குளிப்பு
மொழி ரீதியில்
சிலவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்துல்
இஸ்லாமிய பரிபாஷையில்
அல்லாஹ்வை வணங்கும் நோக்கில் ஒழுங்கான அமைப்பில் உடலை தண்ணீரால் பூரணமாக கழுவுதல்.
1.விந்து வெளியாகுதல்
விந்து – கட்டியான இச்சையின் போது பாய்ந்து வெளியாகும். அழுகிய முட்டையுடை வாசம் கொண்டதாகும். {நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து (த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள் }
[மாயிதா -06] அலி ரழி அவர்களுக்கு நபியவர்கள் கூறினார்கள் «துள்ளிக்குதித்து நீர் வெளியானால் நீர் குளிப்பீராக!»(ஆதாரம் அபூதாவுத். துள்ளிக்குதிக்கும் நீர் என்பது விந்தாகும்.
கேள்வி
1.ஒருவர் கனவு கண்டு விந்து வரவில்லையானால் அவர் குளிக்க தேவையில்லை. அவர் எழுந்த பின்னர் விந்து வெளியேறினால் அவர் மீது குளிப்பு கடமைாகும்.
2.ஒருவருக்கு விந்து வெளிப்பட்டு அவர் கனவு காணவில்லை என்றாலும் அவருக்கு விந்து வெளியானதால் குளிப்பு கடமையாகும். நபியவர்கள் கூறினார்கள் «நிச்சயமாக தண்ணீர் தண்ணீரே»
(ஆதாரம் முஸ்லிம்). அதாவது விந்து வெளிப்படும் போது குளிக்க வேண்டும்.
3.விந்து வெளியானதாக உணர்ந்து விந்து வெளியாகவில்லையாயின் அவர் குளிக்க தேவையில்லை.
4.இச்சையில்லாமல் நோய் காரணமாக விந்து வந்தாலும் குளிப்பு கடமையில்லை.
5.ஒருவர் குளிப்பு கடமையானால் குளிக்க வேண்டும். பின்னர் குளிப்பு கடமையானால் அவர் மீண்டும் குளிக்க தேவையில்லை. ஏனனில் அது பெரும்பாலும் இச்சையால் வெளிப்படவில்லை. அவர் வுழுச் செய்தால் சரி.(பேணுதலாகும்)
6. ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்து ஈரமான ஒன்றை காண்கிறார். ஆனால் அது என்ன என்பதை அறியவில்லை என்னின். அதற்கு மூன்று காரணங்களாக அமையலாம்.
1. அது விந்தாக இருக்கலாம். அப்படியான சந்தர்ப்பத்தில் அவர் கனவு காணா விட்டாலும் அல்லது கண்டாலும் குளிப்பது கடமையாகும்.
2. அது விந்து அல்லாத ஒன்றாக இருக்கலாம். அப்படியான சந்தர்ப்பங்கில் குளிப்பு கடமையில்லை. அதனுடைய சட்டம் சிறுநீருடைய சட்டமாகும்.
3.இது விந்தா? இல்லலையா? என்ற சந்தேகம் இருக்கலாம். அப்போது அவர் பேணுதலாக நடந்து கொள்ளலாம். அது விந்தாக இருக்கும் என்று தோன்றினால் அது விந்து தான். அல்லது மதியாக இருக்குமோ என்று தோன்றினால் அது மதியாகும். ஆனால் எதுமே தோன்றவில்லையாயின் அவர் குளித்துக் கொள்வது பேணுதலான விடயமாகும்.
4.ஒருவர் விந்து வெளிப்பட்டதை காண்கிறார். ஆனால் அது எப்போது வெளியானது என்பதை அறியவில்லை என்றிருப்பினும் அவர் குளிக்க வேண்டும். அப்போது அறியாத நிலையில் அவர் தொழுதிருந்தாலும் குளித்த பின்னர் மீண்டும் அத்தொழுகையை தொழ வேண்டும்.
2.உடலுறவில் ஈடுபடுதல்
இது ஆண்குறியும் பெண்குறியும் ஒன்றாக இணைவதை குறிக்கின்றது. இது ஆணுடைய முன்பகுதி பூரணமாக பெண்ணுறுப்பில் நுழைவதையும் குறிக்கின்றது. இதன் போது விந்து வெளிப்பட்டாலும் சரியே வெளிப்படா விட்டாலும் சரியே(குளிப்பு கடமையாகும்.) நபியவர்கள் கூறினார்கள். «ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒன்றாக இணைந்தால் அவர்களுக்கு குளிப்பு கடமையாகும்.»
(ஆதாரம் திர்மிதி).
3.இஸ்லாத்திற்குள் நுழைதல்.
«நபியவர்கள் ஹைஸ் பின் ஆஸிம் இஸ்லாத்திற்கு வந்த போது அவர்களை குளிக்குமாறு ஏவினார்கள்»(ஆதாரம் அபூதாவுத்)
4.மகப்பேறு, மாதவிடாய் இரத்தம் நிற்கும் போது
ஆயிஷா ரழி அறிவிக்கின்றார்கள் ” பாதிமா பின்த் குபைஷ் அவர்களுக்கு நபியவர்கள் கூறினார்கள்: «உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தொழுகையை விடுங்கள். அது நின்று விட்டால் குளித்துவிட்டு தொழுங்கள்»
(புஹாரி முஸ்லிம்).என்றார்கள்.”
இங்கு மாதவிடாய்க்குரிய சட்டமே மகப்பேற்றுக்கும் சட்டமாகும்.
5.மரணம்
நபிமார்களுடைய மகன் மரணித்த வேளை குளிப்பாட்டும் போது நபியவர்கள் கூறினார்கள் «அவரை மூன்று முறை அல்லது ஐந்து முறை அல்லது அதற்கு அதிகமாக கழுவுங்கள்»(புஹாரி முஸ்லிம்). என்றார்கள்.
குளிப்பு கடமையானவர் கடமையான குளிப்பை குளிக்கிறோம் என்ற எண்ணதில் தனது உடல் முழுவதையும் தண்ணீரால் குளிப்பது கடமையாகும். ஆனாலும் நபியவர்கள் எப்படி குளிப்பதற்கு காட்டித்தந்தார்களோ அப்படி குளிப்பது ஆகுமான ஒன்றாகும். உம்முல் முஃமின் மைமுனா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். «நபியர்கள் குளிப்பு கடமையானர்களாக வுழுச் செய்தார்கள். தன்னுடைய வலக்கரத்தால் இடக்கரத்தை இரண்டு தடவை அல்லது மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் மர்ம உறுப்பை கழுவினார்கள். பின்னர் பூமியில் அல்லது சுவரில் இரண்டு தடவை அல்லது மூன்று தடவை அடித்தார்கள். பின்னர் வாய் கொப்பளித்தார்கள். நாசிக்கு நீர் செலுத்தி சிந்திவிட்டார்கள். பின்னர் முகத்தையும் கைகையையும் கழுவினார்கள். பின்னர் தலையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தனது உடம்பை கழுவினார்கள். பின்னர் கீழ் இறங்கி கால்களை கழுவினார்கள். நான் அவர்களுக்காக துணி கொண்டு வந்தேன். அதை அவர்கள் பெறவில்லை. பின்னர் தனது கையால் வாங்கினார்கள்»(ஆதாரம் புஹாரி).
அதன் பிரகாரம் குளிக்கும் முறை
1.கையை இரண்டு அல்லது மூன்று முறை கழுவுதல்
2.மர்ம உறுப்பை கழுவுதல்
3.பூமியில் அல்லது நிலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அடித்தல்
4.கால்கள் அல்லாமல் தொழுகைக்காக வுழுச் செய்வதை போன்று வுழு செய்தல்
5.தலையில் தண்ணீரால் ஊற்றுதல்
6.உடம்பை கழுவுதல்
7. இறங்கி வந்து (தள்ளி நின்று) கால்களை கழுவுதல்
பயன்கள்
- குளிப்புக் கடமையான பெண் தனது கொண்டையை அவிழ்க்க வேண்டிய தேவை கிடையாது. முடி நனனையும் வரையில் கொண்டையை கழுவினால் போதுமானது.
- ஒரு பெண் மாதவிடாய், மகப்பேற்றிலிருந்து குளித்த பின் மணம் பூசிய பஞ்சினை கொண்டு இரத்தம் வந்த இடத்தில் தேய்ப்பது ஆகுமானது.
- குளிப்பாளி குளித்த பின்னர் அவரது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். அவர் வுழுச் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி.
1.தொழுகை
அல்லாஹ் கூறுகிறான் {நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர}. [நிஸா – 43].
தொழுகை
2.கஃபாவை தவாப் செய்தல்
நபியவர்கள் கூறினார்கள் «அல்லாஹ்வின் வீட்டை தவாப் செய்வது வணக்கமாகும்.»
(அதாரம் நஸாயி).
கஃபாவை வலம் வருதல்
3.குர்ஆனை தொடுதல்
அல்லாஹ் கூறுகிறான் {தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்}. [வாகிஆ 79], நபியவர்கள் கூறினார்கள் «சுத்தம் இல்லாமல் குர்ஆனை குர்ஆனை தொட வேண்டும்»
(மாலிக் – முஅத்தா).
குர்ஆனை தொடுதல்
4.குர்ஆன் ஓதுதல்
அலி ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் «நபியவர்கள் இயற்கை தேவைக்கு சென்றால் குர்ஆனை ஓதுவார்கள், எங்களுடன் இணைந்து இறைச்சி சாப்பிடுவார்கள். குளிப்புக் கடமையான நிலையில் இவற்றை செய்யமாட்டார்கள்»
(ஆதாரம் திர்மிதி)
குர்ஆனை ஓதுதல்
5.வழிப்போக்கர் அல்லாதவர்கள் பள்ளியில் தரித்தல்
அல்லாஹ் கூறுகிறான் {நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர}[நிஸா – 43].
பள்ளியில் தங்குதல்
1-ஜூம்ஆ தினத்தில் குளித்தல் «யார் ஜூம்ஆ தினத்தன்று வுழுச் செய்கின்றாரே அதில் அருள் இருக்கின்றது. மேலும் யார் அத்தினத்தில் குளிக்கின்றாரோ அதுவே சிறந்த குளிப்பாகும்» (ஆதாரம் அபூதாவுத்) என நபியவர்கள் கூறினார்கள்..
2-ஹஜ்,உம்ராவில் இஹ்றாம் அணியும் போது குளித்தல் ஸைத் பின் தாபித் ரழி அவர்கள் «நபியவர்கள் இஹ்றாம் அணிய ஆடைகளை களைந்து விட்டு குளிப்பதை நான் பார்த்தேன்»
(ஆதாரம் திர்மிதி).
3-மையத்தை குளிப்பாட்டிய பின்னர் குளித்தல் நபியவர்கள் கூறினார்கள் «யார் மையத்தை குளிப்பாட்டுகிறாரோ அவர் குளித்துக் கொள்ளட்டும்.» (ஆதாரம் இப்னுமாஜா).
4-உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு தடவையும் குளித்தல் ராபிஃ ரழி அவர்கள் கூறினார்கள் «நபியவர்கள் இரவில் தன் மனைவி மார்களிடம் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். பின்னர் அங்கும் இங்கும் குளித்தார்கள். பின்னர் நான் கூறினேன் யாரசூலல்லாஹ் ஓரே தடவையில் குளிக்க முடியாத என. அப்போது நபியவர்கள் கூறினார்கள் ”இது என்னை சுத்தப்படுத்தும், எனக்கு வாசனையுமாகும். மேலும் என்னை சுத்தப்படுத்தும்» (ஆதாரம் அபூதாவுத்).
அவசியமில்லை
1-குளிப்பு கடமையானவர் தொழுகை நேரம் முடியும் வரை குளிப்பை தாமதப்படுத்த கூடாது.
2-பெண்கள் மாதவிடாயில் இருந்து சுத்தமாகும் நிலையில் பர்ளான தொழுகையை விடுதல். லுஹருடைய நேரம் நெருங்கும் முன்னர் சுத்தமடைந்தால் அவர் குளித்து விட்டு, தொழ வேண்டும். நபியவர்கள் கூறினார்கள் ” சூரியன் உதிப்பதற்கு முன்னர் சுபஹூடைய ரக்அத்தை அடைந்து கொண்டால் அவர் சுபஹ் தொழுகையை அடைந்து கொண்டார். எவர் சூரியன் மறைவதற்கு முன்னர் அஸருடைய ஒரு ரக்ஆத்தை அடைந்து கொள்கிறாரோ அவர் அஸரை அடைந்து கொள்கி றார். (புஹாரி முஸ்லிம்)