நோன்பின் சிறப்பும், சட்டமும்

5438

நோன்பின் சிறப்பும், சட்டமும்

மொழிரீதியாக நோன்பின் விளக்கம்

ஒரு செயலைச் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளல்

இஸ்லாத்தில் நோன்பின் விளக்கம்

அதிகாலையிலிருந்து (பஜ்ர் நேரம்) சூரியன் மறையும் வரை உண்ணல், பருகல், உறவு கொள்ளல் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பதன் மூலம் அல்லாஹ்வை வணங்குதல்

நோன்பின் சிறப்பு

{நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.

கணக்கிடப்பட்ட சில தினங்களில் (அது நிறைவேற்றப்பட வேண்டியதாகும்). ஆனால் உங்களில் எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். எனினும் (முதுமை அல்லது நிரந்திர நோய் போன்ற காரணங்களால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கட்டும். எனினும், எவரேனும் தானாக விரும்பி அதிகமாகக் கொடுத்தால் அது அவருக்கு நல்லது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நல்லதாகும்.

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. எனவே உங்களில் யார் அந்த மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்கு கஷ்டத்தை விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப் படுத்துவதற்காகவும், அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அவனைப் பெருமைப் படுத்துவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு செய்தான்).}[அல்குர்ஆன் 2 : 183- 185]

நோன்பிற்குப் பாரிய சிறப்பும், மகத்தான பன்மடங்கு கூலியும் உண்டு, நோன்பை மதித்து, கண்ணியப்படுத்தும் விதத்தில் அல்லாஹ் அதனைத் தனக்குரியதெனக் கூறியுள்ளான். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் குத்ஸியில் கூறினார்கள் : «ஆதமுடைய மகனின் செயல்கள் அனைத்திற்கும் நன்மை பன்மடங்காக் கப்படும், ஒரு நன்மை பத்தாக, அதிலிருந்து எழுநூறாகப் பெருகும்”. அல்லாஹ் கூறினான் : “நோன்பைத் தவிர, ஏனெனில் அது எனக்குரியது, நானே அதற்குக் கூலி வழங்குவேன். அவனது இச்சை மற்றும் உணவை எனக்காகவே விடுகின்றான்”. நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று அவன் நோன்பு திறக்கும் போது, மற்றது தனது இரட்சகனை சந்திக்கும் போது. அவனுடைய வாயிலிருந்து வரும் வாடை(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புஹாரி 5972) அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட நறுமணமானது»( முஸ்லிம் 1151).

நோன்பு வணக்கமாக்கபட்டதன் நோக்கம்

1. அல்லாஹ்வின் கட்டளைக்கு பதிலளிப்பதிலும், அவனது சட்டதிட்டங்களுக்குக் {கட்டுப்படுவதிலும் இறையச்சத்தை வரவழைத்தல். அல்லாஹ் கூறுகின்றான் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடப்பதற்காக }[அல்குர்ஆன் 2 : 183].

2. பொறுமையின் பால் ஆத்மாவைப் பயிற்றுவித்தல், இச்சைகளை மிகைக்கும் வகையில் மனோதிடத்தை வலுப் படுத்தல்.

3. அறம், வறியவர், தேவையுடையவர் களுக்கு இரக்கம் காட்டுதல் போன்ற வற்றிற்குப் பயிற்றுவித்தல். ஏனெனில் நோன்பாளி பட்டிணியை உணர்ந்தால் தனது தேவையுடைய சகோதரர் பால் உள்ளம் இரங்கி அவர்களுடைய தேவைகளை உணரும்.

4. நோன்பின் மூலம் உடலாரோக்கியம் ஏற்படுதல்.

நோன்பின் சட்டம்

அல்லாஹ் மார்க்கமாக்கியுள்ள நோன்பு பின்வருமாரு வகைப்படும் :

1. கடமையான நோன்பு

அது இரு வகைப்படும் :

1. அல்லாஹ்வே அடியார்கள் மீது விதியாக்கிய நோன்பு, அதுதான் ரமழான் மாத நோன்பு, இது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று.

2. அடியார்கள் தமக்குத்தாமே விதியாக் காரணமாயிருந்த நோன்பு. நேர்ச்சை நோன்பு, குற்றப்பரிகார நோன்பு போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

2. ஸுன்னத்தான நோன்பு

அல்லாஹ் கடமையாக்காமல் விரும்பிய அனைத்து நோன்புகளும் ஸுன்னத்தான நோன்பாகும், உதாரணமாக : திங்கள், வியாழன் நோன்பு, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல், ஆஷூரா நோன்பு, துல்ஹஜ் மாதம் முதல் பத்து தினங்களில் நோற்றல், அரபா நோன்பு துல்ஹஜ் மாதம் 9ம் நாள்.

நோன்பு கடமையாவதற்கான நிபந்தனைகள்.

1. இஸ்லாம், காபிர்களுக்குக் கடமையில்லை.

2. பருவமடைதல், சிறுவர் மீது கடமையாகாது. எனினும் முடியுமாயிருந்தால் பழகும் நோக்கில் நோன்பு நோற்க ஏவ வேண்டும்.

3. பகுத்தறிவு, பைத்தியகாரர் மீது கடமையாக மாட்டாது.

4. சக்தி, நோன்பு நோற்க சக்தி பெறாதவருக்குக் கடமையில்லை.

ரமழான் நோன்பு

ரமழான் நோன்பு இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றாகவும், இறைவன் தனது அடியார்களுக்கு விதியாக்கிய ஒரு கடமையாகவும் இருக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் {(அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. }[அல்குர்ஆன் 2 : 183].

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது,..»(ஆதாரம் : புஹாரி 8, முஸ்லிம் 16) அதில் ரமழானில் நோன்பு நோற்பதையும் கூறினார்கள்.

ரமழானின் சிறப்புக்களில் சில

1. ரமழானில் பகலில் நோன்பு நோற்பதாலும், இரவில் நின்று வணங்குவதாலும் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «யார் ரமழான் மாதத்தில் விசுவாங் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முன்னைய பாவங்கள் (புஹாரி, முஸ்லிம்) மன்னிக்கப்படும். இன்னும் யார் ரமழான் இரவில் விசுவாங் கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் நின்று வணங்குகின் றாரோ அவருடைய முன்னைய பாவங் களும் மன்னிக்கப்படும்»(புஹாரி, முஸ்லிம்).

2. லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குபவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «யார் ரமழான் மாதத்தில் விசுவாங் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும். இன்னும் யார் லைலதுல் கத்ர் இரவில் விசுவாங் கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் நின்று வணங்குகின்றாரோ அவருடைய முன்னைய பாவங்களும் மன்னிக்கப் படும்»(புஹாரி முஸ்லிம்).

3. ரமழானில் உம்ராச் செய்வது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு ஈடானது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «ரமழானில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்கு அல்லது என்னுடன் ஹஜ் செய்வதற்கு ஈடானது»(ஆதாரம் முஸ்லிம்).

4. ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவன வாயில்கள் திறக்கப்பட்டு, நரக வாயில்கள் மூடப்பட்டு, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். நல்லறங்களின் பால் உள்ளங்கள் முன்னோக்குகின்றன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «ரமழான் மாதம் நுழைந்துவிட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு, நரக வாயில்கள் மூடப்பட்டு, ஷைத் தான்கள் விலங்கிடப்படுகின்றனர். »(புஹாரி முஸ்லிம்). பாவமீட்சி பெறுவதைத் துரிதப்படுத்தி, பாவங்களை விட்டும் தூரமாகி, அல்லாஹ்விடம் முன்னோக்கிச் செல்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும்

5. ரமழான் அல்குர்ஆன் இறங்கிய மாதம், எனவே அதில் அல்குர்ஆன் ஓதுவதை அதிகப்படுத்த வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : {ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர் களுக்கு வழிகாட்டியாகவும், நேர் வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித் தறிவிக்கக் கூடியதாகவுள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது}[அல்குர்ஆன் 2 : 185].

6. ரமழான் நன்கொடை, தர்மம், செலவளிப்பதற்கான மாதமாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: «நபி (ஸல்) அவர்கள் மக்களில் அதிக கொடைவள்ளலாக இருந்தார்கள், ரமழான் மாதத்தில்தான் அதிகமாக தர்மம் செய்வார்கள். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதம் முழுதும் சந்திப்பார்கள். அப்போது நபியவர்கள் அல்குர்ஆனை அவர்களிடம் ஓதிக் காண்பிப்பார்கள். அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை சந்திக்கும் போது காற்றை விட வேகமாக நன்கொடை வழங்குவார்கள்.»(புஹாரி முஸ்லிம்).

ரமழான் மாதம் நுழைவதை எவ்வாறு அறிவது?

பிறை தென்படுவதன் மூலம் ரமழான் மாதம் நுழைவதை அறியலாம். ஷஃபான் மாதம் 29ம் நாள் சூரியன் அஸ்தமித்ததற்கு பின்னர் தலைப்பிறை தென்பட்டால் ரமழான் மாதம் ஆரம்பித்து விடுகின்றது. அத்தினம் பிறை தென்படாவிட்டால், அல்லது மேகமூட்டம், புழுதி, புகை மண்டலம் போன்றவற்றால் பிறை காண முடியாவிட்டால் ஷஃபான் மாதத்தை 30க பூர்த்தி செய்தல் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «நீங்கள் அதனைக் (பிறையை) கண்டு நோன்பு பிடியுங்கள். மீண்டும் அப்பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் நீங்கள் 30 நாட்களாக அதனை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்»
(புஹாரி முஸ்லிம்).

ரமழானில் நோன்பை விடுதல்

தக்க காரணமின்றி ரமழானில் நோன்பு பிடிக்காமலிருப்பது, அல்லது இடையில் விடுவது ஹராமான பெரும்பவாங்களில் ஒன்றாகும். அவ்வாறு நோன்பை விட்டு விட்டு பாவமன்னிப்புக் கோராவிடின் ஆயுள் முழுதும் நோன்பு நோற்றாலும் ஈடாகமாட்டாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «அல்லாஹ் வழங்கிய சலுகைக்காகவன்றி யார் ரமழானில் நோன்பை விடுகின்றரோ அதற்காக அவர் காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் ஈடாக மாட்டாது».(ஆதாரம் அபூதாவுத்) இவ்வாறு நோன்பு விடுதற்கான தண்டனை விபரீதமானது. நபி (ஸல்) அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : “நான் தூங்கிக் கொண்டிகுக்கும் போது கனவில் இருவர் என்னிடம் வந்து (அதற்கு மத்தியில்.) எனது தோள்புயத்தைப் (சந்துப் பகுதி – முழங்கையிலிருந்து கக்கம் வரையிலுள்ள பகுதி..) பிடித்து என்னை கரடுமுரடான ஒரு மலைக்குக் கொண்டு சென்று அதில் ஏறுமாறு என்னிடம் கூறினார்கள். நான் “என்னால் முடியாது” என்றேன். அதற்கு அவ்விருவரும் “நாம் உமக்கு இலகுவாக்கித் தருகின்றோம் (ஏறுங்கள்) என்றார்கள்”. நான் ஏறி, உச்சியை அடைந்ததும் பாரிய சத்தங்களைக் கேட்டேன். “இது என்ன சத்தம்?” என வினவிய போது “இது நரகவாதிகள் ஊளையிடும் (அலறல் சத்தம்.) சத்தம்” எனக் கூறினர். பின்பு என்னை அழைத்துச் செல்லப் பட்டது, அங்கு கணுக்கால்களில் (கரண்டைக் காலோடு இருக்கும் எலும்பு) விலங்கிடப்பட்ட, தாடைகள் (வாயினை நெருங்கியுள்ள பகுதிகள்) கிழிக்கப்பட்டு இரத்தம் வழியும் நிலையில் ஒரு கூட்டத்திற்கு அருகாமையில் இருந்தேன். “இவர்கள் யார்?” என்று கேட்க, “இவர்கள்தான் நோன்பு திறக்கும் நேரம் வரமுன் நோன்பை(அவர்களுடைய நோன்பு பூரணமாகுவதற்கு முன்னால் நோன்பை திறந்தார்கள்)விட்டவர்கள்” என்றார்கள்.
(ஆதாரம் இப்னு ஹிப்பான்)

ரமழானில் முன்னோர்கள்

முன்னோர்களின் முன்மாதிரி முஹம்மத் (ஸல்) அவர்கள்

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்: «ரமழானில் பலவிதமான வணக்கங்களில் ஈடுபடுவது நபிவழியா கும். ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து, அல்குர் ஆனை அவர்களிடம் ஓதிக் காண்பிப் பார்கள். அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை சந்திக்கும் போது காற்றை விட வேகமாக நன்கொடை வழங்குவார் கள். அவர்கள் மக்களில் அதிக கொடை வள்ளலாக இருந்தார்கள், ரமழான் மாதத் தில்தான் அதிகமாக தர்மம் செய்வார்கள். தர்மம், அறம், அல்குர்ஆன் ஓதுதல், தொழுகை, திக்ரு, இஃதிகாப் போன்ற வணக்கங்களை அதிகப்படுத்துவார்கள். இதர மாதங்களை விட இம்மாதத்திற்கு வணக்கத்தில் முக்கியத்துவம் கொடுப் பார்கள். எந்தளவுக்கெனில், சில சமயம் தொடர்ந்து இரவு, பகலாக வணக்கத்தில் கழிப்பதற்காக இரண்டு அல்லது பல நாட்கள் நோன்பை விடாமல் தொடர் வார்கள். (நோன்பு திறக்காமல் பல நாட்கள் தொடர்வது “விஸால்” எனப் படும், இது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் அனும்மதிக்கப் பட்ட ஒன்று.)»
(ஸாதுல் மஆத் பீ ஹதீ ஹைரில் இபாத்)

ரமழனில் அல்குர்ஆனும் முன்னோரும்

சில சிறப்புக்குரிய நோரங்களில்- குறிப்பாக லைலதுல் கத்ர் இரவைத் தோடும் ரமழானின் பிற்பகுதி இரவுகளில்- அந்நேரங்களைப் பயன் படுத்தும் விதத்தில் அல்குர்ஆன் ஒதுவதை அதிகப்படுத்துவது விரும்பத் தக்கது. ரமழான் முதல் நாள் இரவு வந்ததும் இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தனது சகாக்களை ஒன்று சேர்த்து அல்குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும் வரை ஒவ்வொரு ரக்அத்திலும் தலா இருபது வசனங்கள் என ஓதித் தொழுகை நடத்துவார்கள். ஸஹர் வேளையில் அல்குர்ஆனின் மூன்றி லொரு பகுதி முதல் பாதி வரை ஓதுவார் கள், தினமும் நோன்பு திறக்கும் போது ஒவ்வொரு தடவை ஓதி முடிப்பார்கள். ஒவ்வொரு தடவையும் ஓதிமுடிக்கும் போது ஏற்றுக் கொள்ளப்படும் ஓரு துஆ உண்டு எனக் கூறுவார்கள். (ஸிபதுஸ் ஸப்வத் (4-170))

தொழுகையில் ஓதுவதல்லாமல் ரமழானில் தினமும் இரு தடவைகள் குர்ஆனை ஓதி முடிப்பார்களென இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களைப் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. (ஸிபதுஸ் ஸப்வாத் (2-255))

ரமழானில் இரவுத் தொழுகையும் முன்னோரும்

«உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் ரமழானில் நூற்றுக் கணக்கான 22 வசனங்கள் ஓதி இருபது ரக்அத்கள் தொழுவார்கள், உஸ்மான் (ரலி) அவர்களது காலத்தில் நீண்டநேரம் தொழுவதால் தடிகளில் ஊண்டிக் கொள்வார்கள் என ஸாஇப் இப்னு யஸீத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். »
(ஆதாரம் – சுனனுல் குப்ரா இமாம் பைஹகீஅப்துல்லாஹ் இப்னு அபீ பக்ர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «நாங்கள் ரமழானில் இரவுத் தொழுகை முடிந்து செல்வோம், பஜ்ர் உதயமாகிவிடுமோ என அஞ்சி பணியாட்களிடம் ஸஹர் உணவைப் துரிதப்படுத்துமாறு வேண்டுவோம்»
(முவத்தா மாலிக் – அப்துல் பாகி) என்று எனது தந்தை கூறுவார். 24

நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: «இப்னு உமர் (ரலி) அவர்கள் ரமழான் மாதத்தில் இரவில் வீட்டில் தொழுவார் கள். மக்கள் பள்ளியிலருந்து சென்றதும் ஒரு தோற்பையில் சிறிது நீர் எடுத்துக் கொண்டு மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று விடுவார்கள். பின்னர் ஸுபஹ் தொழாமல் அங்கிருந்து திரும்ப மாட்டார்கள். »(ஆதாரம் – சுனனுல் குப்ரா இமாம் பைஹகீ)