ஹஜ், உம்ராவின் சட்டங்கள்

3154

ஹஜ், உம்ராவின் சட்டங்கள்

ஹஜ்

அரபு மொழியில் ஹஜ்ஜின் பொருள்

நாடுதல், முன்னோக்குதல்

நடைமுறை வழக்கில் ஹஜ்ஜின் பொருள்

குறிப்பிட்ட சில வணக்கங்களை நிறைவேற்றுவதற்காக குறிப்பிட்ட காலத்தில் மக்காவை நாடி வருதல்.

ஹஜ்ஜின் சட்டம், அதன் சிறப்பு

ஹஜ் இஸ்லாத்தின் தூண்களில் உள்ளதாகும். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அதனை கடமையாக்கி உள்ளான். இறைவன் கூறுகிறான் : {இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்}[ஆல இம்ரான் 97 ].

«வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' »(புகாரி, முஸ்லிம் )என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபியவர்கள் கூறினார்கள் «'உடலுறவு (ரபத் – கெட்ட வார்த்தை) மற்றும் பாவமான செயல்களில் (புசூக் – பாவம்) ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகிறது»(நூல் : திர்மிதி ) ஹஜ் வாழ்நாளில் ஒரு தடவை கடமையாகும்

ஹஜ்ஜின் நிபந்தனைகள்

1-இஸ்லாம்

காபிருக்கு கடமையில்லை, அவனிடமிருந்து இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டன்

2- புத்தியுள்ளவனாயிருத்தல்

«பைத்தியகாரனுக்கு ஹஜ் கடமையில்லை, மூன்று நபர்கள் குற்றவாளியாக கணிக்கப்பட மாட்டார்கள் : தூங்குபவர் எழும்பும் வரை, சிறுவர்கள் பருவ வயதை அடையும் வரை , பைத்தியகாரன் புத்தி தெளியும் வரையாகும் என்று»(நூல் : அபூ தாவூத் ) நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்

3- பருவ வயதை அடைந்திருத்தல்

சிறுவர்கள் மீது கடமையில்லை,ஆனால் ஹஜ் செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். என்றாலும் கடமையான ஹஜ்ஜை செய்தவராக கணிக்கப்படமாட்டார், அது அவருக்கு சுன்னத்தாக கணிக்கப்படும். ஒரு பெண் நபிகளாரிடத்தில் ஒரு சிறுவனை கொண்டு வந்து இவருக்கு ஹஜ் கடமையா என்று கேட்டாள், அதற்கு நபியவர்கள் «ஆம் உனக்கு நன்மையுண்டு »(நூல் : முஸ்லிம் ) என்று பதிலளித்தார்கள். என இப்னு அப்பாஸ் ( ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்

சிறுவர் ஹஜ் செவதாக இருந்தால் அவர் இஹ்ராம் ஆடையை அணிய வேண்டும்

4- சுதந்திரமானவனாக இருத்தல்

அடிமையின் மீது கடமையில்லை,நபியவர்கள் கூறினார்கள் «எந்த அடிமையோ ஹஜ் செய்து பின்பு அவர் உரிமையிடப்பட்டால் அவர் மீது மீண்டும் கடமையான ஹஜ் இருக்கிறது»(நூல் : பைஹகி)

5- சக்தி பெற்றிருத்தல்

பயணம் செய்வதற்கு(சாத் : ஒரு மனிதனுக்கு தேவையான உணவு, குடிபானம், ஆடை போன்றவை) போதுமான பணம், (ராஹிலா : மனிதன் பயணம் செய்ய கூடிய கார், விமானம், கப்பல் போன்றவை)வாகன வசதி போன்றவை இருத்தல் அல்லாஹ் கூறுகிறான்: {இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். } [ஆல இம்ரான் 97 ].

6- பெண்ணுக்கு மஹ்ரமான ஆண் துணை இருத்தல்

நபியவர்கள் பிரசங்கம் செய்ய நான் கேட்டதாக இப்னு அப்பாஸ் ( ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்: «எந்த பெண்ணும் மஹ்ரம் இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள்: அதற்கு ஒரு சஹாபி எழுந்து அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக எனது மனைவி ஹஜ் செய்ய சென்றாள் நானுமோ குறித்த ஒரு போரில் கலந்து கொண்டிருந்தேன், என்று கூறினார் அதற்கு நபியவர்கள் நீ அவளுடன் சென்று ஹஜ் செய் என்று கூறினார்கள் »(புகாரி, முஸ்லிம் )

ஒருவருக்கு பகரமாக ஹஜ் செய்தல்

வயோதிபம், தீராத நோய், உடல் பலவீனம் போன்றவற்றால் ஹஜ், உம்ரா செய்ய முடியாமல் இருந்தால் அவருக்கு பகரமாக இன்னொருவரை பொறுப்பாக்க முடியும், பொருப்பக்கப்பட்டவர் இஹ்ராம் கட்டிய பின் பொருப்பக்கியவர் நோயில் இருந்து சுகமானாலும் பொறுப்பாக்கியவர் ஹஜ், உம்ரா செய்த செய்த நன்மையை பெற்றுக்கொள்வார்.

பள்ல் இப்னு அப்பாஸ் ( ரழி ) அறிவிக்கிறார்கள்: «நிச்சயமாக கத்அமிய்யாஹ் என்ற கோத்திரத்தை சேர்ந்த பெண் நபிகளாரிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே எனது தந்தையின் மீது ஹஜ் கடமையாக உள்ளது. அவருமோ ஒட்டகத்தில் ஏற முடியாதவாறு வயது முதிர்ந்த நிலையில் உள்ளார், என்று கூறினாள், அதற்கு நபியவர்கள் நீ அவருக்கு பகரமாக ஹஜ் செய் ”»
(நூல் : திர்மிதி ) என்று நபியவர்கள் கூறினார்கள்

ஹஜ் செய்ய முடியாத மனிதர்

ஒருவருக்கு பகரமாக ஹஜ் செய்பவருக்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு

மேற்கூறப்பட்ட ஹஜ்ஜின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்

பகரமாக ஹஜ் செய்பவர் தனக்கு முதலில் ஹஜ் செய்திருக்க வேண்டும், தான் ஹஜ் செய்யாமல் அடுத்தவருக்கு ஹஜ் செய்தால் அது அவருக்கு கடமையான ஹஜ்ஜாக மாறும். இப்னு அப்பாஸ் (ரழி ) அறிவிக்கிறார்கள் : «நிச்சயமாக நபியவர்கள் லப்பைகே சுப்ருமா என்று ஒரு மனிதர் சொல்வதை கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் ஷுப்ருமா என்றால் யார் என்று கேட்டார்கள் அதற்கு அந்த மனிதர் அவர் என்னுடைய சகோதரர் அல்லது என்னுடைய உறவினர் என்று பதிலளித்தார், அதற்கு நபியவர்கள் நீர் உனக்காக வேண்டி ஹஜ் செய்து இருக்கிறீரா என்று கேட்டார்கள் அதற்கு அவர் இல்லை என்றார், அதற்கு நபியவர்கள் நீர் முதலில் ஹஜ் செய்து கொள் பிறகு ஷுப்ருமாவுக்காக வேண்டி ஹஜ் செய் »
(நூல் : அபூதாவூத் ). என்று கூறினார்கள்.

உம்ரா

அரபு மொழியில் உம்ராவின் பொருள்

சந்தித்தால்

இஸ்லாத்தில் உம்ராவின் வரைவிலக்கணம்

குறிப்பிட்ட சில வணக்கங்களை மேற்கொள்வதற்காக எந்த நேரத்திலாவது கஃபாவை தரிசித்தல்

உம்ராவின் சட்டம், அதன் சிறப்பு

உம்ரா வாழ்நாளில் ஹஜ்ஜை போன்று ஒரு தடவை கடமையாகும்,«'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது'».(ஆதாரம் இப்னுமாஜா) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்னும் நபியவர்கள் கூறினார்கள் : «இரண்டு உம்ராக்களுக்கிடையில் செய்கிற சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவர்கத்தை தவிர வேறு கூலி கிடையாது»(புஹாரி, முஸ்லிம் ) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: