தயமம்

6048

தயமம்

மொழி ரீதியில்

நாடுதல், ஒன்றை நோக்கி நிறைவேற்றல்

இஸ்லாமிய பரிபாஷையில்

சுத்தம் ஆக வேண்டும் என்ற நோக்கில் சுத்தமான மண்னை கொண்டு முகத்தையும் கை இரண்டையும் தடவுவதை குறிக்கும்.

தயமம் இன் சட்டங்கள்

தொழுகை போன்ற கடமையான வணக்கங்களின் போது சுத்தம் செய்ய தண்ணீர் இல்லாத போதும் அல்லது தண்ணீர் பயன்படுத்தினால் தீங்கு ஏற்படும் என்கின்ற போது தயமும் செய்யலாம். குர்ஆன் ஓதுதல் போன்னற சுன்னத்தான வணக்கங்களின் போது தயமம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.

தயமம் ஆகுமாகும் என்பதற்கான ஆதாரம்

1. {உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள் }[மாயிதா 6].

2. நபியவர்கள் கூறினார்கள் «எனக்கு ஐந்து விடயங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு முன்னர் யாருக்கும் இது வழங்கப்படவில்லை. ஒரு மாத காலம் அச்சமின்றி வாழும் சந்தர்ப்பம். மேலும் பூமி எனக்கு சுத்தமாக தொழுமிடமாக்கப்பட்டுள்ளது. உங்களில் யாராவது தொழுவதற்கு நாடினால் (பூமியில்) தொழுது கொள்ளட்டும்»(ஆதாரம் புஹாரி).

தயமம் செய்வதன் நுட்பம்

1.நபியவர்களின் உம்மத்திற்கு இலகுவிற்காக.

2.சில தண்ணீர் பாவிக்க முடியாத நிலமைகளில் ஏற்படும் தீங்குகளிலிருந்து தவிர்ந்து நடக்க. உதாரணம். நோய், கடுமையான குளிர் போன்ற சந்தர்ப்பங்கள்.

3.தொடராக இபாதத் செய்வதற்காக, தண்ணீர் இல்லை என்ற காரணத்தினால் இபாதத் தடைப் படாமல் இருப்பதற்காக வேண்டி.

தயமம் எப்போது கடமைகும்?

1.தண்ணிர் கிடைக்காத போது

அல்லாஹ் கூறுகிறான் {உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள் } [மாயிதா 6].

என்றாலும் மனிதன் தேடி ஏதாவது தண்ணீர் கிடைக்கவில்லையன்றால்

2.தண்ணீர் கிடைத்தும் அதனை பாவிப்பதற்கு இயலாத சந்தர்ப்பங்களில்

நோயாளி, உடற் பருமன் பெருத்தவர்கள் அவர்களால் நடமாட முடியாமை போன்றவர்கள். அவர்களுக்கு வுழுச் செய்ய உதவியாளர்கள் இல்லை என்றால் (அவர் தயமம் செய்யலாம்)

வயது முதிர்ச்சி

நோயாளி

3.தண்ணீரை பாவிப்பதால் தீங்கு ஏற்படும் என பயந்தால்.

அதில்:

(அ) நோய் ஏற்பட்ட நிலையில் தண்ணீரை பாவித்தால் நோய் அதிகரிக்கும் என்ற நிலை.

(ஆ) கடும் பனி ஏற்பட்டு அதனை பாவித்தால் அல்லது குளித்தால் தீங்கு ஏற்படும் என பயந்தால் «நபியவர்கள் அம்ரு இப்னு ஆஸ் ரழி அவர்கள் கடுமையான குளிரின் போது தயமம் செய்ததை அனுமதித்தார்கள். »(ஆதாரம் அபூதாவுத்).

(இ) ஒருவர் தூர பிரதேசத்தில் உள்ளார் அவரிடமுள்ள தண்ணீர் குடிப்பதற்கு மாத்திரமே போதுமானது. அவருக்கு வேறு எவராலும் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை

தயமம் செய்யும் முறை

1.மண்ணின் மீது ஒரு தடவை கையால் அடித்தல்

2.கையை பிரட்டி புழுதி நீங்கும் படி தட்டுதல்

3.பின்னர் முகத்தை ஒரு தடவை மஸ்ஹ் செய்தல்

4.கையின் மேற்பகுதியை தடவுதல், வலது கரத்தை இடது கையாலும், இடது கரத்தை வலது கரத்தாலும் தடவுதல்

தயமம் செய்வதற்கான ஆதாரம் «நபியவர்கள் தனது கரத்தை பூமியின் மீது அடிப்பார்கள். பின்னர் அதிலுள்ள (புழுதியை) ஊதினார்கள். பின்னர் அதனை கொண்டு முகத்தையும் கையையும் மஸ்ஹ் செய்தார்கள்»(புஹாரி முஸ்லிம்)

தயமம் செய்யும் முறை

ஒரே தடவையில் மண்ணின் மீது அடித்தல்

மண்ணை ஊதுதல்

முகத்தின் மீது மஸ்ஹ் செய்தல்

இடக்கரத்தால் வலக்கரத்தின் மீது மஸ்ஹ் செய்தல்

வலக்கரத்தால் இடக்கரத்தின் மீது மஸ்ஹ் செய்தல்

தயமம் இன் பர்ளுங்கள்

1.தூய எண்ணம்

2.முகத்தை தடவுதல்

3.இரண்டு கரங்களையும் தடவுதல்

4.முறையாக செய்தல் முகத்தை மஸஹ் செய்து பின்னர் கையை மஸ்ஹ் செய்ய வேண்டும்.

5.தொடராக செய்தல் – முகத்தை மஸ்ஹ் செய்த உடனேயே கையை மஸ்ஹ் செய்தல்.

தயமத்தை முறிக்கும் காரியங்கள்

1.தண்ணீரை பெறுதல்

2.வுழுவை முறிக்கும் காரியங்கள் அனைத்தும் தயமத்தை முறிக்கும். உதாரணம் காற்று வெளியாதல்

3. குளிப்பை கடமையாக்கும் அனைத்தும்

4.நோய், தீங்கு நீங்குதல் போன்ற சந்தர்ப்பத்தில் தயமம் செய்ய முடியாது.

தண்ணீரை பெறுதல்

கேள்வி

1.தண்ணீர் இல்லாத நேரத்தில் தயமம் செய்து தொழும் தொழுகையானது ஒருவர் தண்ணீரால் வுழுச் செய்து மலசலத்தை அடக்கி கொண்டு தொழுவதை சிறந்தது.

2.சுவர், விரிப்பு போன்றவைகளில் தயமம் செய்ய முடியாது. அதில் மண்,புழுதி இருக்குமானால் தயமம் செய்யலாம்.

3. தயமம் செய்த ஒருவர் தயமத்தை முறிக்காதவரை பர்ளான,சுன்னதான வணக்கங்களை செய்யலாம்.

4.தயமம் செய்தவரை பின்தொடர்ந்து வுழுச் செய்தவர் தொழலாம். «அம்ர் இப்னு ஆஸ் ரழி அவர்கள் கடும் குளிர் காரணமாக தயமம் செய்து கொண்டு ஸஹாபாக்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அதனை நபியவர்கள் அங்கிகரித்தார்கள்»(ஆதாரம் அபூதாவுத்).

5.ஒருவர் தயமம் செய்து தொழுகிறார், பின்னர் தொழுகையுடைய நேரம் முடிவதற்கு முன்னர் தண்ணீர் கிடைத்தால் அவர் தொழுகையை மீட்டத் தேவையில்லை. «ஸைதில் குத்ரி ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் ” இரண்டு மனிதர்கள் பயணம் செய்கின்றனர். அப்போது தொழுகைக்கான நேரம் வந்தது. ஆனால் அவர்களிடம் தண்ணீர் இல்லை. பின்னர் சுத்தமான மண்ணால் தயமம் செய்து தொழுதார்கள், பின்னர் அந்த நேரத்தில் தண்ணீரை பெற்றுக் கொண்டார்கள், அதில் ஒருவர் வுழுச் செய்து தொழுகையை மீண்டும் தொழுதார். மற்றவர் மீண்டும் தொழவில்லை. பின்னர் இருவரும் நபியவர்களிடம் வந்தார்கள். நடந்தைவற்றை கூறினார்கள். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்” யார் தொழவில்லையோ அவர் சுன்னாவை நடைமுறைப்படுத்தினார். அவருக்குரிய கூலி வழங்கப்படும். மேலும் சொன்னார்கள் யார் வுழுச் செய்து தொழுதாரோ அவருக்கு இரண்டு கூலி வழங்கப்படும் என்றார்கள்» (ஆதாரம் அபூதாவுத்).

6.ஒருவர் தயமம் செய்கிறார்ஈ பின்னர் தண்ணீரை பெறுவாராயின் அல்லது தொழுவதற்கு முன்னர் தண்ணீர் கிடைத்துவிட்டது எனின் அவர் தண்ணீரை கொண்டு வுழுச் செய்ய வேண்டும். «நபியவர்கள் கூறினார்கள் ” ஒருவர் பத்து வருடமாக தண்ணீரை பெறவில்லையனின் சுத்தமான தண்ணீர் ஒரு முஸ்லிமை சுத்தமாக்கும். ஆனால் அவன் தண்ணீரை பெற்றால் அவனுக்கு அதுவே சிறந்ததாகும்»
(ஆதாரம் திர்மிதி).

7.தண்ணீர் திரும்ப பெறலாம் என்ற சந்தர்ப்பம் இருக்குமானால் தயமம் செய்வதை தாமதிக்க வேண்டும். யார் தண்ணீர் கிடைக்காது என்று நிராசை அடைகின்றானோ அவன் தயமம் செய்வது ஆகுமானது. ஏனனில் தொழுகையில் சிறந்த தொழுகை அதனுடைய நேரத்தில் தொழுவதாகும்.

8. மனிதன் தெழுகையினுடைய நேரம் முடிகின்றது என பயந்து அவர் தண்ணீரை பயன்படுத்த சக்தி பெற்று தண்ணீரை பெறுவாராயின் அவர் தயமம் செய்ய முடியாது. தொழுகையுடைய நேரம் முடிந்தாலும் அவர் மீது வுழு கடமையாகும்.

9.ஒரு முஸ்லிம் எந்த நிலையிலும் தொழுகையை விட முடியாது. தண்ணீர் கிடைக்காமை அல்லது நீரை பயன்படுத்த முடியாமை . போன்ற நிலைகளில் தயமம் செய்ய வேண்டும். அவருக்கு தயமம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டடாலும் அவர் அசுத்தமான நிலையிலும் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அவர் அத்தொழுகையை மீட்டித் தொழ தேவையில்லை. அவர்களுக்கு பாகிது தாஹிரைன் என்று சொல்லப்படும். (இரண்டு சந்தர்ப்பங்களிலும் சுத்தம் செய்ய முடியாதவர்கள்). அல்லாஹ் கூறுகிறான். {உங்கள் சக்திக்குட்பட்ட வரை அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.}.
[தஆபுன் – 16]

மண் கிடைக்காமை

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை

மண்ணில் சுத்தப்படுத்தக் கூடிய அனுக்கள் உள்ளன. அவைகளால் கிருமிகளையும் சுத்தப்படுத்த முடியும். அதே போல் கண்ணுக்கு புலப்படாத நுண்ணங்கிகளை கூட சுத்தப்படுத்த முடிகின்றது.