பித்யாவும் ஹத்யும் கொடுத்தல்

2013

பித்யாவும் ஹத்யும் கொடுத்தல்

முதலாவது பித்யா

பித்யா

ஹஜ் செய்பவர் அல்லது உம்ரா செய்பவர் வாஜிபானதை அல்லது தடுக்கப்பட்டதை செய்தால் அவர் மீது கடமையாகும்

முதலாவது : வாஜிபை விட்டால் பித்யா கொடுப்பது

யார் உம்ராவுடைய அல்லது ஹஜ்ஜின் வாஜிப்களை விடுகிகாரோ முஸ்தலிபாவில் தரிப்பது, முடியை சிரைத்தல் இது போன்றவைகள். இவைகளை விட்டால் அவருக்கு தம்வு கொடுப்பது அவசியமாகும். தம்வு என்றால் (ஒட்டகத்தில் ஏழில் ஒரு பங்கும். மாடில் ஏழில் ஒரு பங்கும். இரண்டு வயது பூர்த்தியான ஆடு. (என்றால் 1வருடம் பூரணமானது) அல்லது செம்மறி ஆட்டின் குட்டியை (ஆறு மாதங்கள் தாண்டியது) ஹரத்திலே ஏழைகழுக்கு கொடுக்கப்படும்

முடியாமல் போனால் 10 நாளைகளுக்கு நோன்பு பிடிப்பார் 3நோன்புகள் ஹஜ்ஜிலும் 7வீட்டுக்கு வந்த பின்னர் பிடிப்பார். அல்லாஹ் கூறுகிறான் {அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும்இ அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கிஇ நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின்இ ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும்இ பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)துஇ எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்[பகறா - 196].

இரண்டாவது :தடைகளை செய்ததற்கான பித்யா

01-தைக்கப்பட்ட ஆடையை அணிந்ததற்கு, தலையை மூடியதெற்கு, நறுமணம் பூசியதற்கு, முடியை சிரைத்ததற்கு ,நகம்களை களைந்ததற்கு வழங்கப்படுவதை குறிக்கின்றது.

அவர்கள் பின்வரும் மூன்று விடயங்களில் ஒன்றை தெரிவு செய்து செய்வார்.

1-மூன்று நாள் நோன்பு

2- அறுபது ஏழைகழுக்கு உணவளிப்பது. ஒவ்வெருவருக்கும் அரை ஸாஃ அரிசி அல்லது அது போன்றது

3-ஆட்டை பலியிடுவது

அல்லாஹ் கூறுகிறான் {அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும்இ அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கிஇ நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின்இ ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும்இ பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)துஇ எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்[பகறா - 196] மேற்சொன்ன 5 விடையங்களையும்வேண்டும் என்றோ அல்லது கஃப் ரழி செய்ததை போல தேவைக்கு செய்தாலோ அவர் பித்யா கொடுப்பார், யார் மறந்து செய்கிறாரோ அவருக்க் குற்றமிள்லை

ஹத்யுவின் சட்டங்கள்

ஹாஜ்ஜிக்கு அவர் முதமத்தியாகவோ காரிநாகவோ இருந்தால் பலியிடுபவர்களின் ஹத்யை சாப்பிட முடியும். நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் பித்யா உழ்கியாவை போல கூலி வழங்கப்படமாட்டாது. நிச்சயமாக பித்யா என்பது முதமத்தீக்காகும். உழ்கிய்யா என்பது ஹாஜிக்கும் ஏனையவர்களுக்கும் சுன்னத்தாகும்.

போர்வையால் தலையை மறைத்தல்

தைக்கப்பட்ட ஆடை அணிவது

நறுமணம் பூசுதல்

நகம்களை வெட்டுதல்

முடியை சிரைத்தல்

02-முதலாவது தடை நீங்கியதன் பின்னர் உடலுரவு அல்லது பெண்குறி அல்லாத இடத்தில் கட்டியனைத்தல்

இதுவும் முந்திய பித்யாவை போன்றது தான்

03-முதல் தடை நீங்க முன்னர் உடலுரவுக்கான பித்யா

ஒரு ஒட்டகத்தை
(பதனா: ஒட்டகம்) பலியிட வேண்டும். அதனை பெறவில்லை என்றால் ஹஜ்ஜில் மூன்று நோனபும் ஏழு நோன்புகள் வீடு திரும்பியதும் பிடிப்பார். அவருடைய ஹஜ் வீணாகிவிடும். அதனை பூர்த்தி செய்வது கடமையாகும். அதனை அடுத்த வருடத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.

ஒட்டகம்

4-உம்ராவிலே உடலுறவில் ஈடுபட்டால் அதற்கான பித்யா

ஒரு ஆடு. அவரின் அவரின் உம்ரா இல்லாமல் போய்விடும். அதனை மீட்டுவது அவசியமாகும்

ஆடு

5-வேட்டை பிராணியை கொலை செய்ததற்கான பித்யா

வேட்டைபிராணியை போன்றது. ஒன்றிருந்தால் அதைப்போன்ற ஒன்றை எடுப்பதற்கு விருப்பம் கொடுக்கப்படுவார். அல்லது அதன் பொறுமதிக்கு உணவு வாங்கி இரண்டு அள்ளாக (முத்கள்) (இரண்டு முத்துகள்: அரை சாஃ ஆகும் கிட்டத்தட்ட 1020 கிராம் ஆகும்) பிரித்து ஏழைகளுக்கு உணவு கொடுப்பார். அல்லது ஒவ்வோரு இரண்டு முத்துகளுக்கும் நோன்பு பிடிப்பார் .வேட்டை பிராணியை போன்றதின் நாட்டம் அது அல்ல அதைப் போன்றதாகும்.

உதாரணமாக - ஒரு எருமை மாட்டை கொன்றால் ஒரு ஒட்டகம் கொடுப்பது அவசியமாகும். ஏனென்றால் இரண்டும் ஒப்பானது ஆகும்.

அல்லது அதன் பொறுமதிக்கு உணவு வாங்கி முத்துகலாக பிரித்து ஏழைகளுக்கு இரண்டு முத்துதள் வீதம் உணவு கொடுப்பார். அல்லது ஒவ்வெரு இரண்டு முத்துகளுக்கும் நோன்பு பிடிப்பார் .ஒரு கழுதையை வேட்டையாடினாலும் அல்லது ஆடைடை வேட்டையாடினால் கூட மாட்டை பித்யா கொடுப்பார். இன்னும் அது போன்றது இல்லையென்றால் அல்லது அதன் பொறுமதிக்கு உணவு வாங்கி முத்துகலாக பிரித்து ஏழைகளுக்கு இரண்டு முத்துதள் வீதம் உணவு கொடப்பார் அல்லது ஒவ்வெரு இரண்டு முத்துகளுக்கும் நோன்பு பிடிப்பார்.

ஹஜ்ஜிலும் உமராவிலும் திருமண உடன்படிக்கை கூடாது. அதற்கு பித்யாவும் கிடையாது.

இரண்டாவதாக : ஹத்யு கொடுத்தல்

ஹத்யு கொடுத்தல்

இறைவனை நெருங்க ஹரத்திலே மிருகங்களில் இருந்து கொடுக்கப்படுகின்றது. அல்லது தமத்துவ், கிரான் இஹ்ஸாருக்காக கொடுக்கப்படுவது ஆகும்.

ஹத்யின் வகைகள்

01-தமத்துவ்க்கும் கிரானுக்கமான ஹத்யு

முதமத்திக்கும் காரினுக்கும் ஹத்யு கடமையாகும். அது ஒரு ஆடு அல்லது எழில் ஒரு பங்கு ஒட்டகம் அல்லது எழில் ஒரு பங்கு மாடு ஆகும். அதற்கு முடியாவிட்டால் பத்து நாளைக்கு நோன்பு பிடிப்பார் . மூன்று நோன்பு ஹஜ்ஜிலும் பத்து நோன்பு வீட்டிலும் பிடிப்பார். அவர் மக்காவாசியாக இருந்தால் அவருக்கு ஹத்யும் நோன்பும் கிடையாது. அல்லாஹ் கூறுகிறான் {இ(ந்தச் சலுகையான)துஇ எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான்} [பகறா - 196].

2-சுன்னத்தான ஹத்யு

முப்ரதான ஹாஜியும் உம்ரா செய்பவரும் சுன்னத்தாகவும், முதமத்தியும் காரினும் கடமைக்கு மேல் கொடுக்கின்ற ஒன்றாகவும் அல்லது இஹ்ராம் அணியாதவர் மக்காவிலே அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற கொடுப்பதாகும். பலியிடுவதாகும். நபியவர்கள் «100 ஒட்டகங்களை நபி ஸல் அவர்கள் அன்பளிப்பாக கொடுத்தார்கள்»(ஆதாரம் புகாரி)

இது சுன்னத்தான ஹதி, முதமத்தியும் காரினும் அதனை சாப்பிட முடியும். அவர்கள் அதனை உண்ணுவது சுன்னத்தாகும். நபி ஸல் அவர்கள் «ஒட்டகத்தை சமைத்தும், அதன் சூப்பை குடிப்பதற்கும் ஏவினார்கள்»(ஆதாரம் திர்மிதி)

03-ஹதயுல் இஹ்ஸார்

இஹ்ஸார் என்றால் உம்ராவையும் ஹஜ்ஜையும் அல்லது இரண்டையும் சேர்த்து செய்யமுடியாமல் போவதாகும்.

யார் உம்ராவுக்கோ அல்லது ஹஜ்ஜுக்கோ இஹ்ராம் அணிந்து கஃபாவிற்குல் நுழைவதை எதிரி தடுத்தால் அல்லது ஒரு விபத்தின் மூலம் நுழைய முடியாமல் போனால் அவர் அவ்விடத்திலே ஹத்யு கொடுத்து இஹ்ராமிலிருந்து நீங்குவார். அல்லாஹ் கூறுகிறான் {குர்பான் கொடுக்க வேண்டும்}[பகறா - 196]. ஹத்யுல் இஹ்ஸார் - ஒர் ஆடு அல்லது ஒட்டகத்தின் ஏழில் ஒரு பங்கு அல்லது மாட்டில் ஏழில் ஒரு பங்கு

ஹத்யு பலியிடுவதற்கான இடம்

தமத்துவுடைய கிரானுடைய சுன்னத்தான ஹத்யு ஹரத்தின் எல்லைக்குல் அறுப்பார். ஏழைகளுக்கு பிரித்து கொடுப்பார். ஹரத்திற்கு வெளியே பலியிட்டால் கூலி வழங்கப்பட மாட்டாது .

மேலும் ஹத்யுல் இஹ்ஸார் அவர் தடுக்கப்பட்டிருந்த இடத்தில் பலியிடுவார்

ஹத்யுவை பலியிடுவதற்கான நேரம்

01-தமத்து, கிரான், சுன்னத்தான ஹத்யு

அதனுடைய நேரம் பெருநாள் தொழுத்தில் இருந்து இறுதி அய்யாமுத்தஸ்ரிகின் சூரியன் மறையும் நேரமாகும்

அது பதின்மூன்றாவது நாளாகும்.

02-தடுக்கப்பட்டதற்கான ஹத்யு

அது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நேரங்களில் செய்யப்படும்