நஜீஸின் சட்டங்கள்
மொழி ரீதியில் நஜீஸ்
அழுக்குகள்
இஸ்லாமிய பரிபாஷையில்
இஸ்லாம் நீக்கும் படி ஏவிய அழுக்குகள்
1.மனிதனுடைய சிறுநீர்
அஃராபி ஒருவர் பள்ளிவாயலில் சிறு நீர் கழித்த செய்தியில் நபியவர்கள் கூறினார்கள் «நிச்சயமாக இது பள்ளிவாயல் இதில் சிறுநீர் கழிப்பதோ? அல்லது அழுக்குகளை போடுவதற்கோ பொருத்தமான இடம் கிடையாது. நிச்சயமாக இது அல்லாஹ்வை நினைவு கூறும், தொழுகை நிறைவேற்றும், குர்ஆன் ஓதும் இடமாகும்»(1 புஹாரி முஸ்லிம்)
2.மாதவிடாய் இரத்தம்
ஹவ்ழா பின்த் யஸார் அவர்கள் «நபியவர்களிடம் வந்து ” அல்லாஹ்வின் தூதர் அவர்களே என்னிடம் ஒரு ஆடை மாத்திரமே இருக்கின்றது. அதில் மாதவிடாய் இரத்தம் படுகின்றது. என்றதும் நபியவர்கள் அதற்கு ” நீர் சுத்தம் அடைந்தால் மாதவிடாய் இரத்தம் பட்ட இடத்தை கழுவிவிட்டு, அதை (அணிந்து) தொழுவீராக” என்றார்கள்»
(ஆதாரம் அபூதாவுத்).
மாதவிடாய் இரத்தம் தவிர்ந்த ஏனைய இரத்தம் சுத்தமானது. அது வெட்டப்பட்டு ஓடுகின்ற இரத்தமாகவோ(வெட்டப்பட்ட இரத்தம் – வெட்டப்பட்ட இடத்திலிலுந்து வளிந்தோடும் இரத்தம்.) அல்லது அது அல்லாத இரத்தமாக கூட இருக்கலாம். மேலுள்ள தகவலை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகின்றது. «ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது முஷ்ரிகான நபர் ஒருவர் தொழுகையாளியின் மீது ஈட்டி எறிந்தான். அதன் மூலம் அவர் காயமடைந்தார். அதிலிருந்து இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. அவர் தொழுகை தொடராக நிறைவேற்றிக் கொண்டிருந்தார்»
(ஆதாரம் அபூதாவுத்)
3.மிருகங்கள், இறைச்சி உண்ண அனுமதிக்கப்பட்டவைகளின் சிறுநீர்
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள் «நபியவர்கள் மலசலம் கழிக்கச் சென்றார்கள். என்னிடம் மூன்று கற்கள் எடுத்துவரும் படி ஏவினார்கள். நான் இரண்டு கற்களை மாத்திரமே பெற்றுக் கொண்டேன். இன்னொரு கல்லை தேடினேன். அதை என்னால் பெற முடியவில்லை. ஈற்றில் மிருகத்தின் விட்டையை கண்டெடுத்து நபியவர்களிடம் கொடுத்தேன். அதில் இரண்டு கற்களை கொண்டு சுத்தம் செய்தார்கள். மிருக விட்டையை கீழே போட்டார்கள். பின்னர் அது அசுத்தமானது என்றார்கள்» (ரிக்ஸ் – குப்பை) (ஆதாரம் புஹாரி)
சாப்பிடுவதற்கு ஆகுமான மிருகங்களது சிறுநீர், விட்டையின் சட்டம் என்ன?
சாப்பிடுவதற்கு ஆகுமாக்கப்படட மிருகங்களது சிறுநீர், விட்டை என்பன சுத்தமானதாகும். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள் மதீனாவிற்கு சில மக்கள் கூட்டம் வந்தார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தனர். நபியவர்கள் அவர்களை ஸத்கா என்ற ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு அனுப்பி அதனுடைய சிறுநீரையும் பாலையும் அருந்துமா று பணித்தார்கள்.33
4.செத்தவைகள்
மார்க்க வரையறைப்படி அறுக்காமல் மூச்சுத் திணறி செத்தவைகளை குறிக்கும். அல்லாஹ் {கூறுகிறான் (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்}. [அன்ஆம் – 145]
ஒரு மிருகம் அறுப்பதற்கு முன்னர் உயிரோடிருக்கும் போதே அதிலிருந்து சிறிய துண்டை வெட்டியதும் இதற்குள் அடங்கும்.
செத்தவைகள்
1. செத்த மீனும் வெட்டுக்கிளியும்
நபியவர்கள் கூறினார்கள் «இரண்டு செத்தவைகள், இரத்தம் ஆகியன எமக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளது. இவை செத்தவைகளில் மீனும் வெட்டுக்கிளியும், இரத்தமுள்ளவைகளில் கல்லீரலும், மண்ணீரலுமாகும்»(ஆதாரம் அஹ்மத்).
மீன்
வெட்டுக்கிளி
2. அறுத்து இரத்தம் ஓட்டப்படாமல் செத்தவைகள்
நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி அமிழ்த்தி பிறகு வெளியில் எடுக்கட்டும்; ஏனெனில் ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும், மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது»(ஆதாரம் புஹாரி).
ஈ
5. பன்றி இறைச்சி
(நபியே!) நீர் கூறும்: {“தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்}. [அன்ஆம் – 145]
பன்றி
6. நாயின் உமிழ் நீர்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். «உங்களுடைய பாத்திரத்தில் நாய் நக்கினால் அதனை ஏழு முறை கழுவவும். அதில் ஒரு முறை மண் போட்டு கழுவவும்»
(3. புஹாரி முஸ்லிம்).
நக்குதல் – பாத்திரத்தில் நாய் நுழைப்பதை குறிக்கின்றது. அது பாத்திரத்தில் உள்ளவைகளை உண்டாலும், உண்ணாவிட்டாலும் அது ஒன்று தான்.
நாயின் வீணி
7. மதி
இது வெள்ளை நிற மென்மையான நீரை குறிக்கும். விளையாடுகின்ற போது அல்லது உடலுறவை நினைக்கின்ற போது இது வெளியாகின்றது. இச்சை இல்லாமல், பாய்ந்து இது வெளியாக மாட்டாது. மேலும் இது வெளியாகுவதால் சோர்வு ஏற்படாது. அத்தோடு இது வெளியாகுவது அவருக்கு தெரியாமல் கூட இருக்கலாம்.
நபியவர்களுடைய செய்தியில் அலி (ரழி) அவர்கள் நபியவர்களிடம் மதியைப் பற்றி வினவினார்கள். அதற்கு: «நபியவர்கள் வுழு செய்து கொள்ளுங்கள், அத்தோடு உங்களது ஆணுறுப்பை கழுவிக் கொள்ளுங்கள்»
(4. ஆதாரம் முஸ்லிம்).
8. வதி
இது வெள்ளை நிற நீரை போன்றதாகும். சிறுநீ் கழித்த பின்னர் வெளியாகும் கணமான நீராகும்.
இந்திரியத்தில் இருந்து சுத்தமாகுதல்
இந்திரியம் – இது வெள்ளை நிறமான கணமான நீராகும். இச்சை ஏற்படும் போது பாய்ந்து வெளியேறக் கூடியதாகும். இது வெளியாகும் போது சோர்வு ஏற்படும். அது வெளிப்படும் போது அருவருப்பான மணம் வீசும். ஈச்சமரத்தின் கதிர் வெளிப்படும் போது அல்லது மாவு பிசையும் போது ஏற்படும் மணத்தை போன்று இருக்கும்.
இது சுத்தமானதாகும். அது நஜீஸாக இருந்தால் அதனை அவசியம் கழுவ வேண்டும் என நபியவர்கள் ஏவியிருப்பார்கள். இந்திரியம் காயாமல் இருந்தால் கழுவினால் போதுமானது. அது காய்ந்திருந்தால் சுரண்டுவது போதுமானது.
ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள். « நபியவர்கள் இந்திரியத்தை கழுவுவார்கள். பின்னர் அதே ஆடையுடன் தொழுவதற்காக செல்வார்கள், அந்த ஆடை கழுவப்பட்டிருப்பதற்கான அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்»
(புஹாரி முஸ்லிம்).
இன்னொரு அறிவிப்பில் «(காய்ந்த) இந்திரியத்தை சுரண்டிய அடையாளம் இருக்கும் ஆடையுடன் நபியவர்கள் தொழுவதை கண்டிருக்கிறேன்»
(புஹாரி முஸ்லிம்)
காயாமல் இருந்தால் கழுவுதல்
காய்ந்திருந்தால் சுரண்டுதல்
மதுபானம்
மதுபானம் வெளிப்படையில் சுத்தமானது. அதை குடிப்பது பெரும்பாவம் என்பதால் உள்ரங்கமாக நஜீஸாகும்
{ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்}.[மாயிதா – 90]அருவருக்கத்தக்க செயல் என்பது உள்ரங்கமானது என்பதை குறிக்கின்றது. சூதாட்டம், கற்றசிலையை வணங்குதல் போன்று வெளிப்படையாதனை அது குறிக்கவில்லை
மதுபானம்
1. நிலத்தில் உள்ள நஜீஸை சுத்தம் செய்தல்
பூமியில் நஜீஸ் பட்டிருந்தால் அது நீர் மூலமோ ஏனையவற்றின் மூலமோ நீங்கி விடும். அஃராபியின் செய்தியில் அவர் பள்ளியில் சிறுநீர் கழித்த «போது அவரை விட்டு விடுங்கள் (ஊற்றுங்கள் – கொட்டுங்கள்) அந்த சிறுநீர் மீது வாளியில் (வாளி – நீர் நிரப்பப்பட்ட பாத்திரம்) அல்லது பாத்திரத்தில் (வாளி – நீர் நிறப்பப்பட்ட பெரிய வாளி) தண்ணீர் கொண்டு ஊற்றுங்கள். »(புஹாரி, முஸ்லிம்).என கூறினார்கள்.
மேலும் நஜீஸ் ஓடக் கூடியதாக இருந்தால் அது காய்கின்ற போது சுத்தமடையும். கிலாபா ரழி அவர்கள் கூறினார்கள் «பூமி காய்ந்து விட்டால் அது சுத்தமடைந்து (தூய்மைப்படுத்தல் – சுத்தப்படுத்தல்) விடும்.» (ஆதாரம் புஹாரி).
பூமியில் ஓடக் கூடிய நஜீஸ்
ஓடக் கூடிய நஜீஸை காய வைத்தல்
2. நஜீஸான நீரை சுத்தம் செய்தல்.
நஜீஸூடைய அடையாளம் மாறும் வரை அதனுள் தண்ணீரை அதிகப்படுத்தல். நவீன சுத்தப்படுத்தும் பதார்த்தங்களை சேர்ப்பதன் மூலமும் அதனை சுததப்படுத்தலாம்.
நவீன முறையும் சுத்தம் செய்தல்
தண்ணீரை அதிகரித்து சுத்தம் செய்தல்
3. ஆடையில் பட்ட நஜீஸை நீக்குதல்.
ஆடையில் நஜீஸ் நீங்கும் வரை கழுவுதல். புழிதல், உரஞ்சி கழுவுதல்
நஜீஸான ஆடையை சுத்தம் செய்தல்
4. விரிப்பபை சுத்தப்படுத்துதல்
நீரால் கழுவுதல் அல்லது நவீன சுத்தப் பதார்த்தங்கள் மூலம் சுத்தம் செய்தல், காயவைத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் நஜீஸை நீக்கலாம்.
விரிப்பை சுத்தம் செய்தல்
5. செத்தவைகளின் தோலை சுத்தம் செய்தல்.
1. சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட செத்த பிராணிகளின் தோல்
இதனை உலர வைத்தால் சுத்தமாகும். நபியவர்கள் கூறினார்கள் «தோலை உலர வைத்தால் (தோல் – உலர வைப்பதற்கு முன்னர் உள்ள நிலை) அது சுத்தமாகும்» (முஸ்லிம்).
உலர வைத்தல் – கெட்ட நாற்றம் நீங்கி மென்மையாவதற்கான பதார்த்தங்களை கலந்து பதப்படுத்துவதை குறிக்கும்..
உலர வைத்தல்
சாப்பிடுவதற்கு அனுமிக்கப்பட்ட மிருகங்கள்
2. சாப்பிட முடியாத மிருகங்களின் தோல்
அறுப்பதற்கு அனுமதிக்கப்படாத மிருகங்களின் தோல் அது உயிரோடு இருந்தாலும் அல்லது உலர வைத்தாலும் சுத்தமாகாது.
சாப்பிட அனுமதிக்கப்படாத மிருகங்கள்
6. உணவு உட்கொள்ளாத ஆண், பெண் பிள்ளைகளின் சிறுநீரை சுத்தம் செய்தல்.
பெண் பிள்ளையின் சிறுநீர் பட்ட இடத்தை கழுவ வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் பள்ள இடத்தில் நீரால் தெளித்தால் போதுமானது. நபியவர்கள் கூறினார்கள் «பெண்குழந்தையுடைய சிறுநீரை கழுவ வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் மீது நீரைத் தெளிக்க வேண்டும்.»(ஆதாரம் அபூதாவுத்) என கூறினார்கள்
ஆண் குழந்தையின் சிறுநீர் மீது தண்ணீரை தெளித்தல்
பெண் பிள்ளையின் சிறுநீரை கழுவுதல்
7. நாய் நக்கியவற்றை சுத்தம் செய்தல்.
பாத்திரத்தில் நாய் நக்கினால் அதனை ஏழு முறை கழுவ வேண்டும். அதில் ஒரு முறை மண் போட்டு கழுவ வேண்டும். நபியவர்கள் கூறினார்கள் «. உங்கள் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் வாயை விட்டால் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவுங்கள். அதில் ஒரு முறை மண் போட்டுக் கழுவுங்கள்»(புஹாரி முஸ்லிம்).என கூறினார்கள்.
8. மதி, வதியை சுத்தம் செய்தல்
ஆணுறுப்பை சுத்தம் செய்து வுழுச் செய்ய வேண்டும். நபியவர்கள் அலி ரழி அவர்களுக்கு கூறினார்கள் «நீங்கள் வுழு செய்து கொண்டு, ஆணுப்பை கழுகுவீராக என்றார்கள்» (புஹாரி முஸ்லிம்).
ஆடையில் மதி, வதி பட்டிருப்பின் அதில் நீரைத் தெளிப்பதன் மூலம் சுத்தமடைய வைக்கலாம். ஸஹ்ல் பின் ஹனீப் அவர்கள் நபியவர்களிடம் கேட்டார்கள் «யாரசூலல்லாஹ் எனது ஆடையில் மதி அல்லது வதியை கண்டால் என்ன செய்வது என கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் கைப்பிடியளவு நீரை எடுத்து அதனுள் தெளியுங்கள். அந்த அடையாளம் நீங்கும் வரை தெளியுங்கள்.என்றார்கள்.» (ஆதாரம் அபூதாவுத்).
9. மாதவிடாய் இரத்தத்தை சுத்தம் செய்தல்.
நீரைக் கொண்டு கழுவ வேண்டும். அதனுடைய அடையாளங்கள் இருந்தால் பிரச்சினையில்லை. நபியவர்கள் கூறினார்கள் «தண்ணீர் மட்டும் சுத்தம் செய்ய போதுமானது. அதனுடைய அடையாளம் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை»
(ஆதாரம் அபூதாவுத்).
10. பாதணியை சுத்தம் செய்தல்
நஜீஸ் நீங்கும் வரை பூமியில் தேய்த்தல். நபியவர்கள் கூறினார்கள்.«உங்களின் பாதணியில் ஏதாவது நஜீஸை மிதித்தால், மண்ணில் (தேய்ப்பதே) அதனை சுத்தமாக்கும்»(ஆதாரம் அபூதாவுத்).
பாதணைியை பூமியில் தேய்ப்பதன் மூலம் சுத்தம் செய்தல்
11. நீட்டமான ஆடையை சுத்தம் செய்தல்
நஜீஸ் பட்ட ஆடையுடன் சுத்தமான இடத்தில் நடந்தால் பூமி அந்த நஜீஸை சுத்தமாக்கி விடும். நபியவர்கள் கூறினார்கள் «சுத்தமான இடத்தில் நடந்தால் பின்னர் இது சுத்தமாகிவிடும்»
(ஆதாரம் அபூதாவுத்).
பூமியில் (நடப்பதன்) மூலம் பெண்ணின் ஆடை சுத்தமாகும்.
12. திண்மமான உணவுப் பொருட்களை சுத்தம் செய்தல்.
தின்மமான பொருளில் நஜீஸ் விழுந்தால் நஜீஸ் விழுந்த இடத்தை மாத்திரம் அகற்றி விட்டால் போதுமானது. ஏனனில் எஞ்சியவை அடிப்படையிலேயே சுத்தமானதாகும். மேலுள்ள செய்தியை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகின்றது. «பட்டரில் எலி விழுந்ததைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்ட போது ” அதனையும் அது விழுந்த இடத்தையும் சுத்தம் செய்வீராக! பின்னர் அந்த பட்டரை சாப்பிடுங்கள் என்றார்கள்.»
(ஆதாரம் புஹாரி).
பட்டரில் விழுந்த எலி
13. கண்ணாடி, கண்ணாடி பாத்திரங்களை சுத்தம் செய்தல்.
நஜீசுடைய அடையாளம் நீங்கும் வரை துடைக்க வேண்டும்.
கண்ணாடி பொருட்கள் தடவுவதன் மூலம் சுத்தமாகும்.
நஜீஸ் பற்றிய சட்டங்கள்
1. நஜீஸ் என்ற பண்பு வராமல் இருக்கும் வரையில், பொருட்கள் அனைத்தும் அடிப்படையில் சுத்தமானதாகும்.
2. எதாவது ஒன்றில் நஜீஸ் விழுந்து அது விழுந்த இடம் தெரியவில்லையாயின் அப்பொருளை முற்றாக கழுக வேண்டும்.
3. நஜீஸ் இன்னொரு பொருளாக மாறுவதன் மூலமாக. உதாரணமாக கழுதையின் விட்டையை எரிக்கின்ற போது ஏற்படும் சாம்பல் சுத்தமானது. இது போல சுத்தமாகும்.
(பிராணியின்) விட்டை சாம்பலாக மாறினால் அது சுத்தமானதாகும்.