சுன்னத்தான தொழுகைகள்

9218

சுன்னத்தான தொழுகைகள்

சுன்னத்தான தொழுகைகள்

வாஜிப் அல்லாமல் இஸ்லாம் ஆகுமாக்கியுள்ள தொழுகைகள்

சுன்னத்தான தொழுகையின் சிறப்புக்கள்

1- அல்லாஹ்வின் அடியார்கள் அவனது மஹப்பத்தை பெற வேண்டும் என நன்நோக்கில் சுன்னத் தொழுகையை மேற் கொள்கின்றனர். ஹதீஸில் குத்ஸியில் அல்லாஹ் கூறுகிறான்«என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்»(ஆதாரம் புஹாரி)

2- பர்ளான தொழுகையில் ஏற்படும் குறைகளுக்கு கூலியாக அமையும். நபியவர்கள் கூறினார்கள். «தொழுகையை பற்றியே நாளை மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும். அல்லாஹ் மலக்குமார்களிடம் என்னுடைய அடியானுடைய தொழுகை பூரணமாக இருக்கிறதா? அல்லது குறையுள்ளதாக? இருக்கிறதா என பாருங்கள் என்பான். அப்போது அது பூரணமாக இருந்தால் அவருக்கு அது பூரணமாக எழுதப்படும். அதில் குறைகள் இருந்தால் எனது அடியானின் சுன்னத்தான தொழுகையை பாருங்கள் என கூறுவான். அப்போது சுன்னத்தான தொழுகை இருந்தால் அந்த சுன்னத்தான தொழுகை அவருக்கு பர்ளாக பூரணப்படுத்தப்படும். அவ்வாறே அமல்களுக்கு நன்மை லழங்கப்படும்»(ஆதாரம் அபூதாவுத்)

சுன்னத்தான தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்த்தாகும்.

பள்ளியில் தொழுவதை விட சுன்னத்தான தொழுகையில் வீட்டில் தொழுவது சிறந்த்தாகும். ஆனால் தராவிஹ் தொழுகையை ஜமாத்துடன் பள்ளியில் தொழுவது சிறந்ததாகும். நபியவர்கள் கூறினார்கள் «ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர’ என்றார்கள்»(ஆதாரம் புஹாரி)

சுன்னத்தான தொழுகைகளின் வகைகள்

அதிகமான சுன்னத் தொழுகைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவையாக -

முதலாவது ராத்திபான சுன்னத்கள்(வலியுறுத்தப்ட்ட சுன்னத்தை இது குறிக்கின்றது.)

இது பர்ளான தொழுகைக்கு பின்னால் தொழப்படும் தொழுகையாகும். இது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். அது பத்து அல்லது பன்னிரெண்டு ரக்அத்களாகும்.

- பஜ்ருக்கு முன் இரண்டு

- ழுஹருக்கு முன் இரண்டு அல்லது நான்கு, ழுஹருக்கு பின் இரண்டு

- மஃரிப்க்கு பின் இரண்டு

- இஷாவிற்கு பின் இரண்டு

உமர் ரழி அவர்கள் கூறினார்கள் «நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகிய பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஸுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி(ஸல்) அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும்.»(புஹாரி முஸ்லிம்)

ஆயிஷா ரழி அவர்கள் ழுஹருக்கு முன்னர் நான்கு என கூறியுள்ளார்கள (ஆதாரம் முஸ்லிம்)

பின்

பர்ளான தொழுகை

முன்

ــــــــ

பஜ்ர்

இரண்டு ரக்அத்கள்

இரண்டு ரக்அத்கள்

ழுஹர்

4 ரக்அத்கள்

ــــــــ

அஸர்

ــــــــ

இரண்டு ரக்அத்கள்

மஃரிப்

ــــــــ

இரண்டு ரக்அத்கள்

இஷா

ــــــــ

சிறந்த ராதிபான சுன்னத் என்பது நபியவர்கள் பிரயாணத்திலும், ஊரிலும் இருக்கும் போது தொழுத பஜ்ருடைய சுன்னத்தாகும். ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கறார்கள். «நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை»(புஹாரி முஸ்லிம்)

வாஜிபுகளில் குறைவுகள் வராமல் சுன்னத்தாக செய்தல்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

«நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து ஓதினார்களா? என்று நான் நினைக்குமளவுக்குச் சுருக்கமாகத் தொழுவார்கள்»(ஆதாரம் புஹாரி) பஜ்ருடைய சுன்னத்தை கழா செய்வது சுன்னத்தாகும்.

1. அவர் சுபஹிற்கு முன்னர் தொழவில்லையாயின் தொழுது கொள்ளலாம். இதனை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகின்றது. கைஸ் பின் அம்ரு ரழி அறிவிக்கிறார்கள். நபியவர்கள் ஒரு மனிதர் சுபஹ் இற்கு பின்னர் இரண்டு ரக்அத் தொழுவதை கண்டார்கள். அதற்கு நபியவர்கள் கூறினார்கள். «சுபஹ் தொழுகை இரண்டு ரக்அத்கள் தான்»
(ஆதாரம் அபூதாவுத்)

என்றார்கள். அதற்கு அம் மனிதர் நான் சுபஹ் தொழுகையின் முன் சுன்னத் தொழவில்லை. அதனால் தான் தொழுதேன் என்றார்கள். அதற்கு நபியவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

2. சூரிய உதயத்தின் பின்னர். நபியவர்கள் கூறினார்கள் – «யார் சுப்ஹிற்குரிய சுன்னத்தை தொழவில்லையோ அவர் சூரியன் உதயமாகிய பின்னர் தொழுது கொள்ளட்டும்»(ஆதாரம் திர்மிதி)

கேள்வி

- ழுஹருக்கு பின்னால் நான்கு ரக்அத் தொழுவது சிறப்பு என்பதை உறுதிப்படுத்துகின்றது. நபியவர்கள் கூறினார்கள் ” யார் ழுஹருக்கு முன்னும், பின்னும் நான்கு ரக்அத் தொழுகிறாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்.” (அதாரம் அபூதாவுத்)

- அஸருக்கு முன்னர் நான்கு ரக்அத் வலியுறுத்தப்படாத சுன்னத் தொழுவது சுன்னத்தாகும். நபியவர்கள் கூறினார்கள் ”யார் அஸருக்கு முன்னர் நான்கு ரக்அத் தொழுகிறாரோ அல்லாஹ் அவர் மீது இரக்கம் காட்டுகிறான்.” (அதாரம் அபூதாவுத்)

- அதே போன்று வலியுறுத்தப்படாத சுன்னத்தாகவுள்ள அஸர், மஃரிப், இஷாவுடைய முன் சுன்னத்தை மாரக்கமாக்கியுள்ளது. நபியவர்கள் கூறினார்கள் ” ”ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு’ என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை ‘விரும்பியவர்கள் தொழலாம்’ என்றார்கள்” (புஹாரி முஸ்லிம்). இரண்டு அதான் என்பது ”அதானும் இகாமத்தும்”

- மறதி காரணமாக அல்லது தூக்கம் காரணமாக சுன்னத் தொழுகையை கழாச் செய்யலாம். அது வெறுக்கத்தக்க நேரமாக இருந்தாலும் சரியே.. நபியவர்கள் வேலைப்பழு காரணமாக அஸர் தொழுகையின் பின்னர் ழுஹருடைய சுன்னத்தை தொழுதார்கள்.

இரண்டாவது – வித்ரு தொழுகை

வித்ரின் சட்டமும் சிறப்பும்

இது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். நபியவர்கள் கூறினார்கள் «அல்லாஹ் ஒருவன் ஒற்றைப்படையை விரும்புகிறான். குர்ஆன் வழங்கப்பட்டவர்களே நீங்கள் வித்ரை நிறை வேற்றுங்கள்» (ஆதாரம் அபூதாவுத்) பிராயாணத்தின் போதும் ஊரில் இருக்கும் போதும் நபியவர்கள் வித்ரை பேணுவராக இருந்தார்கள்.

வித்ர் தொழுகையின் முறை

1- ஆக்கக் குறைந்தது ஒரு ரக்அத் ஆகும். ஆகக்கூடியது பதினோரு ரக்அத்களாகும். அல்லது பதின்மூன்று ரக்அத்களாகும். பின்னர் ஒன்றாக வித்ரை தொழுவார்

2- அதில் உயர்வானது முன்றாக பூர்த்தி செய்வதாகும். – இரண்டு ரக்அத் தொழுது ஸலாம் கொடுத்தல், பின்னர் ஒரு ரக்அத் தொழுது ஸலாம் கொடுத்தல், அதனை தொடராக தொழுதால் ஒரு அத்தஹியாத்து ஓத வேண்டும். அதில் முதல் ரக்அதில் சூரதுல் அஃலாவை ஓதுவது சுன்னாவாகும். இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் காபிருன், மூன்றாவது ரக்அத்தில் சூரதுல் இஃலாஸ் ஓத வேண்டும். அதனை உபை பின் கஃப் ரழியின் செய்தி உறுதிப்படுத்துகின்றது «நபியவர்கள் வித்ர் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா, இரண்டாம் ரக்அத்தில் குல்யா அய்யுஹல் காபிரூன், மூன்றாவது ரக்அத்தில் குர்குவல்லாஹூ அஹத் ஆகியவற்றை ஓதக் கூடியவராக இருந்தார்கள்.» (ஆதாரம் நஸாஈ)

வித்ர் தொழுகையின் நேரம்

இஷாவுடைய தொழுகைக்கு பின்னர் இருந்து பஜ்ர் உதயம் ஆரம்பமாகும் வரை.இரவின் மூன்றாவது பகுதியில் அதை நிறைவேற்றுவது சிறந்ததாகும். ஜாபிர் ரழி அவர்களது செய்தியில் நபியவர்கள் கூறினார்கள். «யார் இரவின் இறுதி நேரத்தில் எழுவதை பயப்படுகிறாரோ அவர் அவர் ஆரம்பத்தில் வித்ர் தொழட்டும்»
(ஆதாரம் முஸ்லிம்) இதற்கு பின்னால் வித்ர் ஏதும் இல்லை. நபியவர்கள் கூறினார்கள் «இரவில் இரண்டு வித்ர் இல்லை. (ஆதாரம் அபூதாவுத்) இரவின் இறுயில் எழ முடியாது என அஞ்சுபவர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ர் தொழுதுவிடட்டும்! இரவின் இறுதியில் எழ முடியும் என நம்புகின்றவர் இரவின் இறுதியிலேயே வித்ர் தொழட்டும். ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் தொழும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்»(ஆதாரம் முஸ்லிம்)

வித்ர் தொழுகையின் கேட்கும் துஆ

வித்ர் தொழுகையில் கடைசி ரக்அத்தில் ருகூவில் இருந்து எழும்புவதற்கு (ஆதாரம் அபூதாவுத்) அல்லது அதிலிருந்து உயர்ந்த (ஆதாரம் புஹாரி) பின்னர் தனது கைகளை உயர்த்தி பின்வரும் துஆவை கேட்பார்.

«அல்லாஹூம்ம அஹ்தினி பீமன் ஹதய்த், வஆபினி பீ மன் ஆபய்த், வதவல்லனி பீ மன் தவல்லய்த், வபாரிக் லீ பீமா அஃதய்த், வக்னி ஷர்ர மா கழய்த், பஇன்னக தக்ழி வலா யக்ழி பயின்னகு லா யத்ஹூலு மின் வாயல்த், வலா ய்யிசு மின் ஆதய்த், தபாரக ரப்பனா வதஆலய்த்»(ஆதாரம் திர்மிதி) -இதன் போது பின்னாலுள்ள மஃமும் ஆமீன் கூற வேண்டும். இன்னக தக்ழி பில் ஹக்கி எனும் இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும்.

கேள்வி

1- வித்ர் தொழுகைக்கு பின்னால் மூன்று முறை «சுபஹானல் மலிகுல் குத்தூஸ் »(ஆதாரம் தாரகுத்னி – இதன் அறிப்பாளவர் வரிசை ஸஹீஹானது.)என கூறுவது சுன்னத்தாகும்.

2- துஆவின் பின்னர் முகத்தை தடவுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. நபியவர்கள் பற்றி வந்துள்ளவைகளில் அதற்கு ஆதாரம் இல்லை.

3- குனூத்தை பொறுத்த வரை அது வருடம் பூராக செய்தால் ஆகுமானது. ஆனால் ரமழான் கடைசியில் மாத்திரம் செய்வது கூடாது. பர்ளான அனைத்து தொழுகைகளிலும் குனுதுன் நவாஸில் ஓதுவது ஆகுமானது.

- குர்ஆன் பூரணமாக ஓதி முடிந்ததும் கத்தம் ஓதுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒன்றாகும்.

வித்ரை பகலில் கழாச் செய்தல்

வித்ரை பகல் நேரங்களில் கழாச் செய்ய மார்க்கம் அனுமதித்துள்ளது. ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபியவர்கள் இரவில் தவறவிடப்பட்ட தொழுகைகளை 12 ரக்அத்களாக பகலில் தொழுவார்கள்.
(ஆதாரம் முஸ்லிம்).

மூன்றாவது – தராவீஹ் தொழுகை

தராவிஹ் என்பது ரமழான் இரவில் நிறைவேற்றப்படும் தொழுகையாகும். ஒவ்வொரு நீண்ட நான்கு ரக்அத்களுக்கு இடையில் சற்று ஓய்வு எடுப்பதால் இதற்கு தராவீஹ் என பெயர் வரக் காரணமாகும்.

தராவிஹ் தொழுகையின் சிறப்பு

நபியவர்கள் கூறினார்கள் «யார் ரமழானை ஈமானோடும், நன்மையை எதிர்பார்த்தும் அடைந்து கொள்கின்றாரோ அவருடைய முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன». (புஹாரி, முஸ்லிம்)

தராவிஹ் தொழுகையின் சட்டம்

தராவிஹ் தொழுகை வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். நபியவர்கள் ரமழான் காலத்தில் இதனை நிறைவேற்ற அனுமதித்துள்ளார்கள். இரவில் நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு பள்ளியில் தொழுவித்தார்கள். பின்னர் து பர்ளாக ஆகிவிடுமோ என பயந்து விட்டு விட்டார்கள். அதன் பின்னர் ஸஹாபாக்களும் அவ்வாறே செய்தார்கள்.
(புஹாரி முஸ்லிம்)

தராவிஹ் தொழுகையின் ரக்அத்தின் எண்ணிக்கைகள்

அதில் சிறந்த்து பதினொரு ரக்அத் ஆகும். ஏன்னில் நபியவர்கள் அதிகமாக அதனையே செய்துள்ளனர். ஆயிஷா ரழி அவர்களிடம் நபியவர்களிடம் ரமழான் கால இரவுத் தொழுக பற்றி கேட்கப்பட்ட போது «நபியவர்கள் பதினொரு ரக்அத்திற்கு அதிகமாக தொழவில்லை என பதிலளித்தார்கள்»
(ஆதாரம் முஸ்லிம்)

இஷாத் தொழுகையின் நீய்யத்தில் தராவீஹ் தொழுதல்

ஒருவர் இஷாத் தொழுகைக்கு தாமதமாக வந்தால் மனிதர்கள் தராவீஹ் தொழுது கொண்டிருப்பின் அவர்களுடன் இஷாவின் நீய்யத்துடன் இணைந்து கொள்வார். இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் எழுந்து அவரது தொழுகையை பூரணப்படுத்துவார்.

கேள்வி

1- கியாமு லைல் தொழுகை வருடம் முழுவதும் நிறைவேற்றப்படும் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். அதனை விடுவது வெறுக்கத்தக்க செயலாகும். அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் «ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ ». (புஹாரி முஸ்லிம்) என்று விடையளித்தார்கள். யார் இரவில் விழித்து அதனை தொழாமல் விடுவது வெறுக்கத்தக்க செயலாகும். அப்தில்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ் ரழி அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் «அல்லாஹவின் அடியர்களே இரவில் எழுந்து கியாமுல் லைல் தொழுகையை விட்டவர் போல இருக்காதீர்கள்»

2- தூங்கும் போது கியாமுல் லைல்யிற்காக நீய்யத் வைப்பது ஆகுமாகும். இன்னும் தூங்கி எழும்பியதும் துஆக்களை நினைவு ஓதும் போது நீய்யத் வைப்பது சுன்னத்தாகும். ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் (யசூஸ்) தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள். (புஹாரி முஸ்லிம்) இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் தூங்கினார்கள். இரவின் பாதி வரை கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம். நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள்.

ஒரு ஆண் இரவுத் தொழுகைக்காக எழுந்தால் பெண்களையும் எழுப்புவது அவசியமாகும். அதே போல பெண்கள் எழுந்தால் அவர்கள் ஆண்களை எழுப்ப வேண்டும். நபியவர்கள் கூறினார்கள் «ஒருவர் தனது குடும்பத்தை இரவில் எழுப்பி இரண்டு ரக்அத் தொழ வைத்தால் அவர்கள் நினைவு கூறப்பட்டவர்களில் உள்ளவராக எழுதப்படுவார்கள்»(ஆதாரம் அபூதாவுத்)

3- இரவுத் தொழுகையில் ஒருவருக்கு தூக்கம் மேலிட்டால் அதனை அவர் விட வேண்டும். அவர் தூக்கம் நீங்கும் வரை ஓய்வெடுக்க வேண்டும். ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள். நபியவர்கள் கூறினார்கள் «‘உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது கண் அயர்ந்தால், அவரைவிட்டும் தூக்கக் கலக்கம் நீங்கும் வரை அவர் (தொழுவதை விட்டுவிட்டு) தூங்கட்டும். உங்களிலே அவர் கண் அயர்ந்து கொண்டே தொழுதால் அவர் (தொழுகையில்) பாவ மன்னிப்புக் கோருகிறாரா, தன்னைப் பழிக்கிறாரா என்பது அவருக்குத் தெரியாது» (புஹாரி முஸ்லிம்)

4- இரவின் மூன்றாவது பகுதியில் பாவமன்னிப்பிலும், பிரார்த்தனையிலும் ஈடுபடுவது ஆகுமானது. அபூ ஹூறைறா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள். நபியவர்கள் கூறினார்கள்

«நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’»(புஹாரி முஸ்லிம்)

தொழுகைக்காக எழும்புதல்

நான்காவது லுஹா தொழுகை

லுஹாவுடைய நேரத்தில் இதனை இஸ்லாம் சுன்னத்தாக்கியுள்ளது.

லுஹாவுடைய நேரம் – சூரியன் உதித்த்திலிருந்து ஒரு ஈட்டியளவு உயரும் வரையிலாகும். இவ்வாறு உயரும் போது கிட்டத்தட்ட முக்கால் மணித்தியாலங்கள் இருக்கும். அதிகமான சூடு ஆரம்பிக்கும் நேரமே அதில் சிறந்த்தாகும். நபியவர்கள கூறினார்கள் «சுடுமணலில் ஒட்டகக்குட்டியின் கால் (சுடு மணலில் ஒட்டக குட்டிகள் சூட்டில் குதிப்பது) குழம்புகள் கரிந்துவிடும் (பெண் ஒட்டகத்திடம் இருந்து பிரிந்த சிறிய குட்டி) நேரமே அவ்வாபீன் தொழுகையின் நேரமாகும்»(ஆதாரம் முஸ்லிம்)

லுஹா தொழுகையின் சிறப்புகள்

ஹதீஸில் குத்ஸியில் அல்லாஹ் கூறுகிறான்.. «ஆதமுடைய மகனே பகலின் ஆரம்பத்தில் எனக்காக நான்கு ரக்அத் தொழுவீரானால் அதுவே கடைசி பகலில் முக்கியமானதாகும்»(ஆதாரம் முஸ்லிம்)

லுஹா தொழுகையின் எண்ணிக்கை

இரண்டு ரக்அத் தொழுவது ஆகுமாகும். அல்லது நான்கு,ஆறு,எட்டு என எதுவானாலும் தொழலாம். மேலும் எவ்வாறு தொழுதாலும் நபியவர்கள் காட்டித் தந்த பிரகாரம் இரண்டு ரக்அத் முடிந்த்தும் ஸலாம் கொடுத்து தொழுவதே சரியானதாகும்.

- அது ஒவ்வொரு மூட்டிறிகுரிய ஸதகாக்களில் ஒன்றாகும். (மனித மூட்டுக்கள்) நபியவர்கள் கூறினார்கள். «உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்;இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு “ஓரிறை உறுதிமொழி”யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.»(ஆதாரம் முஸ்லிம்)

- யார் நான்கு ரக்அத் தொழுகிறாரோ அல்லாஹ் அவருக்கு போதுமானவனாவான். நபியவர்கள் கூறினார்கள்.«ஆதமுடைய மகனே பகலின் ஆரம்பத்தில் எனக்காக நான்கு ரக்அத் தொழுவீரானால் அதுவே கடைசி பகலில் முக்கியமானதாகும்»(ஆதாரம் முஸ்னத் அஹ்மத்)

- யார் ஒருவர் சுபஹ் ஜமஅத்தாக தொழுத பின்னர் சூரியன் உதிக்கும் வரை அல்லாஹ் நினைவு கூர்ந்து பின்னர் லுஹா தொழுகின்றாரோ அவருக்கு ஹஜ், உம்ராவை பூரணமாக செய்த நன்மை கிடைக்கும். நபியவர்கள் கூறினார்கள் «ஆதமுடைய மகனே பகலின் ஆரம்பத்தில் எனக்காக யார் ஒருவர் சுபஹ் ஜமஅத்தாக தொழுத பின்னர் சூரியன் உதிக்கும் வரை அல்லாஹ் நினைவு கூர்ந்து பின்னர் லுஹா தொழுகின்றாரோ அவருக்கு ஹஜ், உம்ராவை பூரணமாக செய்த நன்மை கிடைக்கும்.» பின்னர் நபியவர்கள் கூறினார்கள் «பூரணமாக, பூரணமாக, பூரணமாக» (ஆதாரம் திர்மிதி – அல்பானி ரஹ் சரியானது என கூறியுள்ளனர். )

ஐந்தாவது தஹ்யதுல் மஸ்ஜித்

பள்ளியில் நுழைபவர் உட்காருவதற்கு முன்னர் தொழ வேண்டிய இரண்டு ரக்அத் தொழுகையாகும். அதனுடைய சட்டம், வலியுறுத்தப்பட்ட சுன்னத்ததாகும். அதற்கு ஆதாரமாக நபியவர்கள் கூறினார்கள். «உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் உட்கார வேண்டாம்»(புஹாரி முஸ்லிம்)

அவ்விரண்டிற்கும் ராதிபான சுன்னத் அல்லது பர்ழுடைய நன்மை கிடைக்கும். யார் பள்ளியில் லுஹர் தொழ வந்து அவர் ருஹருடய சுன்னத்தை தொழுகிறார் எனின் அவது சுன்னதான தொழுகையாகவே கூலி வழங்கப்படும். அது தஹ்யதுல் மஸ்ஜித் ஆகாது.

தஹ்யதுல் மஸ்ஜித்

ஆறாவது நன்மை நாடித் தொழுதல்.

நன்மையான காரியத்தை நாடி அது நடப்பதற்கு முன்னர் ஓர் அடியான் இரண்டு ரக்அதாக தொழும் தொழுகை இதுவாகும். இஸ்லாம் அவ்வணக்கத்தை அடியானும் ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் அவன் பிரார்த்தனை செய்ய வேண்டும். நபியவர்கள் நபியவர்களுக்கு அல்குர்ஆனை கற்பித்தது போன்று இதனையும் கற்பித்துள்ளார்கள்.

நன்மை நாடி தொழுதலில் ஓத வேண்டிய துஆ

நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: «‘உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர் ‘இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தையும்விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும்».(ஆதாரம் புஹாரி)

நன்மை நாடுவதின் அடையாளம்.

ஒருவர் நன்மையை நாடுவதில் தவறில்லை. எதனை நாட வேண்டும் அல்லது நன்மையை நாடுபவர் காண்பதை கேட்டல் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால் அது பாவமான அல்லது குடம்ப உறவை துண்டிக்கும் செயலாக இருக்க கூடாது. நன்மையான காரியம் நல்லதாக இருப்பின் அது நன்மையே.

உடலாரோக்கியத்திற்காக இரவுத் தொழுகையை நிறைவேற்றல்

உடலில் அதிகரிக்கும் குளோஸ்ட்டோல் ஹார்மோன்களை குறைப்பதற்காக இரவின் மூன்றாவது பகுதியில் நேரத்தோடு எழுந்து தொழுகையில் ஈடுபகின்ற போது அதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு கூட குறைவடைகின்றது.

ஏழாவது வுழுவின் பின்னாலான இரண்டு ரக்அத் சுன்னத்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம் «பிலாலேஸ இஸ்லாத்தில் இணைந்த பின் நிர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை (பாதணயின் சத்தம்) சொர்க்கத்தில் கேட்டேன்», என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் «அதற்கு பிலால்(ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்’ என்று விடையளித்தார்கள்».( ஆதாரம் புஹாரி)

பொதுவான சுன்னத்கள்

எக்காரணமின்றி குறிப்பிட்ட நேரமின்றி செய்யப்படும் இபாத் ஆகும். தொழுகை தடுக்கப்பட்ட நேரம் அல்லாத வேளைகளில் இதனை தொழ முடியும். .

பொதுவான சுன்னத்திற்காக உதாரணங்கள்.

இரவுத் தொழுகை

நபியவர்கள் கூறினார்கள் «கடமையான தொழுகைகளுக்கு பிறகு சிறந்த தொழுகை இரவு நேரத் தொழுகையாகும்.»
(ஆதாரம் முஸ்லிம்)

நபியவர்கள் கூறினார்கள் «சுவனத்தில் ஒரு மாளிகை உண்டு. அதன் வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே தெரியும். உள்ளே இருந்து பார்த்தால் வெளிப்புறம் தெரியும். அதனை உணவளித்தவர்களுக்கும், ஸலாத்தைப் பரப்பியவர்களுக்கும், மக்கள் உறங்கும் வேளையில் இரவில் தொழுதவர்களுக்குமாக அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான்.’ என நபியவர்கள் கூறினார்கள்»(ஆதாரம் திர்மிதி)

காரணங்களுக்கான தொழுகையும், தொழுகை தடுக்கப்பட்ட நேரங்களும்.

காரணங்களுக்காக தொழுகை நடுத்துவது ஆகுமாகும். அதாவது காரணம் என்பது, தஹ்யதுல் மஸ்ஜித், ஜனாஸா தொழகை, போன்றவாகும். இதனை தொழுகை தடுக்கப்பட்ட நேரங்களிலும் தொழ முடியும்.

தொழுகை தடுக்கப்பட்ட நேரங்கள்

1- பஜ்ர் தொழுகை முடிந்தலிருந்து சூரியன் உதித்த பின்னரான நேரம். அது கிட்டத்தட்ட முக்கால் மணித்தியாலங்களாகும்.

2- சூரியன் சற்று சாயும் நேரம்.

3- அஸர் தொழுகையின் பின்னர் சூரியன் மறையும் நேரம்.

இதற்கு ஆதாரமாக உக்பா இப்னு ஆமிர் ரழி அவர்கள் கூறினார்கள் «மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க (அடக்கம் செய்தல்) வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள். சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து (தெளிவானது) நன்கு உயரும்வரை,

ஒருவர்உச்சிப் பொழுதில் நிற்கும்போது நிழல் விழாது போகும்) நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும்வரை. சூரியன் அஸ்தமிக்கத் (நன்கு) தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும்வரை»(ஆதாரம் முஸ்லிம்)