ஸகாத் அதன் சட்டமும் நிபந்தனைகளும்.

5693

ஸகாத் அதன் சட்டமும் நிபந்தனைகளும்.

ஸகாத் என்றால் மொழிரீதியாக

வளர்த்தல், அதிகரித்தல்.

ஸகாத் என்றால் பரிபாசையில்.

குறிப்பிட்ட ஒரு கூட்டத்தினருக்கு குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கப்படும் குறிப்பிட்ட தொகை பணம் ஆகும்.

இஸ்லாத்தில் ஸகாதின் இடம்

ஸகாத் இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஒரு கடமையாகும், அது இஸ்லாத்தின் தூன்களில் மூன்றவாது தூன் ஆகும். அல்லாஹ் கூறுகிறான் – {ஸகாதை கொடுங்கள்}[நூர் – 56].

நபியவர்கள் கூறினார்கள் -«வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’»(புஹாரி, முஸ்லிம்).

ஸகாத்தை மறுப்பவரின் சட்டம்

ஸகாத்தை மறுப்பவர் ஓன்று அது மார்க்கத்தில் இல்லை என்று மறுப்பார் இல்லையெனில் கஞ்சத்தனத்தால் மறுப்பார்.

1-இஸ்லாத்தில் ஸகாத் இல்லை என்று மறுப்பவர் .

யார் ஸகாத் வாஜிப் என்று அறிந்து அதனை மறுக்கிறாரோ அவர் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் பொய்பித்ததன் காரணத்தால் இறை மறுப்பாளர் ஆகி விடுகிறார். இதற்கு ஆதாரமாக இஜ்மா அமைகிறது(வாஜிப் என்பதை மறுத்தல்.).

2-கஞ்சத்தனத்தால் ஸகாதை மறுப்பவர்.

யார் கஞ்சத்தனத்தால் ஸகாத்தை மறுக்கிறாரோ அவரிடம் இருந்து வற்புறித்தி பெறப்படும். அதன் மூலம் அவர் இறை நிராகரிப்பாளனாக ஆக மாட்டார். அவர் பெரும் பாவங்களில் ஒரு பாவத்தை செய்த போதிலும், நபி ( ஸல் ) அவர்கள் ஸகாத்தை மறுப்பவரை பற்றி குறிப்பிடும் போது கூறினார்கள்: «பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்»
(ஆதாரம் முஸ்லிம்):

அவர் அதற்கல்லாது கொல்லப்பட வேண்டியவராக இருப்பின் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு ஸகாத் வழங்கும் வரை இருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் – {ஸகாதை கொடுத்து வந்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்}. [தவ்பா - 5].

நபி ( ஸல் ) அவர்கள் : «மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’»(புஹாரி, முஸ்லிம்).

ஸகாதை மறுப்பவர்களோடு கலீபா அபூபக்கர் யுத்தம் செய்தார்கள்.«‘அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்யும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் புரிந்தே தீருவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செலுத்திவந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் செலுத்த மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர் புரிவேன்’ என்றார்கள்»(ஆதாரம் புகாரி).

ஸகாத் கடமையானதன் நுட்பம்

1- கஞ்சத்தனம் மற்றும் பாவங்களில் இருந்து உள்ளங்களை சுத்தப் படுத்தல். அல்லாஹ் கூறுகிறான்– {(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,.}. [தவ்பா - 103].

2. பணத்தை சுத்தப் படுத்தி அதனை அதிகரிக்க செய்தல்,மற்றும் அதில் , விருத்தி ஏற்படுத்தல். நபியவர்கள் கூறினார்கள் «ஸகாத் உங்கள் செல்வத்தில் எதனையும் குறைத்து விடாது»
(ஆதாரம் முஸ்லிம்).

3. அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடி பணிகிறானா , பணத்தின் மோகத்தை விட அவனை நேசிக்கிறானா என்றும் அடியனை சோதிப்பதற்காக.

4. அன்பை ஏற்படுத்தும் வகையில் ஏழை எளியவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கும் ஆகும், அவ்வாறு செய்யும் போது இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஒரு சமுக நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது.

5. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதை பழக்கப் படுத்திக் கொள்வதற்காக.

ஸகாத்தின் சிறப்பு

1.அல்லாஹ்வின் அருட்கொடையை பெற காரணமாக அமைகிறது, அல்லாஹ் கூறுகிறான் – {ஸகாத்தை கொடுப்போருக்கும்}[அஃராப் - 156].

2.அல்லாஹ்வின் உதவியை பெற நிபந்தனையாக இருக்கிறது, அல்லாஹ் கூறுகிறான். {அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.

மேலும் “அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது}[ஹஜ் – 40,41].

3.பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கு காரணமாக அமைகிறது, நபியவர்கள் கூறினார்கள் «நீர் நெருப்பை அணைப்பது போன்று ஸதகா உங்கள் பாவங்களை அணைக்கின்றது»(ஆதாரம் திர்மிதி)

ஸகாத் கடமையாகும் பொருட்கள்

ஸகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள் .

1.முஸ்லிமாக இருத்தல்

இறை நிராகரிப்பாளர்களிடம் இருந்து நிறை வேறாது ஏனென்றல் அல்லாஹ் இறை நிராகரிபாலர்களின் செயல்களை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

2..சுதந்திரமானவராக இருத்தல்

அடிமைக்கு வாஜிபாக மாட்டாது ஏனென்றால் அவனின் பணம் அவனது எஜமானனுக்கு சொந்தமானதாகும்.

3.ஸகாத் கடமையாகும் அளவை அடைந்து இருத்தல்.

ஸகாத் கடமையாகும் அளவு.

பணத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை அடைந்தால் அதிலே ஸகாத் கடமையாகும்.

ஸகாத் கடமையாகும் அளவின் நிபந்தனைகள்

1.சாப்பாடு , ஆடை , தங்குமிடம் போன்ற மனிதன் தவிர்ந்து கொள்ள முடியாத அளவு அத்தியவசிய தேவைகளை விட ஸகாத் கடமையாகும் அளவு (நிஸாப்) அதிகமாக இருத்தல். ஏனென்றல் ஸகாத் ஏழைகளின் தேவைகளை நிறைவு செய்யவே கடமையாக்கப் பட்டது, அதனால் ஸகாத் கொடுப்பவர் தேவை அற்றவராக இருப்பது அவசியமாகிறது.

2.ஸகாத் கடமையாகும் அளவு( நிஸாப்) குறிப்பிட்ட ஒருவருக்கு பூரண சொந்தமாக இருத்தல், குறிப்பிட்ட ஒருவருக்கு சொந்தம் இல்லாத பொருளில் ஸகாத் கடமையாக மாட்டாது. உ +ம் : பள்ளி கட்டுவதற்காக ஓன்று சேர்க்கப் பட்ட பணம், பொது வேலைகளுக்காக வக்ப் செய்யப்பட பணம், சமூக சேவை அமைப்புகளின் பணம்.

4.ஸகாத் கடமையாகும் பணம் ஒரு வருடம் பூர்த்தி அடைதல்.

காலம்

ஹிஜ்ரி ஒரு வருடம் பூர்த்தியாகுதல்

ஸகாத் கடமையாகும் அளவு( நிஸாப்) ஒருவரிடத்தில் ஹிஜ்ரி கணக்கின் பிரகாரம் பன்னிரெண்டு மாதங்கள் அவரிடத்தில் இருத்தல். இந்நிபந்தனை தங்கம்,வெள்ளி, வியாபார பொருள் , கால்நடைகள் இவைகளுக்கு மாத்திரம் குறிப்பானதாகும். தானியங்கள் , பழவகைகள் ,கணியம் ,புதையல் ஆகியவைகளில் நிபந்தனையாக மாட்டாது.