எஞ்சியவைகள்

711

எஞ்சியவைகள்

எஞ்சியவைகள்

ஒருவர் ஒரு பாத்திரத்தில் அருந்தி விட்டு மீதமுள்ளதை இது குறிக்கின்றது.

நஜீஸ் என்ற நிலை வராத வரை, எஞ்சியவைகள் அடிப்படையில் சுத்தமானது.

1. சுத்தமான எஞ்சிய (உணவுகள்)

(அ) மனிதன் சாப்பிட்டு எஞ்சியவைகள்

மேலுள்ள செய்தியை பின்வரும் சம்பவம் உறுதிப்படுத்துகின்றது. «மாதவிடாய் காலத்தில் ஆயிஷா ரழி அவர்கள் குடித்த (நீர்) மீதமுள்ளதை நபியவர்கள் குடித்தார்கள். மேலும் ஆயிஷா ரழி அவர்கள் வாய் வைத்துக் குடித்த அதே இடத்தில் நபியவர்களும் வாய் வைத்துக் குடித்தார்கள்»
(ஆதாரம் முஸ்லிம்).

(ஆ) பூனை உண்டு எஞ்சியவைகள்

நபியவர்கள் கூறினார்கள். «பூனை ஒரு பாத்திரத்தில் நீர் அருந்தினால் அந்த நீர் சுத்தமானதாகும். ஏனனில் பூனை உங்களுக்கு வளர்ப்புப் பிராணியாகும்»
(ஆதாரம் திர்மிதி).

பூனை சாப்பிட்டு எஞ்சியவைகள்

(இ) இறைச்சி உண்ணக் கூடிய மிருகங்கள், கோவேறு கழுதை, கழுதை, வேட்டை மிருகங்கள், வேட்டைப் பறவைகள் இது போன்றன சாப்பிட்டு எஞ்சியவைகள்.

இது சுத்தமானதாகும். ஏனனெனில் அடிப்படையில் இது சுத்தமானதாகும். இது நஜீஸ் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் கழுதையில் பிரயாணம் செய்தார்கள். மேலும் அவர்களுடைய காலத்தில் சவாரி செய்பவர்களாக இருந்தார்கள்.

வேட்டைப் பறவைகள் சாப்பிட்டு எஞ்சியவைகள்

வேட்டைப் பிராணிகள் சாப்பிட்டு எஞ்சியவைகள்

கழுதை சாப்பிட்டு எஞ்சியவைகள்

இறைச்சி உண்டும் மிருமங்கள் சாப்பிட்டு எஞ்சியவைகள்

2. நஜீஸான எஞ்சிய (உணவுகள்)

(அ) நாய் சாப்பிட்டு எஞ்சியவைகள்.

நபியவர்கள் கூறினார்கள் «உங்களுடைய பாத்திரத்தில் நாய் வாயைப் போட்டால் ஏழு முறை கழுவுங்கள். அதில் ஒரு முறை மண் போட்டு கழுவுகள். (அதுவே அதை சுத்தப்படுத்தும்)
»(புஹாரி முஸ்லிம்).

நாய் சாப்பிட்டு எஞ்சியவைகள்

(ஆ) பன்றி சாப்பிட்டு எஞ்சியவை

பன்றி சாப்பிட்டு எஞ்சியவை தடுக்கப்பட்டவையாகும். அல்லாஹ் கூறுகிறான் {(நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர}.[அன்ஆம் – 145]அருவருக்கத்தக்க செயல் என்பது இங்கு நஜீஸ் என்பது அதோடு தொடர்பு பட்டிருந்தாலும் அது நஜீஸ் தான்.

பன்றி சாப்பிட்டு எஞ்சியவைகள்

மனித சுத்தம்

மனிதன் என்பவன் தன்னளவில் சுத்தமானவனாவான். அவன் முஸ்லிமாக அல்லது காபிராக இருந்தாலும் சரியே!. நபியவர்கள் கூறினார்கள் ”நிச்சயமாக ஒரு முஃமின் நஜீஸாக மாட்டான்”.(புஹாரி முஸ்லிம்)மேலுள்ள செய்தியை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகின்றது. நபியவர்கள் முஷ்ரிக்களுடைய.(மஸாதா – தண்ணீர் எடுக்கப்படும் ஓர் இடம்.) மஸாதா (புஹாரி முஸ்லிம்) {என்ற இடத்தில் வுழு செய்பவர்களாக இருந்தார்கள். அல்லாஹ் கூறுகிறான். ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.}[தௌபா – 28] இங்கு உள்ரங்கமான நஜீஸையே குறிப்பிடுகின்றது.