தங்கம் வெள்ளி ஆகியவைகளின் ஸகாத்

4498

தங்கம் வெள்ளி ஆகியவைகளின் ஸகாத்

தங்கம், வெள்ளி

தங்கம்,வெள்ளி அவ்விரண்டுக்கும் பகரமாக தற்காலத்தில் பாவிக்கப் படும் நாணயங்கள்.

தங்கம், வெள்ளி ஆகியவைகளில் ஸகாத்தின் கொடுப்பதன் சட்டம்

அது வாஜிபாகும். அல்லாஹ் கூறுகிறான் {இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.[தவ்பா – 34].

நபியவர்கள் கூறினார்கள் «பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அப்போது அவர் சுவர்க்த்தின் பாதையை அல்லது நரகத்தின் பாதையை கண்டு கொள்வார்»
(ஆதாரம் முஸ்லிம்).

தங்கம், வெள்ளி ஆகியவைகளில் ஸகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள்

1. ஸகாத் கடமையாகும் பொருளுக்கு ஒரு வருடம் பூர்தியாகுதல்.

2. ஒருவருக்கே பூரண சொந்தமானதாக இருத்தல் .

3. ஸகாத் கடமையாகும் அளவை அடைந்து இருத்தல் .

தங்கம், வெள்ளி ஆகியவைகளில் ஸகாத் கடமையாவதற்கான அளவு

01-தங்கம்இருபது தீனார்களின் பொறுமதிக்கு இருந்தால் ஸகாத் கடமையாகும். அதாவது (85)கிராம்

தங்கத்திலே தீனாரின் அளவு 4கிராமும் 1/4 பங்குமாகும்

தங்கத்தில் கிராமீன் அளவு 2.25×20=85கிராம் சுத்தமான தங்கமாகும்

02.வொள்ளியின் அளவு 200 திர்கங்கலாகும் 595 கிராம்கலாகும்

வொள்ளியின் திர்கத்தின் அளவு =2.975 கிராமாகும்

கிராமிலே வெள்ளியின் அளவு =2.975×200=595 கிராமாகும்.

03- ஸகாத் கொடுக்கும் நேரம் தங்கம் வெள்ளியின் அடிப்படை பெறுமதி அடிப்படையிலே கணிக்கப்படும்

உதாரணம்:1 கிராம் தங்கத்தின் பெறுமதி 30 டொலர் என்றால் 30×85=255 டொலர்கள் இருந்தால் ஸகாத் கடமையாகும்

நாணயம்

வெள்ளி

தங்கம்

தங்கம் ,வெள்ளி ஆபரணங்களில் ஸகாத் வெளியாக்கப்பட வேண்டிய அளவு

தங்கம், வெள்ளி, நாணயங்கள் ஆகியவைகளில் பத்தில் ஒன்றில் கால்வாசி அதாவது கடமையாகும்.

ஒவ்வொரு இருபது தீனாரிலும் அரைவாசி தீனார் ஸகாத் கடமையாகும, அதற்கு அதிகமாக கூடியதில் குறைந்தாலும் அல்லது கூடினாலும் முன்னால் கூறப்பட்ட கணக்கின் பிரகாரம் கணக்கிட்டு ஸகாத் கொடுப்பார்.

வெள்ளியில் இருநூறு திர்ஹம் இருந்தால் அதில் பதினைந்து திர்ஹம் ஸகாத் கடமையாகும்,அதற்கு அதிகமாகும் ஒவ்வொரு திர்ஹமிலும் முன்னால் கூறப்பட்ட கணக்கின் பிரகாரம் கணக்கிட்டு ஸகாத் கொடுப்பார். நபியவர்கள் கூறினார்கள் «இருநூறு திர்ஹம் உன்னிடம் இருந்து அது ஒரு வருடம் பூர்த்தியானால் அதில் ஐந்து திர்ஹம் ஸகாத் கடமையாகும். தங்கம் இருபது தீனாரின் பெறுமானத்தை அடையவில்லை என்றால் உனக்கு எந்த ஒன்றும் கடமையாகாது. உன்னிடம் இருபது தீனார் இருந்து அது ஒரு வருடம் பூர்த்தியானால் அதிலே இருபதில் ஒன்றில் அரைவாசி கடமையாகும். அதனை விட அதிகமான உள்ளவற்றிற்கு அதன் பெறுமானத்தை கணக்கிட்டு கொடுக்கவும்»
(ஆதாரம் அபூ தாவூத்).

செயற்பாட்டு உதாரணம்

ஒருவரிடத்தில்9000 டொலர் இருக்கிறது, அது அவரிடத்தில் ஒருவருடம் பூரணமாக இருக்கிறது, அவருக்கு ஸகாத் கடமையாகுமா?

முதலாவதாக : ஸகாத்தின் அழவை கணிப்பது தங்கத்தின் அளவின் மூலமா அல்லது வெள்ளியின் அளவின் மூலமா , அதனை பின்வருமாறு நோக்கலாம் :

ஸகாத்தின் அளவு: 85கிராம் கலப்பற்ற தங்கமாகும்

=85×பெறுமதி கலப்பற்ற தங்கங்கத்தான் சந்தை பெறுமதிக்கு கனிக்கப்படும் தற்கால 1கிராமின் பெறுமதி 30 டொலர்கல் ஆகும்.

85×30=(2550) டொலர்கல்

அளவு 2550 டொலர்கல் ஒருவரிடம் இருந்து 1வருடம் பூர்த்தியானால் ஸகாத் கடமையாகும்.

இரண்டாவது:ஸகாத் கடமையானவர் பின்வருவதுமாறு ஸகாத்தை கணிப்பார்

ஸகாத்தின் அளவு:2.5%

9000×2.5÷100=225 டொலர்கல்

இந்நேலத்தில் இவருக்கு இவருடைய பணத்திலிருந்து 225டொலர்கல் கொடுப்பது கடமையாகும்

தங்கம், வெள்ளி ஆகியவை ஒன்றுடன் ஓன்று கலத்தல்.

ஒருவரிடத்தில் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டும் இருக்கிறது என்றாலும் இரண்டும் ஸகாத் கடமையாகும் அளவை அடையவில்லை, ஏற்றமான கருத்தின் பிரகாரம் அவைகளில் ஸகாத் கடமையாகமாட்டாது. தங்கத்திற்கு தனியாகவும் வெள்ளிக்கு தனியாகவும் வெவ்வேறாக ஸகாத் கொடுப்பார், ஒன்றை மற்ற ஒன்றுடம் கலப்பது கடமையாக மாட்டாது: ஏனென்றால் இரண்டும் வெவ்வேறு இனங்களை கொண்டது. ஒன்றை மற்றொன்றுடன் கலந்து ஸகாத் கடமையாகும் அலவை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதாக எவ்வித ஆதாரமும் வரவில்லை. நபியவர்கள் கூறினார்கள் «ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை»( புகாரி, முஸ்லிம்).

ஒருவர் தங்கம் வெள்ளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்திருந்தால் அவருக்கு ஐந்து அவ்கியாவிற்கான ஸகாத் கடமையாகும்.

ஆபரணங்களில் ஸகாத் கடமையாகுதல்.

ஆபரணங்கள் இரண்டு வகை படும்: தங்கம் வெள்ளி ஆபரணங்கள் , தங்கம் வெள்ளி அல்லாத ஆபரணங்கள்.

1-தங்கம் வெள்ளி ஆபரணங்கள்

முதல் பங்கு : சேமிப்புக்காக செய்யப் பட்ட ஆபரணங்கள், அல்லது வியாபார நோக்கில் உருவாக்கப் பட்ட ஆபரணங்கள், இவைகளில் ஸகாத் வாஜிபாகும்.

இரண்டாம் பங்கு : பாவனைக்காக செய்யப் பட்ட ஆபரணங்கள், இவைகளில் பொறுப்பை துறப்பதற்காக ஸகாத் கொடுப்பது மிக ஏற்றமானதாகும்.

«நபியவர்களிடம் ஒரு பெண் அவளது மகளுடன் வந்தாள். அப் பெண்ணின் மகளின் கையில் தங்கத்திலாலான கனமான (கைவளையல்) வளையல்கள் அணிந்திருந்தாள். அப்போது நபியவர்கள் இதற்குரிய ஸகாத்தை கொடுத்து விட்டீர்களா? என கேட்டார்கள். அதற்கு அப் பெண் “இல்லை” என்றாள். அதற்கு நபியவர்கள் “நாளை மறுமையில் இரண்டு நெருப்பாலாரான வளையல்களை அல்லாஹ் உமக்கு அணிவிப்பது உணக்கு திருப்தியளிக்குமா? என கேட்டார். உடனே அப் பெண்கள் அதனை கழட்டி நபியவர்களிடத்தில் போட்டார்கள். அதற்கு நபியவர்கள் இவை இரண்டும் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்குமுரியது என்றார்கள்.»
(ஆதாரம் அபூ தாவுத்).

சில ஆலிம்கள் ஆபரணங்களில் ஸகாத் கடமையில்லை என்பதாக குறிப்பிடுகின்றனர்கள்: ஏனென்றால் இந்த ஆபரணங்கள் பணத்தை போன்று வளரும் நோக்கில் உருவாக்கப் பட்டவை இல்லை, ஆடை, தளபாடங்கள் போன்று மனித செயற்பாட்டிக்காக உருவாக்கப் பட்ட ஒரு பொருள் ஆகும், அவை பெண்களின் தேவை மற்றும் அவர்களை அழகு படுத்தும் அலங்கார பொருளும் ஆகும். பணம் என்பதன் அடிப்படை அது வளரக் கூடியதாகவோ அல்லது வளர்த்தல் என்ற பண்பை பெறக் கூடியதாகவோ ஸகாத் கடமையாகுவதற்கு ஆகி இருப்பது அவசியமாகும்.

ஆகுமான பாவனைகள் மற்றும் அலங்காரம் ஆகியவைக்காக உருவாக்கப்பட்ட தங்க ஆபரணங்களுக்கு ஸகாத் கொடுப்பது மிக ஏற்றமானதாகும, ஏனென்றல் இந்த கருத்தே மிக ஏற்றமானதாகவும் பொறுப்பை நீக்கக் கூடியதாகவும் அமைகிறது. நபியவர்கள் கூறினார்கள் «சந்தேகமான விடயங்களை விட்டு விடு. உனக்கு உறுதியான விடயங்களை செயற்படுத்து» (ஆதாரம் புகாரி).

வெள்ளி ஆபரணம்

தங்க ஆபரணம்

2-தங்கம் .வெள்ளி அல்லாத ஆபரணம்

வைரங்கள், நீல நிற மாணிக்க கற்கள் மற்றும் முத்து போன்றவை,இவை எவ்வளவு பெறுமதியானதாக இருந்த போதிலும் வியாபார நோக்கு இருக்க வில்லையானால் ஸகாத் கடமையாக மாட்டாது,மாறாக வியாபார நோக்கம் இருந்தால் வியாபார பொருள் என்பதின் பேரில் இவைகளில் ஸகாத் கடமையாகும்

நீல நிற மாணிக்க கற்கள்

வைரம்

முத்து