இயற்கை தேவையை நிறை வேற்றுதல்

740

இயற்கை தேவையை நிறை வேற்றுதல்

இயற்கை தெவையை நிறைவேற்றும் போது அவசிமானவை.

1. மலசலம் கழிக்கும் போது மக்கள் பார்க்காத வண்ணம் அவ்றத்தை மறைத்தல் நபியவர்கள் கூறினார்கள் «ஜின்களினதும் மனிதனுடைய பார்வையை விட்டும் மறைக்க உங்களில் ஒருவர் மலசலம் கழிக்கச் சென்றால் பிஸ்மில்லாஹ் என கூறட்டும் என்றார்கள்»(ஆதாரம் திர்மிதி).

2. உடையிலோ அல்லது உடலிலோ நஜீஸ் தென்பட்டால் இதனை நீக்குதல் அல்லது கழுவுதல். மேலுள்ள செய்தியை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகின்றது. «நபியவர்கள் இரண்டு கப்றுகளை கடந்து சென்றார்கள். அப்போது இந்த இரண்டு கப்றுகளும் வேதனை செய்யப்படுகின்றது. அதில் ஒன்று சிறுநீர் (சிறுநீரில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல்) கிழித்து விட்டு சுத்தம் செய்யவில்லை என கூறினார்கள்.»(ஆதாரம் அபூதாவுத்).

3. தண்ணீரால் அல்லது கற்களால் சுத்தம் செய்தல். அனஸ் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் «நபியவர்கள் மலசலம் கழிக்கச் சென்றால் நானும் சில சிறுவர்களும் தண்ணீர் உள்ள பாத்திரத்தை (இன்ஸத் – சிறிய குச்சி) சுமந்து செல்வோம் நபியவர்கள் அதிலிருந்து கழுவிக் கொள்வார்கள்»(புஹாரி முஸ்லிம்).

மலசலம் கழிக்கும் போது தடுக்கப்பட்டவைகள்.

1. வெட்டை வெளிகளில் மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவதோ அல்லது பின்னோக்குவதோ கூடாது. ஆனால் கட்டிடங்களுக்குள் கிப்லாவை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் முன்னோக்காமலும், பின்னோக்காமலும் இருப்பது சிறந்தது. நபியவர்கள் கூறினார்கள் «நீங்கள் மலசலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்னோக்கவோ? அல்லது பின்னோக்கவோ வேண்டாம். மாறாக கிழக்கிலோ அல்லது மேற்கிலோ ஆக்கிக் கொள்ளுங்கள்»
(புஹாரி முஸ்லிம்).

2. மனிதர்கள் பயணம் செல்லும் பாதை, ஒன்று கூடும் இடம், நிழல் தரும் இடங்கள் போன்றவற்றில் மலசலம் கழிக்க கூடாது. நபியவர்கள் கூறினார்கள் «அல்லகானீன்களை பயந்து கொள்ளுங்கள். அதற்கு நாங்கள் அல்லகானீன்கள் என்றால் என்ன என்று கேட்டோம் அதற்கு நபியவர்கள் ”அவர்கள் தான் மக்கள் பயணிக்கும் பாதையிலும் நிழலிலும் மலசலம் கழிப்பவர்கள்.” என்று கூறினார்கள்»
(ஆதாரம் முஸ்லிம்),

3. ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது கூடாது. உதாரணமாக குழியலறை நீர்த் தொட்டி. நபியவர்கள் கூறினார்கள். «ஓடாமல் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம். பின்னர் அதில் குழிக்கவும் வேண்டாம்»
(புஹாரி முஸ்லிம்).

4. குர்ஆன் பிரதியை மலசல கூடத்திற்குள் எடுத்துச் செல்வது கூடாது.

வெட்ட வெளிகளில் மலசலம் கழித்தல்

மக்கள் பயணிக்கம் பாதைகளில் மலசலம் கழித்தல்

தேங்கி நிற்கும் நீரிலுள்ள சிறுநீர்

தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் இருந்தால் பற்றிரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படுகின்றது. இந்த பற்றிரியாக்கள் மூலம் நோய்க்கான புழுக்கள் உருவாகின்றன.(காயதுல் அஹ்மத் ”நவீன முறையில் நபி வழி மருத்துவம்.)

மலசலம் கழிக்கும் போது ஆகுமானவை

1. வெட்ட வெளிகளில் மலசலம் கழிக்கும் போது மக்களை விட்டும் தூரமாக இருத்தல்

2. மலசல கூடம் நுழையும் «போது ஆண்,பெண் ஷைத்தானிடமிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன்»(புஹாரி முஸ்லிம்). என பிரார்த்தனை செய்தல்.

3. மலசல கூடம் நுழையும் போது இடது காலை முற்படுத்தல் வெளியாகும் போது வலது காலை முற்படுத்தல்

4. வெளியாகும் போது «அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறேன்»(ஆதாரம் அபூதாவுத்)என பிரார்த்தித்தல்.

இடதை முற்படுத்தி நுழைதல்

வலதை முற்படுத்தி வெளியாகுதல்

மலசலம் கழிக்கும் போது ஆகுமானவை

1. மலசலம் கழிக்கும் போது பேசுதல். அல்லது அவசியமின்றி ஏனையவர்களுடன் பேசுதல். நபியவர்கள் கூறினார்கள் «ஒரு மனிதன் நபியவர்கள் சிறுநீர் கழிக்கம் போது கடந்து சென்றார். அப்போது நபியவர்களுக்கு அவர் ஸலாம் சொன்னார். ஆனால் நபியவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை»
(ஆதாரம் முஸ்லிம்).

2.அல்லாஹ்வை நினைவு கூறும் ஏதாவது ஒன்றை கொண்டு நுழைதல். ஆனால் அது திருடப்படும் என்ற பயம் இருப்பின் கொண்டு செல்லலாம்.8.

3. வலக்கையால் மறைவுறுப்பை தொடுதல் அல்லது நீரையோ அல்லது கல்லை கொண்டோ வலக்கரத்தால் சுத்தம் செய்தல் என்பன வெறுக்கத்தக்க செயலாகும். நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் ஒருவர் சிறுநீர கழிக்கும் போது தனது வலக் கரத்தால் பிடிக்க வேண்டாம். மேலும் வலக்கரத்தால் மலத்தை துடைக்கவும் வேண்டாம்»
(புஹாரி முஸ்லிம்),

4. தீங்கு விளைவிக்கும் விஷ ஜந்துக்கள் உள்ள பொந்துகளுக்குள் சிறுநீர் கழிக்க வேண்டாம்

மலசலம் கழிக்கும் போது பேசுதல்

பொந்தினுள் சிறுநீர் கழித்தல்

திருக்குர்ஆனுடன் மலசல கூடத்தில் நுழைதல்

அல்லாஹ்வை நினைவு கூறும் பொருட்களுடன் மலசல கூடத்திற்குள் நுழைதல்.

நின்று கொண்டு நிறுநீர் கழித்தல்

ஒரு மனிதனுக்கு நின்று கொண்டு சிறு நீர் கழிப்பதை விட கீழே குந்தி கழிப்பது பாதுகாப்பாகும். குதைபா ரழி அவர்கள் கூறுகின்றார்கள் «நபியவர்களிடம் சுபாதா (சுபாதா – வீட்டில் இருந்து கூட்டிய குப்பைகள், மண், அழுக்குகள் வீசப்படும் இடத்தை குறிக்கின்றது. ஆதாரம் புஹாரி) மக்கள் வந்தார்கள். அவர்கள் நின்றவாறு சிறுநீர் கழித்தார்கள்»(ஆதாரம் புஹாரி). இப்னு மன்திர் ரஹ் கூறுகிறார்கள் ” குந்தி கொண்டு சிறுநீர் கழிப்பு அவர்களுக்கு மிக ஏற்மானதாகும், எனினும் நின்று கொண்டு கழிப்பது அனுமதிக்கப்பட்டது.

நீராலும், கற்களாலும் சுத்தம் செய்தல்

நீரால் சுத்தம் செய்தல்.

முன்னாலும் பின்னாலும் மல சலத்தினுடைய அடையாளம் நீங்கும் வரை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தல்.

கற்களால் சுத்தம் செய்தல்

முன்னாலும் பின்னாலும் மல சலத்தினுடைய அடையாளம் நீங்கும் வரை கற்களால் கழுவி சுத்தம் செய்தல்.

கற்களாலும், தண்ணீராலும் சுத்தம் செய்தலின சட்டம்

தண்ணீரை கொண்டு சுத்தம் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனஸ் ரழி அவர்கள் கூறினார்கள் «நபியவர்கள் மலசலம் கழிக்கச் சென்றால் நானும் சில சிறுவர்களும் தண்ணீர் உள்ள பாத்திரத்தை சுமந்து செல்வோம் நபியவர்கள் அதிலிருந்து கழுவிக் கொள்வார்கள்»
(புஹாரி முஸ்லிம்).

மேலும் இரண்டு நிபந்தையின் அடிப்படையில் கற்களால் சுத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.

1. மலசலம் வரும் இடத்திற்குள் மாத்திரம் அது இருக்க வேண்டும். மலசலம் வரும் இடத்தை விட்டும் தாண்டினால் தண்ணீரால் மாத்திரமே சுத்தம் செய்ய வேண்டும்.

2. கற்களால் சுத்தம் செய்வதாக இருப்பின் மூன்று கற்களை கொண்டு முன் பின் துவாரங்களில் உள்ள நஜீஸ் நீங்கும் வரை சுத்தம் செய்ய வேண்டும்.

தண்ணீராலும், கற்களாலும் சுத்தம் செய்வதன் நுட்பம்

1. சுத்தமும், நஜீஸை நீக்குதலும்

2. துப்பரவு செய்தலும், நோய்க் கிருமிகளிடம் இருந்து தூரமாகுதலும்.

பயன்கள்

காற்று வெளியானால் தண்ணீரால் சுத்தம் செய்வது அவசியமில்லை. தண்ணீரால் சுத்தம் செய்வது கற்களால் சுத்தம் செய்வதை விட சிறந்தது. அதுவே சுத்தமாகுதலிற்கு மிக நெருக்கமானதாகும்.

கற்களை கொண்டு சுத்தம் செய்வதற்கான நிபந்தனைகள்

1. சுத்தம் செய்யும் பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும். நஜீஸை கொண்டு சுத்தம் செய்ய முடியாது.

2. சுத்தம் செய்யும் பொருட்கள் ஆகுமானதாக இருக்க வேண்டும். தடுக்கப்பட்டவைகளை கொண்டு சுத்தம் செய்ய முடியாது.

3. சுத்தம் செய்யும் நஜீஸான இடத்தை விட்டும் துப்பரவாக இருக்க வேண்டும்.

4. எலும்பு, விட்டைகளை கொண்டு சுத்தம் செய்ய கூடாது. ஸல்மான் இப்னு பாரிஸ் ரழி அவர்கள் கூறினார்கள். «நபியவர்கள் மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவதையும், வலது கையால் சுத்தம் செய்வதையும், மூன்று கற்களை விட குறைவாக சுத்தம் செய்வதையும், மிருகங்களது எலும்பு, (விட்டை) விட்டைகளை90 கொண்டு சுத்தம் செய்வதையும் தடுத்தார்கள்»(ஆதாரம் முஸ்லிம்).

5. தடுக்கப்பட்டவைகளை கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. உதாரணம் – உணவுகள், ஏதாவது எழுதப்பட்ட காகிதங்கள்.

மேலும் சுத்தமான கற்கள், திசு பேப்பர்கள், சுத்தமான பேப்பர்கள், துணிகள் போன்றவற்றால் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

துணிகளை கொண்டு சுத்தம் செய்தல்

எலும்பைக் கொண்டு சுத்தம் செய்தல்

திசு பேப்பரை கொண்டு சுத்தம் செய்தல்

உணவைக் கொண்டு சுத்தம் செய்தல்

கற்களை கொண்டு சுத்தம் செய்தல்

தடுக்கப்பட்ட காகிதங்களை கொண்டு சுத்தம் செய்தல்

தண்ணீரால் சுத்தம் செய்யும் போது வலக்கையை முற்படுத்தல்.

தண்ணீரால் சுத்தம் செய்யும் போது வலக்கையை முற்படுத்துவது கூடாது. நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் ஒருவர் சிறுநீர கழிக்கும் போது தனது வலக் கரத்தால் பிடிக்க வேண்டாம். மேலும் வலக்கரத்தால் மலத்தை துடைக்கவும் வேண்டாம்»(ஆதாரம் முஸ்லிம்).