பாத்திரங்கள்
பாத்திரங்கள்
பாத்திரம் என்பது நீர், ஏனையவைகளை உள்ளடக்கி பாதுகாக்கும் ஒரு பொருளை குறிக்கின்றது.
தங்க, வெள்ளி பாத்திரங்களை பாவித்தல்.:
இவ்விரண்டையும் பாவிப்பது ஹராமாகும். நபியவர்கள் கூறினார்கள் «தங்க, வெள்ளி பாத்திரங்களில் நீங்கள் பருக வேண்டாம். தங்கம், வெள்ளி போன்ற தட்டில் சாப்பிட வேண்டாம். அவர்களுக்கு அது இவ்வுலகில் மாத்திரமே கிடைக்கும். ஆனால் எங்களுக்கு மறுமையில் கிடைக்கும்»(புஹாரி முஸ்லிம்).
மேலும் நபியவர்கள் கூறினார்கள். «யார் வெள்ளிப்பாத்திரத்தில் அருந்துகின்றாரோ அவருக்கு மறுமையில் அவருடைய வயிற்றில் நெருப்பிலாலான தண்டணை வழங்கப்படும்»
(புஹாரி முஸ்லிம்).
வெள்ளிப் பாத்திரத்தில் சாப்பிடுதல்
தங்கப்பாத்திரத்தில் சாப்பிடுதல்
வேறு தேவைக்காக தங்கம், வெள்ளி போன்றவற்றை பயன்படுத்தலாம். உதாரணமான வுழு செய்வதற்கு பயன்படுத்தாலாம். மேலுள்ள செய்தியை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகின்றது. «உம்மு ஸலமா ரழி அவர்கள் நபியவர்களது மூடி உள்ள வெள்ளியால் ஆன சிறு கிண்ணம் (ஜுல்ஜுல் – மணி போன்ற சிறிய பாத்திரம்) ஒன்றை வைத்திருந்திருந்தார்கள்»
(4. ஆதாரம் புஹாரி).
1. வெள்ளி பொதிக்கப்பட்ட பாத்திரம்
தேவைகளுக்காக வெள்ளி பொதிக்கப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்தலாம். என்பதை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகின்றது. «நபியவர்களுடைய பாத்திரம் உடைந்து விட்டது. பின்னர் வெடிப்புள்ள இடத்தை வெள்ளியை கொண்டு உருக்கி ஒட்டினார்கள்»
(ஆதாரம் புஹாரி)
வெள்ளி கேத்தலில் வுழுச் செய்தல்
வெள்ளி பொதிக்கப்பட்ட பாத்திரத்தை பயன்படுத்தல்
ஆண்கள் தங்கம் அணிதல்
ஆண்கள் தங்கம் அணிவது தடுக்கப்பட்டுள்ளது. இதனை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகிறது. அபூ மூஸா அஷ்அரி ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் «பட்டாடையும் தங்கமும் எனது உம்மதில் ஆண்களுக்கு ஹறாமாகும். பெண்களுக்கு ஹலாலாகும்»(அதாரம் திர்மிதி).