ஜூம்ஆ தொழுகை

8886

ஜூம்ஆ தொழுகை

ஜூம்ஆத் தொழுகையின் சட்டம்

ஜூம்ஆ தொழுகை பர்ளு ஐன் ஆகும். அது அனைத்து முஸ்லிமான, பருவ வயதை அடைந்த, சக்கியுள்ள அனைவருக்கும் கடமையாகும். அதனை விடுவதற்கு எந்த கரணமும் கிடையாது.

1- அல்லாஹ் கூறுகிறான். {ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்[பகரா – 239]

2- நபியவர்கள் கூறினார்கள் «மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்»(ஆதாரம் முஸ்லிம்)

யார் மீது ஜூம்ஆ கடமை இல்லை?

பெண்கள், சிறுவர்கள், பிரயாணி, நோயாளி, போன்றவர்களுக்கு ஜூம்ஆ கடமையில்லை. வேறு ஒருவரோடு அவர்கள் வந்தால் அவர்களுடைய தொழுகை கூடும். அதற்காக கூலியும் கிடைக்கும். அவ்வாறு அவர்கள் சமூகந்தரா விட்டால் லுஹர் தொழ வேண்டும். .

பிரயாணி

சிறுவர்கள்

நோயாளி

பெண்கள்

ஜூம்ஆ தினத்தின் சிறப்பு

வார நாட்களில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை தினமாகும். அதனை இஸ்லாமிய சமூதாயத்திற்கு சிறந்த்தாக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அதனுடைய சிறப்புக்கள் பற்றி அதிகமான செய்திகள் வந்துள்ளன.

1- «சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்»(ஆதாரம் முஸ்லிம்)

2- «ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன»(ஆதாரம் முஸ்லிம்)

3- «ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்»(ஆதாரம் முஸ்லிம்)

4- «அல்லாஹ், நமக்கு முந்தைய (யூதர் மற்றும் கிறித்தவ) சமுதாயத்தாரை (வார வழிபாட்டு நாளான) வெள்ளிக்கிழமையிலிருந்து வழிபிறழ விட்டுவிட்டான். எனவே, யூதர்களுக்குச் சனிக்கிழமையும் கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (வார வழிபாட்டு நாட்களாக) அமைந்தன. பிறகு அல்லாஹ் நம்மைப் படைத்து நமக்கு வெள்ளிக்கிழமையை அறிவித்தான். (வரிசை முறையில்) வெள்ளி, சனி, ஞாயிறு என அமைந்திருப்பதைப் போன்றே மறுமை நாளிலும் அவர்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே இருப்பார்கள். உலக மக்களில் நாமே (காலத்தால்) பிந்தியவர்களாக இருக்கிறோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப்பினங்களில் அனைவருக்கும் முன் தீர்ப்பளிக்கப் படுபவர்களாகவும் இருப்போம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்»(ஆதாரம் முஸ்லிம்)

5- «அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆவிலும் “சப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா” (87) மற்றும் ‘ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா” (88) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள். பெருநாளும் ஜுமுஆவும் ஒரே நாளில் வந்துவிட்டாலும், இரு தொழுகைகளிலும் அவ்விரு அத்தியாயங்களையே ஓதுவார்கள்»(ஆதாரம் முஸ்லிம்)

6- சூரியன் உதித்த நாட்களில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை, அத்தினத்தில்தான் முதல் மனிதர் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர்கள் பூமிக்கு இறக்கப் பட்டார்கள். அவர்களது பாவமன்னிப்பு (காதுகள்) ஏற்கப்பட்டதும் அதே தினத்தில்தான். ஆதம் (அலை) அவர்கள் மரணித்ததும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில்தான். மறுமை ஏற்படுவதும் இதே போன்ற ஒரு வெள்ளிக்கிழமையில் தான். வெள்ளிக்கிழமை உதயமானதில் இருந்து சூரியன் மறையும் வரை மனூ, ஜின்களைத் தவிர ஏனைய அனைத்து உயிரனிங்களும் மறுமை ஏற்படுவதை அஞ்சி பூமிக்குள்ளே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. இத்தினத்தில் ஒரு நேரம் உள்ளது. அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுது, பிரார்த்தித்து அல்லாஹ்விடம் எதனைக் கேட்டாலும் கொடுப்பான். கஃபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள், அது வருடத்தில் ஒரு நாளிலா? என்று கேட்ட போது, இல்லை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என்றார்கள். கஃபுல் அஹ்பார் தௌராத்தை வாசித்துப் பார்த்து விட்டு நபி (ஸல்) அவர்கள் உண்மையைத் தான் கூறியுள்ளார்கள் எனக் கூறினார்கள். அபூ ஹுரைர (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : “பின்பு நான் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களை சந்தித்து கஃபுல் அஹ்பாரிடம் உட்கார்ந்து கற்ற விடயத்தைப் பற்றிக் கூறினேன்”. “அது எந்த நேரம் என்று உமக்குத் தெரியுமா? என்று அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) கேட்க, எனக்கு அறிவித்துத் தாருங்கள் என்று நான் கூறினேன். அது வெள்ளிக்கிழமையின் இறுதி நேரம் என அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) கூறியதும், “அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுது, பிரார்த்தித்து அல்லாஹ்விடம் எதனைக் கேட்டாலும் கொடுப்பான்” என்று நபி கூறியுள்ளார்கள், அந்நேரம் தொழுகை தடுக்கப்பட்ட நேரமாக இருக்கும் போது எவ்வாறு வெள்ளிக்கிழமையின் இறுதி நேரமாக அது இருக்கும்? என நான் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் “யார் தொழுகையை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறாரோ அவரும் தொழுகையில் இருப்பதாகத்தான் கருதப்படுவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறவில்லையா? எனக் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அதைத் தான் நானும் கூறினேன்” என்று அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் அபூதாவுத்)

7- நாட்களில் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அதில் அதிகமதிகம் ஸலவாத்து கூறுங்கள். து எனக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். ”அதற்கு ஸஹாபாக்கள் நீங்கள் மரணித்து உக்கிய பின்னர் எப்படி? என கேட்டனர். அதற்கு நபியவர்கள் «நபிமார்களின் உடம்பை மண் சாப்பிடாது” என்றார்கள்»(
ஆதாரம் அபூதாவுத்)

ஜூம்ஆத் தொழுகையின் நிபந்தனைகள்

1- நேரம் – ஜூம்ஆவுடைய நேரத்திற்கு முன்னரோ, பின்னரோ அதனை தொழ முடியாது. அதனுடைய நேரம் லுஹர் தொழுகையாகும்.

2- (குறிப்பிட்ட) கூட்டம் வருகை தருதல் – தனிநபர் ஜூம்ஆவாக கருதப்பட மாட்டாது. குறைந்த்து மூன்று பேர் இருக்க வேண்டும்.

3- வசிப்பிடம் – மாரி, கோடை காலங்களில் என எல்லா நோரங்களிலும் சொந்த ஊரில் இருப்பதை குறிக்கும். அவர்கள் மாரியிலும், கோடையிலும் பிரயாணம் செய்யமாட்டார்கள். கூடாரமடித்து மாறி மாறி தங்குபவர்கள், நாட்டுப்புறத்தவர்கள் இவர்களுடைய தொழுகை கூடும். அவர் மீது ஜூம்ஆ கடமை இல்லை.

4- இரண்டு குத்பாக்கள் செய்தல் – நபியவர்கள் தொடராக செய்தது போன்று செய்தல்

ஜூம்ஆவின் நேரம்

ஜமாஅதாக தொழுதல்

நாட்டுப்புறத்தவர்கள்

ஜூம்ஆத் தொழுகை நிறைவேற்றும் முறை

ஜூம்ஆத் தொழுகை இரண்டு ரக்அத் ஆகும். அதில் ஓதுவதை வெளிப்படுத்த வேண்டும். முதலாவது ரக்அத்தில் பாத்திஹாவிற்கு பின்னால் சூரதுல் ஜூம்ஆவையும், இரண்டாவது ரக்அத்தில் பாத்திஹாவிற்கு பின்னால் சூரதுல் முனாபிகூனையும் ஓதுவது சுன்னத்தாகும். அல்லது முதலாவது ரக்அத்தில் பாத்திஹாவிற்கு பின்னால் சூரதுல் அஃலாவையும், இரண்டாவது ரக்அத்தில் பாத்திஹாவிற்கு பின்னால் சூரதுல் ஹாஷியாவையும் ஓதுவது சுன்னத்தாகும்
(ஆதாரம் முஸ்லிம்)

இரண்டு குத்பாக்கள்

இரண்டு குத்பாக்களின் சட்டம்

இரண்டு குத்பாக்கள் வாஜிபாகும். அது ஜூம்ஆவின் நிபந்தனையாகும். அதிகமான அரபுகள் வந்தால் அரபு மொழியில் குத்பா செய்ய வேண்டும். அரபு அல்லாதவர்களாக இருந்தால் அவர்களுடைய மொழியில் குத்பாக்கள் நிறைவேற்றலாம். அதில் குர்ஆன் வசனங்களை அரபியில் கூறி அதனுடைய அர்த்தங்களை பிற மொழியில் கூற வேண்டும்.

குத்பாவின் பூரணத்துவம்

ஜூம்ஆவுடைய குத்பா ருக்கூன் கிடையாது. ஆனால் பின்வரும் அமைப்பினூடாக குத்பாவின் பூரணத்தும் அடங்கியுள்ளது.

1- அல்லாஹ்வை புகழ்தல்

2- அஷ்ஷது அன்லாயிலாக என்று வரும் ஷகாதாவை கூறல்.

3- நபியவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்

4- அல்லாஹ்வை தக்வா செய்யுமாறு உபதேசம் செய்தல்

5- அல்குர்ஆனிலிருந்து சிலவற்றை ஓதுதல்.

6- உபதேசம் செய்தல்

இரண்டு குத்பாக்களில் ஆகுமானவைகள்

1- மிம்பர் மீது குத்பா செய்தல்

2- மிம்பரில் ஏறும் போதும் இமாம் ஸலாம் கூறுதல்

3- இரண்டு குத்பாக்களுக்கிடையில் சற்று அமர்தல்

4- இரண்டு குத்பாக்களையும் சுருக்கமாக செய்தல்

5- அதில் துஆக்கள் கேட்டல்

ஜூம்ஆவில் தடுக்கப்பட்டவைகள்

1- இமாம் உரையாற்றும் போது ஏனையவர்கள் பேசுவது ஹறாமாகும். நபியவர்கள் கூறினார்கள் «இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்»(ஆதாரம் புஹாரி)

2- மக்களின் தொட்புயங்களை கடந்து செல்வது வெறுக்கத்தக்கதாகும். ஆனால் குத்பா நறைவேற்றுபவர் செல்லலாம். அல்லது வெற்றிடம் இருப்பின் அப்படி செல்வதில் பிரச்சினையில்லை.

ஜூம்ஆவை அடைதல்

ஒரு முஸ்லிம் ஜூம்ஆவிற்கு நேரகாலத்தோடு செல்வது அவசியமாகும். யார் தாமதமாகி சென்று இரண்டாவது ருக்கூஃவை அடைகின்றாரோ அவர் ஜூம்ஆவை அடைந்து கொள்வார். யார் .இரண்டாவது ருகூஃவை அடையவில்லையோ அவர் லுஹர் தொழ வேண்டும். யார் தூக்கம் காரணமாக ஜூம்ஆவை தவற விட்டால் அவர் லுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

ஜூம்ஆ நாளில் ஆகுமான காரியங்கள்

1- சூரதுல் கஃப் ஓதுதல் நபியவர்கள் கூறினார்கள். «யார் ஜூம்ஆ நாளில் சூரத்துல் கஃப் ஓதுகிறாரோ அது அடுத்த ஜூம்ஆக்களுக்கிடையில் அவருக்கு பிரகாசதாகும்.»(ஆதாரம் ஹாகிம்)

2- நபியவர்கள் மீது அதிகம் ஸலவாத்து கூறுதல். அபூ மஸ்ஊத் அன்ஸாரி ரழி அறிவிக்கிறார்கள். நபியவர்கள் கூறினார்கள் «ஜூம்ஆ நாளில் என்மீது அதிகமதிகம் ஸலவாத்து கூறுங்கள். அவர்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படும்.»
(ஆதாரம் ஹாகிம்)

3- குளித்து நறுமணம் பூசுதல். நபியவர்கள் கூறினார்கள். «ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’»(ஆதாரம் புஹாரி)

ஜூம்ஆவில் உள்ள கேள்விகள்

1- மூன்று படிகளை கொண்டதாக மிம்பர் இருப்பது சுன்னத்தாகும். நபியவர்களுடைய மிம்பரும் அவ்வாறே இருந்தது.

2- சூரத்துல் ஜூம்ஆ ஓதுவது சுன்னத் கிடையாது. சிலவேளை தொழுகையாளிகள் ஜூம்ஆவிற்கு முன்னர் குர்ஆன் ஓதுவதை செவிமடுத்தல், அல்லது கஷீதாக்கள், திக்ர்கள் போன்றவைகளை சத்தம் உயர்த்தி கூறுதல், இவைகள் அனைத்தும் கூடாதவையாகும். ஒரே ஒரு அதானை மாத்திரமே இஸ்லாம் அனுமதித்துள்ளது. அவ்வாறே நபியவர்கள், அபூபக்கர், உமர் ரழி ஆகியோருடைய காலத்தில் இருந்தது. ஆனால் உஸ்மான் ரழி அவர்களுடைய காலத்தில் மக்கள் பெருக்கம் அதிகரித்த்தால் சந்தையில் ஜூம்ஆவிற்கான நேரம் வந்து விட்டதை ஞாபகப்படுத்த அதான் கூறப்பட்டது.

3- தொழுபவரோ இமாமோ வந்தால் உட்காருவதற்கு முன்னர் இரண்டு ரக்அத் சுன்னத் தொழுதல். நபியவர்கள் கூறினார்கள்«உங்களில் ஒருவர் அல்லது இமாமோ இரண்டு ரக்அத் தொழட்டும். அதனை இரண்டையும் போதுமாக்கிக் கொள்ளட்டும்»(ஆதாரம் இப்னு ஹூஸைமா)

4- விரலை உயர்த்தியே கதீப் துஆ கேட்பார். மழை வேண்டி, மழையை வேறிடத்திற்கு திருப்புதல் போனற் நிலைகளில் மாத்திரம் கைகளை உயர்த்த வேண்டும். ஹூஸைன் பின் அப்திர் ரஹ்மான் ரழி அறிவிக்கிறார்கள். «நபியவர்கள் குத்பாவின் போது விரலை காட்டி பிரார்த்தனை செய்வதை நான் பார்த்தேன்»(ஆதாரம் அஹ்மத்)

மூன்று படி மிம்பர்

விரலால் சைகை காட்டுதல்

5- ஜூம்ஆவிற்கொன்று முன் சுன்னத் ஏதும் கிடையாது. ஆனால் அதானுக்கு முன்னர் உள்ள சுன்னத்தை தொழுவது ஆகுமாகும். «யார் ஜூம்ஆ தினத்தில் குளித்து விட்டு தன்னால் முடியுமானவரை சுத்தமாகி கொண்டு, நறுமணம் பூசி, அல்லது அவருடைய வீட்டில் உள்ள நறுமணத்தை தடவி, பள்ளியில் இருவரை பிரிக்காமல் சென்று தனக்கு ஆகுமான தொழுகையை தொழுகிறார். இமாம் மிம்பரில் ஏறினால் அவர் அமைதியாக இருந்தால் ஜூம்ஆவிற்கும், அடுத்த ஜூம்ஆவிற்கும் இடையே உள்ள அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்»
(ஆதாரம் தாரமி)

6- ஜூம்ஆவின் பின்னர் உள்ள சுன்னத் தொழுகையை நிறைவேற்றுதல். இப்னு உமர் ரழி அறிவிக்கிறார்கள் «நபியவர்கள் ஜூம்ஆவிற்கு பின்னர் இரண்டு ரக்அத்கள் சுன்னத் வீட்டில் தொழக் கூடியவராக இருந்தார்கள்».(ஆதாரம் ஜமாஆ) அல்லது நான்கு «உங்களில் யார் தொழுகையாளிகள் இருக்கின்றார்களோ அவர்கள் ஜூம்ஆவுடைய நான்கு ரக்அத்தை தொழுது கொள்ளட்டும்» (ஆதாரம் முஸ்லிம்)

7- பெருநாளும் ஜூம்ஆவும் ஒரே நாளில் வந்தால் இரண்டையும் தொழுவதே பேணுதலாகும். பொருநாள் தொழுகையை தொழுது அவர் ஜூம்ஆ தொழவில்லையனின் அவர் லுஹரை தொழுவது அவசியமாகும். இயாஸ் இப்னு அபீ ரம்லா அஷ்ஷாமி அறிவிக்கிறார்கள். «முஆவியா ரழி அவர்கள் ஷைத் பின் அர்க்கம் ரழியிடம் கேட்பதை நான் பார்த்தேன். நீங்கள் நபியவர்கள் ஜூம்ஆவையும், பொருநாளையும் தொழுவதை பார்த்தீர்களா?. அதற்கு ஆம், பொருநாளை பகலின் ஆரம்பத்திலும், ஜூம்ஆவிற்கு சலுகை வழங்கினார்கள். யார் உங்களில் ஜூம்ஆவிற்கு செல்ல முடியுமோ அவர்கள் செல்லுங்கள் என்றார்கள்»(ஆதாரம் அஹ்மத்)