மதீனாவை தரிசிப்பதன் சிறப்பும் அந்தஸ்தும்

1863

மதீனாவை தரிசிப்பதன் சிறப்பும் அந்தஸ்தும்

மதீனாவின் பெயர்கள்

01-அல்மதீனா

அல்லாஹ் கூறுகிறான் {நாங்கள் மதீனாவிற்கு திரும்புவோமானால்} [முனாபிகூன் - 08].

02-தாபாஃ

ஜாபிர் ரழி சொல்கிறார் நான் அல்லாஹ்வின் தூதர் «நிச்சயமாக மதீனாவிற்கு தாபாஃ என்று பெயர் வைத்தான் என்று சொல்வதைக் கேட்டேன். »
(ஆதாரம் முஸ்லிம்)

03-தய்யிபாஃ

ஸைத் ரழி சொன்னார்கள். நபியவர்கள் கூறினார்கள் «நெருப்பு வெள்ளியை உறுக்குவதைப் போல தய்யிபாஃ பாவங்களை உறுக்கிவிடும் »(புஹாரி முஸ்லிம்)

மதீனா நபவிய்யாவின் சிறப்பு

01- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:«மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியின் மரங்களை வெட்டுவது, அதன் வேட்டைப் பிராணிகளைக் கொல்வது ஆகியவற்றுக்கு நான் தடை விதிக்கிறேன். மக்கள் அறிந்துகொள்பவர்களாயிருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். எவரும் அதை வெறுத்து அதை விட்டுச் சென்றால், அவரை விடச் சிறந்தவரை அதில் அல்லாஹ் குடியமர்த்தாமல் இருப்பதில்லை. அங்கு ஏற்படும் பசி பட்டினியையும் கடினமான வாழ்க்கையையும் சகித்துக்கொண்டு (வாழ்வின் கஷ்டம்) அங்கு நிலைத்திருப்பவருக்கு மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக அல்லது சாட்சியம் அளிப்பவனாக இருப்பேன்.»(ஆதாரம் முஸ்லிம்) இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

02- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «எல்லா ஊர்களையும் (அங்கு சென்று இருக்க ஏவப்பட்டுள்ளேன்), தூக்கிச் சாப்பிடக்கூடிய, (ஏனைய ஊர்களை விட மிகைத்தது) "யஸ்ரிப்" (எத்ரிப் என்று ஜாகிலிய காலத்தில் பெயர் சொல்லப்பட்டது இப்போது மதீனா என்று சொல்லப்படும்) என மக்கள் கூறக்கூடிய ஓர் ஊருக்கு (நாடு துறந்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன். அதுதான் மதீனாவாகும். இரும்பின் துருவை (அவர்களிடமிருந்து பாவத்தை வெளியாக்கும்)(கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் (நெருப்பில் போட்டு உருக்குவது) போன்று மதீனா (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும் (துருப்பிடிப்பது)»(புஹாரி முஸ்லிம்இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மதீனாவின் விசேஷமான தன்மை

01-நிச்சயமாக அது ஹரம் ஸவ்ர் , அய்ர் மலைகளுக்கு இடையிலிருக்கும் பாதுகாப்பானதாகும். அங்கு பிராணிகளை வேட்டையாட முடியாது. மரங்களை வெட்டவும் முடியாது.

நபி ஸல் அவர்கள் சென்னார்கள் «மதீனா நகரம் "அய்ர்"எனும் மலையிலிருந்து "ஸவ்ர்" மலைவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை உருவாக்குகிறாரோ, அல்லது (அவ்வாறு) புதிதாக ஒன்றை உருவாக்குபவருக்கு அடைக்கலம் அளிக்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவர் புரிந்த கடமையான வழிபாட்டையோ கூடுதலான வழிபாட்டையோ அவரிடமிருந்து மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்.»(புஹாரி முஸ்லிம்)

தவ்ர் மலை

அய்ர் மலை

இப்ராஹீம் அலை அவர்கள் மக்காவை புனிதப்படுத்தியது போல் நபி ஸல் மதீனாவை புனிதப்படுத்தினார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸைத் ரழி அவர்கள் சொன்னார்கள். நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «நிச்சயமாக இப்ராஹிம் அலை அவர்கள் மக்காவை புனிதமாக்கினார்கள். அதற்காக துஆ செய்தார்கள். நான் மதீனாவை புனிதமாக்கி இருக்கின்றேன். அதற்கு இப்ராஹீம் அலை மக்காவுக்கு துஆ செய்ததை போன்று நான் துஆ செய்கின்றேன் »
(ஆதாரம் புகாரி)

மக்காவினதும் மதீனாவினதும் புனிதத்துவக்குமான வித்தியாசம்

மக்காவின் புனிதத்துவம் குர்ஆன், சுன்னாவினாலும் இமாம்களின் ஏகோபித்த முடிவாழும் உறுதியானதாகும்.

மதீனாவின் புனிதத்துவத்தில் முரண்பாடு உள்ளது. நிச்சயமாக அது புனிதமானது என்பதே சரியானதாகும்.

02-தொழுகைக்கான நன்மைகள் இரட்டிப்பாக்கப்பட்டது

நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «இந்த என்னுடைய பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விட சிறந்தது மஸ்ஜிதுல் ஹராமை தவிர » (ஆதாரம் புகாரி)

03-நிச்சயமாக அங்கே சுவர்க்கத்தின் பூங்கா ஒன்று உள்ளது அதிலே தொழுவது சுன்னத்தாகும்

அபூ ஹுரைரா ரழி அவர்கள் நபியவர்கள் சொன்னதாக சொன்னார்கள் «என்னுடைய வீட்டுக்கும் என்னுடைய மிம்பருக்கும் இடையில் சுவர்க்கப்பூங்கா ஒன்று உள்ளது என்னுடைய மிம்பர் என் தடாகத்தின் கீழ் உள்ளது»(புஹாரி முஸ்லிம்)

ரவ்ழா ஷரீப்

04- இறுதிக்காலத்தில் நிச்சயமாக அங்கே தஜ்ஜாலும் ப்ளெக் நோய் நுழையாது. (தாவூன் : ப்ளேக் நோய்)

நபி ஸல் சொன்னதாக அனஸ் ரழி அவர்கள் «சொன்னார்கள் தஜ்ஜால் மதீனாக்கு வருவான் மலக்குகல் அவனை தடுப்பார்கள் அங்கே இன்ஷா அல்லாஹ் தஜ்ஜாலும் ப்ளெக் நோய் நுழையாது»(ஆதாரம் திர்மிதி)

05-நிச்சயமாக இறைத்துதர் ஸல் அவர்கள் அதன் அபிவிருத்திற்கு துஆ செய்தார்கள்

நபி ஸல் சொன்னதாக அனஸ் ரழி அவர்கள் சொன்னார்கள் «மக்காவை விட மதீனாவுக்கு இரட்டிப்பான அபிவிருத்தியை தருவாயாக »
(புஹாரி முஸ்லிம்)

06-மக்காவில் வேட்டையாடுவதற்கு பாவமும் பரிகரமும் உண்டு. மதீனாவில் வேட்டையாடுவதற்கு பாவம் உண்டு பரிகரம் கிடையாது. மக்காவில் வேட்டையாடுவதற்கான பாவம் மதீனாவை விட மிகப் பொரியது.(பார்க்க – அல் மும்திஃ பாகம் 7 பக்கம் 257)

நபி ஸல் அவர்களின் பள்ளியை தந்திப்பதன் சட்டம்

ஹஜ்ஜிற்கு ருகூன்கள், வாஜிப்கள், சுன்னத்கள் நிபந்தனைகள் இருப்பது போன்று நபியவர்கள் பள்ளியை தரிசிப்பதற்கு என என எந்த நிபந்தைனையும் கிடையாது. அது ஓர் சுன்னத்தான வணக்கமாகும். எந்த நேரத்திலும் தரிசிப்பதை மார்க்கம் அனுமதித்துள்ளது.

பள்ளியை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள கப்ரை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில் செல்வது கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து) பயணம் மேற்கொள்ளப்படாது.».(ஆதாரம் முஸ்லிம்) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்னு தைமியா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் «அவருடைய நாட்டம் தொழுகை அல்லாமல் நபி ஸல் அவர்களுடைய கப்ரை சந்திப்பதாக இருந்தால் அது மார்க்கத்தில் வலியுறுத்தப்படாத ஒன்றாகும். அதைப் பற்றிய ஹதீஸ்கள் எல்லாம் ஹதீஸ் அறிஞர்களின் கருத்துப்படி பலவீனமாகும். அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். சுன்னவை பின்பற்றும் எவரும் அப்படி செய்வதை பார்த்ததும் இல்லை. உலமாக்காள் யாரும் அவ்வாறு ஆதாரம் எடுக்கவில்லை». (மஜ்மஉல் பதாவா பாகம் 27 பக்கம் 26)

தரிசிப்பதன் சட்டங்களும் ஒழுங்கு முறைகளும்.

தரிசனை செய்பவர்கள் மஸ்ஜிதுந் நபவிக்கு வந்தால் வலது காலை வைத்து நுழைவது சுன்னத்தாகும். மேலும் பள்ளியில் நுழையும் போது ஓதும் துஆவையும் சொல்லி நுழைவார். «அல்லாஹூம்ம இப்தஹ் லி அப்வாப ரஹ்மதிக” ».(ஆதாரம் முஸ்லிம்)

02- பள்ளிவாசலின் காணிக்கையாக இரண்டு ரக்அத்துகளை தொழுவார். தொழுகையை ரவ்லா ஷரீபிலே தொழுவது ஏற்றமானதாகும்

03- நபி அவர்களுடைய கப்ரையும் அவர்களுடைய இரு தோழர்களுடைய கப்ரையும் தரிசிப்பது சுன்னத்தாகும். கப்ருக்கு முன்னால் ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் மௌனமாக நிற்பார். மேலும் இந்த துஆவை கூறுவார் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஸல்லல்லாஹு அழைக்க, வஜஸாக அன் உம்மதிக ஹைரன்” பின்னர் வலது பக்கம் இரண்டு எட்டுக்கள் வைத்து பின்னர் இடது பக்கம் இரண்டு எட்டுகள் வைத்து பின்வரும் துவாவை கூறுவார். அஸ்ஸலாமு அலைக்க யா அபூபக்ர் கலீபதி ரசூலில்லாஹி ஸல்ல்லாஹூ அலைகி வஸல்லம்.வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.ரழி அல்லாஹூ அன்க. வஜஸாக அன் உம்மதி முஹமத்தின் ஸல்ல்லாஹூ அலைகி வஸல்லம் ஹைரா. பின்னர் வலது பக்கம் இரண்டு எட்டுக்கள் வைத்து பின்னர் இடது பக்கம் இரண்டு எட்டுகள் வைத்து பின்வரும் துவாவை கூறுவார். அஸ்ஸலாமு அலைக்க யா உமர் அமீரில் முஃமினீன வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.ரழி அல்லாஹூ அன்க. வஜஸாக அன் உம்மதி முஹமத்தின் ஸல்ல்லாஹூ அலைகி வஸல்லம் ஹைரா.

04- சந்திப்பவர்க்கு நபி அவர்களுடைய பள்ளியிலே ஐந்து கடமையான தொழுகைகளை தொழுவது சுன்னத்தாகும் . இறைவனை ‘பகம் செய்வதையும், துஆ கேட்பதையும், சுன்னத்தான வணக்கங்களைச் செய்வதையும் அதிகப்படுத்துவார்.

05- குபா பள்ளியை தரிசிப்பது சுன்னத்தாகும். அதில் தொழுவது சுன்னத்தாகும். சனிக்கிழமையில் தரிசிப்பது மிகச் சிறப்பானதாகும். «நபி அவர்கள் நடந்தோ அல்லது பிரயாணம் செய்து வந்து குபா பள்ளியில் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள் »இன்னொரு அறிவிப்பில் «இவர்களது ஒவ்வொரு சனிக்கிழமையும் நபி அவர்கள் குபா பள்ளிக்கு வருவார்கள் ».( ஆதாரம் முஸ்லிம்)

06- பகீயிலே (பகீஃ : மதீனா வாசிகளுக்கான அடக்கஸ்தலம்) இருக்கின்ற கப்ருகளை தரிசிப்பதும் சுன்னத்தாகும். வீரமரணம் அடைந்தவர்களின் கப்ர்களையும் ஹம்ஸா ரலி அவர்களின் கப்ரையும் சந்திப்பது சுன்னத்தாகும். மேலும் இந்த துஆவையும் கூறுவார் «அஸ்ஸலாமு அலைக்க அஹ்லத்தியாரி மினல் முவ்மிநீன வல் முஸ்லிமீன வஇன்னா இன்ஸா அல்லாஹு பிகும் லாகிக்கூவ்ன் அஸ்அலுல்லாக லனா வலகுமுல் ஆபியா». (ஆதாரம் முஸ்லிம்)

கப்ருகளை தரிசிப்பதில் உண்டான தவறுகள்

01- கபுறுகளை தரிசிப்பதற்கும் இன்னும் மதீனாவில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை பார்ப்பதற்கும் என்று புனித பிரயாணம் செய்வது கூடாது. அங“கு தொழுகைக்காகவும், பள்ளிய தரிசிப்பதற்காகவும் என வருகின்ற போது கப்ரை தரிசிப்பதை மார்க்கம் அனுமதித்துள்ளது.

02-கப்ரிடத்தில் வந்தால் துஆ கேட்பது

03-அல்லாஹ்வை அன்றி நபி ஸல் அவர்கள் அடக்கப்பட்டிருக்கும் இடத்தில் தேவைகளை கேட்டால் அது ஷிர்குல் அக்பர் ஆகும்

04- பரக்கத்திற்கா வேண்டி அங்குள்ள தூண்களில் தடவுவது பித்அத் ஆகும். அது ஷிர்க்கிற்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.

05-நபி ஸல் அவர்களின் கப்ரிடத்தில் சத்தத்தை உயர்த்துதல், நீணட நேரம் நிற்றல், நுழைகின்ற ஒவ்வெறு முறையும் ஸலாத்தை அதிகமாக சொல்லுதல், ஸலாத்தின் போது தொழுகியில் கையை வைப்பது போல நெஞ்சின் மீது வைத்தல் போன்றன.