கிரகண தொழுகை

2458

கிரகண தொழுகை

சூரிய கிரகணம்

பகல் வேளைகளில் சூரிய வெளிச்சம் நீங்குவதை குறிக்கும்

சந்திர கிரகணம்

இரவு வேளைகளில் சந்திர ஒளி நீங்குதல்

கிரகண தொழுகையின் நுட்பம்

அது இரண்டும் அல்லாஹ்வை பயப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள அத்தாட்சியாகும். நபியவர்கள் கூறினார்கள் «இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ வாழ்விற்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும்போது விரைந்து தொழுங்கள்’ என்று கூறினார்கள்»
(ஆதாரம் அபூதாவுத்)

கிரகண தொழுகை

கிரகண தொழுகையின் சட்டம்

இது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். நபியவர்கள் கூறினார்கள்.«சூரியன் சந்திரன் ஆகிய இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று கூறினார்கள்»
(புஹாரி முஸ்லிம்)

- கிரகண, தொழுகையின் நேரங்கள்

- கிரகரணம் ஆரம்பித்த்திலிருந்து அது முடியும் வரையில் உள்ளதே அதன் நேரமாகும்.

- கிரகண தொழுகை தொழுபவர் கிரகணம் நீங்கும் வரை திரும்பக் கூடாது. அது நீங்கும் வரை பாவமன்னிப்பு, பிரார்த்தனைகளில் தொடராக ஈடுபட வேண்டும்.

கிரகண தொழுகை முறை

ஆயிஷா(ரலி) அறிவித்தார். «நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள்»(ஆதாரம் புஹாரி)

கிரகணம் ஏற்பட்டால் –

1- தொழுகைக்காக அழைக்க வேண்டும். அதற்கு (ஸலாதுல் ஜமாஆ) எனப்படும்.

2- மக்கள் ஒன்று சேர்ந்தால் இமாம் நீண்ட இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்துவார். அதில் கிராஅத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் பாத்திஹாவை ஓதி நீண்ட சூறாவை ஓத வேண்டும். பின்னர் நீண்ட ருகூஃ செய்ய வேண்டும். பின்னர் அதிலிருந்து“ஸமியல்லாஹூ லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்த்” என கூறியவாக உயர்வார். பின்னர் பாத்திஹாவை ஓதி முந்திய சூறாவை விட சிறிய நீண்ட சூறாவை ஓதுவார். பின்னர் முதலாவது செய்ததை விட சிறியதாக நீண்ட ருகூஃ செய்ய வேண்டும். பின்னர் அதிலிருந்து“ஸமியல்லாஹூ லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்த்” என கூறியவாக உயர்வார். பின்னர் நீண்ட இரண்டு ஸஜதாக்கள் செய்வார்.இதில் நடுவே உட்கார்வார். அது நீண்டதாக இருக்காது. பின்னர் இரண்டாவது ஸூஜூதிலிருந்து நேரத்தோடு உயர்வார். பின்னர் முதல் ரக்அத் போலவே இரண்டாவது ரக்அத்திலும் செய்வார். பின்னர் அத்தஹியாத்தில் இருந்து ஸலாம் கொடுப்பார்.

கிரகண தொழுகையில் உள்ள சுன்னத்கள்

1- ஜமாஅத்தாக தொழ வேண்டும். தனியாக தொழுதாலும் அதில் பிரச்சினை இல்லை.

2- பள்ளியில் தொழ வேண்டும். அதற்காக பெண்கள் வந்தால் அதில் தடையில்லை.

3- அதில் நிற்றல், ருகூஃ, ஸஜூத் என்பன நீண்டதாக இருக்க வேண்டும். கிரகணம் நீங்கி விட்டால் அதனை குறுகியதாக பூரணப்படுத்தாலாம்.

4- இரண்டாவது ரக்அத் முதலாவது ரக்அத்தை விட சற்று குறுகியதாக இருக்க வேண்டும்.

5- பின்னர் நல்லுபதேசம் செய்ய வேண்டும். அதன் போது அல்லாஹ்வின் வல்லமைகள் பற்றி ஞாபகமூட்ட வேண்டும். அதில் கிரகணத்தின் சட்டங்கள தெளிவுபடுத்த வேண்டும். அல்லாஹ்வை வழிப்படும் படியும், தடுக்கப்பட்டதை விடும்படியும் உபதேசிக்க வேண்டும்.

6- துஆக்கள், நல்லமல்கள் பாவமன்னிப்பு போன்றவைகளை கிரகணம் நீங்கும் வரை அதிகப்படுத்த வேண்டும்.

7- இதன் போது இரண்டு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்வது ஆகுமானதாகும். அப்துர் ரஹ்மான் இப்னு ஸம்ரத் ரழி அறிவிக்கிறார்கள் «நபியவர்கள் கையை உயர்தியவராக நிற்கும் போது நான் வந்தேன்» (ஆதாரம் முஸ்லிம்)

வழிகாட்டல்கள்

1- கிரகணம் சென்ற பின்னர் அதனை கழாச் செய்ய முடியாது

2- நவீன விஞ்ஞானம் மூலம் கிரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் அறியப்படுகின்றன. அவை இரண்டும் அல்லாஹ்வின் அத்தாடசிகளாகும். அதன் போது ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை பயந்தவராக அமல்களில் ஈடுபட வேண்டும். நபியவர்களுடைய காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டால் பயந்தவர்களாக தனது ஆடையை எடுத்துக் கொண்டு வெளிக்கிழம்புவார்கள். இது நபியவர்கள் கடுமையாக பயந்த்தை குறிக்கின்றது.

3- யார் முதல் ருகூஃவை அடைகிறாரோ அவர் அத் தொழுகையை அடைந்து கொள்வார். யார் இரண்டாவது ரக்அத்தை அடைகிறாரோ அவர் இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் அதன் முறைப்படியே அத் தொழுகையை பூரணமாக நிறை வேண்டும்.

4- தடுக்கப்பட்ட நேரமானாலும் அப்போது கிரகண தொழுகை தொழ முடியும்.

5- கிரணம் பற்றி செய்தியை கேட்டு தொழ முடியாது. தொழுபவர் கிரகணத்தை வெற்றுக் கண்களால் காண வேண்டும்..