தகுந்த காரணமுடையவர்களுடைய தொழுகை

1416

தகுந்த காரணமுடையவர்களுடைய தொழுகை

தக்க காரணங்கள்

நோய், பயணம், அச்சம்

1-நோயாளியின் தொழுகை

நோயாளி தனது சக்திக்குட்பட்ட வரையில் தொழுகையை நிறைவேற்றுவது அவசியமாகும். அவருக்கு முடியாத போது அவருக்கு எவ்வாறு தொழுவது சாத்தியமோ அவ்வாறு தொழ வேண்டும்.

நோயாளி நிற்பதற்கு சக்தி பெற்றவரானால் அவர் நின்று தொழ வேண்டும். நிற்க சக்தியில்லாவிட்டால் உட்கார்ந்து தொழ வேண்டும். உட்கார சக்தி பெறாவிட்டால் சாய்ந்து கொண்டு தொழ வேண்டும். அப்போது அவருடைய முகம் கிப்லாவை முன்னோக்க வேண்டும். சாய்ந்து கொண்டு தொழ முடியாதவர்கள் முதுகை சாய்ந்தவராக தெழ வேண்டும். அவருக்கு இயலுமாக இருப்பின் அவரது காலை கிப்லாவின் பக்கம் நீட்டிக் கொள்ளட்டும்.

அல்லாஹ் கூறுகிறான். {ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்} [தகாபுன் – 16] இம்ரான் இப்னு ஹூஸைன் ரழி அவர்களுக்கு நபியவர்கள் கூறினார்கள். «நின்று தொழுவீராக, நிற்க சக்தியில்லாத போது உட்கார்ந்து தொழுவீராக, அதற்கு சக்தி பெறவில்லையாயின் சாய்ந்து தொழுவீராக»(ஆதாரம் புஹாரி)

நோயாளியுடைய தொழுகையின் சட்டங்கள்

1- நோயாளி உட்கார்ந்து தொழுதால் அவருக்கு ஸூஜூது செய்ய முடியுமானால் அவர் ஸூஜூது செய்வது வாஜிபாகும்.

2- நோயாளி உட்கார்ந்து தொழுது அவருக்கு ஸூஜூது செய்ய முடியாது போனால் ருகூஃ, ஸூஜூதின் போது உடலை அசைக்க வேண்டும். ருகூஃவை விட ஸூஜூதில் சற்று குனிய வேண்டும். உடலை அசைப்பது கஷ்டமாக இருப்பின் அவர் தனது தலையால் சைகை செய்ய வேண்டும். முதுகை சாய்த்து தொழுபவரும் இவ்வாறே!

3- நோயாளிக்கு ஒவ்வொரு தொழுகைக்கும் வுழுச் செய்வது சிரம்மாக இருப்பின் அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுவது சிரம்மமாக இருப்பின் அவர் லுஹர், அஸரையும், இஷா, மஃரிபை சேர்த்து தொழ முடியும்.

4- நோயாளிக்கு புத்தி இருக்கும் வரை அவருக்கு தொழுகை நீங்காது. நோயை காரணம் காட்டி அதில் பொடுபோக்காக இருப்பது கூடாது. அவருக்கு முடியுமான வகையில் தொழ வேண்டும்.

5- நோயாளி கோமாவில் இருந்து பின்னர் தெளிவடைந்தால் தனக்கு முடீயமான வகையில் தொழுகையினை நிறைவேற்ற வேண்டும். கோமாவில் இருந்த போது விட்ட தொழுகையை அவர் மீட்ட தேவையில்லை. ஒருவர் ஓரிரு நாட்கள் கோமாவில் இருப்பின் அவர் விட்ட தொழுகைகளை மீட்டித் தொழ வேண்டும்.

தக்பீர்

ஓதுதல்

ருகூஃ

ஸூஜூத்

2-பிரயாணியின் தொழுகை

நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகையை பிரயாணி இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ முடியும். அல்லாஹ் கூறுகிறான்.{நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்} [நிஸா – 101].

அனஸ் இப்னு மாலிக் ரழி அவர்கள் கூறினார்கள் «நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பும் வரை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதார்கள்.»(ஆதாரம் நஸாஈ)

பிரயாணம் என்பதில் நாடப்படுவது

பிரயாணம் என அறியப்படுவதை இது குறிக்கின்றது. அதாவது தொழுகையை குறைவாக நிறைவேற்றும் வகையில் அமைந்த பயணங்கள்.

தொழுகையை சுருக்குதல்.

1- பிரயாணி அவர் வசிக்கும் இடத்திலிருந்து வெளியானதும் சுருக்கித் தொழுவது ஆரம்பிக்கும். அவர் வசிக்கும் இடத்தில் சுருக்கித் தொழுவது கூடாது. இதனை நபியவர்களது செய்தி உறுதிப்டுத்துகின்றது. நபியவர்கள் (அவர்களது இருப்பிடத்தை விட்டு) வெளியேறிய பின்னர் சுருக்கித் தொழுவார்கள்.

2- ஒருவர் ஓரிடத்திற்கு சென்று அங்கு நான்கு அல்லது அதிற்கு அதிகமாக தங்கினால் அவர் சுருக்கித் தொழ முடியாது. ஆனால் அதனை விட குறைவாக இருப்பின் சுருக்கித் தெழலாம், ஆனால் ஒருவர் எத்தனை நாள் தனது தேவை நிறைவேறும் என்பதை அறியாதவராக இருப்பின் அவர் ஊருக்கு திரும்பும் வரை சுருக்கித் தொழ முடியும்.

3- பிரயாணி ஊரில் இருக்கும் இமாமை பின்பற்றி தொழுதால் அவர் சுருக்கித் தொழ முடியாது.

4- ஊரில் இருப்பவர் சுருக்கித் தொழும் பிரயாணியின் பின்னால் தொழுதால் இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் தொழுகையை பூரணப்படுத்துவார்.

சேர்த்து தொழுதல்

1- பிரயாணியும், நோயாளியும் லுஹர், அஸர் தொழுகைகளை ஒரே நேரத்தில் சோர்த்து தொழுவது அவசியமாகும். அதே போல மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் சேர்த்து தொழ வேண்டும். முதல் தொழுகையின் நேரத்தில் தொழுதால் அதற்கு ஜம்உ தக்தீம் எனப்படும். இரண்டாவது தொழுகையின் நேரத்தில் தொழுதால் ஜம்உ தஅஹ்ஹிர் எனப்படும்.

2- மழை காலங்களில் பள்ளிகளில் சேர்த்துத் தொழ முடியும். பெண்களை போன்று வீட்டில் தொழுபவர்களுக்கு அந்த சலுகை கிடையாது.

3- சேர்த்து தொழுதால் சுருக்கித் தொழ வேண்டிய அவசியமில்லை. அவருடைய வசதிக் கேற்ப சில நேரம் சேர்த்து தொழுவார். சில நேரம் சுருக்கித் தொழுவார். அல்லது சில நேரம் சுருக்கித் தொழுவார். கேற்ப சில நேரம் சேர்த்து தொழுவார்.

வாகனத்தில் பிரயாணம் செய்பவரின் தொழுகை

1- சுன்னத் தொழுகையாக இருந்தால்.

இவரின் தொழுகை காரணம் இருந்தாலும், இஸ்லாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படும். «நபியவர்கள் பிரயாணத்தின் போது தனது ஒட்டகத்தில் அதனை முன்னோக்கி தொழக் கூடியவர்களாக இருந்தார்கள் » (ஆதாரம் புஹாரி)

2-பர்ளான தொழுகையாக இருந்தால்.

பர்ளான தொழுகையில் வாகனத்தை விட்டு பூமியில் இறங்க முடியாது அல்லது இறங்குவதற்கு சக்தி இல்லை எனும் போது அல்லது எதிரிகளுக்கு பயந்தால் அப்போது அவரது தொழுகை கூடும். அவற்றுள்

(அ)- கப்பல் போன்றவைகளில் பிரயாணம் செய்யும் போது கிப்லாவை முன்னோக்க, ருகூஃ, ஸூஜூத் செய்ய முடியுமாக இருப்பின் அவர் அப்படியே தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

(ஆ)- கிப்லாவை முன்னோக்க முடியும். ஆனால் ருகூஃ, ஸூஜூத் செய்ய முடியாத நிலை எனின் அவர் ஆரம்ப தக்பீர் கூறியவராக வாகனம் செல்லும் திசையை நோக்கியவராக தொழுவார்.வாகனம் செல்லும் திசையை நோக்கி ருகூஃ, ஸூஜூத் செய்வார்

3-அச்ச நேரத் தொழுகை

யுத்தம் போன்ற நிலைகளில் இஸ்லாம் இதனை மார்க்கமாக்கியுள்ளது. அதற்கான ஆதாரங்கள் குர்ஆன் சுன்னாவில் இடம் பெறுகின்றன.

1- அல்லாஹ் கூறுகிறான். {நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும்} [நிஸா – 102].

2- சுன்னாவிலிருந்து நபியவர்கள் தொழுவித்தார்கள். ஸஹாபாக்கள் தொழுதார்கள்.

அச்ச நேரத் தொழுகை நிறைவேற்றும் முறை

அச்ச நேரத்தில் ஊரில் இருப்பராக இருந்தால் அவர் தொழுகையை சுருக்க முடியாது. அவர் பிரயாணத்தில் இருந்தால் சுருக்கித் தொழுவார். அதனை தொழுவது தொடர்பில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை இரண்டும் ஆகுமானதாகும்.

இரண்டு நிலைகளில் அச்ச நிலைத் தொழுகை வாஜிபாகும்.

முதலாவது நிலை – எதிரியின் தாக்குதலுக்கு பயப்படுதல்

நபியவர்கள் தொழுத்தாக வரக்கூடிய அமைப்பில் அவர் தொழுது கொள்ள வேண்டும். «ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) கூறினார்

(அச்ச நேரத் தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர்களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தங்கள் முகங்கள் இருக்கும் வண்ணம் (தொழாமல்) நிற்பர். அப்போது இமாம் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். பிறகு, அவர்கள் எழுந்து தங்களுக்கு (மீதிமிருக்கும்) ஒரு ரக்அத்தை அந்த இடத்திலேயே இரண்டு சஜ்தாக்கள் செய்து பூர்த்தி செய்து கொள்வர். பிறகு, இவர்கள் மற்றோர் அணியினரின் இடத்திற்குச் சென்றுவிடுவர். அந்த (இரண்டாவது) அணியினர் (இமாமிடம்) வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இன்னொரு ரக்அத்தை இமாம் தொழுவார். இப்போது இமாமுக்கு இரண்டு ரக்அத்துக்களாம்விட்டது. பிறகு இவர்கள் (மீதமிருக்கும் ஒரு ரக்அத்தைத் தனியாக எழுந்து) ருகூஉ செய்து இரண்டு சஜ்தாக்கள் செய்து தொழுவார்கள்»(ஆதாரம் புஹாரி)

இதுவே ஊரில் இருப்பவர், பிரயாணம் செய்பவர் ஆகியோர் பஜ்ர் தொழுகையை நிறைவேற்றும் முறையாகும். இன்னும் அவர் மஃரிப் நேரத்தில் ஊரில் இருந்தால் இரண்டு ரக்அத் தொழுவார், பின்னர் பிரவதற்கான நீய்யத் வைப்பார். எஞ்சியவைகளை தன்னளவில் பூர்த்தி செய்து ஸலாம் கொடுப்பார். பின்னர் போய் வந்து எஞ்சியவைகளை அவர்களுடன் இணைந்து தொழுவார். பின்னர் பிரிந்து அத்தஹியாத்தில் இருந்தால் தன்னளில் பூர்த்தி செய்தி அவர்களுடன் காத்திருப்பார். அவர்கள் அத்தஹியாத்தில் இருக்கும் வரை பின்னர் அவர்களுடன் ஸலாம் கொடுப்பார்.

இரண்டாவது நிலை – தொழுகையை அதன் உரிய முறையில் தொழுவதற்கு வாய்பே இல்லாத கடும் அச்சம்.

இந் நிலைகளில் தனது கால்கள் இருக்கும் வையில் தனக்கு ஏற்ற எத்திசையாயினும் கிப்லாவை முன்னோக்கி தொழுவார்கள். இப்னு உமர் ரழி அறிவிக்கிறார்கள். «கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, தம் கால்களால் நின்ற நிலையிலோ வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லாத் திசையை முன்னோக்கியபடி, அல்லது முன்னோக்காமல் தொழலாம்». (ஆதாரம் புஹாரி)

தனக்கு ஏற்றாற் போல் ருகூஃ, ஸூஜூதை செய்வார். நடந்து சென்றாலும், வாகனத்தில் சென்றாலும் அல்லது யுத்த வாகனத்தில் அவர் எண்ணம் போல தொழுது கொள்வார். யுத்தம், கடுமையான, கொலைகளின் போது தொழுவது போல தொழுது கொள்வார். அல்லாஹ் கூறுகிறான் {ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்} [பகரா – 239]

விமானத்தில் தொழுதல்

கப்பலில் தொழுதல்

யுத்த வாகனத்தில் தொழுதல்

மார்க்கம் இலகுவாக்குகின்றது

இஸ்லாமிய மார்க்கம் சில அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது. இஸ்லாமிய காயிதாவின் அடிப்படையில்

”கஷ்டம் இலகுவை ஏற்படுத்தும்”