தொழுகையின் ருகூன்கள், வாஜிப்கள், சுன்னத்கள்
முதலாவது - தொழுகையின் ருகூன்கள்
தொழுகையின் ருகூன்கள்
இவற்றின் மீதே தொழுகை நிறுவப்பட்டுள்ளது. அதனை எந்த நிலையிலும் அதனை விடுவது கூடாது. இயலாமுடைய நேரத்தை தவிர ஏனைய நேரத்தில் மறதியாகவோ, வேண்டுமென்றோ விடுவது கூடாது.
1-எண்ணம்
2-பர்ளான தொழுகைக்கு எழுந்து நிற்றல்
3-ஆரம்ப தக்பீர்
4-பாத்திஹா ஓதுதல்
5-ருகூஃ
6-ருகூஃவில் இருந்து நிலைக்கு வருதல்
7-ஏழு உறுப்புக்களை கொண்டு ஸஜ்தா செய்தல்
8-இரண“டு ஸூஜூதுகளிடையே அமர்தல்
9-இறுதி அத்தஹியாத்தில் உட்காருதல்
10- இறுதி அத்தஹியாத்து ஓதுதல்
11- நபியவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்
12-ஸலாம் கூறுதல்
13-அனைத்திலும் அமைதியை பேணுதல்
14-முறைப்படி செய்தல்
1-வேண்டு மென்று விட்டால் தொழுகை பாதிலாகிவிடும். அவர் தொழுகையை மீட்டித் தொழ வேண்டும்.
2- மறதியாக விட்டால் அதற்கு இரு நிலைகள் உண்டு.
அ-ஒருவர் முதல் ரக்அத்தில் ஒரு ருக்னை விட்டார். அதனை அவர் மறந்து விட்டார். பின்னர் இரண்டாவது ரக்அத்தில் அது ஞாபகம் வந்தால் அவர் அதனை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் இரண்டாம் ரக்அத்தை முதலாம் ரக்அத்தாக செய்து மறதிக்காக ஸூஜூது செய்ய வேண்டும்.
உதாரணம் – முதலாவது ரக்அத்தில் பாத்திஹா ஓத வில்லை என்பது இரண்டாவது ரக்அத்தில் ஞாபகம் வந்தால் முதலாவது ரக்அத்தை விட்டு விட்டு இரண்டாவது ரக்அத்தை முதலாவது ரக்அத்தாக கணக்கிட்டுக் கொள்வார்.
ஆ- இரண்டாவது ரக்அத்திற்கு முன்னர் முதலாவது ரக்அத்தில் ஒரு ருக்னை மறதியாக விட்டது ஞாபகம் வந்தால் , அப்போது அவர் மறதியாக விட்டதை உடனே மீண்டும் செய்ய வேண்டும்.
உதாரணம் – ஒருவர் ருகூஃ செய்ய மறந்து விட்டார். பின்னர் ஸூஜூத் செய்யும் போது ருகூஃ செய்யவில்லை என்பது ஞாபகம் வந்தால் உடனே அவர் மீண்டும் ருகூஃ செய்து தொழுகையை பூரணமாக செய்வார்
தொழுகையின் வாஜிப்கள்
மறதியால் ஸூஜூத் செய்ய முடியாத விடயங்கள்
1-தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும் தக்பீர் கூறல்
2- ருகூஃவில் ” ஸூபஹான ரப்பில் அழீம்” என கூறல்
3-இமாமும், தனியாக தொழுபவரும் ” ஸமியல்லாஹூ லிமன் ஹமிதா” என கூறல். அது மஃமுன்களுக்கு கடமையில்லை.
4-ருகூஃவில் இருந்து எழும்பும் போது ” ரப்பனா லகல் கம்து” என கூற வேண்டும்.
5- ஸூஜூதின் போது ” ஸூபஹான ரப்பில் அஃலா” என கூற வேண்டும்.
6- ஸஜதாக்களுக்கிடையில் ” ரப்பிஃபிர்ழி” என கூற வேண்டும்.
7-முதலாவது அத்தஹியாத்திற்காக உட்காருதல்
8-முதலாவது அத்தஹிய்யாத்.
தொழுகையின் நிபந்தனைகள், ருகூன்கள், வாஜிப்கள் தவிர்ந்த ஏனையவைகள் சுன்னத்கள் ஆகும். அதவை விடுவது தொழுகையில் தாக்கத்தை செலுத்தாது. அதனை விட்டால் மறதிக்காக ஸூஜூத் செய்ய தேவையில்லை.
சுன்னத்கள் இரண்டு வகைப்படும்.
முதலாவது சொல் ரீதியான சுன்னத்கள்
1- ஆரம்ப துஆ – இது பாத்திஹாவிற்கு முன்னர் ஓதும் துஆவாகும்.
2- அஊது கூறல் - ” அஊதுபில்லாஹி மினஸ் ஷைதானிர் ரஜீம்”
3- பிஸ்மி கூறல் ” பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”
4- ருகூஃ, ஸூஜூதில் மேலதிகமாக கேட்கப்படும் தஸ்பீஹ்கள்
5- ஸஜதாவிற்கு இடையில் கேட்கப்பட்டும் ரப்பிஃபிரிலி” துஆவை அதிகமாக கேட்டல்
6- ருகூஃவில் இருந்து எழும்பும் போது ரப்பனா லகல் கம்து” என்பதை அதிகமா கேட்டல்.
7- பாத்திஹாவிற்கு பிறகு ஓதப்படும் சூறாக்களை அதிகரித்தல்.
இரண்டாவது – செயல் ரீதியாக சுன்னத்கள்.
அவை –
1- ஆரம்ப தக்பீருக்காக கையை உயர்த்துதல் அதே போன்று ருகூஃ, அதிலிருந்து எழும்புதல், இரண்டாவது ரக்அத்திற்காக எழும்புதல் போன்ற சந்தர்ப்பங்களில் கையை உயர்த்துதல்.
2- ருகூஃவிற்கு முன்னும் பின்னும் இடது கரத்தின் மீது வலது கரத்தை வைத்தல்.
3- ஸூஜூத் செய்யும் இடத்தை பார்த்தல்.
4- ஸூஜூதின் போது வயிற்றிலிருந்து கைகளை தள்ளி வைத்தல்.
5- இப்திராஷ் - இடக்காலை விரித்து வலக்காலை நட்டி உட்காருவார். பின்னர் கிப்லாவை நோக்கி தனது விரலை விரித்தவராக அவரது தொடையில் வைப்பார். அத்தஹியாத்தை தவிர அனைத்து இருப்பிலும் இவ்வாறே இருக்க வேண்டும்.
6- தவருக் என்பது – வலது காலை நட்டி வைத்து இடது காலை வலக்காலுக்கு கீழால் வெளிப்படுத்தி வைப்பதை குறிக்கும். இரண்டிற்கு அதிகமான ரக்அத்தில் தவர்ருக்கில் அமர்வது சுன்னத்தாகும்.
இப்திராஸ்
தவருக்
தொழுகையில் வாஜிபை விட்டால் என்ன செய்ய வேண்டும்.?
தொழுகையில் வாஜிபை விட்டால் என்ன செய்ய வேண்டும்.?
1- வேண்டு மென்று விட்டால் தொழுகை பாதிலாகும். அவர் தொழகையை மீட்டித் தொழ வேண்டும்.
2- மறதியாக விட்டால் அவருடைய தொழுகை கூடும். இரண்டு ஸஜதாக்கள் மறதிக்காக செய்ய வேண்டும்.