வியாபார பொருட்களின் ஸகாத்

1467

வியாபார பொருட்களின் ஸகாத்

வியாபார பொருள்

இலாப நோக்கில் கொடுக்கல் வாங்கலுக்காக தயார் செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளையும் குறிக்கும்.

வியாபார பொருள் என்பதாக பெயர் சொல்லப் பட்டது ஏனென்றல் அப் பொருட்கள் எப்பொழுதும் தங்கி விடாது தரிபடும் பின்பு நீங்கிவிடும், வியாபாரி அப்பொருள் அவனிடத்தில் தங்கி இருப்பதை விரும்ப மாட்டான் மாறாக தங்கம்,வெள்ளி மூலமாக அவைகளின் இலாபத்தையே விரும்புகிறான்.

வியாபார பொருட்களில் ஸகாத்தின் சட்டம்.

வியாபார பொருட்களில் ஸகாத் கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான் – {(நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;” }[பகறா - 267].

பொதுவாக அறிஞர்கள் மேலுள்ள வியாபாரப் பொருட்களையே குறிப்பிடுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான் – {(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,.”} [தவ்பா - 103].

வியபாரம் மூலமாக கிடைக்கப்பெறும் பணத்திற்கு ஸகாத் வாஜிபாகும்.

வியாபார பொருட்களில் ஸகாத் வாஜிபாவதற்கான நிபந்தனைகள்.

1-வியாபார பொருட்களின் பெறுமதி ஸகாத் கடமையாகும் அளவை அடைந்து இருத்தல், ஸகாத் கடமையாகும் அளவு தங்கம், வெள்ளி ஆகியவைகளின் பெறுமதிக்கு ஏற்ப கணிக்கப்படும்.

2-அவைகளின் காலம் பூரணமாகி இருத்தல்.

3-அவை வியாபாரத்திற்காக உருவாக்கப் பட்டு இருத்தல், அதாவது அவைகளின் மூலம் சம்பாதிப்பது நோக்கமாக இருத்தல்: நபி (ஸல்) அவர்கள் «குறிப்பிட்டார்கள்: (நிச்சயமாக செயல்கள் அணைத்தும் எண்ணத்தை பொறுத்ததே)»(புகாரி,முஸ்லிம்).

ஒருவரின் எண்ணம் வியாபார நோக்கில் இருந்து அப் பொருளை பாவனை செய்வதாக மாற்றம் பெற்றால் அவரின் ஸகாத் கடமையாகும் என்று கணிக்கப் பட்ட காலம் துண்டித்து விடும், மீண்டும் வியாபார நோக்கம் ஏற்பட்டால் புதிதாக காலம் துவங்கும். இவ்வாறு எண்ணத்தை மாற்றுவதன் மூலம் ஸகாத் கொடுக்காமல் இருப்பதற்காக சூழ்ச்சியை நாடினால் அப்போது காலம் துண்டிக்கப் பட மாட்டாது.

உ +ம் : ஒருவர் முகர்ரம் மாதம் வியாபார நோக்கில் ஒரு பூமியை வாங்குகிறார் பின்பு ஷஃபான் மாதத்தில் அதில் அவர் வீடு கட்டி வசிப்பதாக அவரின் எண்ணத்தை மாற்றுகிறார் இச்சந்தர்ப்பத்தில் அவரின் காலம் துண்டிக்கப் பட்டு விடும் , பின்பு மீண்டும் ஷவ்வால் மாதத்தில் எண்ணத்தை வியாபாரம் என்பதாக மாற்றுகிறார் அப்போது அவரின் ஸகாத் கொடுப்பது கடமையாகும் என்று குறிப்பான காலம் புதிதாக கணிக்கப்படும்.ஆனால் இவ்வாறு எண்ணத்தை மாற்றுவதன் மூலம் ஸகாத் கொடுக்காமல் இருப்பதற்காக சூழ்ச்சியை நாடினால் அப்போது காலம் துண்டிக்கப் பட மாட்டாது.

வியாபார பொருட்களில் ஸகாத் கொடுக்கும் முறை .

ஸகாத் கடமையாகும் காலம் பூர்த்தி அடைந்ததன் பின் வியாபாரத்திற்காக விடப்பட்ட பொருற்களை சந்தையில் அப்பொழுது இருக்கும் விலையில் கணிக்கப் படும் பின்பு அப்பொருளில் இருந்து அல்லது அதன் பெருமதியில் இருந்து ஏழைகளின் தேவைக்கு ஏற்ப ஸகாத் கொடுக்கப் படும்.

வியாபாரி வியாபார பொருட்களிருந்து ஸகாத்தை கணக்கெடுப்பதற்கான முறை

1-தன்னிடத்தில் இருக்கும் வியாபார பொருளுக்கு அப்பொழுது சந்தையில் என்ன பெறுமதி என்பதை கணிப்பார்.

2-அத்துடன் தன்னிடம் இருக்கும் பணத்தையும் சேர்ப்பார், அதனை வியாபாரத்திற்கு பயண்படுத்தி இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி.

3-தான் கொடுக்க இருக்கும் கடனையும் அதனுடன் சேர்ப்பார்.

4-கடனுடன் தொடர்பான விடங்களை அறிதல்.

5-பின்பு அவரிடத்தில் இருக்கும் பணத்தில் நூற்றில் இரண்டரை வீதம் ஸகாத் கொடுப்பார்.

வாஜிபான ஸகாத் = ( வியாபார பொருளின் பெறுமதி + நாணயம்+கொடுக்க வேண்டிய கடன் – அவருக்கு கிடைக்க வேண்டிய கடன்)*(சந்திர கணக்கின் பிரகாரம் காலம் பூரணம் அடைந்து இருந்தால் .....)

-வியாபரத்தில் ஸகாத் கடமைய்யாகுவதற்கு அப்பொழுது இருக்கும் வியாபார பொருட்களுக்கு ஸகாத் கடமையாகும் நாளின் பெறுமதியை கணிப்பதன் மூலம் பார்க்கப்படும். அதாவது எவ்வித இலாப நட்டங்களை பார்க்காது திறைசேரியின் உதவியின் மூலம் கணிப்பார்.

இரும்பு

வாகனம்

பலகை

ஆடை

-பொதி செய்ய பயன்படுத்தப்படும் பைகளை ஸகாத் கடமையாகும் பொருளில் கணிக்கப் பட மாட்டாது,அவைகளை விற்பதின் மூலம் வியாபர நோக்கம் இருந்தாலே அல்லாமல். வியாபார பொருற்களில் பயன்படுத்தப்படும் அப்பைகளின் மூலம் அப்பொருளின் பெறுமதி அதிகரித்தால் உ+ம் அதற்கு என்று உருவாக்கப்பட்ட பைகள் அவைகளையும் பெறுமதியில் கணிக்கப்படும், அவை அப்பொருளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை என்றால் அப்பைகள் பெறுமதியில் கணிக்கப் பட மாட்டாது.

-மொத்த வியாபாரியாக இருந்தாலும் சரி அல்லது சில்லறை வியபாரியாக இருந்தாலும் சரி ஒவொருவருக்கும் வளமையாக ஸகாத் கடமையாகும் காலத்தின் இறுதிப் பகுதியில் அப்பொருளை எப்பெருமதிக்கு வாங்க முடியுமோ அப் பெறுமதியை கணிப்பது அவசியமாகும். கால அளவு அல்லது ஏடுகளில் குறிப்பிட்டுள்ள அளவு (:தற்கால ஸகாத் விவகாரங்களுக்குரிய ஏழாவது மன்ரத்துக்குரிய ஏற்றமான உபதேசங்களும் தீர்மானங்களும் 1997-ஹி1417)

-அது வியாபார சந்தைவிலைக்கும், சந்தை விளைக்கும் ,வித்தியாசப்படும்.

ஸகாத் கடமையாகும் நாளிற்கும் அதை நிறைவேற்றும் நாளுக்கும் இடையில் பெறுமதி வித்தியாசப் பட்டால், ஸகாத் எப்பொழுது கடமையாகியதோ அப்பொழுது அப்பொருளுக்கு என்ன பெறுமதி இருந்ததோ அதனையே கணிப்பார்.

-விற்கப்பட்ட அசையும் பொருளை வாங்கியவர் கைப்பற்ற முன்னால் அதனை விற்றவரோ அதற்கான ஸகாத்தை வழங்க வேண்டும். குறிப்பிட்ட பொருள் ஒன்றை விற்றால் அப் பொருளின் உரிமை என்பது அதனை கைப்பற்றுவதன் மூலமே ஏற்படும். உதாரணமாக – பொருளை வாங்குபவர் விற்பவருடைய இடத்தில் உள்ள துறைமுகத்தில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போதே அதன் உரிமை வாங்கியவருக்கு கிடைத்து விடும். அதே போல போல வாங்குபவர் தான் இருக்கும் துறைமுகத்தில் பொருட்களை கைப்பற்றுவதாக இருந்தால் அப்போதே வாங்குபவருக்கு பொருள் உரிமையாகும்.

-வியாபார பொருட்கள் வித்தியாசமான கலப்புள்ள பணமாக அல்லது தங்கம் வெள்ளியாக இருப்பின் இதன் போது ஸகாத்தை வியாபாரி எப்பணத்தை கொண்டு வயாபாரம் செய்கிராரோ அப்பணத்திலேயே ஸகாத்தை கணக்கிட வேண்டும். அதனை ஸகாத் வழங்கும் நாளிலுடைய பெறுமதியை வைத்தே தீர்மானிப்பார்.

-வியாபாரி பணத்தை கொடுத்து பொருளை கைப்பற்ற வில்லையனின் பொருளை விற்றவரே அதற்கான ஸகாத்தை கொடுக்க வேண்டும்.

ஸகாத் கடமையாகாத பொருட்கள்

01- வாகனம் செய்ய இரும்பு பயனபடுத்துவது போல சவக்காரம் செய்ய எண்ணை பயன்படுத்துவது போல தோழிற்சாலைகயில் பயன்படுத்த கூடிய பொருட்களில் வருட இறுதியில் ஸகாத் கடமையாகும். இது ஏனைய தொழிட்சாலையில் பயன்படுத்துகின்ற மிருகங்கள், வித்துகள் போன்றவையிலும் ஸகாத் கடமையாகும்.

02- பொருட்கள் செய்கின்ற இயந்திரங்களுக்கு ஸகாத் கடமையில்லை.

03- செய்து முடிக்காத பொருட்கள், செய்யாத பொருட்களுக்கான ஸகாத்

04- செய்து முடிக்காத பொருட்கள், செய்யாத பொருட்கள் மீது வருட இருதியில் வியாபார பொருட்கள் போல ஸகாத் கடமையாகும்.

வியாபார பொருட்களுகடன் ஸகாத்துக்குரிய விளைச்சளை போன்று இன்னுமொறு காரணம் ஒன்று சேர்தல்

வியாபார பொருட்களுகடன் ஸகாத்துக்குரிய விளைச்சளை போன்று இன்னுமொறு காரணம் ஒன்று சேர்தால் அது வியாபார பொருட்களுடைய ஸகாத் கொடுக்கப்படும். 26

ஸகாத் கடமையாகாத பொருற்கள்.

-கடலில் இருந்து பெறப்படும் பொருற்கள் ; முத்து, பளிங்கு ,மீன் இவை வியாபார பொருற்களாக கணிக்கப் பட்டால் ஸகாத் கடமையாகும்.

-வாகனம், அசையா பொருற்கள் இவைகல் வாடகைக்காக விடப் பட்டால் ஸகாத் கடமையாக மாட்டாது. இவைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் பெறப் படும் வாடாகை பணத்திலே காலம் பூரணம் அடைந்து , ஸகாத் கடமையாகும் அளவு பணமும் இருந்தால் ஸகாத் கடமையாகும்.

-வாகனம் வீடு போன்ற மனிதன் தனது தேவைக்காக பயன் படுத்தும் பொருட்களிலும் ஸகாத் கடமையாக மாட்டாது.

-வியாபார பொருள் என்பதுடன் வேறு ஏதாவது ஒரு காரணம் சேர்ந்தால் உ+ம் விவசாயம் போன்று அவர் வியாபார பொருள் என கணக்கிட்டு அதற்கு ஸாகாத் கொடுப்பார்.

-ஸாகாத் கடமையாகாத பொருற்களின் வகைகள்.

-முத்து, பவளம்,மீன் போன்று கடலில் இருந்து பெறப்படும் பொனருட்கள்.இவை வியாபார பொருட்களாக அமைந்தால் ஸாகாத் கடமையாகும்.

-அசையா பொருட்கள் மற்றும் வாகனம் போன்ற பொருட்கள் வாடகைக்கு விடுவதற்காக மாத்திரம் பாவிக்கப் பட்டால் அவைகளிலும் ஸாகாத் கடமையாக மாட்டாது.மாறாக அப்பொருட்களில் இருந்து பெறப்படும் வாடகை பணம் ஸாகாத் கடமையாகும் அளவை அடைந்து காலம் பூரணம் அடைந்தால் அவ் வாடகை பணத்தில் ஸாகாத் கடமையாகும்.

-வாகனம் வீடு போன்று மனிதன் தேவைக்காக பயண்படுத்தும் பொருட்கள்.

மூலதணத்திற்கான ஸகாத்

லாபத்தை நோக்காக கொண்டு செய்யப்படும் வியாபார சொத்துக்களில் மூலதணத்திற்கு ஸகாத் கடமையாகும். அசையா சொத்துக்களுக்கு ஸகாத் கடமையாகாது. உதாரணம் – கடையிலுள்ள தட்டுக்கள், தொழிலுக்கான லொறிகள், பாரம் தூக்கிகள் போன்றவற்றிற்கான ஸகாத்.

ஸகாத் கடமையாகும் அளவை அடைந்து இருத்தல்.

அனைத்து வருடங்களிலும் அதனுடை ஆரம்மத்திலிருந்து இறுதி வரை தவனையை அடைவது நிபந்தனையா?

அல்லது வருடத்தின் ஆரம்பமும் இறுதியும் பூரமாவது போதுமாகுமா? அல்லது கால இறுதியில் பூரணமாகுவது போதுமாகுமா?

எல்லா காலங்களிலும் கணக்கெடுப்பது சிரமம் என்பதால் அது ஆரம்பத்திலும் இறுதியிலும் பூரணமாகுவது அவசியமாகும். ஆரம்பத்தில் ஏன் கடமை எனின் ஸகாத் வாஜிபாக வேண்டும் எனின் பூரணமாக இருப்பதாகும். இறுதியில் பூரணமாகுவது ஏன் எனில் ஸகாத் கடமையாகும் காலம் அடைந்து விட்டது என்பதால் ஆகும். ரமழான் போன்ற மாதத்தை குறிப்பாக்கி ஸகாத் கொடுப்பது மனிதர்களுக்கு இலகுவானதாகும்.

பங்கிற்கான ஸகாத்

பங்கு

கூட்டு ஸகாத்தின் முதலீடுருந்து சமமான பகுதில் ஒன்றாகும்

உதாரணம்: கூட்டு ஸகாத்தில் முதலீடாக மூன்று மில்லியன் போட்டனர். ஆரம்பத்தில் 10000 பங்குகலாக பிரித்தனனர், ஒவ்வொரு பகுதிகளிலும் 300 டொலர் இருந்தனர். இதுதான் கூட்டாகும். கூட்டு பங்குடையவர் வெரின் பங்கினங்க அவர் ஒரு பங்காளியாவார்.

பங்கு ஸகாத்தை பரிமாறுவதன் சட்டம்

பங்கு செயல் ஹரமாக இல்லாவிட்டால் அல்லது கொடுக்க வாங்கல் வட்டியை கொண்டு நடைபெறாவிட்டால் இது ஆகுமாகும்.

பங்குகளுக்கான ஸகாத்தின் வழிமுறை

-பங்குதார்களின் நிருவனம் ஸகாத்தை கொடுப்பதாக சட்டமிருந்தால் அல்லது பங்குதார்கள் நிருவனத்தையே கொடுக்க வேண்டும் என வேண்டினாலோ நிருவனமே ஸகாத்தை கொடுக்க வேண்டும்.

-பலருடைய கால்நடைகளை சேர்த்து ஒன்றாக பராமரிப்பவர் எவ்வாறு ஒரு தனிமனிதனின் ஸகாத் போன்று வழங்குவாரோ அவ்வாறே பங்குதார்களின் ஸகாத்தை நிறுவனம் வழங்கும்.

-அறிஞர்கள் கூட்டு ஸகாத்தில் ஆரம்ப கூட்டு பணத்தில் எடுப்பதில்லை எனறு ஏகோபித்த கருத்தில் இருக்கிறார்கள்;. என்றாலும் ஒரே பங்கை இட்டுருக்கின்றார்களா என்பதை பார்ப்பார்கள்.

இதற்காகத்தான் பின்வருவரும் சட்டங்களை விதித்துள்ளார்கள்:

“கூட்டு பங்கில் இருக்க கூடிய எல்லாருக்கும் இந்த சட்டம் அமுல்படுத்துவது இல்லை.என்றாலும் ஒவ்வொருவருக்கும் குறிப்பானவற்றை ஒரே விதத்தில் பார்க்கப்படும்.”

-கூட்டு ஸகாத் வசூலிப்பவர் மீது ஸாhத் கடமையாக பணத்தை கட்டிடம் கரிpயாளங்கள் கட்டல்,வாகன தரிப்பிடம் அமைத்தல் போன்றவைகளுக்கு பயன்படுத்துவது கடமையாகும். நிர்வாகம் பொறுப்படுக்காமல் விட்டால் கூட்டு ஸகாத்துடையவர்கள் பின்வருமாறு ; ஸகாத்தை கொடுக்க வேண்டும்.

1. விளைச்சளுடையதை அதே போன்று கொடுப்பார்கள்.

2. வியாபார பொருட்களில் ஒவ்வொருவரின் இலாபத்திற்கு ஏற்ப சந்தை விலையை கவனித்து கொடுப்பார்கள்.

3. தொழிற்சாலைகளில் அதனுடைய இலாபத்திற்கு ஏற்ப கொடுப்பார்கள்.

4. கூட்டு ஸகாத்தில் இருக்க கூடிய ஒரு வருட நடுவில் தன்னுடைய பொருலை விட்டால் வருட இறுதியில் ஸகாத் கொடுக்க அவறும் இணைந்த கொல்வார்.வாங்கியவர் மேலே கூறியதை போன்று வாங்கியவைகளுக்கும் ஸகாத் கொடுப்பார். (தற்காலிக மார்க்க சட்ட தீர்ப்புக்கள் (பக்கம் 54))