தொழும் முறை

11774

தொழும் முறை

நபியவர்கள் கூறினார்கள் «என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்” (ஆதாரம் புஹாரி). “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் »

ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் «தொழுகையைத் துவக்குவார்கள்;அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்... என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள். ருகூஉச் செய்யும்போது தலையை உயர்த்தவுமாட்டார்கள்; ஒரேடியாகத் தாழ்த்தவுமாட்டார்கள். மாறாக, நடுநிலையாக வைத்திருப்பார்கள்.ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் சஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமிர்ந்து உட்காராமல் (இரண்டாவது) சஜ்தாச் செய்ய மாட்டார்கள்.ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் அத்தஹிய்யாத் ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்துவைத்து, வலது காலை நட்டுவைப்பார்கள். மேலும், ஷைத்தான் உட்காருவதைப் போன்று (கால்களை நட்டுவைத்து, புட்டத்தைத் தரையில் படியவைத்து) உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங்கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்துவந்தார்கள். அவர்கள் சலாம் கூறியே தொழுகையை முடிப்பார்கள்» (ஆதாரம் முஸ்லிம்).

கிப்லாவை முன்னோக்குதலும் ஆரம்ப தக்பிர் கட்டுதலும்

-தொழுகையை நாடியவராக கிப்லாவை முன்னோக்கி நிற்க வேண்டும். அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கிறோம் என்ற உணர்வுடனும் பயபக்தியோடும் தொழுகையில் நிற்க வேண்டும்.

-பின்னர் தொழுகைக்காக நீய்யத் வைக்க வேண்டும். நீயத்துடைய இடம் உள்ளமாகும். அதனை வாயால் மொழிவது கூடாது. அப்படி செய்வது பித்அத் ஆகும். நபியவர்கள் கூறினார்கள் «செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது» (புஹாரி முஸ்லிம்)

-பின்னர் கையை தோட்புயம் அல்லது காது வரை உயர்த்தி ”அல்லாஹூ அக்பர்” (ஆதாரம் முஸ்லிம்) என கூற வேண்டும்.

-இடக் கையின் மீது வலக் கையை வைத்து
(ஆதாரம் அஹ்மத்) நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அதே போல வலக்கையால் இடக் கையை பிடித்துக் கொள்ள வேண்டும்.

சூரதுல் பாத்திஹா ஓதுதல்

-தொழுபவர் தலையை குனிந்தவராக ஸூஜூதுடைய இடத்தில் தனது பார்வையை வைக்க வேண்டும். (ஆதாரம் புஹாரி)

«சுபஹானக அல்லாஹூம்ம வபிகம்திக, தபாரக இஸ்முக, வதஆலா ஜத்துக, வலாஇலாக ஃருக».(ஆதாரம் முஸ்லிம்)

-பின்னர் உள்ரங்கமாக «அஊதுபில்லாஹி மினஸ் ஷைதானிர் ரஜீம், பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்».(ஆதாரம் முஸ்லிம்)
என கூற வேண்டும்.

-அதன் பின்னர் சூரதுல் பாத்திஹா (ஆதாரம் புஹாரி) ஓத வேண்டும். பின்னர் ஆமின் என கூற வேண்டும். அதாவது விடையளிக்கப்பட்டது என்ற பொருளாகும்.

-சூரதுல் பாத்திஹா ஓதய பின்னர் முதல் இரண்டு ரக்அத்திலும் வேறு ஒரு சூறா ஓத வேண்டும். அதே போல சுபஹ், மஃரிப், இஷா ஆகிய தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்திலும் சூரதுல் பாத்திஹாவை வெளிப்படையாக ஓதுவார்.

ருகூஃ செய்தலும் நிலைக்கு வருதலும்

தொழுபவர் கையை உயர்த்தி தக்பீர் சொல்லி ருகூஃ செய்ய வேண்டும். விரல்களால் முட்டங்கால்களை பிடித்தவறாக இருப்பார். முதுகையும் தலையையும் சமமாக வைத்துக் கொள்வார். பின்னர் மூன்று முறை «ஸூபஹான ரப்பில் அழீம்» என்று கூறுவார்.(ஆதாரம் திர்மிதி)

பின்னர் உயர்ந்த்தவராக (இமாம் அல்லது மஃமும்) பின்வருமாறு கூறுவார் «ஸமியல்லாஹூ லிமன் ஹமிதா» (ஆதாரம் திர்மிதி) பின்னர் (அனைவரும்)

«ரப்பனா வலகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி, வமில்அல் அர்ழி, வமில்அ பயினகுமா, வமில்அ மாஷிஃத மின் ஷைய்யின் பஃத்»(ஆதாரம் திர்மிதி) அதே போன்று இந் நிலையில் ருகூஃவிற்கு முன்னர் இருந்த்து போல கைகளை நெஞ்சில் வைப்பது சுன்னத்தாகும்.

ஸூஜூது செய்தலும் அதில் எழும்புதலும்

-தக்பீர் சொல்லியவராக ஸூஜூத் செய்வார். முதலில் முட்டங்காலை தரையில் வைத்து பின்னர் கையை (ஆதாரம் அபூதாவுத்) வைப்பார். பின்னர் நெற்றியும், மூக்கும் தரையில் பட வேண்டும். தனது இரண்டு கைகளையும் அவரது காதின், தோட்புயத்தின் அருகில் பூமியில் விரித்து வைக்க வேண்டும். அப்போது விரல்கள் கிப்லாவை நோக்கியிருக்க வேண்டும். பூமியில் படாமல் முழங்கையை (முழங்கைக்கும் மணிக்கட்டிற்கும் இடையான உறுப்பு) உயர்த்துவார். இன்னும் அவரது கையை வயிற்றில் இருந்தும் விலாப்புறத்திலிருந்தும், (தோளுக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட உறுப்பு) தொட்டையிலிருந்தும் (ஆதாரம் புஹாரி) தள்ளி வைக்க வேண்டும். பின்னர் «ஸூபஹான ரப்பியல் அஃலா» என மூன்று முறை கூறுவார். இன்னும் ஸூஜூதில் அதிகமான பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். (ஆதாரம் முஸ்லிம்)

-பின்னர் கையை உயர்த்தாமல் தக்பீர் சொன்னவராக தலையை உயர்த்துவார். அப்போது இடக்காலை விரித்து (ஆதாரம் முஸ்லிம்) வலக்காலை நட்டி உட்காருவார். பின்னர் கிப்லாவை நோக்கி தனது விரலை விரித்தவராக அவரது தொடையில் வைப்பார். அப்போது

«அல்லாஹூம்மஃபிர்ழி, வர்ஹம்னி, வஜ்புர்னி,வஹ்தினி, வர்சுக்னி».(ஆதாரம் திர்மிதி)

-பின்னர் தக்பீர் கூறி முதலாவது செய்த்து போன்று இரண்டாவது ஸூஜ்த் செய்வார்.

-பின்னர் தக்பீர் கூறியவராக தலையை உயர்த்துவார். பின்னர் சிறிய அமர்வில் இருப்பார். அதற்கு ஜல்ஸதுல் இஸ்திறாஹா எனப்படுகின்றது. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்

நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் «ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) ஏழமாட்டார்கள்» (ஆதாரம் புஹாரி)

-கையை ஊண்டியவராக இரண்டாவது ரக்அத்திற்கு தக்பீர் கூறியவராக எழும்ப வேண்டும். (ஆதாரம் புஹாரி)

- பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்று இரண்டாம் ரக்அத்திலும் செய்வார். என்றாலும் அது வஜ்ஜஹத் ஓதுமிடம் என கூறப்படமாட்டாது.

அத்தஹிய்யாத்து இருப்பு

தொழுபவர் முதலிரண்டு ரக்அத்களை பூர்த்தி செய்தால் முதலாவது அத்தஹியாத்தில் அமருவார்.இடது காலை விரித்து வலதுகாலை நட்டி வைக்க வேண்டும். அவரது கையை தொடையில் வைப்பார். வலது கையில் உள்ள சின்ன விரலையும், மோதிர விரலையும் மடிப்பார், நடு விரலையும் பெருவிலையும் சேர்த்து வட்ட வடிவில் வைப்பார். அத“தஹஜயாத்தின் போது தனது ஆட்காட்டி விரலை உயர்த்தி சுட்ட்டிக்காட்டுவதை போன்று வைக்க வேண்டும். அதனை தனது கண்களால் பார்த்தவராக பின்வருமாறு ஓத வேண்டும்

«அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலாது தையிபாது, அஸ்ஸலாமு அலைக, அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு , அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹி ஸதலிஹீன், அஷ்ஷஹது அன்லாயிலாக இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலூஹூ»
.
(ஆதாரம் புஹாரி)- -பின்னர் இரண்டு ரக்அத்திற்கு அதிகமான தொழுகையாக இருந்தால் தக்பீர் கூறியவராக எழும்புவார். அப்போது தக்பீருடன் கைகளை உயர்த்தி ஏனைய ரக்அத்களில் சூரதுல் பாத்திஹாவை மாத்திரம் ஓத வேண்டும்.

-கடைசி அத்தஹியாத்தில் தவருக்கில் (ஆதாரம் அபூதாவுத்) அமர வேண்டும். தவருக் என்பது – வலது காலை நட்டி வைத்து இடது காலை வலக்காலுக்கு கீழால் வெளிப்படுத்தி வைப்பதை குறிக்கும். பின்னர் முதல் அத்தஹியாத்தில் ஓதிய துஆவிற்கு பின்னர் பின்வரும் துஆவை ஓத வேண்டும். «அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்க ஹமீதும் மஜீத், அல்லாஹூம்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்».(ஆதாரம் புஹாரி)

-பின்னர் பின்வருமாறு ஓத வேண்டும். «அல்லாஹூம்ம இன்னி அஊதிபிக மின் அதாபி ரஹன்னம, மின் அதாபில் கப்ர், வமின் பித்னதில் மஹ்யா வம்மாதி, வமின் ஷர்ரி மஸீஹி தஜ்ஜால்»(ஆதாரம் புஹாரி)

ஸலாம் கொடுத்தல்

தொழுகையின் இறுதியில் தொழுகையாளி வலது பக்கம் ஸலாம் கொடுக்க வேண்டும். அப்போது «அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்» (ஆதாரம் முஸ்லிம்) என கூற வேண்டும். அவ்வாறே இடது பக்கமும் செய்ய வேண்டும். .

ஆரம்ப தக்பீர்

பாத்திஹா ஓதுதல்

ருகூஃ செய்தலும், அதிலிருந்து உயர்தலும்

தொழுகையின் பின்னர் ஓத வேண்டிய துஆக்கள்.

- «அஸ்தஃக்பி[F]ருல்லாஹ் » (மூன்று முறை), «அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபா[B]ரக்(த்)த தல் ஜலாலி வல் இக்ராம். (ஆதாரம் முஸ்லிம்)

- லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதை(த்)த வலாமுஃதிய லிமா மனஃ(த்)த வலா யன்ப[F]வு தல்ஜத்தி மின்(க்)கல் ஜத் (ஆதாரம் புஹாரி)

-லாயிலாக இல்லலாஹூ வஹ்தஹூ லாஷரீக லகு, லகுல் முல்கு வலகுல் ஹம்து அலா குல்லி ஷையின் கதீர், லாஹல்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி, லா இலாக இல்லா அன்த, வலா நஃபுது இல்லா இய்யஹூ, லகு முல்கு வலகுல் பழ்லு வலகு தனாயில“ ஹஸன், லாயிலாக இல்லால்லாஹூ, முஹ்லிஸீன லகுத் தீன வலவ் கரிகல் காபிரூன்” (ஆதாரம் முஸ்லிம்)

-சுபஹான அல்லாஹ், அல்லாஹம்துலில்லாஹ், வஅல்லாஹூ அக்பர். (33 தடவை) ”லாயிலாக இல்லால்லாஹூ வஹ்தகு லாஷரிக லகு, லகுல் முல்கு வலகுல் ஹம்து அலா குல்லி ஷையின் கதீர்” (ஆதாரம் முஸ்லிம்)

- அல்லாஹூம்ம அயின்னி அலா திக்ரிக, வசுக்ரி இபாத்திக, வகுஸ்னி, இபாத்திக»(ஆதாரம் அபூதாவுத்)

-ஆயதுல் குர்ஸி, சூரத்துல் இஹ்லாஸ், பலக், நாஸ் (ஆதாரம் நஸாயி)

-அல்லாஹூம்ம அயின்னி அலா திக்ரிக, வசுக்ரிக, வகுஸ்னி இபாததிக

கேள்வி

பெண்களும் ஆண்கள் தொழும் முறையைப் போலவே தொழ வேண்டும்.