குபவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படு கின்றன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «யார் லைலதுல் கத்ர் இரவில் விசுவாங் கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் நின்று வணங்குகின் றாரோ அவருடைய முன்னைய பாவங் கள் மன்னிக்கப்படும்» (புஹாரி முஸ்லிம்).

அது எந்த இரவு?

ரமழானின் இறுதிப்பத்தில், குறிப்பாக அதன் ஒற்றைப்படை இரவுகளான 21, 23, 25, 27, 29 ஆகிய இரவுகளில் முஸ்லிம் முயற்சி செய்து தேடுவதற்காக அல்லாஹ் அதனை மறைத்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «ரமழானின் இறுதிப் பத்திலுள்ள ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் லைலதுல் கத்ரைத் தேடிக் கொள்ளங்கள்» (புஹாரி முஸ்லிம்). பலவிதான ஆதாரங்களுக்கு மத்தியில் இணக்கப்பாட்டுக்கு வரும் விதத்தில் இது வருடத்துக்கு வருடம் வேறுபட்டு வரும் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

லைலதுல் கத்ர் இரவில் செய்ய வேண்டிய விரும்பத்தக்க நற்செயல்கள்

1. இஃதிகாப் பள்ளியில் நன்மை நாடித் தரித்தல் இது லைலதுல் கத்ருக்கு மாத்திரம் குறிப்பானதன்றி, இறுதிப்பத்தின் அனைத்து இரவுகளிலும் செய்ய வேண்டிய வணக்கமாகும். ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: «நபி (ஸல்) அவர்கள் ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருப்பார்கள்.» (புஹாரி முஸ்லிம்). 2. அவ்விரவில் விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் நின்று வணங்குதல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «யார் லைலதுல் கத்ர் இரவில் விசுவாங் கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் நின்று வணங்குகின் றாரோ அவருடைய முன்னைய பாவங் கள் மன்னிக்கப்படும்» (புஹாரி முஸ்லிம்). 3. பிரார்த்தனை புரிதல் ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «அல்லாஹ்வின் தூதரே! நான் லைலதுல் கத்ர் இரவை அடைந்தால் என்ன பிரார்த்தனையைக் கேட்பது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்க வர்கள் “நீர் “அல்லாஹும்ம இன்னக அபுவ்வுன் துஹிப்புல் அப்வ பஃபு அன்னீ” என்று கூறுவீராக” என்றார்கள்» (ஆதாரம் திர்மிதி). பொருள் : இறைவா நீ மன்னிக்கக் கூடியவன், மன்னிப்பை விரும்புபவன், எனவே என்னை மன்னிப்பாயாக. 4.வணக்கத்தில் கவனம் செலுத்த குடும்பத்தினரையும் எழுப்பி விட வேண்டும். ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «ரமழானின் இறுதிப் பத்து தினங்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் தனது வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, அவ்விரவுகளை, உயிர்ப்பிப்பார்கள், தனது மனைவியரையும் எழுப்பி விடுவார்கள்» (ஆதாரம் புஹாரி)

லைலதுல் கத்ர் இரவின் அடையாளங்கள்

1. அவ்விரவு அதிக உஷ்னமோ, குளிரோ இல்லாமல் நடுநிலையாகவும், பிரகசமா னதாகவும் இருக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «எனக்கு லைலதுல் கத்ர் இரவு காட்டப் பட்டு, பின்பு மறக்கடிக்கப்பட்டது, அது இறுதிப்பத்தின் இரவுகளிலாகும். அவ் விரவு நடுநிலையாகவும், (சூடாகவோ குளிராகவோ இருக்காது) பிரகாசமாகவும் இருக்கும், (பிரகாசமாக) அதிக உஷ்னமானதாகவோ, குளிரானதாகவோ இருக்க மாட்டாது» (ஆதாரம் இப்னு ஹூஸைமா). 2- மறுதினம் காலையில் சூரியன் ஒளிக்கதிர் இன்றி வெண்மையாக வெளிப்படும். லைலதுல் கத்ருடைய அடையாளங்களை பற்றி உபைய் இப்னு கஃப் (ரலி) அவர்களிடம் வினவப்பட்ட போது «அத்தினத்தில் சூரியன் ஒளிக்கதிரின்றி உதிக்கும்” என்றார்கள். ஸஹீஹ் முஸ்லிமின் மற்றுமொரு அறிவிப்பில் “ஒளிக்கதிரின்றி வெண்மையாக உதிக்கும்” என இடம்பெற்றுள்ளது». (ஆதாரம் திர்மதி) சில வழிகாட்டல்கள் 1. ரமழானின் இறுதிப்பத்து இரவுகளில் இறை வணக்கத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். அவைதான் வருடத்தின் அனைத்து இரவுகளிலும் சிறந்தவை. 2. சிறந்த நோரங்களையும், நல்ல காலங்களையும் வீண், விளையாட்டு, பொருட்கள் கொள்வனவு செய்வதிலும், தேவையின்றி சுற்றித் திரிவதிலும் கழிக்காமல் இருப்பது முஸ்லிமுக்கு அவசியமாகும்.