பூமியில் பெறப்படும் பொருட்களின் ஸகாத்

1136

பூமியில் பெறப்படும் பொருட்களின் ஸகாத்

பூமயில் இருந்து பெறப்படும் பொருள் .

பூமியில் இருந்து பெறப்பட்டு பிரயோசனம் பெறக்கூடியதாக அமையும் ஒவ்வொரு பொருட்களையும் குறிக்கிறது,

பூமியில் இருந்து பெறப்படும் பொருட்கள் இரண்டு வகைப்படும்:தானியங்கள்,பழங்கள் / கணியம், புதையல்

முதலாவது : தானியங்கள்,பழங்கள்

தானியங்கள்

தொளிக்கோதுமை,மற்றும் கோதுமை ஆகியவைகளில் இருந்தும் அவை அல்லாதவைகளில் இருந்தும் பெறப்பட்டு சேமிக்கப்படும் ஒவ்வொரு தானியங்களையும் குறிக்கிறது.

பழங்கள்

ஈத்தப்பழம்,திறாட்சைப்பழம், வாழைப்பழம் போன்ற சேமிக்கப்படும் ஒவ்வொரு பழத்தையும் குறிக்கிறது.

தானியங்கள் மற்றும் பழவகைகளில் ஸகாத்தின் சட்டம்

தானியங்களிலும் பழங்களிலும் ஸகாத் கடமையாகும் .நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ் கூறுகிறான்: {அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள்}[அன்ஆம் – 141] :«மழை நீரின் மூலமும் நீர் அறுவிகள் மூலமும் அல்லது இயற்கையாக வளரமக்க்ஷடியதாக இருந்தால் (என்பது தண்ணீர் புகட்டாமல் அதனுடைய வேர்களின் மூலம் அல்லது மழை நீரின் மூலம், ஓடி வரும் நீரின் மூலம்,ஆறுகள் மூலம் நீர் புகட்டப்படுவதாகும்) கொடுக்க வேண்டும் . நீர் புகட்டுவதன் மூலம் வளர்ந்தால் (என்பது நீர் ஊற்றுவதன் மூலம், பரீபாளிப்பதன் மூலம் நீர் புகட்டப்படுவதாம்.) கொடுக்க வேண்டும் »(3- ஆதாரம் புஹாரி).

தானியங்கள் மற்றும் பழவகைகலில் ஸகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள்

1-சேமிக்கப் படக்கூடியதாக இருத்தல்

சேமிக்கப் படாத நாளாந்த சாப்பாட்டு பொருளாக இருந்தால் ஸகாத் கடமையாக மாட்டாது. ஏனென்றல் சேமிக்க முடியாத பொருள் பெறுமதி உடைய பொருளாக கணிக்க முடியாததால் அது ஸகாத் கொடுப்பதற்கு உரிய பொருளாக கணிக்கப் பட மாட்டாது.

2-அளகக் முடியுமான பொருளாக இருத்தல்.

அது வஸக் என்பதை அல்லது அத போன்றவைகளை கொண்டு நிறுக்கப்படுவதை குறிக்கும். நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «தனியங்கள் மற்றும் பழவகைகளில் ஐந்து வஸக் (அறுபது சாஃ) அடையாமல் அதற்கு ஸகாத் இல்லை»(ஆதாரம் முஸ்லிம்). மரக்கறி வகைகள், பருப்பு வகைகள் அந்த நிறையினை அடையவில்லை என்றால் அதற்கு ஸகாத் கடமையில்லை.

3- யாராவது நாட்டியதாக இருத்தல்.

யாரும் நாட்டாமல் தானாக முளைத்தால் ஸகாத் கடமையாக மாட்டாது.

4.ஸகாத் கடமையாகும் அளவை அடைந்து இருத்தல்:

அதாவது ஐந்து வசக் உடைய அளவு.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: «வித்திலும் ஈத்தம் பழத்திலும் ஐந்து அவ்சகை அடைந்தாலே அன்றி ஸகாத் இல்லை»(ஆதாரம் முஸ்லிம்). கடமையாகும் அளவு 300 சாஃகளாகும். அது புதிய தொலிக்கோதுமையில் 612 கிலோ கிராமாகும். ஈத்தம் பழத்தின் வகையை போல நிஸாபை அளக்கும் போது ஒரு வகை இன்னொரு வகையோடு ஒரே வகையாக இருந்தால் சேர்க்கப்படும், வெவ்வேறான வகை அளக்கப்படாது உதாரணமாக கோதுமை தொலி கோதுமையுடன் அல்லது ஈத்தம் பழத்தை கோதுமையுடன் சேர்க்க முடியாது.

தானியங்கள் மற்றும் பலவகைகலில் ஸகாத் கொடுப்பதற்கு கடமையான நேரம்

தானியங்களில் ஸகாத் அது முற்றியதன் பின்னாலே வாஜிபாகும். பழங்களில் சாப்பிட முடியுமான நிலையயை அடைந்தாலே கடமையாகும். ஸகாத் வாஜிப் ஆகியதன் பின்னால் விற்றால் அது விற்றவர் மீதே கடமையாகும், ஏனென்றல் ஸகாத் வாஜிபாகும் போது அப்பொருளுக்கு சொந்தகாரர் ஆவர் .

தானியங்கள் மற்றும் பழவகைகளில் ஸகாத் கடமையாவற்கான அளவு

1-மழை நீர் , ஊற்று நீர் போன்றவைகளின் எவ்வித செலவும், கஷ்டமும் இல்லாது நீர் ஊற்றப்பட்டால் (10%) வாஜிபாகும்.

2-கிணற்று நீர் போன்றவைகளின் மூலம் செலவு செய்து நீர் ஊற்றினால் (5%) வாஜிபாகும்.

3-சில நேரம் மழை நீராலும் மற்றும் சில நேரம் கிணற்று நீராலும் நீர் ஊற்றினால் (7.5%) வாஜிபாகும். நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: «மழை மற்றும் ஆறுகள், ஊற்றுக்கள் மூலம் நீர் பாய்ச்சினால் பத்தாகும். நீர் தேங்கி நிற்கும் கிணறுகள் மூலம் பாய்ச்சினால் பத்தில் அரைவாசி (ஐந்து) ஆகும்(கிணற்றில் இருந்து நீரை பயிர்களுக்கு ஊற்றக் கூடிய ஒட்டகம்.)»(ஆதாரம் முஸ்லிம்).

தானியங்கள் மற்றும் பழங்கள் அழிவடைதல்.

தானியம் அல்லது பழங்கள் மனிதனின் செயற்பாடு அன்றி தாமாக அளிவடைந்தால் ஸகாத் கடமையாக மாட்டாது. அவனின் செயற்பாட்டின் மூலமோ அல்லது யாராவது ஒருவரின் குரோதத் தனத்தின் மூலமோ அளிவடைந்தால் ஸாகாத் கடமையாகும்.

தேனில் ஸாகாத்

அதிகமான உலமாக்களை தொட்டும் இப்னு அப்தில் பர் ரஹீமஹுல்லாஹ் குறிப்பிடுகிறார்கள் தேனில் ஸாகாத் கடமையாகாது. அதுவே மிக ஏற்றமான கருத்து ஆகும். ஏனென்றல் குர்- ஆனிலோ அல்லது சுன்னவிலோ ஸாகாத் வாஜிப் என்பதாக எவ்வித வெளிப்படையான ஆதாரமும் வரவில்லை. வாஜிப் என்று எவ்வித அதரமும் இல்லாத விடுத்து மார்கத்தின் அடிப்படை கடமை இல்லை என்பதாகும்.

இரண்டாவது கனியம், புதையல்

கனியம்

பூமியோடு சம்பத்தப் படாத பூமியில் இருந்து பெறப்படும் பொருட்கள, உ +ம் தங்கம், வெள்ளி, இரும்பு, மாணிக்கம்,பளிங்கு.

அது போன்ற பூமியில் இருந்து பெறப்படும் கனியப் பொருட்களை உள்ளடக்குகிறது.

புதையல்

மனிதனின் செயற்பாட்டின் மூலம் பூமியில் புதைக்கப் பட்ட பொருட்கள். உ+ம் தங்கம், வெள்ளி.

கணியம்,புதையல் ஆகியவைகளின் ஸகாதின் சட்டம்.

வாஜிபாகும் : அல்லாஹ் கூறுகிறான் – {நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;}[பகறா - 267] நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «புதையலுக்கு 5 இல் ஒருபங்கு கொடுக்க வேண்டும்»(புகாரி , முஸ்லிம்).

புதையலில் ஸகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள்.

புதையலுக்கு குறிப்பிடப்படும் எவ்வித நிபந்தனைகளும் இல்லை, யாராவது ஒருவர் புதையலை எடுத்தால் அவர் உடனே அதற்கான ஸகாதை கொடுப்பார்.

கணியம், புதையல் ஆகியவைகளில் ஸகாத் கடமையாவதற்கான அளவு

புதையல் அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி அதில் இருந்து ஐந்தில் ஒரு பகுதி கடமையாகும். நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «புதையலுக்கு 5 இல் ஒரு பங்கு கொடுக்க வேண்டும்»(புகாரி , முஸ்லிம்).

தங்கம்

வெள்ளி

பளிங்கு

இரும்பு