மழை வேண்டித் தொழுதல்

2082

மழை வேண்டித் தொழுதல்

மழை வேண்டுதல்

பூமி காய்கின்ற போது அல்லது மழை குறைகின்ற பொது நீரை வேண்டி நிறைவேற்றப்படும் தொழுகை இதுவாகும்.

மழை வேண்டித் தொழுதல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம்.

மழை வேண்டித் தொழுதல் என்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். நபியவர் அவ்வாறே செய்ததாக அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழி அறிவிக்கிறார்கள் «நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்»(புஹாரி முஸ்லிம்)

மழை வேண்டித் தொழுகையின் நேரம்

பூமி காய்ந்து கிடக்கும் போது, மழை குன்றிய போது, கிணறுகள், ஊற்றுக்களில் தண்ணீர் வற்றிய போது, ஆறுகள் வற்றிய போது, மழை வேண்டித் தொழுவதை இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளது. என்றாலும் சூரியன் உதித்து ஈட்டியளவு உயர்ந பின்னர் தொழுவது சுன்னத்தாகும். அதாவது பெருநாள் தொழுகை போல பஜ்ருடைய நேரத்திலிருந்து முக்கால் மணித்தியாலங்களின் பின்னர்.

மழை வேண்டித் தொழுகையின் இடம்

பள்ளியில் தொழுவதை விட திடலில் தொழுவதே சுன்னாவாகும். நபியவர்கள் அவ்வாரே செய்துள்ளார்கள்.

மழை வேண்டித் தொழுகையின் முறை

1- அது இரண்டு ரக்அத்தாகும். அதில் அதானும் இகாமத்தும் கிடையாது. மேலும் வெளிப்படையாக ஓத வேண்டும்.

2- ஆரம்ப தக்பீருக்கு பின்னால் ஏழு முறை தக்பீர் கூற வேண்டும். இரண்டாவது ரக்அத்திற்காக ஸூஜூதில் இருந்து எழும்பும் தக்பிருடன் ஐந்து தக்பீர் கூற வேண்டும்.

3- ஒவ் வொரு தக்பீரிலும் கையை உயர்த்தி அல்லாஹ்வை புகழ்ந்து நபியவர்கள் மீது ஸலவாத்தும் சொல்ல வேண்டும்.

4- தொழுகையின் பின்னர் இமாம் ஒரு குத்பா நிகழத்த வேண்டும். அதில் அதிகமாக பாவமன்னிப்பு, குர்ஆன் ஓத வேண்டும். பின்னர் மழை வேண்டி வந்துள்ள துஆக்களை கேட்க வேண்டும்.

5- இதன் போது இமாம் கிப்லாவை முன்னோக்கி தனது ஆடையை மாற்றி இடது பக்கத்தை வலமு பக்கமும் வலது பக்கத்தை இடது பக்கமும் ஆக்கிக் கொள்வார்.

மழை வேண்டித் தொழுவதில் உள்ள சட்டங்கள்

1- பாவங்களை விட்டும் தவ்பாச் செய்யம் படி மக்களுக்கு ஞாபகம் ஊட்டி நல்லுபதேசம் செய்ய வேண்டும். தேவை உடையவர்களை விட்டும் பாவிகள் வேளியேற வேண்டும். ஏனனில் பாவத்தினாலேயே மழை தடைப்பட்டுள்ளது. தவ்பா, பாவமன்னிப்பு, தக்வா இவைகளே துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கரிய காரணமாகும். அதே போல பரகத், நலவு நடப்பதற்குரிய காரணியாகும். மேலும் ஸதகா கொடுக்க வலியுறுத்துகின்றது. ஏனனில் அது ரஹ்மத்திற்கான காரணமாகும்.

2- அதற்காக ஒரு நாளை தீர்மானித்து மக்கள் அதற்காக தயாராக இருக்க வேண்டும்.

3- இதன் பொது அச்சத்தோடு, கீழ்படிந்து, பணிவானவர்களாக அல்லாஹ்விடம் வேண்டியவர்களாக செல்ல வேண்டும். இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள். «நபியவர்கள் கீழ்படிந்தவர்களாக, அமைதியாக, பணிவுடன் (அழகையும், அலங்காரத்தையும் விடுதல்) தொழும் இடத்தை அடையும் வரை இருப்பார்கள்»(ஆதாரம் அபூதாவுத்)

4- கையை உயர்த்தியவர்களாக பாவமன்னிப்பு, துஆ போன்றவைகளை அதிகமாக கேட்க வேண்டும்.

மழை பொழியும் போது ஆகுமான செயல்கள்

முதல் முதலாக மழை பொழியும் போது ஆடையை விலக்கி நிற்பது ஆகுமானது. «(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது மழை பெய்தது. உடனே அவர்கள் மழைத் துளிகள் தம்மீது விழும் விதமாக தமது ஆடையைச் சற்று விலக்கினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே, ஏன் இவ்வாறு செய்தீர்கள்?”என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “இது (புத்தம் புதிதாக) இப்போதுதான் இறைவனிடமிருந்து வருகிறது” என்று பதிலளித்தார்கள்»(ஆதாரம் முஸ்லிம்)

மழை பொழிவது அல்லாஹ் ஒருவனின் அருளினால் ஆகும்.

அல்லாஹ்வின் கண்ணியத்தாலும் அருளினாலும் தான் மழை பொழிகின்றது என்பதை ஒரு முஸ்லிம் ஈமான் கொள்வது அவசியமாகும். ஆனால் “இன்ன இன்ன நட்சத்திரத்தால் தான் மழை பொழிந்த்து” என சிலர் கூறுவது போன்று கூறுவது ஷிர்க் ஆகும்.