இரு பெருநாட்கள்

1676

இரு பெருநாட்கள்

பெருநாளின் வெளிப்பாடுகள்

முஸ்லிம்களுடை பெருநாள் இரண்டாகும். அதில் ஈதுல் பித்ர் ரமழானிற்கு பின்னரும். ஈதுல் அழ்ஹா அரபா தினத்திற்கு அடுத்த நாளும் ஆகும். அதனை அல்லாஹ் ஜாஹிலிய்ய மக்களின் விழாக்கழுக்கு பகரமாக எமக்கு ஏற்பாடு செய்திருக்கிறான். அனஸ் ரழி அறிவிக்கிறார்கள். ஜாஹிலிய்ய காலத்தில் ஒவ்வொரு வருடமும் இரு தினங்களில் அவர்கள் விளையாடக் கூடியவராக இருந்தார்கள் நபியவர்கள் மதீனாவுக்கு வந்த போது கூறினார்கள் «அவர்களுக்கு இரு தினம் விளையாடக் கூடிய தினமாக இருந்தது. அதற்கு பகரமாக சிறந்த ஒன்றை அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான். அவை ஈதுல் பித்ர், ஈதுல் அழ்ஹா போன்றவையாகும் »(ஆதாரம் முஸ்லிம்).காபிர்களுடைய விழாக்களில் கலந்து கொள்வது ஹறாமாகும். அது மார்ககத்தின் அடையாளம். அல்லது மார்க்கத்தின் ஒளியாகும். அல்லாஹ் கூறுகிறான். {உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்.}[மாயிதா 48] அல்லாஹ் இரண்டு பொருநாட்களை ஏற்படுத்தியுள்ளான். அது பெருநாள் தொழுகை என அழைக்கப்படுகின்றது. அதுவே சிறந்த வெளிப்பாடாகும்.

இரு பெருநாட்களின் சட்டம்

அது பர்ழு கிபாயாவாகும். அதற்காக சிலர் வந்தால் ஏனையவர்கள் பாவியாவதிலிருந்து நீங்கி விடுவர்.

- அது மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. அதனை நிறைவேற்றும் படி அவ்வாரே நபியவர்கள் ஏவினார்கள். என்றாலும்லும் பெண்களும் சிறுவர்களும் வயோதிபர்களையும் அதனை நிநைவேற்ற வெளிக்கிளம்புமாறும் ஏவினார்கள். மாதவிடாய் பெண்களை கூட தொழாவிட்டாலும் தொழுமிடத்திற்கு வருமாறு கூறினார்கள் என்றால் அத் தொழுகையின் சிறப்பை இது எடுத்துக் காட்டுகிறது. அது கடமை என்பதற்கான ஆதாரங்களை பார்ப்போம்.

1- அல்லாஹ் கூறுகிறான்.{எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக} [கவ்தர் 02].

2- நபியவர்கள் பெண்களுக்கும் சேர்த்து ஏவினார்கள். உம்மு அதிய்யா ரழி அறிவிக்கிறார்கள் «இரு பெருநாட்களில் இளம் பெண்களையும், (முதலில் பருவமடைந்த பெண்கள்) திரைக்கப்பால் உள்ள பெண்களையும் (மாதவிடாய்) புறப்படச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் - எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் (நடக்கும் கன்னிகள்) முஸ்லிம்களின் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கியிருக்குமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்»(ஆதாரம் புஹாரி)

இரு பெருநாட்களின் நேரம்

சூரியன் ஈட்டியளவு உயர்வதை கண்கள் பார்கின்ற நேரத்தில் அத் நேரம் ஆரம்பிக்கிறது. அதன் அளவு சூரியன் உதித்து அரை மணி நேரத்திலிருந்து அது நீங்கும் வரையாகும்.

ஈதுல் அழ்ஹா தொழுகையை உழ்ஹியாவை வழங்க வேண்டும் என்பதற்காக முற்படுத்துவது சுன்னாவாகும். அதே போல ஈதுல் பித்ரை ஸகாத்துல் பித்ரை வழங்குவதற்காக வேண்டி பிற்படுத்துவது சுன்னாவாகும்.

இரு பெருநாட்களின் தொழுகை முறை

அது இரண்டு ரக்அத்தாகும். அதில் அதானும் இகாமத்தும் கிடையாது. மேலும் வெளிப்படையாக ஓத வேண்டும்.

1- முதலாவது ரக்அத்தில் ஆரம்ப தக்பீருக்கு பாத்திஹா ஓதுவதற்கு முன்னர் ஏழு தக்பீர் கூற வேண்டும்.

2- அஊது பிஸ்மியுடன் பாத்திஹா ஓத வேண்டும். அதன் பின்னர் ஒரு சூறாவை ஓத வேண்டும். அதில் முதலாவது ரக்அத்தில் சூரதுல் அஃலாவையும். இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் காஷியாவையும் ஓதுவது சுன்னத்தாகும். அல்லது முதலாவது ரக்அத்தில் சூரதுல் கா பையும். இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் கமரையும் ஓதுவது சுன்னத்தாகும்.

3- இரண்டாவது ரக்அத்தில் தக்பீர் கட்டிய பின்னர் ஐந்து தக்பீர் கூற வேண்டும். அதில் கைகளை உயர்த்தாமலிருப்பதே சரியானதாகும்.

4- தக்பீர்களுக்கிடையே அல்லாஹ்வை புகழ்ந்து நபியவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்.

5- பின்னர் ஸலாம் கொடுத்த்தும் மிம்பர் மீது ஏறி இரண்டு குத்பாக்கள் நிகழ்த்தப்பட வேண்டும். அதிற்கிடைய சற்று இருந்து எழும்ப வேண்டும்.

6- ஈதுல் பித்ரின் போது அப்போதைக்கு தேவையான விடயங்களை மக்களுக்கு உபதேசிக்க வேண்டும். ஈதுல் அழ்ஹாவின் போது உழ்ஹியாவின சட்டங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

பெருநாள் தொழுகையின் இடம்

பள்ளியல்லாத வேறு தொழுமிடத்தில் தொழுவதே சுன்னாவாகும். ஆனால் தேவை ஏற்பட்டால் பள்ளியில் தொழுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

பெருநாள் தொழுகையின் ஆகுமானவைகள்

1- ஆண்கள் அழகான ஆடைகளை அணிய வேண்டும். பெண்களை பொறுத்தமட்டில் அழகை வெளிப்பத்தாத, மணம் பூசாமல் தொழுகைக்கு செல்ல வேண்டும்.

2- மஃமும்கள் தொழுகைக்கு நேரத்தோடு வருகை தருவதோடு முதல் வரிசையில் நிற்க வேண்டும்.

3- நடந்தவராக ஒரு வழியால் சென்று மறு வழியால் வருதல், ஜாபிர் ரழி அறிவிக்கிறார்கள் «நபியவர்கள் பெருநாட்களில் பாதையை மாற்றக் கூடியவராக இருந்தார்கள்»(ஆதாரம் புஹாரி)

4- ஈதுல் பித்ரின் போது ஐந்து அல்லது மூன்று ஈச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும். ஈதுல் அழ்ஹாவின் போது திரும்பும் வரை அவ்வாறு சாப்பிடுவது கூடாது.

5- ஈதுல் பித்ரை தாமதப்படுத்துவது ஆகுமானதாகும். ஸகாதுல் பித்ரை மக்கள் கொடுக்க வேண்டும் என்பதற்கான அவ்வாறு செய்யப்படுகின்றது. ஈதுல் அழ்ஹாவை பொறுத்த வரையில் தக்பீர் கூறுவது அவசியமாகும்.

பெருநாள் தொழுகையின் சட்டங்களில் உள்ளவை

1- தொழுகை நடைபெறும் இடங்களில் பெருநாள் தொழுகைக்கு முன்னும் பின்னும் எந்த சுன்னத்தான தொழுகையும் இல்லை. ஆனால் பள்ளியில் தொழுகை நடத்தப்படும் என்றால் பள்ளியில் நுழையும் போது தஹ்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழலாம்.

2- யாராவது பெருநாள் தொழுகையையோ அல்லது அதின் பண்புகளிலோ ஏதாவதை தவற விட்டால் அதனை கழாச் செய்வது சுன்னாவாகும். அதன் இரண்டு ரக்அத்தையும் அதனுடைய தக்பீர் போன்றவற்றை நிறைவேற்றுவார்.

3- “அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், லாயிலாஹ இல்ல்ல்லாஹூ வஅல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், வலில்லாஹில் ஹம்து” என தக்பீர் கூறுவார். அதே போல அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர் கபீரா” என்றும் கூறலாம்.

4- தக்பீர் கூறும் போது ஆண்கள் சத்தத்தை உயர்த்துவது சுன்னத்தாகும். பெண்கள் சத்தத்தை தாழ்த்துவது சுன்னாவாகும். ஏன்னில் பெண்கள் தனது சத்தத்தை தாழ்த்துவதே ஏவலாகும்.

5- ஈதுல் பித்ரின் போது பஜ்ரில் இருந்து இமாம் தொழுகைக்கு செல்லும் வரையில் தக்பீரின் நேரமாகும். ஈதுல் அழ்ஹாவின் போது அய்யாமு தஷ்ரீக்குடைய மூன்று நாட்கள் வரை சூரியன் மறையும் வரை தக்பீர் கூறும் முறையாகும். இமாம் தொழுகைக்கு வரும் வரையில் தொழுமிடங்களில் தக்பீர் கூற வேண்டும். அதே போல ஜமாஅத்தாக தொழும் போது, கடைத் தெருக்களில் , வீடுகளிலும் தக்பீரை கூறலாம்.

வழிகாட்டல்கள்

1- அத்தினத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் வாழத்துச் சொல்வது ஆகுமானது. இதன் போது “தகப்பல்லாஹூ மின்னா வமின்கும். என கூறலாம்.

2- சந்தோசங்களை வெளிப்படுத்துவதும் ஆகுமானது. அத்தினத்தில் விருப்பத்திற்குரிய, நெருக்கமான உறவுகளோடு சந்தோசத்துடன் வாழ்த்துக்களை பரிமாரிக் கொள்ள வேண்டும்.

3- பெருநாள் தினத்தில் துண்டிக்கப்பட்ட குடும்ப உறவுகளோடு தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய உள்ளங்களை இணைக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டும்.

4- கப்றுகளை தரிசிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. ஏன்னில் அது பெருநாள் தின சந்தோசத்திற்கு எதிரான ஒன்றாகும்.

5- அத்தினத்தில் அல்லாஹ் ஹலாலாக்கிய அமைப்பில் ஆடைகள், உணவுகள் வழங்குவதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. ஏனனில் அது சந்தோசமான, மகிழ்சியான நாட்களாகும். அல்லாஹ் கூறுகிறான் {அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்}[யூனுஸ் 58].

6- தடை செய்யப்பட இஸ்லாம் தடுத்தள்ளவைகளை அன்றய தினம்மேற்கொள்வது கூடாது. ஆண் பெண் கலப்பு, தொழுகையில் பொடுபோக்கு, இசை கேட்டல், இது போன்றவை