தொழுகையின் நிபந்தனைகள்

3119

தொழுகையின் நிபந்தனைகள்

முதலாவது - தொழுகையின் நேரம் வருதல்

பர்ளான தொழுகைகளை அதனுடைய நேரத்திற்கு முன்னரோ, பின்னரோ தொழுவது கூடாது. அல்லாஹ் கூறுகிறான் {நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது}
[நிஸா -103]

அதாவது குறிப்பிட்ட நேரத்தில் தொழுவதாகும்.

அபூ மூஸா அஷ்அரி ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் «நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகையின் நேரங்கள் குறித்து வினவினார். அப்போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் (வாய்மொழியாக) பதிலேதும் கூறவில்லை. (பின்வருமாறு செய்துகாட்டினார்கள்:) வைகறை புலர்ந்ததும் ஃபஜ்ர் தொழுகைக்காக இகாமத் (கூறச்) சொன்னார்கள். அப்போது (இருள் இருந்த காரணத்தால்) மக்களில் சிலர் சிலரை அறிந்துகொள்ள இயலவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (லுஹர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் லுஹ்ர் தொழுகைக்காக பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் “நண்பகலாகிவிட்டது” என்று கூறினார். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எல்லாரையும் விட அறிந்தவர்களாக இருந்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (அஸ்ர் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் உயர்ந்திருக்கவே அஸ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (மஃகரிப் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் மறைந்தபோது மஃக்ரிப் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (இஷாத் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் செம்மேகம் மறைந்தபோது இஷாத் தொழுகைக்கு இகாமத் சொன்னார்கள்.

மறுநாள் ஃபஜ்ர் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதார்கள். எந்த அளவிற்கென்றால் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஒருவர் “சூரியன் உதயமாகிவிட்டது” அல்லது “சூரியன் உதிக்கப்போகிறது” என்று கூறினார். பிறகு லுஹ்ர் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதார்கள். அது முந்திய நாள் அஸ்ர் தொழுத நேரத்திற்கு நெருக்கமாக இருந்தது. பிறகு அஸ்ர் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதார்கள். எந்த அளவிற்கென்றால் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஒருவர் “சூரியன் சிவந்துவிட்டது” என்று கூறினார்.

பிறகு மஃக்ரிப் தொழுகையைச் செம்மேகம் மறையும்வரை பிற்படுத்தினார்கள். பிறகு இஷாத் தொழுகையை இரவின் முந்திய மூன்றிலொரு பகுதி நேரமாகும்வரை பிற்படுத்தினார்கள். விடிந்ததும் வினாத்தொடுத்த அந்த மனிதரை அழைத்து “இவ்விரு (நாட்களின் தொழுகை) நேரங்களுக்கும் இடைப்பட்ட நேரமே (ஐவேளைத் தொழுகைகளின்) நேரமாகும்” என்று கூறினார்கள்» (ஆதாரம் முஸ்லிம்)

தொழுகையுடைய நேரங்கள். அவை -

1-பஜ்ருடைய நேரங்கள்

பஜ்ர் உதமாகியது முதல் இதன் நேரம் ஆரம்பிக்கின்றது. – கிழக்கு வானில் வெள்ளை வெளிப்படுவதிலிருந்து சூரியன் உதிக்கும் வரை

-ழுஹருடைய நேரம்

ழுஹருடைய நேரம் முடிந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை

4-மஃரிப் தொழுகையின் நேரம்

சூரியன் மறைந்ததிலிருந்து அடிவானிலுள்ள சிவப்பு மறையும் வரை – அதாவது செவ்வொளி என்பது சூரியன் மறையும் போது அடிவானில் தெரியும் ஒளி.

5-இஷா தொழுகையின் நேரம்

சூரியன் மறைந்ததிலிருந்து இரவின் நடுப்பகுதி வரை. நபியவர்கள் கூறினார்கள் «இஷாவுடைய நேரம் இரவின் அரைவாசி, நடுப்பகுதியாகும்» (ஆதாரம் முஸ்லிம்).

தற்காலத்தில் தொழுகை நேரங்களை அறிய கலண்டர்கள் மூலம் இலகுவாக்கப்பட்டுள்ளது.

பஜ்ர் தொழுகை

ழுஹர் தொழுகை

அஸர் தொழுகை

மஃரிப் தொழுகை

இஷா தொழுகை

அவசியமில்லை

-தொழுகையில் இறுக்கமான ஆடை. அவ்ரத்தை வெளிப்படுத்தும் மெல்லிய ஆடை, அவ்றத்தை மறைத்தல், ஆடையை கரண்டையை விட நீளமாக ஆக்குதல் போன்றன.

-உருவப்படமுள்ள ஆடையினை தொழுகையல் அணிதல்.

-கப்றுகள் உள்ள பள்ளிவாயிலில் தொழுதல். நபியவர்கள் கூறினார்கள் «உங்களுக்கு முன் இருந்தவர்கள் நபிமார்களுடைய கப்றுகளை வணக்கஸ்தலமாக ஆக்கிக்கொண்டார்கள். நீங்களும் பள்ளிகளை அவ்வாறு ஆக்க வேண்டாம். அதனை தடுப்பதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.».
(ஆதாரம் முஸ்லிம்)

பயன்கள்

1-நேரம் முடிவதற்கு முன்னர் ஒரு ரக்அத்தை அடைந்தால் அவர் அந்த தொழுகையை அடைந்து கொள்வார். நபியவர்கள் கூறினார்கள் «யார் ஒரு ரக்அத்தை அடைந்து கொள்கிறாரோ அவர் தொழுகையை அடைந்து கொள்வார்» (புஹாரி முஸ்லிம்)

2- தூக்கம், மறதி காரணமாக தவறவிடப்பட்ட தொழுகைகளை உடனே தொழுவது வாஜிபாகும். நபியவர்கள் கூறினார்கள் «யார் தொழுகையை மறந்து விடுகின்றாரோ அவர் ஞாபகம் வரும் போது தொழுது கொள்ளட்டும். அதுவே அவருக்கு பரிகாரமாகும்» (புஹாரி முஸ்லிம்)

இரண்டாவது – தொடக்குகளில் இருந்து சுத்தமாகுதல்.

1-சிறு தொடக்குகளில் இருந்து சுத்தமாகுதல்

அதற்கு வுழு செய்ய வேண்டும். நபியவர்கள் கூறினார்கள் «தொடக்குகளில் இருந்து வுழுச்செய்து சுத்தம் அடையாத வரை உங்களுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது»(ஆதாரம் புஹாரி)

2-பெருந்தொடக்கிலிருந்து சுத்தமாகுதல்

இதன் போது குளிக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்.{குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்}[மாயிதா – 06]

இதில் தொடக்கை பற்றி கூறப்பட்டுள்ளது. தொடக்குடைய ஒரு பகுதி இருப்பினும் அத் தொழுகை செல்லுபடியற்றதாகும். ஒருவர் வுழு முறிந்தால் தொழுகையை பூரணப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் அனைத்தும் சரியாக இருந்தாலே ஸலாம் கொடுக்க வேண்டும். இடையில் வுழு முறிந்தால் ஸலாம் கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டிய அசியம் இல்லை

மூன்றாவது – ஆடை,உடல்,இடம் என்பன சுத்தமாயிருத்தல்

1-ஆடையை சுத்தமாக வைத்திருத்தல்

அல்லாஹ் கூறுகிறான் {உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக}[முத்தத்திர் – 04]

ஆடையை சுத்தம் செய்தல்

2-உடலை சுத்தப்படுத்தல்

மேலுள்ள செய்தியை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகின்றது. நபியவர்கள் இரண்டு கப்றுகளை கடந்து சென்றார்கள். அப்போது சொன்னார்கள் «இவை இரண்டும் வேதனை செய்யப்படுகின்றது. அதில் ஒருவர் பெருமையடித்ததன் காரணமாகவும், மற்றவர் சிறுநீர் கழிக்கம் போது சரியான முறையில் சுத்தம் செய்யவில்லை (சிறுநீரை சுத்தம் செய்யவில்லை )என்றார்கள்» (ஆதாரம் அபூதாவுத்).

3-இடம் சுத்தமாக இருத்தல்

அரபியுடைய செய்தியில் அவர் பள்ளியில் சிறுநீர் கழித்த போது நபியவர்கள் கூறினார்கள் «அவரை விடுங்கள் (ஊற்றுங்கள்) சிறுநீர் மீது தண்ணீர் வாளியால் (நீரை நிறப்பக் கூடிய பெரிய வாளி) ஊற்றுங்கள்» (புஹாரி முஸ்லிம்)

இடத்தை சுத்தம் செய்தல்

தொழுகையும் நஜீஸூம்

ஒருவர் நஜீஸ் இருப்பது தெரியாமல் அல்லது மறதியாக தொழுதால் அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். இதனை பின்வரும் சம்பவம் உறுதிப்படுத்துகின்றது.«நபியவர்கள் தொழ வரும் போது பாதணியை கழட்டி விட்டு தொழுதார்கள். மக்களும் பாதணிகளை கழட்டினார்கள். நபியவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும் போது ஏன் நீங்கள் கழட்டினீர்கள் என நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் ”நீங்கள் கழட்டியதை பார்த்தோம், அதனால் கழட்டினோம் என்றார்கள்” அதற்கு நபியவர்கள் கூறினார்கள் ” ஜிப்ரில் அலை வந்து அதில் நஜீஸ் இருப்பதாக கூறினார்கள். உங்களில் ஒருவர் பள்ளிக்கு வந்தால் பாதணியை பிரட்டிப் பார்க்கட்டும், அதில் நஜீஸை கண்டால் அதனை பூமியில் தேய்க்கட்டும். பின்னர் அதோடு தொழட்டும்»(ஆதாரம் அபூதாவுத்).

இதிலிருந்து நஜீஸ் இருந்தால் தொழும் போது அதனை நீக்குவது வாஜிபாகும். பின்னர் தொருகையை தொடர்வார். அதனை முன்னுள்ள செய்தி உறுதிப்படுத்துகிறது. அதற்கு சக்தி பெறவில்லை என்றால் தொழுகை செல்லுபடியற்றவையாகும்.

பூமி முழுவதும் பள்ளிவாயலாகும்.

பூமி முழுவதும் பள்ளிவாயலாகும். இதிலே தொழுவது ஏற்றுக் கொள்ளப்படும். நபியவர்கள் கூறினார்கள் «பூமி எனக்கு சுத்தமாக தொழுகைக்காக சுத்தமாக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் ஒருவர் தொழ நாடினால் தொழுது கொள்ளட்டும்». (புஹாரி முஸ்லிம்)அதே போல சில இடங்கள் தடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மண்ணறையில் (ஜனாஸா தொழுகை விதிவிலக்கானது), கழிப்பறையில் தொழுதல். நபியவர்கள் கூறினார்கள் «பூமி அனைத்தும் பள்ளியாகும். மண்ணறைகளையும் கழிப்பிடத்தை தவிர» (ஆதாரம் திர்மிதி)

அதே போல் ஒட்டக தொழுவம். நபியவர்கள் கூறினார்கள் : «ஒட்டக தொழுவத்தில் தொழ வேண்டாம்» (ஆதாரம் திர்மிதி). ஒட்டக தொழுவம் – ஒட்டகங்கள் கட்டி வைக்கப்படும் இடம்.

மண்ணறையில் தொழுதல்

கழிப்பறையில் தொழுதல்

நான்காவது – அவ்றத்தை மறைத்தல்

ஆணுடைய அவ்றத் – தொப்புள் தொடக்கும் முடங்கால் வரை மறைத்தல்

தொழுகையில் பெண்ணின் அவ்றத் – முகத்தையும் கையையும் தவிர அனைத்தையும் மறைத்தல்

தோட்புயத்தை மறைத்தல்

தொழுபவர் தோட்புத்தை மறைப்பது வாஜிபாகும். நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் ஒருவர் ஒரு ஆடையோடு தொழ வேண்டாம். அதில் தோட்புயத்தை மறைக்காமல் (தோழ வேண்டாம்)» (புஹாரி முஸ்லிம்).

ஐந்தாவது – கிப்லாவை முன்னோக்குதல்

கஃபாவே கிப்லாவாகும். அல்லாஹ் கூறுகிறான். {(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும்.} (பகறா – 144)

சில விடங்களை நாம் கவனிக்க வேண்டும்.

1-மஸ்ஜிதுல் ஹராமில் கஃபாவை முன்னோக்கி தொழுவது வாஜிபாகும். ஆனால் தூரத்தில் தொழுபவர் கஃபாவுடைய திசையை நோக்கி தொழுவார். நபியவர்கள் கூறினார்கள் «கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே கிப்லா உள்ளது» (ஆதாரம் திர்மிதி).

2-பிரயாணியுடைய சுன்னத்தான தொழுகை – முடியுமானவரை தொழுகைக்காக கிப்லாவை முன்னோக்க வேண்டும். அதற்கு இயலாது போனால் பிரயாணத்தின் திசையை நோக்கி தொழ வேண்டும். நபியவர்கள் கூறினார்கள் «பிரயாணத்தின் திசையை நோக்கி சுன்னத்தான தொழுகையை நிறைவேற்ற கூடியவர்களாக இருந்தார்கள். பின்னர் வித்ர் தொழுவார்கள். வேறு எந்த தொழுகையையும் தொழவில்லை»
(ஆதாரம் அபூதாவுத்)

யார் ஹரத்தில் உள்ளே தொழுகிறாரோ

கிப்லாவை அறியாதவர் என்ன செய்ய வெண்டும்.?

கட்டங்களுக்குள் இருப்பவர்கள்ரகில் கிப்லாவை அறியவில்லையனில் அருகில் இருப்பவர்களிடம் கேட்க வேண்டும். அல்லது பள்ளிவாயின் திசை, அல்லது திசைகாட்டிகள், சூரியன், சந்திரன் ஆகியவை மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கு சக்தி பெறவில்லையானால் அவருடைய பெரும்பாண்மையான எண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான். {ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்}[தகாபுன் – 16]

யார் கஃபாவை விட்டும் தூர இடங்களில் தொழுகிறாரோ