தொழுகையில் ஆகுமான, வெறுக்கத்தக்க செயற்பாடுகள்

893

தொழுகையில் ஆகுமான, வெறுக்கத்தக்க செயற்பாடுகள்

முதலாவது - தொழுகையில் ஆகுமானவை

01- தொழுகையில் கிப்லாவை மாற்றாத வகையில் தேவைகளுக்காக நடப்பது கூடும். உதாரணமாக கிப்லா திசையில் உள்ள கதவை திறப்பதை போன்று..

02- தொழுகையில் பிள்ளைகளை சுமந்திருத்தல்

03- பாம்பு, தேளை கொல்வது

04- அவசியம் ஏற்படின் திரும்புதல்

05- தொழுகையில் அழுதல்

06- தவறு ஏற்பட்டால் ஆண்கள் தஸ்பீஹ் செய்வது, பெண்கள் கை தட்டுவது.

07- இமாம் விடும் தவறை திருத்துதல்.

08- தொழுகையில் கையால் அல்லது விரலால் ஸலாத்திற்கு சைகை மூலம் பதில் கூறல். (கையின் உட்பகுதியை பூமியின் பக்கமும், வெளிப்பகுதியை மேல் அசைத்தும் காட்டுதல்)

09- அவசியமான சந்தர்ப்பங்களில் தொழுபவருக்கு விளங்கும் வண்ணம் செய்கையில் கூறுதல்.

10- புகழுக்குரிய தேவை ஏற்படின் அல்லாஹ்வை புகழ்தல்.

11- எச்சில், மூக்கு சிந்துவது இடது பக்கம் செய்ய வேண்டும்.

12- தொழுகையாளிக்கு இடையில் நடப்பவர்களை தடுத்தல்.

இரண்டாவது – தொழுகையில் தடுக்கப்பட்டவைகள்

1- சிந்தனையை பராக்காக்க கூடிய செயற்பாடுகளை எண்ணியவராக தொழுதல். உதாரணமாக மலசலத்தை அடக்கியவராக, அல்லது பசி, தாகத்தின் நிலையில், அல்லது சாப்பாடு தயாரான நிலையில் அல்லது தொழுகையை திசை திருப்பும் வகையில் பார்த்தல் போன்றன.

2- அவசியமற்ற செயற்பாடுகள், - தொழுகையில் பயபக்தியை இல்லாமல் செய்யக் கூடிய செயற்பாடுகளை செய்தல். உதாரணமாக தேவையின்றி அசைதல், தாடியை, கைக்கடிகாரத்தை, ஆடை, தலைப்பாகையை அசைத்தல். விரல் நெட்டி முறித்தல், கோர்வை செய்தல் போன்ற செயற்பாடுகள்

3- அவசியமின்றி தொழுகையில் திரும்புதல்.

4- இடுப்பு – இடுப்பின் கையை வைத்து தொழுதல். அது மனிதனுடைய இடுப்புப் பகுதியை குறிக்கின்றது. இன்னும் அது யூதர்களுடைய செயற்பாடாகும்.

5- தொழுகையில் வாய், மூக்கை மூடுதல்.

6- ஆடைகள், பட்டுன்களை சரி செய்தல்

7- தலைமுடிகளை கோர்தல், பின்னால் கையை கட்டுதல், மேலும் அவர் ஸூஜூது செய்தால் அவருடைய முடி நெற்றியை மறைக்காமல் இருக்க வேண்டும்.

8- கிப்லாவை நோக்கி அல்லது வலதுபக்கம் மூக்கு சிந்துதல்.

9- வானத்தின் பக்கம் பார்வையை உயர்த்துதல்.

10- தேவையின்றி கண்களை மூடுதல்

11- அளவு கடந்து கைகளை ஸூஜூதில் விரித்தல்.

மூன்றாவது – தொழுகையை முறிப்பவைகள்

1- தொழுகையின் நிபந்தைகளை இல்லாமல் செய்பவைகள். உதாரணமாக, சுத்தத்தை முறிக்கக் கூடியவைகள். வேண்டுமென்று அவ்றத்தை வெளிப்படுத்துவது, உடல் முழுவதையும் கிப்லாவை விட்டு திருப்புதல். அல்லது நீய்யத்தை துண்டித்தல்.

2- வேண்டுமென்று வாஜிப், ருகூனை விடுதல்.

3- தொழுகை அல்லாத ஏனைய செயற்களை அதிகமாக செய்தல். உதாரணம் நடத்தல், அதிகமாக அசைதல்

4- சிரித்தல்

5- வேண்டு மென்று பேசுதல்

6- வேண்டு மென்று உண்ணல், பருகல்

7- வேண்டு மென்று ரக்அத்தை, ருக்னை அதிகரித்தல்

8- இமாமுக்கு முன்னால் மஃமும் வேண்டு மென்று ஸலாம் கொடுத்தல்.