தொழுகையின் சட்டங்கள்

4199

தொழுகையின் சட்டங்கள்

1-உட்கார்ந்து தொழுதல்

(அ) சுன்னத்தான தொழுகையில்

நின்று கொண்டு தொழுபவரை விட உட்கார்ந்து தொழுபவருக்கு அரைவாசி நன்மை கிடைக்கிறது. நபியவர்கள் கூறினார்கள் «நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு».
(ஆதாரம் புஹாரி)ஆனால் தக்க காரணங்களோடு ஒருவர் தொழுவாரானால் அவருக்கு பூரணமான நன்மை கிடைக்கும். நபியவர்கள் கூறினார்கள். «அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது அவனுக்கு எழுதப்படும்»(ஆதாரம் புஹாரி)

(ஆ) பர்ளான தொழுகைகளில்

நிற்பதற்கு சக்தியிருப்பவர் பர்ளான தொழுகைகளில் உட்கார்ந்து தொழுவது கூடாது.

2-நிய்யத்

நீய்யத்தில் உள்ள சட்டங்கள்

1-தொழுகையில் நீயத்தை துண்டிப்பது கூடாது. யார் தொழுகையில் நீயத்த்தை துண்டிக்கிறாரோ அவரது தொழுகையும் துண்டிக்கப்பட்டு விடும். அவர் அதனை ஆரம்பத்திலிருந்து செய்வது வாஜிபாகும்.

2-சுன்னத்தான தொழுகைக்காக ஒருவர் தக்பீர் கட்டியபின்னர் அதனை அவர் பர்ளு தொழுகையாக மாற்ற முடியாது.

3-ஒருவர் பர்ளு தொழுகையை தனியாக தொழுவதற்கு தக்பீர் கட்டுகிறார். அப்போது ஒரு கூட்டம் ஜமாஅத் தொழுகை நிறைவேற்ற வந்தால் அந்த தொழுகையை அவர் சுன்னத்தான தொழுகையாக மாற்றி இரண்டு ரக்அத்தை பூரணமாக தொழுது ஸலாம் கொடுத்த பின்னர் ஜமாஅத் உடன் இணைந்து தொழுது கொள்வார்.

3-பாத்திஹா ஓதுதல்

பாதிஹா ஓதுவது வாஜிபாகும். அவர் வெளிப்படையான தொழுகைகளில் மஃமுமாக இருப்பினும் சரியே. உபாதா இப்னு ஸாமித் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் «நாங்கள் நபியவர்களுக்கு பின்னால் சுன்னத் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் ஓதினார்கள். நானும் அவ்வாறே ஓதிக் கொண்டிருந்தேன். இமாமுக்கு பின்னால் நீங்கள் ஓதினீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு ”ஆம்” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் ” சூரதுல் பாத்திஹாவை தவிர வேறு எதுவும் செய்ய வேண்டாம். யார் அதனை ஓத வில்லையோ அவருக்கு தொழுகை இல்லை” என்றார்கள்»
(ஆதாரம் அபூதாவுத்)
.

4-ஆமீன் கூறுதல்

இது தொழுபவர் ஆமீன் கூறுவதை குறிக்கின்றது. இதனை ஓதுவது அனைத்து தொழுகையாளிலும் சுன்னத்தாகும். அவர் இமாமாக, மஃமுமாக, தனியாக, கூட்டாக, பர்ளு, சுன்னத், ஆகிய அனைத்து நிலையிலும் கூறலாம். அது போல சத்தத்தை வெளிப்படுத்தும் தொழுகையில் ஆமினை வெளிப்படுத்தியும், சத்தத்தை வெளிப்படுத்தாத தொழுகையில் ஆமினை வெளிப்படுத்தாமலும் கூற வேண்டும். நபியவர்கள் கூறினார்கள் «இமாம் ஆமின் கூறும்போது நீங்களும் ஆமின் கூறுங்கள்! ஒருவர் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமினுடன் ஒத்து அமையுமாயின் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன»(ஆதாரம் புஹாரி)

5-இமாமின் மௌனம்

1-வஜ்ஜஹத் ஓதுவதற்காக ஆரம்ப தக்பீருக்கும், கிராஅதிற்கும் இடையில் மௌனமாக இருத்தல்.

2- பாத்திஹாவிற்கும் அடுத்த சூறாவிற்கும் இடையில் மௌனமாக இருக்க வேண்டும் என உறுதியான நபிமொழிகள் இல்லை.

3-ருகூஃவிற்கு முன்னர் சூறா ஓதிய பின்னர் இமாம் அமைதியாக இருக்கலாம்.

6-வெளிப்படையாக பர்ளான தொழுகையை கழாச் செய்தல்

தவறவிடப்பட்ட ஒரு தொழுகையை கழாச் செய்ய நாடினால் அதனை சத்தமாக ஓதி தொழுவதா? அல்லது உள்ரங்கமாக ஓதி தொழுவதா? இதன் போது தொழுகையை மாத்திரமே நோக்க வேண்டும். கழாச் செய்யும் நோரத்தை பார்க்க கூடாது. பகல் நேரத்தில் வெளிப்படையான தொழுகை (சுபஹ்,மஃரிப்,இஷா) தொழுதால் அதில் வெளிப்படுத்தியே ஓத வேண்டும்.

சுன்னதான தொழுகையில் உள்ரங்கமாக ஓதுவது சுன்னத்தாகும். ஆனால் வெளிப்படுத்தி ஓத வேண்டும் என வந்துள்ள சுன்னத்தான தொழுகைகளில் வெளிப்படுத்தி ஓத வேண்டும்.உதாரணம் - தராவிஹ், கிரகண தொழுகை

7-இரு கைகளையும் உயர்த்துதல்

பின்வரும் சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும்.

1-ஆரம்ப தக்பீரின் போது

2-ருகூஃ செய்யும் போது

3-ருகூஃவில் .ருந்து எழும் போது

4-முதல் அத்தஹியாத்திலிருந்து எழும்பும் போது

8-ரக்அத்தை அடைந்து கொள்ளல்.

மஃமும் இமாமுடன் ருகூ.வை அடைந்து கொண்டால் அவர் அந்த ரக்அத்தை அடைந்து கொள்வார். நபியவர்கள் கூறினார்கள் «யார் ருகூஃவை அடைந்து கொள்கிறாரோ அவர் தொழுகையின் ரக்அத்தை அடைந்து கொண்டவராவார்»
(ஆதாரம் அபூதாவுத்)

9- அமைதியை பேணல்

தொழுகையில் அமைதியைப் பேணுவது ருகூன் ஆகும். அமைதியை பேணாத தொழுகை பூரணத்துவமடையாது. அபூ ஹூறைறா ரழி அறிவிக்கின்றார்கள்«நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் பள்ளிவாசலுக்கு வந்து (அவசரமாக அவசரமாக) தொழலானார். (தொழுது முடித்ததும்) அவர் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லிவிட்டு நீர் திரும்பச் சென்று தொழுவீராக. ஏனெனில், நீர் முறையாகத் தொழவில்லை என்று சொன்னார்கள்.

அந்த மனிதர் திரும்பிப்போய் முன்பு தொழுததைப் போன்றே மீண்டும் தொழுதுவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சலாம் சொன்னார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வ அலைக்கஸ் ஸலாம் (உன் மீதும் சாந்தி நிலவட்டும்) என்று பதில் சலாம் சொல்லிவிட்டு, நீர் (முறையாகத்) தொழவில்லை. எனவே, திரும்பச் சென்று தொழுவீராக என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர் சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிடச் சிறந்த முறையில் எனக்குத் தொழத் தெரியாது. எனவே, எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத்தாருங்கள் என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் தொழுகைக்கு நின்றதும் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவீராக. பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதிக்கொள்வீராக. பிறகு (குனிந்து) ருகூஉச் செய்வீராக. அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி நேராக நிற்பீராக. பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக. அதில் சற்று நேரம் நிலைகொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக. பிறகு இதே (நடை)முறையை உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக என்று சொன்னார்கள்». (ஆதாரம் புஹாரி)

10-நாவை அசைத்தல்

உள்ளத்தால் குர்ஆன் ஓதுதல், தக்பீர் கூறுதல், துஆக்கள் ஓதுதல் போன்றவைகளை மொழிவது மாத்திரமல்லாமல் நாவையும், உதடுகளையும் குறைந்த்து அசைக்க வேண்டும். .

11-ஸூஜூதின் உறுப்புக்கள்

ஸஜதாவுடைய உறுப்புக்கள் ஏழாகும். நபியவர்கள் கூறினார்கள் «ஓர் அடியான் சுஜூது செய்யும் போது ஏழு உறுப்புக்கள் (நிலத்தில் படுகின்றன). அவை – அவனுடைய முகம், அவனுடைய இரு உள்ளங்கை, அவனுடைய இரு முட்டங்கால், அவனுடைய இரு பாதங்கள். ஆகும்» (புஹாரி முஸ்லிம்)

12- விரல்காளால் சுட்டிக் காட்டுதல்

அத்தஹியாத்தில் விரலசைப்பது சுன்னாவாகும். வாயில் இப்னு ஹூஜ்ர் ரழி அறிவிக்கின்றார்கள் «நபியவர்களுடைய விரல் ஒருவரை அழைப்பது போல் அசைவதை கண்டேன்»(ஆதாரம் நஸாஈ)

அவசியமில்லை

-நீயத்தை வெளிப்படுத்துவது அவசியமில்லை. அதே போல தக்பீரதுல் இஹ்றாம் உடன் சேர்த்து நீய்யதை கூறுதல் என்ன கூற்று அவசியமில்லாதது.

-((சுக்ரன்)) போன்ற சில சொற்களை அதிகரித்தல். (( ரப்பனா வலகல் கம்த்)). இவைகளுக்கு நபியவர்களை தொட்டும் உறுதியான செய்திகள் இல்லை.

-அத்தஹிய்யாதில் ((ஸய்யதினா)) என்று அதிகமாக சொல்லுதல்,

-ஸலாம் கொடுக்கும் போது வலது கையை வலது பக்கமும், இடது கையை இடது பக்கமும் அசைத்தல்.

-ஒருவருக்கு ஒருவர் தங்களிடையே ஹர்மன் என்பதும் மற்றவர் ஜம்அன் என்பது. அது போன்றன.

-தொழுகையின் பின்னர் சிலர் ஆயதுல் குர்ஸி ஓதலும் பின்னர் – ஸூபஹான அல்லாஹி பயுஸப்பிஹூன் என்பது.

-திக்ர், துஆ போன்ற செய்த பின் மஸ்ஹ் செய்தல்.