தொழுமிடத்தில் தடுப்பு வைத்தல்

1330

தொழுமிடத்தில் தடுப்பு வைத்தல்

தொழுமிடத்தில் தடுப்பு வைத்தல்

தொழுபவர் தனக்கு முன்னால் தன்னுடைய கை நீட்டமளவிற்கு ஏதாவது ஒன்றை வைப்பதை இது குறிக்கின்றது.

சுத்ராவிற்கான மார்க்க ஆதாரம்

ஊரில் இருக்கும் போதும் பிரயாணத்தின் போதும் சுத்ராவை ஏற்படுத்துவதை மார்க்கம் கடமையாக்கியுள்ளது. அது நபீலான , பர்ளான தொழுகையானாலும் அதே போன்று பள்ளியுள்ளேயும் பள்ளி அல்லாத இடங்களில் அதனை பேண வேண்டும். நபியவர்கள் கூறினார்கள். «உங்களில் ஒருவர் தொழுவதற்கு முற்பட்டால் அவருக்கு நெருக்கமா இருக்கும் வகையில் சுத்ராவை ஏற்படுத்தட்டும். » (ஆதாரம் அபூதாவுத்).

வஹ்ப் ரழி அவர்கள் கூறுகின்றார்கள். «நபியவர்கள் மினாவில் தொழுகை நடாத்தினார்கள். மரக்குற்றியால் ஒரு கோடு கீறினார்கள். அதற்கு இடையில் நாம் இரண்டு ரக்அத்கள் தொழுதோம். »
(ஆதாரம் அஹ்மத்).

சுத்ராவின் சட்டம்

சுத்ரா என்பது வாஜிபாகும். தனியாக, இமாமாக தொழுபவர்களை சுத்ரா வைக்குமாறு நபியவர்கள் ஏவினார்கள். அதன் காரணமாக ஒரு முஸ்லிம் தொழும் போது அவருக்கு முன்னால் சுத்ராவை ஏற்படுத்துவது அவசியமாகும். சுத்ரா மூலம் தொழுகையாளியை கடப்பவர் தடுக்கப்படுவார். நபியவர்கள் கூறினார்கள் «சுத்ரா இல்லாமல் தொழ வேண்டாம். யாரையும் உங்களை கடந்து செல்ல விட வேண்டாம். அவ்வாறு சென்றால் அவரோடு போராட்டும்»(ஆதாரம் இப்னு ஹூஸைமா)

சுத்ராவின் நுட்பம்

இஸ்லாம் தொழுகையாளிக்கு சுத்ராவை வைப்பதை மார்க்கமாக்கியுள்ளதுடன் அதில் அதிக நுட்பங்கள் நிறைத்திருக்கின்றன. அவை

1-தொழுகையாளிக்கு இடையில் கடந்து செல்பவர்களை தடுக்க.

2-தொழுகையில் அவரது சிந்தனை சிதறாமல் இருக்க வழிவகை செய்கிறது. சிந்தனையில் மூழ்காமல் தொழுகையில் தொடர உதவுகிறது.

3-பெண்கள், கறுப்பு நாய்,கழுதை போன்றன குறுக்கறுத்து தொழுகை தடுபடாமல் இருப்பதற்கான முயற்சியாக அமையும்.

«அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்» (ஆதாரம் முஸ்லிம்).

சுத்ராவின் சட்டங்களில் உள்ளவை

1- இமாமும் தனியாக தொழுபவரும் சுத்ராவை ஏற்படுத்துவது அவசியமாகும். அவர் மஃமுமாக இருந்தால் இமாமே அவருக்கு சுத்ராவாகும். அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் «அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது) மினாவில் (தடுப்பு எதையும் முன்னோக்காமல்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதை
(பெண் ஒட்டகம்) யொன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன். -அந்த நாளில் நான் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தேன்.- (தொழுதுகொண்டிருந்தவர்களின்) அணிக்கு முன்னால் நான் கடந்துசென்று (கழுதையிலிருந்து) இறங்கி அதை மேயவிட்டு விட்டுத் தொழுகை அணியினூடே நுழைந்து (நின்று)கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்துசென்ற)தற்காக என்னை யாரும் ஆட்சேபிக்கவில்லை»
(புஹாரி முஸ்லிம்).

2- தொழுபவருக்கு இடையில் கடப்பது கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாக மாறுகிறார். நபியவர்கள் கூறினார்கள் «தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூ ஜுஹைம்(ரலி) அவர்களிடம் ஸைத் இப்னு காலித்(ரலி) அனுப்பு வைத்தார். ‘தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஜுஹைம்(ரலி) விடையளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ». அபுன் னழ்ரு என்பவர் ‘நாற்பது ஆண்டுகள்’ என்று கூறினார்களா? அல்லது ‘நாற்பது மாதங்கள்’ அல்லது ‘நாற்பது நாள்கள்’ என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார்.”
(புஹாரி முஸ்லிம்)

ஆனால் கடந்து செல்பர் தொழுவருக்கு பின்னாலோ அல்லது தூரமாகவோ, அல்லது சுத்ராவிற்கு முன்னாலோ சென்றால் அதில் பிரச்சினை கிடையாது.

3-தொழுகையில் கடந்து செல்பவரை தடுப்பதற்கான வழிமுறையாகும். «‘உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் ‘தடுப்பு’ வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும்»
(புஹாரி முஸ்லிம்). ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்’ என அபூ ஸயீத்(ரலி) கூறினார்.

4-உலமாக்கள் மஸ்ஜிதுல் ஹராமில் இதற்கு விதிவிலக்களித்துள்ளனர். அதே போன்று அதில் கைகளால் தடுப்பது என்பது மிகவும் சிரமமாக கடினமான ஓர் காரியமாகும்.

5- தொழுபவர் சுவரை, தூண்களை சுத்ராவாக ஏற்படுத்த முடியும். தடி போன்றவைகளை வைத்து தொழவும் முடியும்.

6-தொழுபவருக்கும் சுத்ராவிற்கும் இடையில் உள்ள அளவு ஒரு ஆடு கடந்து செல்லும் அளவாகும். நபியவர்கள் கூறினார்கள் ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கிறார்கள் «நபி(ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஓர் ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்»
(புஹாரி முஸ்லிம்).

பெண்கள் தொழுகையில் குறிக்கிடுதல்

இங்குள்ள செய்தியில் பெண்ணை கழுதைக்கும், கறுத்த நாய்க்கும் ஒப்பிடும் விதமாக வரவில்லை. ஆனால் ஒரு வரைசையில் கூறப்படுள்ளதால் அவை மூன்றும் ஓரே காரணம் என்ற அர்த்தம் கிடையாது. கறுத்த நாய் குறிக்கிட்டதால் தொழுகை முறியும் என்ற செய்தியில் நாயுடைய அதே சட்டம் கழுதைக்கம், பெண்ணும் உள்ளது என்ற அர்த்தமோ, விளக்கமோ இல்லை.

அச் செய்தியில் கறுத்த நாய் ஷைத்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக வேண்டி கழுதையும், பெண்ணையும் ஷைத்தான் என்று கருத முடியாது. பெண்ணும், கழுதையும் வேறு கருத்தில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு பெண்ணை பயன்படுத்தியன் காரணமாக அவள் குறிக்கிடும் போது தொழுகையின் சிந்தனை தொழுகையாளியை விட்டும் நீங்க வாய்ப்புள்ளது. ஒரு ஆண் குறுக்கறும் போதும், பெண் குறுக்கறுக்கும் போதும் அதில் பெண் குறுக்கிடும் சந்தர்ப்பங்களில் அவனது தொழுகையில் சஞ்சலங்கள், தீய எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனாலேயே அது தடுக்கப்பட்டிருக்கலாம்.