தொழுகையின் நிலையும் சட்டமும்

1519

தொழுகையின் நிலையும் சட்டமும்

மொழி ரீதியில்

பிரார்த்தனை

பரிபாஷையில்

குறிப்பிட்ட சொற்களை, செயற்பாடுகளை கொண்டு அல்லாஹ்வை வணங்குவதை குறிக்கின்றது. இது தப்பீரை கொண்டு ஆரம்பித்து ஸலாத்தை கொண்டு முடிவடைகின்றது.

இஸ்லாத்தில் தொழுகையின் வகிபாகம்

1. இஸ்லாத்தின் தூண்களில் இரண்டாவது தூண் தொழுகையாகும். நபியவர்கள் கூறினார்கள் «இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என சாட்சி கூறுதல், நிச்சயமாக முஹம்மத் நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என சாட்சி கூறுதல், தொழுகையை நிலைநாட்டுதல்…….»
(புஹாரி முஸ்லிம்).

2. தொழுகை மிகச் சிறந்த அமலாகும். நபியவர்கள் கூறினார்கள் «சிறந்த அமல் தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுவதாகும்» (ஆதாரம் திர்மிதி).

3. முஸ்லிமையும் காபிரையும் பிரித்துக் காட்டுவது தொழுகையாகும். நபியவர்கள் கூறினார்கள் «முஸ்லிமுக்கும், ஷிர்க்,குப்ர் (செய்பவரும்) இடையான வேறுபாடு தொழுகையை விடுவதாகும்»(ஆதாரம் முஸ்லிம்).

4.தொழுகை இஸ்லாத்தின் தூணாகும். அல்லாஹ்வை ஒருமைப்படுத்திய பின்னர் செய்ய வேண்டிய முதலாவது அம்சமாகும். நபியவர்கள் கூறினார்கள் «இதுவே இஸ்லாத்தின் தலையாய விடயமாகும். அது தொழுகையாகும்» (ஆதாரம் அஹ்மத்).

தொழுகையின் சிறப்பு

1. தொழுகை என்பது தொழுபவருக்கு ஒளியாகும். நபியவர்கள் கூறினார்கள் «தொழுகை ஒளியாகும்.»
(ஆதாரம் முஸ்லிம்).

2. தொழுகை பாவங்களுக்கு பரிகாரமாகும். அல்லாஹ் கூறுகிறான் {பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்..}. [ஹூத் – 114]

நபியவர்கள் கூறினார்கள் «உங்களுடை கதவுகளுக்கு முன்னால் ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. அதில் அவர் ஒரு நாளைக்கு ஐந்து முறை குளித்தால் அவரது உடம்பில் அழுக்கு (அழுக்குகள் – ஊத்தைகள்) இருக்குமா? என கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் அழுக்குகள் எஞ்சியிருக்காது என்றார்கள். அதற்கு நபியவர்கள் – அதே போன்றுதான் ஐந்து வேளை தொழுதால் அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிக்கிறான்»
(புஹாரி முஸ்லிம்).

3. தொழுகை சுவனம் நுழைய காரணமாகும். நபியவர்கள் ரபீஆ இக்னு கஅப் ரழி அவர்கள் சுவர்க்கத்தில் எது அழகு என கேட்ட போது பின்வருமாறு கூறினார்கள் «ஸூஜூதியில் அதிகமாக உனது உள்ளத்தை நிறுத்துவாயாக» (ஆதாரம் முஸ்லிம்).

தொழுகையின் சட்டம்

அல்குர்ஆன், சுன்னா, இஜ்மாவின் அடிப்படையில் ஐவேளை தொழுகை வாஜிபாகும்.

1-அல்குர்ஆன்- அல்லாஹ் கூறுகிறான் {தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்}. [பகறா- 43]

2. சுன்னா – நபியவர்கள் கூறினார்கள் «இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என சாட்சி கூறுதல், நிச்சயமாக முஹம்மத் நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என சாட்சி கூறுதல், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல், ரமழான் மாத்தில் நோன்பு நோற்றல் ஆகியனவாகும்»
(புஹாரி முஸ்லிம்).

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரழி அறிவிக்கிறார்கள். நபியவர்களிடம் இஸ்லாம் என்றால் என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் கூறினார்கள் «ஒவ்வொரு நாளும் ஐந்து நேரம் தொழுதல், என்றார்கள் அதற்கு அவர் வேறு ஏதாவது உண்டா என கேட்டபோது, நபியவர்கள், சுன்னத்தான தொழுகையை தவிர வேறு ஏதுமில்லை என்றார்கள்»(புஹாரி முஸ்லிம்).

3. இஜ்மா – இமாம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழுகை கடமை என்பதில் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.

யார் மீது தொழுகை கடமை?

முஸ்லிமான, பருவ வயதை அடைந்த, புத்தியுள்ள, ஆண், பெண் மீதும் கடமையாகும்.

தொழுகையை மீட்டுதல்

ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அவர் காபிராக இருக்கும் போது விட்ட தொழுகைகளை மீட்ட தேவையில்லை. ஏனனெனில் இஸ்லாம் அதற்கு முந்தியவைகளை மன்னிக்கின்றது.

தொழுகையை விடுதன் சட்டம்

1. தொழுகையை விடுவது வாஜிபை நிராகரிப்பதாகும்.

அவர் அறியாதவராக இருப்பின் அறிந்து கொள்ள வேண்டும். அவர் தொடராக நிராகரிப்பராக இருப்பின் அவர் காபிராவார். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், அனைத்து முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவுகளையும் நம்பமறுக்கிறார்.

2. சோம்பேறித்தனமாக தொழுகையை விடுதல்.

எவர் வேண்டுமென்று சோம்பேறித்தனமாக தொழுகையை விடுகின்றாரோ அவர் காபிராவார். ஆட்சியாளர்கள் அவரை தொழுகையின் பக்கம் அழைக்க வேண்டும். மூன்று நாட்கள் அவர் தவ்பா செய்ய வேண்டும். தவ்பா செய்யவில்லை என்றால் மதம்மாறியவர் என்பதற்காக கொல்லப்படுவார். நபியவர்கள் கூறினார்கள் «எமக்கும் அவர்களுக்கும் இடையிலான உடன்படிக்கை தொழுகையாகும். எவர் அதனை விடுகின்றாரோ அவர் நிராகரிப்பாளராவார்»
(ஆதாரம் திர்மதி), நபியவர்கள் கூறினார்கள் «முஸ்லிமுக்கும், ஷிர்க்,குப்ர் (செய்பவரும்) இடையான வேறுபாடு தொழுகையை விடுவதாகும்» (ஆதாரம் முஸ்லிம்).

சிறுவர்களது தொழுகை

சிறுவர்கள் ஏழு வயதை அடைந்தால் அவர்களை தொழுமாறு ஏவ வேண்டும். அதற்காக அவர்களை பயிற்சியளிக்க வேண்டும். அவர்கள் பத்து வயதாகி தொழவில்லையனின் காயம் ஏற்படாதவாறு அடிக்க வேண்டும். நபியவர்கள் கூறினார்கள் «உங்களுடய பிள்ளைகள் ஏழு வயதை அடைந்தால் அவர்களை தொழுமாறு ஏவுங்கள். அவர்கள் பத்து வயதாகியும் தொழவில்லை எனின் அவர்க