மறதிக்கான,நன்றிக்கான, திலாவத் ஆகியவற்றிற்கான ஸூஜூத்

928

மறதிக்கான,நன்றிக்கான, திலாவத் ஆகியவற்றிற்கான ஸூஜூத்

முதலாவது - மறதிக்கான ஸூஜூத்

மறதிக்கான ஸூஜூத்

இரண்டு ஸஜதாக்கள் அவை இரண்டையும் தொழுபவர் செய்வார். தொழுகையில் மறதி காரணமாக செய்யப்படும் செயற்பாடாகும்.

மறதிக்கான ஸூஜூத் செய்வதற்கான காரணங்கள்

மறதிக்கான ஸூஜூத் செய்வதற்கான காரணங்கள் மூன்றாகும். அவை – சந்தேகம், கூட்டல், குறைத்தல்

1-சந்தேகம்

சந்தேகம்

இரண்டில் எது நடந்தது என சந்தேகம் ஏற்படுவது.

தொழுகையில் ஏற்படும் சந்தேகம் இரண்டு வகைப்படும்.

1-தொழுகைக்கு பின்னரான சந்தேகம்.

இது கவனிக்க வேண்டிய சந்தேகம் கிடையாது.

உதாரணமாக - ஒருவருக்கு சுபஹ் தொழுத பின்னர் அவர் இரண்டு ரக்அத் அல்லது மூன்று ரக்அத் தொழுதாரா? என்ற சந்தேகம் ஏற்படின் இதை கணக்கெடுக்க வேண்டிய சந்தேகம் கிடையாது. அப்போது அவருக்கு எது உறுதியாக தோன்றுமே அதனை எடுக்க வேண்டும்.

2-தொழுகையில் ஏற்படும் சந்தேகம்.

இந்த சந்தேகத்திற்கு இரண்டு நிலைகள் இருக்கின்றன.

(அ) இரண்டில் ஒன்று உறுதியாகுதல்.

இரண்டில் ஒன்று என உறுதியானால் ஸலாம் கொடுத்த பின்னர் மறதிக்கான ஸூஜூத் செய்வார்.

உதாரணம் – ஒருவர் ழுஹர் தொழுகிறார். அப்போது அது இரண்டாவது ரக்அத்தா? அல்லது மூன்றாவது ரக்அத்தா? என சந்தேகம் ஏற்படுகிறது. என்றாலும் அது மூன்றாவது என அவர் உறுதியாக எண்ணுகிறார். அப்போது அவர் அதனை மூன்றாக எடுத்துக் கொள்வார். அவ்வாரே தொழுகையை பூர்த்தி செய்வார். பின்னர் ஸலாம் கொடுத்த பின்பு இரண்டு ஸஜ்தா செய்வார். நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் ஒருவருக்கு தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் அவருக்கு உறுதியானதை எடுத்துக் கொள்ளட்டும். பின்னர் ஸலாம் கொடுக்கட்டும். அதன் பின்னர் இரண்டு ஸஜதாக்கள் செய்யட்டும். » (ஆதாரம் இப்னு ஹிப்பான்)

ஸலாம் கொடுத்தல்

மறதிக்கான ஸஜதா செய்தல்

(ஆ) இரண்டில் ஒன்று உறுதியாகாமல் இருத்தல்.

அதில் குறைவான எண்ணிக்கையை எடுத்துக் கொள்வார். பின்னர் தொழுகையை பூர்த்தி செய்து ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் இரண்டு ஸஜதாக்கள் செய்ய வேண்டும்.

மறதிக்கான ஸஜதா செய்தல்

ஸலாம் கொடுத்தல்

உதாரணமாக - ஒருவர் ழுஹர் தொழுகிறார். அப்போது அது இரண்டாவது ரக்அத்தா? அல்லது மூன்றாவது ரக்அத்தா? என சந்தேகம் ஏற்படுகிறது. அதில் அவருக்கு உறுதியாக எது என தெரியவில்லை? அப்போது அவர் குறைவானதாக உள்ள இரண்டாவதை எடுத்துக் கொள்வார். பின்னர் தொழுகையை பூர்த்தி செய்து ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் இரண்டு ஸஜதாக்கள் செய்ய வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் ஒருவருக்கு தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் அவருக்கு மூன்றாவதா? அல்லது நான்காவதா? என்பதில் உறுதியில்லை எனின். சந்தேகத்தை விட வேண்டும். பின்னர் உறுதியானதை எடுக்க வேண்டும். ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் இரண்டு ரக்அத் ஸூஜூத் செய்யட்டும். »(ஆதாரம் முஸ்லிம்)

2-அதிகரித்தல்

தொழுவர் தொழுகையில் ருகூஃவையோ, ஸூஜூதையோ அதிகரித்தல். இதற்கு இரு நிலைகள் உள்ளன.

1-அது தொழுகையின் போது ஞாபகம் வந்தால்

இதிலிருந்து அவர் மீள வேண்டும். பின்பு தொழுகையை பூரணமாக செய்து, பின்னர் ஸலாம் கொடுத்த பின்பு இரண்டு ஸஜ்தா செய்வார்.

உதாரணமாக – ஒருவர் ழுஹர் தொழும் போது ஐந்தாவது ரக்அதிற்காக எழுப்வி விட்டார் எனின் அவர் உடனே அத்தஹியாத்து இருப்பிற்கு வர வேண்டும். பின்னர் ஸலாம் கொடுத்த பின்பு இரண்டு ஸஜ்தா செய்வார்.

2-தொழுகையின் பின்னர் ஞாபகம் வந்தால்

இதன் போது தொழுகையை பூரணமாக செய்து, பின்னர் ஸலாம் கொடுத்த பின்பு இரண்டு ஸஜ்தா செய்வார். இப்னு மஸ்ஊத் ரழி அறிவிக்கின்றார்கள். «நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘என்ன விஷயம்?’ எனக் கேட்டார்கள். ‘நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்’ என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்»(ஆதாரம் புஹாரி)

3-குறைத்தல்

தொழுகையின் ருகூன், வாஜிப்களின் ஏதாவது ஒன்றை குறைப்பதை இது குறிக்கின்றது.

1-ருகூனை குறைத்தல்.

அந்த ருக்குன் ஆரம்ப தக்பீராக இருப்பின் அத் தொழுகை பாத்திலாகும். ஏனனெனில் அடிப்படையே பூரணமாகவில்லை. ஆரம்ப தக்பீர் தவிர்ந்த ஏனைய ருகூன்கள் எனின் அதற்கு இரண்டு நிலைகள் உண்டு.

(அ) அடுத்த ரக்அத்தில் அது ஞாபகம் வந்தால்

தவறவிடப்பட்ட ருகூன் கணக்கிடப்பட மாட்டாது. அடுத்த ரக்அத்தில் அது பூரணமடையும்.

உதாரணம் - முதலாவது ரக்அதில் ஒருவர் ருகூவை தவற விட்டார். அது இரண்டாம் ரக்அத்தில் ஞாபகம் வந்தால் முன்னர் தவற விடப்பட்ட ரக்அத்தை மீள செய்ய வேண்டியதில்லை. இதன் போது தொழுகையை பூரணமாக செய்து, பின்னர் ஸலாம் கொடுத்த பின்பு இரண்டு ஸஜ்தா செய்வார்.

ஸலாம் கொடுத்தல்

மறதிக்கான ஸஜதா செய்தல்

(அ) அடுத்த ரக்அத்திற்கு செல்வதற்கு முதல் ஞாபகம் வந்தால்

அப்போது அவர் விட்ட ருகூனை திரும்ப செய்ய வேண்டும். பின்னர் தொழுகையை பூரணமாக செய்து, ஸலாம் கொடுத்த பின்பு இரண்டு ஸஜ்தா செய்வார்.

உதாரணம் – ஒருவர் ஒரு ரக்அத்தில் ஸூஜூதையும் அதில் நடு அமர்வையும் விட்டார். அடுத்த ரக்அதின் ருகூஃவின் போது அது ஞாபகம் வந்தால் அவர் மீண்டும் விட்டதை தொடர வேண்டும். பின்னர் தொழுகையை பூரணமாக செய்து, ஸலாம் கொடுத்த பின்பு இரண்டு ஸஜ்தா செய்வார்.

2-வாஜிபை குறைத்தல்.

தொழுபவர் வாஜிபை விட்டால் அதற்கு மூன்று நிலைகள் உள்ளன.

(அ) வாஜிபை விட்ட இடத்திருந்து எழும்பும் போது அது ஞாபகம் வந்தால்

அப்போது அந்த இடத்திற்கு அவர் வருவார். அதன் பின்னர் எதுவும் செய்யவேண்டியதில்லை.

(ஆ) வாஜிபை விட்ட இடத்திருந்து எழும்பிய பின்னர் அது அடுத்த ருகூனுக்கு முன்னதாகவே ஞாபகம் வந்தால்

அப்போது அவர் விட்ட வாஜிபை செய்ய வேண்டும். பின்னர் தொழுகையை பூரணமாக செய்து, ஸலாம் கொடுத்த பின்பு இரண்டு ஸஜ்தா செய்வார்.

(இ) வாஜிபை விட்ட இடத்திருந்து எழும்பிய பின்னர் அது அடுத்த ருகூனுக்கு பின்னதாகவே ஞாபகம் வந்தால்

இப்போது அவர் தொழுகையை தொடர வேண்டும். விட்டதை திரும்ப செய்யத் தேவையில்லை. ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் மறதிக்கான ஸஜதா செய்ய வேண்டும்.

உதாரணமாக – ஒருவர் தொழுகையில் இரண்டாவது ரக்அதில் இரண்டாவது ஸூஜூத் செய்து முதல் மறதியாக அத்தஹியாதில் இருக்காமல் எழும்புகிறார். இப்போது அது ஞாபகம் வந்தால் அப்போது அவர் அத்தஹியாத்திற்காக உட்கார்ந்து கொள்வார். பின்னர் தொழகையை பூரணமாக செய்வார்.

எழும்புவதற்கு முன்னர் ஞாபகம் வந்தால் அப்போது அமர்ந்து அத்தஹியாத்தில் இருப்பார். பின்னர் தொழுகையை பிரணத்துவப்படுத்தி ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு மறதிக்கான ஸஜதா செய்ய வேண்டும்.

எழும்பிய பின்னர் ஞாபகம் வந்தால் அத்தஹிய்யாத் நீங்குவதோடு, அவர் ஸலாத்தை பூரணத்துவப்படுத்தி ஸலாம் கொடுக்க முன்னர் மறதிக்கான ஸஜதா செய்ய வேண்டும். அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். « நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காரமலே எழுந்துவிட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும் தருணத்தில், நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தபோது,உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்»
(ஆதாரம் புஹாரி) நாம் முன்னர் பார்த்தவைகள் அனைத்தும் மறதிக்கான ஸூஜூத் என்பது ஸலாம் கொடுப்பதற்கு முன்னும், பின்னும் செய்யலாம்.

மறதிக்கான ஸூஜூத் செய்யும் முறை

தொழுகையில் ஸூஜூது செய்வதை போன்றே மறதிக்கான ஸூஜூத் செய்ய வேண்டும். இதில் தக்பீர் சொல்லியே ஸூஜூத், அதிலிருந்து எழும்புதல் ஆகியவற்றை செய்ய வேண்டும். அதிலே தொழுகையில் ஸூஜூதில் என்ன கூறுகின்றோமோ அதனையே கூற வேண்டும்.

கேள்வி

1- ஒருவர் தொழுகையை பூரணப்படுத்துவதற்கு முன்னர் ஸலாம் கூறி விட்டு நீண்ட நேரத்திற்கு பின்னர் அது அவருக்கு ஞாபகம் வருமேயானால் அவர் புதிதாக தொழுகையை மீட்டித் தொழுவார். இன்னும் இரண்டு, மூன்று நிமிடங்களில் அவருக்கு ஞாபகம் வந்தால் அவர் தொழுகையை பூர்த்தி செய்து தொழுகைக்கு பின்னால் மறதிக்கான ஸஜதா செய்வார்.

2- மஃமும்கள் மறதிக்கான ஸூஜூதின் போது இமாமை பின்தொடர்வது வாஜிபாகும். அவர் மறதி நடந்த பின்னர் இமாமோடு சேர்ந்து கொண்டாலும் சரியே

3- மறதிக்கான ஸஜதாக்கள் ஒரே நேரத்தில் வருகிறது. அதில் ஒன்று ஸலாம் கொடுப்பதற்கு முன்னரும், அடுத்த்து ஸலாம் கொடுத்த்திற்கு பின்னரும் என்றால் இரண்டிற்கும் சேர்த்து ஒன்றாக ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் மறதிக்கான ஸஜதா செய்வார்.

நன்றிக்கான ஸஜதா

நன்றிக்கான ஸஜதா

இது அல்லாஹ்வின் அருள் அல்லது தீங்கு தடுபட்டு விட்டால் அல்லாஹ்விற்கு நன்றி செய்வதற்காக செய்யப்படும் ஸூஜூத் ஆகும்.

நன்றிக்கான ஸூஜூதிற்குரிய மார்க்க ஆதாரம். அபீபக்ரா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் «நபியவர்கள் சந்தோசமான செய்தி அல்லது நற்செய்தி கிடைக்கப் பெற்றால் அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவர்களாக ஸூஜூது செய்தார்கள்»
(1- ஆதாரம் அபூதாவுத்)

மறதிக்கான ஸூஜூத் செய்யும் முறை

இதனை நிறைவேற்ற வுழு அவசியமில்லை. அப்போது தக்பீர் கூறியவராக ஸூஜூத் செய்வார். பின்னர் «சுபஹான ரப்பில் அஃலா»என கூற வேண்டும். அவருக்கு கிடைத்த அருட்கொடைக்காக நன்றி கூறுவார். பின்னர் தக்பீர் கூறாமல் எழும்புவார். அதில் ஸலாம் கொடுக்க கூடாது.

(குர்ஆன் ஓதும் வேளை) ஸஜதாவுடைய வசனத்தின் போது செய்யும் ஸஜதா

(குர்ஆன் ஓதும் வேளை) ஸஜதாவுடைய வசனத்தின் போது செய்யும் ஸஜதா

குர்ஆன் ஓதும் வேளை ஸஜதாவுடைய வசனத்தின் போது செய்யும் ஸஜதா

இதற்கான ஆதாரம். «இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம்»(ஆதாரம் புஹாரி)

தொழுகையில் ஓதுபவர் ஸஜதாவுடைய வசனத்தின் போது ஸஜதா செய்ய வேண்டும். அது வெளிப்படையான அல்லது உள்ரங்கமான தொழகையாக இருப்பினும் சரியே!. அதற்கு வுழுச் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

ஸஜதாவுடைய வசனத்தின் போது செய்யும் ஸஜதா செய்யும் முறை

ஓதுபவர் அல்லது கேட்பவர் தக்பீர் கூறியவராக ஸஜதா செய்வார். அப்போது «ஸூபஹான ரப்பில் அஃலா» என கூற வேண்டும். அதில்

«ஸஜத வஜ்ஹி லில்லதி கலகஹூ வஷக ஸம்அகு வபஸரகு, பிகவ்லிஹி, வகுவ்வதிஹி” 129, ”அல்லாஹூம்ம அக்துப் லி பிஹா இத்தக அஜ்ரன், வழஅ அன்னி பிகா வஸ்ரன், வஜ்அல்லஹா லி இன்தக தஹ்ரன், தகப்பல்ஹா மின்னி கமா தகப்பல்துஹா மின் அப்திக தாவூத்» (ஆதாரம் திர்மிதி).

-அவர் தொழுகையில் இருந்தால் தக்பீர் கூறி ஸூஜூதிலிருந்து எழும்புவார். அது அல்லாத போது தக்பீரும், ஸலாமும் இன்றி எழும்புவர்.

ஸஜதாவுடைய வசனம் இடம் பெறும் சூறாக்கள்

- சூரத்து மர்யம் - வசனம் (58)

- சூரத்து ரஃத் - வசனம் (15)

- சூரத்து ஹஜ் - வசனம் (77)

- சூரத்து இஸ்ரா - வசனம் (107)

- சூரத்து நம்ல் - வசனம் (25)

- சூரத்து ஹஜ் - வசனம் (18)

- சூரத்து ஷாத் - வசனம் (24)

- சூரத்து ஸஜதா - வசனம் (15)

- சூரத்து நஜ்ம் - வசனம் (62)

- சூரத்து புஸ்ஸிலத் - வசனம் (37)

- சூரத்து அலக் - வசனம் (19)

- சூரத்து இன்ஷிகாக் - வசனம் (21)

- சூரத்து அளவுகோல் - வசனம் (60)

- சூரத்து அஃராப் - வசனம் (206)

 

- சூரத்து அந்நஹ்ல் - வசனம் (49)

கேள்வி

1- வாகனத்தில் பிரயாணம் செய்பவர் ஸஜதாவுடைய வசனத்தை ஓதினால் அவர் வாகனத்தில் இருந்து இறங்கி ஸஜதா செய்ய வேண்டும். அதற்கு அது சிறம்மாக இருப்பின் தலையால் மேலிருந்து கீழ் இறக்கியவாறு ஸஜதா செய்வார்.

2- தொடர்ந்து ஸஜதாவுடைய வசனங்களை ஓதுபவராக இருந்தால் ஒரு தடவை ஸஜதா செய்தால் போதுமானது.

3- தொழுகை தடுக்கப்பட்ட நேரங்களில் கூட இதனை செய்வதில் தவறில்லை.

4- ஓதுபவர் ஸூஜூத் செய்யாது போனால் கேட்பவரும் ஸூஜூத் செய்ய தேவையில்லை. ஏனனில் கேட்பவர் ஓதுபவரையே பின் தொடர்வார்.

5- ஓதுகபரை கடந்து செல்வபர் ஸூஜூது செய்வது அவசியமில்லை. ஏனனில் அவர் ஓதுபவரை பின்தொடர வில்லை.