சுன்னத்தான சதகா

1873

சுன்னத்தான சதகா

சுன்னத்தான

கடமை இல்லாமல் அல்லாஹ்வுடைய பொருத்துவதற்காக கொடுக்கப்படும்

இந்த வரைவிலக்கணத்தின் அன்புக்காகவும் இயக்கத்திற்காகவும் கொடுக்கின்ற பொருட்கள் வெளியாகிவிடும்

சுன்னத்தான ஸதகாவின் சட்டம்

சுன்னத்தான ஸதகாக்களை எந்த வேளைகளிலும் கொடுக்கலாம். அது பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகிறான். {(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள் [பகறா – 245].

அபூ ஹூறைறா ரழி அறிவிக்கிறார்கள். நபியவர்கள் கூறினார்கள். «நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே. செல்லும் - பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான்.»(புஹாரி மஸ்லிம்).

- நிழலே இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு நிழல் கொடுக்கிறான். என்று கூறிவிட்டு நபியவர்கள் கூறினார்கள்

«யார் இடக்கரத்திற்கு தெரியாமல் வலக்கரத்தால் தர்மம் செய்கிறார்களோ (அவர்களுக்கும் நிழல் கிடைககும்). »(புஹாரி மஸ்லிம்).

- கஃப் பின் அஜ்ரா ரழி அறிவிக்கிறார்கள் நபியவர்கள் கூறினார்கள். «நீர் நெருப்பை அணைப்பது போன்று ஸதகா பாவங்களை அணைக்கிறது»(ஆதாரம் திர்மிதி).

சுன்னத்தான ஸதகாவின் ஒழுங்குகள்

1-கட்டாயமான ஒழுக்கம்

1-முகஸ்துதி இல்லாமல் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடி அவர் ஜகாத் கொடுப்பார்

2-ஜகாத் கொடுத்து விட்டு சொல்லி திரிவதையும் அவர் தவிர்ந்துக் கொள்வார் அல்லாஹ் கூறுகிறான் {நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள். }. [பகறா – 264].

2-விரும்பப்படுகின்ற ஒழுக்கம்

ஒரு முஸ்லிமுக்கு அவனுடைய உறவினர்களிலிருந்து அவன் மீது செலவு கடமை அல்லாதவர்களுக்கு சகாத் கொடுப்பான் அவனுடைய மாமா அவனுடைய சாட்சாமார்களை அவர்களைப் போல பணக்கார மனைவி ஏழையான கணவன் மீது செலவழிப்பார்ஏனையோருக்கு செலவழிப்பதை விட இவர்களுக்கு செலவழிப்பது மிகச் சிறப்பானதாகும். அல்லாஹ் கூறுகிறான் –{அல்லது நெருங்கிய அநாதைகள், உறவினர்களுக்கு.} [பலத் - 15]. நபியவர்கள் கூறினார்கள். «ஒரு ஏழைக்கு ஸதகா செய்வது ஸதகாவாகும். குடும்ப உறவுக்கு ஸதகா செய்வது ஸதாவின் நன்மையும் குடும்ப உறவை பேணியவர் என்ற இரண்டு நன்மைகளையும் தரக் கூடியது)»(ஆதாரம் நஸாயி).

2-அவனுடைய பணத்தை ஹலாலான முறையில் சேகரிப்பான் நல்ல முறையிலும் அவனுக்கு விருப்பமான முறையிலும் சேகரிப்பான் . அல்லாஹ் கூறுகிறான் – {நீங்கள் நேசிப்பவற்றிலிருந்து நல்லவற்றை செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையடைந்து கொள்ளமாட்டீர்கள்[ஆல இம்ரான் - 92].

3-அதன வழங்கும் போது உளத்தூய்மையானவனாக இருப்பதோடு முகஸ்துதியை விட்டும் தூரமாகிறான். அதோ போல ஏழைகளை கண்ணியப்படுத்த முற்படுவான். அல்லாஹ் கூறுகிறான். {தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்} [பகரா 271]. மேலும் அதனை வெளிப்படுத்துவதிலும் நலவுகள் இருக்கின்றன. நயவஞ்கத்தை போக்குதல், பார்ப்பவர்கள் அதை செய்ய ஊக்குவித்தல் போன்ற காரணிகளுக்காக அதனை வெளிப்படுத்தலாம். அப்போது அவருடைய எண்ணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

4-கொஞ்சமாக இருந்தாலும் அவனுக்கு இயலுமானதை ஸதகாவாக கொடுப்பான்

நபியவர்கள் சொன்னார்கள் «ஈச்சம் கீற்றைக் கொண்டாவது நீங்கள் நரகத்தை பயந்து கொள்ளுங்கள் »(ஆதாரம் புகாரி).

சுன்னத்தான ஸதகாக்களின்ப யன்கள்

முதலாவதாக தனி மனிதனுக்கு ஏற்படுகின்ற பயன்கள்

01-உள்ளத்தை சுத்தம் செய்தல் அல்லாஹ் கூறுகிறான் – {(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டுஇ அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக[தவ்பா - 103].

02-நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பண்பிலிருந்து கொடுக்கின்ற பண்பை பின்பற்றல்«. நபி அவர்கள் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சொன்னார்கள் மே நாளில் நீங்கள் செலவழியுங்கள் அரசின் இருப்பவனிடம் இருந்து வறுமையை (இக்லால் என்பது வறுமையாகும்) நீங்கள் பயப்பட வேண்டாம் »(ஆதாரம் பஸ்ஸார்).

03-அவன் செலவழித்ததை அல்லாஹுத்தஆலா தொடர்ச்சியாக கொடுப்பான். அல்லாஹ் கூறுகிறான் – {நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோஇ அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்[ஸபஃ 39].

05-வியாபார அழுக்குகளிலிருந்து பணத்தை சுத்தப்படுத்தல்- கைஸ் பின் அபீஅரஜா ரழி கூறினார்கள் “நபியவர்களுடைய காலத்தில் உங்களை தரகர்கள் (சுமாசிரா என்பது வியாபாரிகள்) என அழைப்பவர்களாக இருந்தார்கள். நபியவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் எம்மிடம் வந்த போது அதனை விட சிறந்த பெயரை எமக்கு சூட்டியவர்களாக பின்வருமாறு கூறினார்கள். «வியாபாரிகளே வியாபாரம் என்பது வீண்பேச்சுகளையும், பொய்ச் சத்தியம் செய்வதையும் உண்டாக்குவதாகும். எனவே ஸதகா செய்து அதனை அழித்துக் கொள்ளுங்கள்.(என்பது அவர்கள் வியாபாரம் செய்யும் போது ஏற்பட்ட பொய் போன்ற பாவங்களுக்கு பரிகாரமாகும்.)»(ஆதாரம் அபூதாவுத்).

05-நன்மைகளை அடைந்து கொள்வதும் பாவங்கள் எல்லாம் நன்மைகளாக மாற்றப்படுவதும். நபியவர்கள் கூறினார்கள் -«நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே. செல்லும் - பிறகு அதை உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான்»(புஹாரி முஸ்லிம்).

06-மரணத்திற்குப் பின்னால் நிரந்தர தர்மத்தினால் சேகரித்தல்

நபி அவர்கள் சொன்னார்கள் «ஒரு மனிதன் மரணித்தால் அவருடைய அனைத்து செயற்பாடுகளும் துண்டிக்கப்படுகின்றன மூன்று செயற்பாடுகளை தவிர நிரந்தர தர்மம் பிரயோசனமான கல்வி அவனுக்காக பிரார்த்திக்கின்ற நல்ல பிள்ளையின் துவா ஆகும். »(ஆதாரம் முஸ்லிம்).

7- ஸதகா செய்வதென்பது சொத்துக்கள் அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறையாகும் ஆட்களை தந்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றார் விடயங்களாகும் நன்றி செலுத்துபவறுககு அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான் {(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால்இ உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன் } [இப்றாஹீம் - 7].

இரண்டாவது சமூகத்திற்கு கிடைக்கும் பயன்கள்

1-ஸதகா ஸகாத்தை சமூகத்தில் வளர்கிறது .;

2-முஸ்லிமான சமூகத்தில் புரிந்துணர்வையும்,ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதையும்,இஸ்திர தன்மையையும்,அன்பையும் வளர்கிறது.