ஜமாஅத் தொழுகை

2599

ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகையின் சட்டம்

சக்தியுள்ள ஆண்களுக்கு ஜமாஅத் தொழுகையை இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளது. அதனை விடுவதை பற்றி எச்சரித்துமுள்ளது. அதற்கு வராதவர்களை எரிப்பதற்கு கூட நபியவர்கள் நாடினார்கள். அதே போல கண் தெரியாதவர்களுக்கு கூட நபியவர்கள் அதனை விடுவதற்கு அனுமதியளிக்கவில்லை.

1- இதற்கு ஆதாரமாக அல்லாஹ் கூறுகிறான். {நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்}[நிஸா – 102].

அல்லாஹ் அச்ச நேரத்திலும், பிரயாணத்திலும் இதனை செய்யுமாறு ஏவியுள்ளான்.

2- அபூ ஹூறைறா ரழி கூறினார்கள் நபியவர்கள் கூறினார்கள். «ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்»(புஹாரி முஸ்லிம் )

தொழுகை வாஜிப் இல்லாதவர்களை நபியவர்கள் தீயிட நடவில்லை. மாறாக தொழுகை வாஜிபாகியும் வராத முனாபிகின்களையே நாடினார்கள்.

3- கண் தெரியாதவருடைய செய்தியில் நபியவர்கள் அவருக்கு வீட்டில் தொழ அனுமதித்தார்கள். பின்னர் நபியவர்கள் «தொழுகைக்கான அழைப்பை கேட்கிரீர்களா?».என கேட்டார். அதற்கு அவர் «ஆம்» என்றதும். அப்படியானால் அதற்கு «பதிலளிப்பீராக»(ஆதாரம் முஸ்லிம்)

4- நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புபவர்«தொழுகைக்கு அழைக்கப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) அவற்றைப் பேணி(த் தொழுது)வரட்டும். ஏனெனில்,அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுதுகொள்ளும் இன்னாரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுதுவருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறி விடுவீர்கள்.

அழகிய முறையில் நிறைவுற உளூச் செய்து, பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருபவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்; ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒருவர், இருவரின் கைத்தாங்கலில் தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு»(ஆதாரம் முஸ்லிம்)

ஜமாஅத் தொழுகையின் நுட்பமும், சிறப்பும்

1- அல்லாஹ்விற்காக நேசிக்க கூடிய சகோதரர்களின் அறிமுகம் ஏற்படுகின்றது. அவர்களிடையே அன்பு பரிமாறிப்பட காரணமாக அமைகின்றது. அது ஈமான் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

2- ஒருவர் தொடராக நாற்பது நாட்கள் தொடராக ஆரம்ப தக்பீரை அடைந்து கொள்கின்றாரோ அவர் நரக நெருப்பில் இருந்தும், நயவஞ்சகத்தில் இருந்தும் நீங்கி விடுவார். அனஸ் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் «யார் நாற்பது நாட்களுக்கு தொடராக ஜமாஅதோடு தொழுகிறாரோ அவர் இரண்டு விடயங்களை விட்டும் நீங்கிவிடுகின்றது. அவை நரகமும், நயவஞ்சகமாகும்» (ஆதாரம் திர்மிதி)

3- முஸ்லிம்களை ஒன்றிணைத்து அவர்களது உள்ளங்களை நன்மையின் பாலும் ஒற்றுமையின் பாலும் ஒன்றுபடுத்துகின்றது.

4- முஸ்லிம்கிடையே பாதுகாப்பு, உதவிகளினை மேம்படுத்துகின்றது.

5- மார்க்க உணர்வுகள் வெளிப்படுகின்றன.

6- முஸ்லிம்களின் உள்ளங்கள் ஒன்றுபடுகின்றன. ஒரே ஸப்பில் கறுப்பன், வெள்ளையன், அரபி, அஜ்னமி, பெரியவன், சிறியவன், பணக்காரன், ஏழை எல்லோருமே பக்கத்து பக்கத்தில் ஒரே இமாமிற்கு பின்னார், ஒரே நேரத்தில் ஒன்றாக தொழ வேண்டும்.

7- அல்லாஹ்வின் எதிரிகளின் கிண்ணடல்கள். முஸ்லிம்கள் பள்ளியில் தொழுகை நிறைவேற்றும் காலமெல்லாம் பலம் பொருந்தியவர்களாக இருப்பர்.

8- பாவங்கள் அழிக்கப்பட்டு, நன்மைகள் உயர்கின்றன. அபூ ஹூறைறா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் «பாவங்களை இல்லாமல் செய்யும், அந்தஸ்தை உயர்த்தும் ஒரு விடயத்தை நான் அறிவித்து தரட்டுமா என கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் ஆம் என்றார்கள். அதற்கு நபியவர்கள் ”கஷ்டமான நேரங்களில் வுழுவை பூரணமாக செய்வது,110 பள்ளிவாயல்களுக்கு அதிகமான எட்டு வைத்துச் செல்வது., ஒரு தொழுகைக்கு பின்னால் அடுத்த தொழுகையை எதிர்பார்த்திருப்பது, இவற்றை பற்றி பிடித்க் கொள்ளுங்கள். »(ஆதாரம் முஸ்லிம்)

9- தனித்து தொழுவதை விட கூட்டாக தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்தது. அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள். «அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்»(ஆதாரம் புஹாரி)

ஜமாஅத் தொழுகையை வீட்டில் தொழுதல்.

தனி நபரோ? அல்லது கூட்டாகவோ அருகில் இருக்கும் பள்ளியில், வீட்டில் தொழுவது கூடாது. ஆனால் அதான் கேட்காது போனால் அல்லது பள்ளி தூரமாக இருக்குமானால் தொழுவதில் பிரச்சினை இல்லை.