மாதவிடாய், தொடர்இரத்தப் போக்கு, மகப்பேற்று இரத்தம்

1948

மாதவிடாய், தொடர்இரத்தப் போக்கு, மகப்பேற்று இரத்தம்

மொழி ரீதியில்

ஒடக் கூடியது.

இஸ்லாமிய பரிபாஷையில்

எந்தக் காரணமும் இன்றி குறிப்பிட்ட நேரங்களில் சுகதேகியாக இருக்கும் போது பெண்ணின் கற்பப்பையிலிருந்து வெளியாகும் இரத்தத்தை குறிக்கும்.

மாதவிடாய் இரத்தத்தின் தன்மை

கருஞ் சிவப்பு நிறத்திலான கடும் சூடான துர்நாற்றம் வீசக் கூடிய ஒன்றாகும். இதன் போது கடுமையான சூட்டை பெண்கள் உணருவார்கள்.

மாதவிடாய் ஏற்படும் வயது.

மாதவிடாய் ஆரம்பிதற்கென பிரத்தியோகமான வயது கிடையாது. அது பெண்ணின் சூழல்,இயல்பு முகபாவணைகளை பொறுத்து மாற்றம் பெறும். என்றாலும் ஒரு பெண் எப்போது மாதவிடாய் இரத்தத்தை பார்க்கிறாளோ அப்போது அவள் மாதவிடாய் நிலையை அடைகிறாள்.

மாதவிடாய் காலம்

நிர்னயிக்கப்பட்ட எல்லை இதற்கு கிடையாது. சில பெண்களுக்கு மூன்று நாட்கள், சிலர் நான்கு நாட்கள், சில பெண்களுக்கு பெரும்பாலும் ஆறு அல்லது ஏழு நாட்கள் மாதவிடாய் ஏற்படுகிறது. நபியவர்கள் ஹம்னா பின்த் ஜஹ்ஸ் அவர்கள் அதிக நாட்கள் மாதவிடாயில் இருந்த போது கூறினார்கள் «மாதவிடாய் காலமாக ஆறாக அல்லது ஏழாக (ஆக்கிக் கொள்ளுங்கள்). அதனை அல்லாஹ்வே அறிந்தவன். பின்னர் கடமையான குளிப்பை நிறைவேற்றுங்கள்»(ஆதாரம் அபூதாவுத்).

கேள்வி

1.கர்ப்பமாகவுள்ளவர்களுக்கு மாதவிடாய் அடிப்படையில் ஏற்படாது. கற்பகாலத்தின் இடையே அவருடைய அடிவயிற்றில் நோவு ஏற்பட்டு இரத்தம் வந்தால் அது மகப்பேற்று இரத்தமாகும். ஆனாலும் கற்பகாலத்தின் ஆரம்பத்தில் வயிற்றில் நோவின்றி இரத்தம் வந்தால் அது மாதவிடாய் இரத்தமாகும்.

2.ஒரு பெண்ணிற்கு நிர்னயிக்கப்பட்டுள்ள காலத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ மாதவிடாய் ஏற்பட்டால் அவர் மாத ஆரம்பத்தில் மாதவிடாய் ஏற்பட்டு பின்னர் மாத இறுதியிலும் கண்டால் அல்லது அவளது மாதவிடாய் காலம் வழக்கத்திற்கு மாறாக குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, அவள் எப்போது இரத்தத்தை காண்கிறாளோ அதுவே மாதவிடாய் இரத்தமாகும். எப்போது சுத்தமாகிறாளோ அப்போதே அது சுத்தமாகும். 3.பெண்ணிற்கு வெள்ளை நிறத்திலான ஒன்று வெளியாகின்ற போது அவள் துப்பரவாகிவிட்டாள் என அறியப்படும். வெள்ளை நிரமான அது மாதவிடாய் நின்ற பின்னர் வெளியாகும் ஒன்றாகும். அந்த நீர் வெளியாகவில்லையாயின் இரத்தம் காய்ந்து வந்தால் சுத்தமாகுவாள். அல்லது அவளுடைய பெண்ணுறுப்பில் பஞ்சை நுழைத்து அதில் உள்ள இரத்தம் காய்ந்திருந்தால் அது நின்றவிட்டதாகும்.

மாதவிடாய் உடைய சட்டம்

1.பிரவுன் மற்றும் மஞ்சள் நிற (இரத்தத்தின்) சட்டம்

பிரவுன் மற்றும் மஞ்சள் நிற (இரத்தத்தின்) அடையாளம்

ஸூப்ர்

இது மஞ்சள் நிறமான பெண்ணிலிருந்து வெளிப்படும் இரத்தமாகும்.

குத்ரா

இது கறுப்பிற்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட ப்ரவ்ன் நிற இரத்தமாகும்.

பிரவுன் மற்றும் மஞ்சள் நிற (இரத்தத்தின்) சட்டம்

ஒரு பெண் மஞ்சள் நிற இரத்தத்தை காண்கிறாள். அல்லது ப்ளவுன் நிறைத்தையோ அல்லது மஞ்சளுக்கும் கருப்பிற்கும் இடைப்பட்ட நிறத்தில் காண்கிறாள். அல்லது அதோடு தொடர்புபட்ட ஒன்றை காண்கிறாள் எனின் அதற்கு இரண்டு நிலைகள் இருக்கின்றன.

1-அதனை மாதவிடாய் காலத்தில் கண்டால் அல்லது சுத்தமாகுவதற்கு முன்னர் தொடராக வந்தால்

இந் நிலைகளில் அது மாதவிடாய் இரத்தமாகும். ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் «பெண்கள் சிலர் மஞ்சள் நிறம் வெளிப்படும் நேரத்தில் துணி,(துர்ஜ் - பெண்கள் மாதவிடாய் இரத்தம் எஞ்சியுள்ளதா என பார்க்க பயன்படுத்தும் துணி பஞ்சு (குர்சுபு – பஞ்சு) போன்றவற்றை உட்செலுத்தினர்.(பரிசேதித்தனர்) அவர்களுக்கு சொல்லப்பட்டது ” மாதவிடாய் நிற்பதற்கான வெள்ளை நீர் வரும் வரை அவசரப்பட வேண்டாம். அதன் பின்னர் நீங்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமாகலாம்.» (மாலிக் முஅத்தா).

2-சுத்தமாகின்ற காலத்தில் கண்டால்

இந்த நேரத்தில் எதுவும் செய்ய தேவையில்லலை. குளிக்கவோ வுழுச் செய்வதோ அவசியமில்லை. உம்மு அதிய்யா ரழி அறிவிக்கின்றார்கள் «சுத்தமானதன் பின்னர் மஞ்சள், ப்ரவ்ன் நிறம் வெளிப்பட்டால் நாங்கள் எதுவும் செய்யமாட்டோம்»(தொடர் இரத்தப் போக்கின் நிலைகள்).

2.மாதவிடாய் தடைப்படுவதன் சட்டம்

ஒரு பெண் ஒருநாள் இரத்தத்தையும் மறுநாள் அது நிற்பதையும் கண்டால் அல்லது அது போன்றதை கண்டால் அது இரண்டு நிலைப்படும்.

1.அது அவளுடன் தொடர்ந்து இருக்கும்

அது தொடர் இரத்தப் போக்காகும்.

2.அது துண்டிக்கப்பட்டிருப்பின்

சில வேளை அவள் சுத்தமாக இருக்கின்றாள் அல்லது சில வேளை அவளுக்கு இரத்தம் வருகின்றது எனின் அவருக்கு இரண்டு சட்டங்கள் உள்ளன.

1.அந்த இரத்தம் தடுபட்டால் அது மாதவிடாய் இரத்தமாக கணிக்கப்படும்.

2.சுத்தமான காலத்தில் அவள் வெள்ளை நீரை கண்டால் அது சுத்தமான காலமாகும். அது குறைவாக இருப்பினும் அல்லது அதிகமாக இருப்பினும் சரியே. அது குறைவான நாளாக அல்லது கூடுதலான நாளாக இருப்பினும் சரியே

சுத்தத்திற்கான அடையாளம்

மஞ்சள் அடையாளம்

ப்ரவுன் அடையாளம்

தொடர் இரத்தப் போக்கு

தொடர் இரத்தப் போக்கு

பெண்ணிருப்பில் இருந்து நிறுத்தப்படாமல் தொடந்து வெளியாகும் இரத்தத்தை குறிக்கும்.

மாதவிடாய்க்கும் தொடர் இரத்தப் போக்கிற்கும் இடையான வேறுபாடுகள்

மாதவிடாய் இரத்தம்

தொடர் இரத்தப் போக்கு இரத்தம்

கட்டியான கருமை

மெல்லிய சிவப்பு

துர்நாற்றமுடையது

துர்நாற்றம் இல்லை

உறையாமல் இருக்கும்

உறையக் கூடியது

கருப்பையிலிருந்து வெளியேறும்

கருப்பையின் கீழ் நரம்பு பகுதியிலிருந்து வரும்

வழமையான இரத்தம்

நோய்கான இரத்தமாக இருக்கும்

சில நேரங்களில் வெளியாகும்

குறிப்பிட்ட நேரம் கிடையாது

தொடர் இரத்தப் போக்கின் நிலைகள்

முதலாவது நிலை – தொடர் இரத்தப் போக்கிற்கு முன்னர் மாதவிடாய் இரத்தத்தை பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இது வழமையக கணக்கெடுக்கப்பட்டு மாதத்தில் எஞ்சிய ஏனைய நாட்கள் இரத்தப் போக்காக கணிக்கப்படும். ஆயிஷா ரழி அறிவிக்கிறார்கள். «பாத்திமா பின்த் குபைஷ் ரழி கேட்டார்கள் ”நபியவர்களே! நான் சுத்தமாகவில்லை. ஆனால் தொழுது வருகின்றேன்.” ”அதற்கு நபியவர்கள் கூறினார்கள் ”இல்லை அது நோயாகும். மாதவிடாய் ஏற்படாத காலத்தில் தொழுங்கள். பின்னர் குளித்து தொழுகள்»
(ஆதாரம் புஹாரி). என்றார்கள்.

இரண்டாவது நிலை. – வழமையை அறியவில்லை ஆனால் மாதவிடாய் இரத்தத்தையும் தொடர் போக்கு இரத்தத்ததையும் அறிந்திருக்கிறார்.

அந்த பாகுபாடு முலம் செயற்படல். இதனை பாத்திமா பின்த் குபைஷ் ரழி அவர்களின் செய்தி உறுதிப்படுத்துகின்றது.«அவர் மாதவிடாய் நிலையில் இருந்தார். நபியவர்கள் அவருக்கு கூறினார்கள் ”மாதவிடாய் இரத்தமாக கறுப்பாக இருப்பதை அறிந்தால் நீர் தொழுவதை நிறுத்திவிடு, ஆனால் இரத்த போக்காக இருந்தால் வுழுச் செய்து கொண்டு தோழுவீராக! ஏனனனில் அது கழிவாகும்»
(ஆதாரம் அபூதாவுத்).

மூன்றாம் நிலை – வழமையும் அறியவில்லை, வித்தியாசத்தையும் அறியவில்லை.

பெரும்பாலான பெண்களுக்கு இது இடம்பெறுவதுண்டு. ஒவ்வொரு மாதமும் ஆறு அல்லது ஏழு நாட்கள் மாதவிடாய் ஏற்படும். முதலில் காணும் இரத்தம்மா தவிடாய் ஆகும். அதன் பின்னர் ஏற்படுவது தொடர் இரத்த போக்காகும். நபியவர்கள் ஹம்னா பின்த் ஜஹ்ஸ் ரழி அவர்களுக்கு கூறினார்கள் «ஆறு அல்லது ஏழு நாட்கள் மாதவிடாய் உனக்கு ஏற்படும். அதனை அல்லாஹ் அறிவான். பின்னர் இரத்தம் துண்டிக்கப்பட்டால் சுத்தமாகி 23 அல்லது 24 நாட்கள் தொழுவீராக நோன்பு நோற்பீராக. அதற்குரிய கூலி கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் இவ்வாறே நிறைவேற்றுவாயாக. பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டு அவர்கள் சுத்தமடையும் எல்லையை போல»
(ஆதாரம் அபூதாவுத்).

நான்காவது நிலை – வழமையையும் அறிந்து அது இரண்டையும் அறியக் கூடியவராக இருத்தல்.

இதில் அவர் வழமையை மாத்திரம் கணக்கிட்டு கொள்ளட்டும். வழமையையே பெண்ணிற்குரிய எல்லையாகும். வழமையை அவள் மறந்தால், பிரித்து அறிந்து செயலாற்றட்டும்.

கேள்வி

1.ஒரு பெண் மாதவிடாய் நேரத்தை அறிந்து மாதவிடாய் நாட்களின் எண்ணிக்கை மறந்தால் பெரும்பாண்மையான பெண்களின் வழமைப்படி கணக்கிலிட வேண்டும்.

2.ஒரு பெண் மாதவிடாயின் நாட்களின் எண்ணிக்கையை அறிந்துள்ளாள். ஆனால் மாதவியாயின் காலத்தையும், அல்லது மாதத்தின் முதலாவதிலா என்பதை மறந்து விட்டாள் எனின் அப்போது மாதத்தின் முதவாவது பகுதியை அவள் கணக்கிட்டு கொள்ளட்டும். ஆனால் மாத்தின் அரைப் பகுதியில் அவளுக்கு மாதவிடாய் வரும் என கூறினால் அவளுக்கு கணக்கில் எடுக்க முடியாது போகும். அப்போது மாதத்தின் அரை நாளை முதலாவது நாளாக மாதவிடாய் நாளாக எடுத்துக் கொள்ளட்டும்.

3.மாதவிடாயின் காலம் நிறைவுற்ற நிலையில் அவளுக்கு தொடர் இரத்தப்போக்கு உள்ளது. அப்போது அவள் குளிக்கிறாள் பின்னர் அவளுடைய பெண்ணுறுப்பில் இரத்த அடையாளத்தை உணர்கிறாள் என்றால் அவளுக்கு சுத்தமாவரின் சட்டமாகும். அவள் தொழுகை, நோன்பு போன்றவற்றை நிறைவேற்றலாம். வுழுச் செய்த பின்னர் இரத்தம் வெளியானால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனனில் அவள் மன்னிக்கப்படுகிறான். அவள் பின்வரும் மூன்று வடிவங்களில் சுத்தமாகிறாள்.

அ- அவளுடைய பெண்ணுறுப்பில் உள்ளவற்றை கழுவிய பின்னர் எல்லா தொழுகைக்கும் அவள் வுழுச் செய்ய வேண்டும். நபியவர்கள் பாத்திமா பின்த் அபீஹய்ஸ் ரழி அவர்களுக்கு கூறினார்கள் «ஒவ்வொரு தொழுகைக்கும் வுழுச் செய்து தொழுவீராக»
(ஆதாரம் அபூதாவுத்).

ஆ- ழுஹறை அஸர் தொழுகைக்கு முன்னர் வரை பிற்படுத்த வேண்டும். அப்போது குளித்து விட்டு லுஹரையும் அஸரையும் தொழ வேண்டும். நபியவர்கள் ”ஹம்னா பின்த் ஹஜ்ஸ் ரழி அவர்களுக்கு கூறினார்கள் «உங்களுக்கு சக்தி இருப்பின் லுஹரை பிற்படுத்தி அஸரை முற்படுத்துங்கள், பின்னர் குளித்து இரண்டு தொழுகைகளையும் ஒன்றாக தொழுங்கள். மஃரிபை பிற்படுத்தி, இஷாவை முற்படுத்துங்கள். பின்னர் குளித்து அவ்விரண்டு தொழுகைகளையம் ஒன்றாக தொழுங்கள்” அப்படி செய்தால் குளித்துவிட்டு சுபஹ் தொழுகையை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு சக்தி இருப்பின் நோன்பு நோருங்கள்»(ஆதாரம் அபூதாவுத்
இ- ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்தல். «உம்மு ஹபீபா ரழி அவர்கள் ஏழு வருடங்கள் தொடர்போக்குடையவராக இருந்தார்கள் இதைப் பற்றி நபியவர்கள் கேட்டார்கள். அவரை குளிக்கும் படி நபியவர்கள் ஏவினார்கள். அவர் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்கக் கூடியவராக இருந்தார்கள்.» (ஆதாரம் புஹாரி).

4. கற்பப்பையில் அறுவைச் சிகிச்சை செய்ததன் காரணமாக இரத்தம் வெளியேறுமானால் அதற்கு இரண்டு நிலைகள் உள்ளன.

அ. அது மாதவிடாய் இரத்தம் இல்லை என அறிந்து கொள்வார். இதற்கு தொடர் இரத்தப்போக்கின் சட்டமும் கிடையாது. அவர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அது காரண இரத்தமாகும். ஒவ்வொரு தொழுகைக்கும் அவர் வுழுச் செய்ய வேண்டும்.

ஆ. சில வேளை அது மாதவிடாய் இரத்தம் என அறிந்தால் அதற்கு இரத்தப்போக்குடைய சட்டமாகும்.

5- இரத்தப் போக்குடையவர் உடலுறவு கொள்ளலாம். ஏனனில் மார்க்கத்தின் அதற்கு தடைகள் இல்லை.

மகப்பேறு இரத்தம்

மகப்பேறு இரத்தம்

பிள்ளை பெற்றதன் காரணமாக பெண்ணின் கற்பப்பையிலிருந்து வெளியேறும் இரத்தம்

மகப்பேற்றின் காலம்

வரையறுக்கப்பட்ட எல்லை இதற்கு கிடையாது. பெரும்பாலும் நாற்பது நாட்களாகும். நாற்பது நாட்களுக்கு முன்னர் அவர் சுத்தமானால் அவர் குளித்துவிட்டு தொழ வேண்டும்..

மகப்பேற்றின் சட்டங்கள்

1.ஒரு பெண் குழந்தை பெற்று, இரத்தம் வெளியேற வில்லை எனின் அவர் வுழுச் செய்து கொண்டு தொழ வேண்டும். அவர் குளிக்க தேவையில்லை. இது அரிதும் அரிதாக நடைபெறும் ஒன்றாகும்.

2.நாற்பது நாட்களுக்கு அதிகமாக இரத்தம் வந்தால் வழமை போல 40 க்கு பிறகு அது தானாக நின்று விடும். இரத்தம் தடைப்படுவதற்குரிய நிலை நெருங்குவது வெளிப்பட்டால் தாமதிப்பது நல்லது. அந்த இரத்தம் தொடருமானால் அது தொடர் போக்கு இரத்தமாகும். அவர் தொடர் இரத்தப் போக்கின் சட்டத்தை பின் தொடர வேண்டும்.

3. 40 நாட்களுக்கு முன்னர் அவர் சுத்தமாகினால் அவர் சுத்தமாகிறாள் அவர் குளித்துவிட்டு தொழுகை,நோன்பு போன்றவைகளை நிறைவேற்றலாம். அத்தோடு கணவனுடன் உடலுறவு கொள்ளலாம்.

4. 40 நாட்களுக்கு முன்னர் சுத்தமாகி பின்னர் 42 ம் நாள் மீண்டும் இரத்தம் வெளிப்பட்டால் அவர் பின்வருவனவற்றை கவனிகக் வேண்டும்.

(அ) அது மகப்பேறு இரத்தம் என்னின் அது அதுவே என கருத வேண்டும்.

(ஆ) அது மகப்பேறு இரத்தம் இல்லை எனின் அவர் குளித்து சுத்தமாக வேண்டும்.

5. குழந்தை வயிற்றில் உருவானால் வெளியாகும் இரத்தம் மகப்பேற்று இரத்தமாகும். குழந்தை பூரணமாக இல்லாமல் கருப்பையிலிருந்து இரத்தம் வெளியாகின்றது எனின் அதற்கு மூன்று நிலைகள் காணப்படுகின்றது.

(அ) முதல் 40 நாட்களுக்கு முன்னர் இருந்தால் அது கெட்ட இரத்தமாகும். அப்போது குளித்து விட்டு தொழுது, நோன்பு நோற்கலாம்.

(ஆ) 80 நாட்களுக்கு பின்னர் இரத்தம் வந்தால் அது மகப்பேற்று இரத்தமாகும்.

(இ) 80 நாட்களுக்கும் 40 நாற்களுக்கும் இடைப்பட்டதாக இருந்தால் குழந்தை உருவான அறிகுறிகள் வெளிப்பட்டால் அது மகப்பேற்று இரத்தமாகும். அது அல்லாது போனால் கெட்ட இரத்தமாகும்.

மாதவிடாய், மகப்பேறு காலத்தில் தடுக்கப்பட்டவைகள்

1.உடலுறவு கொள்ளள்

அல்லாஹ் கூறுகிறான், {மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்}[பகறா -222]

இவ் வசனம் இறங்கும் போது நபியவர்கள் கூறினார்கள் «திருமணத்தை தவிர அனைத்தையும் செய்யுங்கள் என்றார்கள்»
(ஆதாரம் முஸ்லிம்).

கேள்வி

1.மாதவிடாய் காலத்தில் மனைவியுடன் உடலுறவு கொள்வது பாவமாகும். அப்படி செய்தால் அதற்கு குற்றப்பரிகாரம் செய்ய வேண்டும்.

பரிகாரம் – தினார் அளவு ஸதகா கொடுக்க வேண்டும். அல்லது அரைவாசி திர்கம் அளவுடைய தங்கம் கொடுக்க வேண்டும். இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் ”ஒரு பெண் நபியவர்களிடம் வந்து நான் மாதவிடாய் நிலையில் இருக்கும் போது (உடலுறவு கொண்டேன்) எனக்கு என்ன தீர்வு என கேட்டார். அதற்கு நபியவர்கள் «தீனார் அல்லது அதன் அரவாசியை கொடுங்கள்168 »(ஆதாரம் அபூதாவுத்).

என்றார். தினார் – 4.25 கிராம் தங்கம்.

2.ஒரு பெண் சுத்தமாகி குளிக்கும் வரை அவள் கணவன் உடலுறவு கொள்ளவில்லை எனின், அல்லாஹ் கூறுகிறான் {மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்}.[பகறா – 222],.

2.தொழுகை

நபியவர்கள் கூறினார்கள் «மாதவிடாய் ஏற்பட்டால் தொழுகையை விடுங்கள், அதிலிருந்து சுத்தமானால் சுத்தமாகி பின்னர் தொழுங்கள் »(ஆதாரம் அபூதாவுத்). என்றார்கள்.

கேள்வி

1.ஒரு பெண் சுத்தமானால் அவள் விட்ட தொழுகைகளை மீட்டித் தொழ தேவையில்லை. மேலுள்ள செய்தியை பின்வரும் ஆயிஷா ரழி அவர்களது செய்தி உறுதிப்படுத்துகின்றது. «(மாதவிடாய் நீங்கினால்) நோன்பை நாங்கள் கழாச் செய்வோம், தொழுகையை கழாச் செய்யமாட்டோம்»
(புஹாரி முஸ்லிம்).

2.ஒரு மாதவிடாய் பெண் தொழுகையை பூரணமாக அடைந்தால் அவள் தொழுவது வாஜிபாகும். அவள் முதல் நேரத்தை அல்லது கடைசி நேரத்தை அடைந்தாலும் சரியே. அவள் தொழுகையுடை நேரத்தின் ஒரு பகுதியை மாத்திரம் அடைந்தால் அவளுக்கு தொழுகை கடமையில்லை. நபியவர்கள் கூறினார்கள் «யார் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து கொள்கிறாரோ அவர் தொழகையை அடைந்தவராவார்»
(புஹாரி முஸ்லிம்).

3.நோன்பு

நபியவர்கள் கூறினார்கள் «மாதவிடாய் நேரத்தில் நேன்பு,தொழுகை நிறைவேற்ற வேண்டுமா? என கேட்கப்பட்ட போது ”இல்லை»(ஆதாரம் புஹாரி). என்றார்கள்.

கேள்வி

ஒரு பெண் பஜ்ர்க்கு முன்னர் சுத்தமானால் அவர் அந்த நோன்பை நோற்க வேண்டும். அவள் பஜ்ர் தொழுகைக்கு பின்னால் குளிப்பதாக இருந்தாலும் சரி

4.குர்ஆனை தொடுதல்

அல்லாஹ் கூறுகிறான் {தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்}. [வாகிஆ – 79].

நபியவர்கள் கூறினார்கள் «சுத்தமில்லாமல் குர்ஆனை தொட வேண்டாம்»
(மாலிக் முஅத்தா).

5.கஃபாவை தவாப் செய்தல்

ஆயிஷா ரழி அவர்களுக்கு நபியவர்கள் கூறினார்கள் «ஹஜ்ஜை இவ்வாறு நிறைவேற்றுங்கள், சுத்தமாகாமல் கஃபாவை தவாப் செய்யாதீர்கள்»
(புஹாரி முஸ்லிம்).

இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் «அவர்களது காலத்தில் கஃபாவை தவாப் செய்யும் படி ஏவப்பட்டது. தாவிடாய் பெண்களை தவிர»
(புஹாரி முஸ்லிம்).

6.வழிப்போக்கர்களை தவிர ஏனையவர்கள் பள்ளியில் தரித்தல்.

அல்லாஹ் கூறுகிறான் {நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர}. [நிஸா – 43].

நபியவர்கள் கூறினார்கள் «நிச்சயமாக நான் மாதவிடாய் உள்ளவர்களும், குளிப்பு கடமையானவர்களும் பள்ளிக்கு வர அனுமதிக்கமாட்டேன்»(ஆதாரம் – அபூதாவுத்).

கேள்வி

1-மாதவிடாய் பெண் மாதவிடாய் இரத்தம் பள்ளியை அசுத்தமாக்கும் என பயப்படவில்லை எனின் அவள் பள்ளியை கடப்பதில் பிரச்சினையில்லை. அல்லாஹ் கூறுகிறான். {பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. }. (நிஸா – 43).

2.பெருநாள் திடலில் தரிப்பது தடுக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் கூறினார்கள் «மாதவிடாய் பெண்கள் திடலுக்கு வருவதை தடுத்தார்கள்»(புஹாரி முஸ்லிம்). ஆனாலும் திடலுக்கு குத்பாவை கேட்பதற்கு, நல்ல விடங்களை கேட்க, அதன் பால் முஸ்லிம்களை அழைக்க செல்வது ஆகுமானது

7.விவாகரத்து

மதவிடாய் காலத்தில் பெண்ணை விவாகரத்து கூறுவது ஹறாமாகும். அல்லாஹ் கூறுகிறான் {நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள்}[தலாக் – 01], தலாக் சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில் சொல்லுதல்)