இமாமத்தும் அதனை பின்பற்றுவதும்

2004

இமாமத்தும் அதனை பின்பற்றுவதும்

இமாமத் செய்ய தகுதியுடையவர்கள்

ஒழுங்கு வரிசையில் –

முதலாவது - அல்குர்ஆனை ஓதக் கூடியவர்கள், அவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்து அதனை விளங்கியவர்கள்.

இரண்டாவது – சுன்னாவை அறிந்தவர்கள், இதனுடைய பொருளை, சட்டங்களை அறிந்தவர்கள்

மூன்றாவது – ஹிஜ்ரத் செய்தவர்கள், அவர்கள் காபிர்களின் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டிற்கு ஹிஜ்ரத் சென்றவர்கள். ஹிஜ்ரத் இல்லை எனின் தவ்பாவில் முந்தியவர்கள் அல்லது பாவத்திலிருந்து விடுபட்டவர்கள்.

நான்காவது - வயது மூத்தவர்கள், இதுவே முன்னர் உள்ளவைகளில் உயர்ந்ததாகும்.அபீ மஸ்ஊத் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் கூறினார்கள். «அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். மக்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சமஅளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் (இஸ்லாமாக) தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்» (ஆதாரம் முஸ்லிம்)

இது பள்ளியில் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள இமாமை சார்ந்த்தாகும். அல்லது சம்பளம் வழங்காமல் இருக்கும் இமாமுக்குரியதாகும். ஆனால் சம்பளம் வழங்கப்படும் இமாமாக இருப்பின் அல்லது பள்ளிக்கு பொறுப்பானவராக அல்லது அதிகாரம் (ஆட்சியாளராக அல்லது தலைவராக அல்லது பொறுப்பாளராக இருந்தார்.) உள்ள ஒருவராக இருப்பின் அவரே அதற்கு முதன்மையானவர். நபியவர்கள் கூறினார்கள் «ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் (மனிதர்கள் உட்காரும் தலையணை போன்ற இருப்பு) மீது அவருடைய அனுமதியின்றி அமர வேண்டாம்»(ஆதாரம் முஸ்லிம்)

இஸ்லாத்தில் இமாம், மஃமும்களின் இடம்

1- மஃமும் ஒருவராக இருப்பின் – அவர் இமாமின் வலது பக்கத்தில் நிற்பார். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள் «ஓர் இரவு நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்களின் இடப்புறமாக நின்றேன். அப்போது அவர்கள் என் தலையின் பின்புறத்தைப் பிடித்துத் தம் வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள்»(புஹாரி முஸ்லிம்)

2- இரண்டு அல்லது அதற்கு அதிகமாக இருப்பின் – வரிசையின் நடுவில் மஃமும்களுக்கு முன்னால் இமாம் நிற்பார். ஜாபிர் இன்னும் ஜிபார் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் நபியவர்களது வலது பக்கத்திலும் மற்றவர் இடது பக்கதிலும் நின்றனர். «ஜாபிர் ரழி அறிவிக்கிறார்கள் ”நபியவர்கள் அவருக்கு பின்னால் நாங்கள் செல்லும் வரை எங்களை தள்ளி (ஒழுங்குபடுத்தி)னார்கள். »
(ஆதாரம் முஸ்லிம்)

3- வரிசைக்கு பின்னால் தனியாக தொழுதல், காரணம் இன்றி இது கூடாது. அவருக்கு ஸப்பை பூரணப்படுத்தும் இடத்தை தவிர வேறிடம் கிடைக்கவில்லை.

பெண்களின் இடம்

1- பெண்கள் ஜமாஅத்தாக தொழ சென்றால் அவர்களுடைய இமாம் அதே ஸப்பில் நடுவில் நிற்பார். இதுவே சுன்னாவாகும்.

2- ஆண்களுக்கு பின்னால் அவர்களுடைய தாய்மார்கள் நிற்பார்கள். ஏனையவர்கள் இறுதி ஸப்பில் நிற்பார்கள்

3- ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஜமாஅத்தாக தொழ நாடினால், பெண்கள் ஆண்கள் வரிசையை விட்டும் கடைசி வரிசையில் நிற்பார். அபூஹூறைறா ரழி அவர்கள் அவர்கள் அறிவிக்கிறார்கள். நபியவர்கள் கூறினார்கள் «பெண்களுடைய ஸப்புகளில் சிறந்தது இறுதி ஸப்பாகும், தீயது முதற் ஸப்பாகும்»(ஆதாரம் இப்னு மாஜா)

பெண்களுடைய தொழுகை

பெண்கள் ஆண்களின் அருகில்

இமாமை பின்பற்றுவதில் உள்ள சட்டங்கள்

1- வீட்டில் இருக்கும் போது கேட்கும் தக்பீர் சத்தம், வானோலியில் கேட்கும் சத்தம் ஆகியவைகளை கொண்டு ஒருவர் அதனை இமாமாக எண்ணி தொழ முடியாது.

2- பள்ளிக்கு வெளியில் தொடரான ஸப்பாக இருப்பின் இமாமை அங்கு பின்பற்றலாம்.

3- இமாம் பள்ளியில் எங்கு எருந்தாலும் அவரை மஃமும் பின்பற்றலாம்.

4- சுன்னத்தான தொழுகை நிறைவேற்றுபவருக்கு பின்னால் பர்ளான தொழுகையை நிறைவேற்றலாம். உதாரணமாக இஷாத் தொழுகையை தராவிஹ் தொழுகையை நடாத்தும் இமாமிற்கு பின்னால் நின்று தொழுது கொள்ளலாம். அல்லது தவறவிடப்பட்ட பர்ளான தொழுகையை ஜமாஅதின் கூலியை பெறும் நோக்குடன் இவ்வாறு தொழ முடியும். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழி அறிவிக்கின்றார்கள். «முஆத் ரழி அவர்கள் நபியவர்களுக்கு பின்னால் தொழுதுவிட்டு பின்னர் தனது கூட்டத்தாருக்கு தொழுவிக்கச் சென்றார்கள்»(ஆதாரம் புஹாரி)

பள்ளிக்கு வெளியில் பின்பற்றுதல்

இமாமை முந்துதல்

1- மஃமும்கள் இமாமை அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் விரைவாக செய்வது மார்க்கமாகும். நபியவர்கள் கூறினார்கள். «பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் சொல்லுங்கள்; அவர் ருகூவு செய்தால் நீங்களும் செய்யுங்கள்; அவர் ஸஜ்தாச் செய்தால் நீங்களும் செய்யுங்கள்»(புஹாரி முஸ்லிம்)

2- இமாமை முந்துவது ஹராமாகும். நபியவர்கள் அதில் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். «உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா»(புஹாரி முஸ்லிம்)

3- யார் மறதியாக இமாமை முந்துகிறாரோ அவர் இமாமை பின்பற்றி மீண்டு வருவது அவசியமாகும். .

தொடக்குள்ளவருக்கு பின்னால் தொழுதல்

தொடக்குடையவருக்கு பின்னால் தொழுவது கூடாது (தொடக்கு – சுத்தமில்லாத்தை குறிக்கும்), தொழுகை முடியும் வரை அவர் தொடக்குள்ளதை அறியவில்லையனின் மஃமும்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். இமாம் தொழுகையை மீட்டித் தொழ வேண்டும்.