அதானும் இகாமதும்

3047

அதானும் இகாமதும்

அதான்

குறிப்பிட்ட பிரார்த்தனை மூலம் தொழுகையின் நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதாகும்.

இகாமத்

குறிப்பிட்ட பிரார்த்தனை மூலம் தொழுகை நடைபெறப் போகின்றது என்பதை அறிவிப்பதாகும்.

அதான் இகாமத்தின் சட்டம்

1-கூட்டமாக இருப்பவர்களுக்குரிய உரிமை

பிரயாணியாகவோ அல்லது ஊரில் இருந்தாலும் அது பர்ளு ஹிபாயாவாகும் பர்ளு ஹிபாயா – இது சிலர் மேற்கொண்டார் ஏனையவர்கள் பாவியாக மாட்டார்கள். –கடமையான ஐவேளை தொழுகைக்கு மாத்திரம் – ஏனனில அவை இஸ்லாமிய உணர்வுகளின் வெளிப்பாடாகும். அதனை மறைப்பது கூடாது. நபியவர்கள் கூறினார்கள் «தொழுகையுடைய நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் அதான் சொல்லட்டும். பின்னர் உங்களில் பெரியவர் தொழுகை நடாத்தட்டும்.» (புஹாரி முஸ்லிம்).

2-தனியாக இருப்பவருக்குரிய உரிமை

இது சுன்னத்தாகும். உக்பத் இப்னு ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள். நபியவர்கள் கூறுவதை கேட்டேன் «மலை பிரதேசத்தில் உயர்திலுள்ள ஷலியத் – மலையின் தலை பகுதியில் உள்ள உயர்வான துண்டு. ஆட்டு இடையனை கண்டு அல்லாஹ் ஆச்சிரியப்படுகின்றான். அவன் தொழுகைக்காக அதான் கூறுகிறான். இன்னும் தொழுகிறான். பின்னர் அல்லாஹ் கூறுகிறான் – இந்த அடியானை பாருங்கள். அதான் கூறி தெழுகையை நிலைநாட்டுகிறான். என்னை அஞ்சுகிறான். எனது அடியானை நான் மன்னிக்கிறேன். அவனை சுவனத்தினுள் நுழைவிக்கிறேன். » (ஆதாரம் நஸாஈ)

அதான் இகாமத்தின் நுட்பம்

1-தொழுகையின் நேரத்தையும் இடத்தையும் அறிவிக்கிறது.

2-ஜமாஅத் தொழுகையை நாடுகின்றது.

3- அருட்கொடுகளை பெற தொழுகையை நிலை நாட்டுவதன் பால் வணக்கசாலிகளை விழிப்படைய செய்கிறது. மேலும் மறந்தவர்களுக்கு நினைவூட்டுகின்றது.

அதான் எப்போது கடமையானது? அதன் காரணம்

ஹிஜ்ரி முதலாம் ஆண்டு அதான் கடமையாக்கப்பட்டது. காரணம் –தொழுகைக்கான நேரம் நெருங்கி விட்டது என மக்கள் அறிந்து கொள்ள என்ன செய்யலாம் என முஸ்லிம்கள் மஷூரா செய்யும் போது. ஓரிரவு அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழி அவர்கள் கனவில் மணியை நாகூஸ் – மணி சுமந்தவாறு ஒரு மனிதரை கண்டார்கள். அவரிடம் ஸைத் ரழி ”இந்த மணி ஓசையை நாங்கள் பின்பற்றலாமா” என கேட்டார். அதற்கு அம் மனிதர் ”இதனை கொண்டு என்ன செய்ய போகின்ரீர்கள் என கேட்டார்” அதற்கு ஸைத் ரழி அவர்கள் ”இதனை கொண்டு தொழுகைக்காக அழைப்போம்” என்றார்கள். அதற்கு அம்மனிதர் ” இதனை விட சிறந்த ஒன்றை அறிவிக்கவா என கேட்டார்” அதற்கு அப்துல்லாஹ் ரழி அவர்கள் ”ஆம்” என்றார்கள். அவருக்கு அதானை கற்பித்தார். பின்னர் இகாமத்தையும் கற்பித்தார். (ஆதாரம் தாரமி )காலையில் நபியவர்களிடம் வந்து தான் கனவில் கண்டதை கூறினார்கள். அதற்கு நபியவர்கள் «அது அல்லாஹ்வின் நாட்டப்படி உண்மையான கனவுதான். பிலாலிடம் சென்று அவருக்கு கற்றுக் கொடுப்பீராக! அவர் உம்மை விட சிறந்த குரல்வளம் மிக்கவர்.»(ஆதாரம் அபூதாவுத்).

அதானின் சிறப்பு

1-அவருடைய குரலுக்காக மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் சாட்சி கூறும். நபியவர்கள் கூறினார்கள் «முஅத்தினுடைய சத்தத்தை கேட்டும் ஜின்களோ, மனிதர்களோ, அல்லது வேறு ஏதாவதோ நாளை மறுமை நாளில் அவருக்கு சாட்சி சொல்லாமல் இருப்பதில்லை» (ஆதாரம் புஹாரி).

2-அதனுடைய சிறப்பை அறிவார்களானால் மனிதர்கள் அதான் சொல்ல போட்டி போடுவார்கள். நபியவர்கள் கூறினார்கள் «அதானுடைய, முதல் வரிசையுடைய சிறப்பை அறிவார்களானால் அதனை அடைந்து கொள்ள போட்டி போடுவார்கள் இஸ்திஹாம் – சக்தியுள்ளவர்கள் நேரத்தோடு செல்தல்.»(ஆதாரம் புஹாரி).

அதானின் நிபந்தனைகள்

1-முஸ்லிமாக, ஆணாக, சுயாதீனமுடையவராக இருக்க வேண்டும்.

2- அழகாக கூறக் கூடியவராக இருத்தல்.

3- தொடராக நீண்ட இடைவெளி விடாமல் அதான் கூறுதல்

4- தொழுகைக்காக உரிய நேரம் வருதல்.

அதானின் சுன்னத்கள்

1-கிப்லாவை முன்னோக்குதல்.

2-தொடக்குகளில் இருந்து முஅத்தின் சுத்தமாக இருத்தல்.

3-ஹையலல் ஸலா, ஹையாலல் பலாஹ் என்ற இடங்களில் வலது, இடது புறங்களில் திரும்பக் கூடியவராக இருத்தல்.

4-அதான் கூறும் போது காதுகளில் விரலை வைக்க வேண்டும்.

5-கவனமான முறையில் மிக அழகிய தொனியில் அதான் கூறல்.

6- ஒழுங்காக அதன் வரிசைப்படி அதான் கூறுதல்.

அதான் இகாமதின் முறைகள்

1-அதான் கூறும் ஒழுங்கு

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர், அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ் , , அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ் ,அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் , அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் , ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ், அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (முஸ்லிம்)(ஆதாரம் முஸ்லிம்).

2-அதான் கூறும் ஒழுங்கு

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர், அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ், கத்காமதிஸ்ஸலாஹ் கத்காமதிஸ்ஸலாஹ், அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்

காதுகளில் விரல்களை வைத்தல்.

அதானை கேட்பவர்கள் செய்ய வேண்டியவைகள்

1-முஅத்தின் சொல்வது போன்று கூற வேண்டும். ”ஹையலல் ஸலா, ஹையாலல் பலாஹ்” லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லா என கூற வேண்டும். (ஆதாரம் புஹாரி) என கூற வேண்டும்..

2-அதானின் பின்னால்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.(ஆதாரம் முஸ்லிம்).

3-அதானுக்கு பின்னர் நபியவர்கள் மீது ஸலவாத்து சொன்ன பின்னர் பின்வரும் துஆவை ஓத வேண்டும்அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ் (ஆதாரம் புஹாரி).

4- பின்னர் அதானுக்கும் இகாமத்திற்கும் இடையில் தனக்காக பிராத்தித்துக் கொள்ளலாம். அந்த துஆ நிராகரிக்கப்படமாட்டாது. நபியவர்கள் கூறினார்கள் «அதானுக்கும் இகாமத்திற்கும் இடையான துஆ நிராகரிக்கப்படமாட்டாது» (ஆதாரம் அஹ்மத்).

அதான் இகாமத்தின் சட்டங்களில் உள்ளவைகள்

1-இரண்டு தொழுகையை சேர்த்து ஒரு அதான் கூறுவது போதுமானது உதாரணம் லுஹர், அஸர் தொழுகைக்கு ஓரே அதான். ஆனால் ஒவ்வொரு தொழுகைக்கும் இகாமத் கூற வேண்டும்.

2-தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் பின்னர் தொழுகை தாமதிக்கப்பட்டால் இரண்டாவதாக இகாமத் சொல்ல தேவையில்லை.

3- முஅத்தின் சொற்களை மொழிதலில் தவறு செய்தல்.

(அ) «ஆலாகு அக்பர்» என்று கேள்வியாக கூறல்.

(ஆ) «அல்லாஹூ ஆக்பார்», என்று பாவிற்கு பின்னால் அலிபை சேர்த்தல் கூறல்..

(ஆ) «அல்லாஹூ அக்வார்», என்று வாவை அதிகரித்தல் கூறல்.

4-இகாமத் சொல்லப்பட்டால் சுன்னத்தான தொழுகை தொழுவது கூடாது. இகாமத் சொல்லப்பட்டால் சுன்னத்தான தொழுகையை ஆரம்பித்தால் அது கொஞ்சமாக இருந்தால் அதனை பூர்த்தி செய்வர். பின்னர் இமாமுடன் பர்ளான தொழுகைக்கு நுழைந்து கொள்வார்.

5-பருவ வயதை அடைந்த சிறுவர்களின் அதான் ஏற்றுக் கொள்ளப்படும்.

6-மறதி, தூக்கம் காரணமாக தவறப்பட்ட தொழுகைகளுக்கு அதான், இகாமத் கூற வேண்டும். நபியவர்கள் ஸஹாபாக்கள் சூரியன் உதயமாகும் வரை தூங்கிய போது «பிலால் ரழி அவர்களுக்கு அதான் கூறும் படி ஏவினார்கள். பின்னர் அவர்கள் வுழுச் செய்தார்கள், பின்னர் பஜ்ருடைய இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்னர் பிலாலிடம் இகாமத் சொல்லும்படி ஏவினார்கள். பின்னர் அவர்களுக்கு ஸூபஹ் தொழுகையை நடத்தினார்கள்».
(ஆதாரம் அபூதாவுத்)

7-அவசியமில்லாமல் அதான் கூறிய பின்னர் பள்ளியை விட்டு வெளியேறுவது கூடாது. அபூ ஹூறைறா ரழி அறிவிக்கின்றார்கள் «நபியவர்கள் அதான் கூறிய பின்னர் தொழாமல் வெளியேற வேண்டாம் என எங்களுக்கு ஏவினார்கள்».
(ஆதாரம் அஹ்மத்)

8-இரண்டு ஷகாதத் உடைய நிலைகளில் சத்தத்தை உயர்த்துவது மார்க்கமாக்கப்பட்டுள்ளது. அதே போன்று இரண்டு இரண்டாக சொல்லும் போது சத்தத்தை உயர்தி மீட்டுவார். இதனை நபியவர்களது சுன்னா உறுதிப்படுத்துகின்றது (ஆதாரம் அபூதாவுத்).

அவசியமில்லை

1-அதானில் இராகம், சுருதி சேர்ப்பது அவசியமில்லை. அதனால் அதானின் எழுத்து, வசனங்களில் கூடுதல், அல்லது குறைவுகள் ஏற்படும்.

2-அதானுக்கு பின்னால் நபியவர்கள் மீது ஸலவாத்து சொல்லும் போது சத்தத்தை உயர்த்துவது அவசியமில்லை.

3-”கத்காமதிஸ் ஸலா” என்ற இடத்தில் சில கூறுவது போல ”அகாமஹூல்லாஹூ வஅதாமஹா” என கூறுவது அவசியமில்லை.

பஜ்ர் தொழுகையின் அதான்

பஜ்ருக்கு இரண்டு அதன்கள் மாரக்கமாக்கப்பட்டுள்ளது. ஒன்று பஜ்ருடைய நேரம் வருதற்கு முன்னால் கூறுவது. இரண்டு பஜ்ருடைய நேரத்தில் கூறுவதாகும். முதலாவது பாங்கு கூறும் போது முஅத்தின் «அஸ்ஸலாது ஹைரும் மினன் நவ்ம்» என இருமுறை கூற வேண்டும். நபிவர்கள் கூறினார்கள்«பஜ்ருக்கு முதல் அதான் கூறினால் அஸ்ஸலாது ஹைரும் மினன் நவ்ம் அஸ்ஸலாது ஹைரும் மினன் நவ்ம் என கூறட்டும்.»(ஆதாரம் அபூதாவுத்)

அதான் ஷைத்தானை விரட்டுகிறது.

அபூ ஹூறைறா ரழி அறிவிக்கின்றார்கள் ”தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி (தத்வீப் என்பதில் நாடப்படுவது இகாமத் ஆகும். ) முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார் என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங் களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார்.” (ஆதாரம் புஹாரி)

பயன்கள்

1-அதான் கூறிய பின்னர் பள்ளியை விட்டு வெளியேறுவது கூடாது. அபூ ஹூறைறா ரழி அறிவிக்கின்றார்கள் ”ஒரு மனிதன் அதான் கேட்ட பின்னர் பள்ளியை விட்டு வெளியேறிய போது நிச்சளமாக இவர் அபா காஷிமுக்கு மாறு செய்தவர்.” என்றார்கள்.

2- சுன்னத்தான தொழுகைகளுக்கு அதானோ, இகாமதோ கிடையாது. அதே போன்று இரு பெரநாட்கள், மழை வேண்டி தொழுதல், ஜனாஸா தொழுகை, கிரகண தொழுகை போன்றவைகளுக்கும் அதானோ, இகாமதோ கிடையாது

3-கூறுகிறார் முஅத்தின் ஒரு விவசாயியின் வாழ்க்கைக்குப் பிறகு மழை அல்லது கடுமையான குளிரில்: உங்கள் இடத்தில் ஜெபியுங்கள்