சுத்தமும் தண்ணீரும்

1935

சுத்தமும் தண்ணீரும்

சுத்தம்

மொழி ரீதியில் சுத்தம்

அசுத்தங்களை விட்டும் சுத்தமாகுதல், நீங்குதல்,

நடைமுறை ரீதியில்

தொடக்கிலிருந்து சுத்தமாகுதல், நஜீஸிலிருந்து நீங்குதல்

சுத்தத்தின் வகைகள்

சுத்தத்தின் வகைகள்

1. உள்ரங்க சுத்தம்

இது இணைவைப்பு, பாவம், அதோடு தொடர்புடைய விட்டும் நீங்கும் உளச் சுத்தத்தை குறிக்கின்றது. உள்ளத்திலிருந்து இணைவைப்பு பூரணமாக இல்லாமல் இருப்பதெ உண்மையான சுத்தமாக இருக்கின்றது. அல்லாஹ் கூறுகிறான்: {ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே!}
[தவ்பா – 28]

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: «நிச்சயாக ஒரு இறைவிசுவாசி நஜீஸாகமாட்டான்»(புஹாரி,முஸ்லிம்).

2. புறச் சுத்தம்

இது தொடக்குகளிலிருந்தும், நஜீஸ்களிலிருந்தும் உடலை சுத்தமாக்குதலை குறிக்கின்றது. மேலும் இது இரண்டு வகைப்படும்.

தொழுகையை தடுக்க கூடிய தொடக்கு

1- தொடக்கிலிருந்து சுத்தமாகுதல்

தொடக்கு – இது மனித உடம்பில் ஏற்படும் தொடக்கை குறிப்பிடுகின்றது. இது சுத்தத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் ஒரு முஸ்லிமுடைய இபாதத்தை மேற்கொள்ளாமல் தடுக்கின்றது. உதாரணமாக தொழுகை, கஃபாவை தவாப் செய்தல். இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. தொடக்கு இரண்டு வகைப்படுகின்றன.

சிறு தொடக்கு

வுழுச் செய்வதை அவசியமாக்கும் தொடக்கை இது குறிக்கும். உதாரணமாக சிறுநீர், மலம் கழித்தல், அதே போன்று வுழுவை முறிக்கும் அனைத்தும் இதனுள் அடங்கும். ஒருவர் மேற்படி காரியங்களில் இருந்து சுத்தமாக வுழு செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: {அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும்}.
[மாயிதா – 06]

வுழு சிறு தொடக்கை சுத்தப்படுத்தக் கூடியது.

பெருந் தொடக்கு

குளிப்பை அவசியமாக்கும் தொடக்கை இது குறிக்கும். உதாரணமாக உடலுறவு கொள்ளல், மாதவிடாய், அதே போன்று வுழுவை முறிக்கும் அனைத்தும் இதனுள் அடங்கும். ஒருவர் மேற்படி காரியங்களில் இருந்து சுத்தமாக வுழு செய்ய வேண்டும். : {நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்}. [மாயிதா – 06].

மேலும் ஒருவர் சுத்தத்தின் போது வுழு செய்யவோ அல்லது குளிக்கவோ இடர் ஏற்படுமிடத்து அவர் தயமும் செய்து கொள்ளலாம்.

குளிப்பு பெறுந் தொடக்கை சுத்தப்படுத்தக் கூடியது.

2. நஜீஸிலிருந்து சுத்தமாகுதல்

இது உடல், ஆடை, இடம் என்பவற்றிலிருந்து நஜீஸை நீக்குவதை குறிக்கின்றது. நஜீஸை நீக்குவது வாஜிபாகும். அல்லாஹ் கூறுகின்றான்: {உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக}. [முத்தத்திர் – 04]நபியவர்கள் கூறினார்கள்: «கப்றில் அதிகமான வேதனைகளுக்கு சிறுநீரே காரணமாகும்»(ஆதாரம் இப்னு மாஜா).

மேலும் நபியவர்கள் கூறினார்கள் : «உங்களில் ஒருவர் பள்ளியினுள் நுழைந்தால் அவரது பாதணியினை பார்க்கட்டும், அதில் நஜீஸான ஏதாவது இருப்பின் அதனை நீக்கி விட்டு தொடழட்டும்»
(ஆதாரம் அபூதாவுத்).

உடலை சுத்தப்படுத்தல்

இடத்தை சுத்தம் செய்தல்

ஆடையை சுத்தம் செய்தல்

தண்ணீர்

தண்ணீரின் வகைகள்

நீரின் வகைகள்

முதலாவது – சுத்தமான நீர்

இது தன்னளவில் சுத்தமானதோடு பிறவற்றையும் சுத்தப்படுத்தும். உதாணரமாக :

1. பரிசுத்தமான நீர்

படைக்கப்பட்டது போல நிலையாக இருக்கும் நீர். மழை, பனிக்கட்டி போல வானத்திலிருந்து இறங்கப்பட்டவை, அல்லது கடல், ஆறு, கிணறு போன்ற நிலத்தில் தேங்கி ஓடிக் கூடிய நீர். அல்லாஹ் கூறுகிறான்: {இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்}. [அல் புர்கான் – 48]

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: {அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்[அன்பால் - 11].

நபியவர்கள் பிரார்த்தனை செய்யும் போது பின்வருமாறு கேட்பார்கள்: «”யா அல்லாஹ் எனது பாவங்கை பனிக்கட்டி, நீர்களை கொண்டு கழுவுவாயாக!»(புஹாரி முஸ்லிம்).

மேலும் நபியர்கள் கூறினார்கள்: «”கடல் நீர் சுத்தமானதாகும். அதில் செத்தவைகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும்»(ஆதாரம் அஹ்மத், அபூதாவுத்).

கிணறுகள்

மழை

ஆறுகள்

கடல்கள்

2. பயன்படுத்திய நீர்

இது வுழு செய்தவர், குளித்தவரின் உடல் உறுப்புகளிலிருந்து கீழே விழும் நீரை குறிக்கின்றது. இந்த நீரை சுத்தம் செய்ய பயன்படுத்தாலாம். இதனை பின்வரும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களது செய்தி உறுதிப்படுத்துகின்றது. நபியர்களின் சில: «மனைவியர்களில் சிலர் பெரிய பாத்திரத்தில் கடமையான குளிப்பை நிறை வேற்றுவார்கள்.21 நபியவர்கள் அந் நீரில் வுழு செய்ய நாடினார்கள். அப்போது நபியவர்களது மனைவியர் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே நான் குளிப்பு கடமையான நிலையில் இருக்கிறேனே! என கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் நிச்சயாக நீருக்கு குளிப்பு கடமை கிடையாது“ என்றார்கள்»
(ஆதாரம் திர்மிதி).

3. சுத்தமான பொருள் கலந்த நீர்

இது சுத்தமான பொருள் கலந்த நீரை குறிக்கின்றது. உதாரணமாக மர இலைகள், மண், தூசியுள்ள நீர் தாங்கிகள், மேலும் அது தண்ணீர் என்ற தண்மையை மாற்றாமல் இருக்க வேண்டும். நபியவர்களது மகள் மரணித்த போது குளிப்பட்டும் சந்தர்பம் வரும் போது நபியவர்கள் கூறினார்கள்: «அவரை மூன்று அல்லது நான்கு அல்லது அதற்கு அதிகமாக கழுவுங்கள், இலந்தை கலந்த நீரை கொண்டு கழுவுங்கள். இறுதியில் கற்பூரத்தை கொண்டும் கழுவுங்கள்»
(புஹாரி முஸ்லிம்).

மண் கலந்த நீர்

நீர் தொட்டியில் உள்ள துசி

இலை கலந்த நீர்

மாற்றமடைந்த நீர்

நீர் மாற்றவடைவதை இது குறிக்கின்றது. இதன் காரணமாக நீர் என்ற நிலையில் இருந்து அது மாறிவிடும். உதாரணமாக தேனீர், பானம். இவை இரண்டையும் கொண்டு சுத்தம் செய்ய முடியாது. இதற்கு நீர் என்ற பெயர் கூறப்பட மாட்டாது.

கறி

மை

பானம்

தேனீர்

4. அசுத்தமானவை கலந்த நீர் ஆனால் மாற்றம் ஏற்படாதவை.

இது நஜீஸ் கலந்துள்ள (நீரை) குறிக்கின்றது. உதாரணமாக சிறு நீர், செத்தவை. ஆனால் நீருடைய பண்பை அந்த நஜீஸ் மாற்றவில்லை. இந்த நீர் சுத்தமானதாகும். நபியவர்கள் புழாஆ என்ற கிணற்றைப்பற்றி கூறும் போது «அதனுடைய நீர் சுத்தமாகும் அதனை எதும் நஜீஸாக்காது.»
(ஆதாரம் அஹ்மத், திர்மிதி). இங்கு கிணற்றிற்கு அருகாமையில் மக்கள் அழுக்குகளை போடக் கூடியவர்களாக இருந்தார்கள். மழை நீர் அந்த அழுக்குகளை கிணற்றிற்குள் வழிந்தோட செய்யும். ஆனாலும் அந்த கிணற்று நீர் அதிகமாக இருப்பதால் இந்த அழுக்குகள் விழுந்தாலும் அத் தண்ணீரில் எந்த மாற்றமும் ஏற்பட வில்லை.

இரண்டாவது – நஜீஸான நீர்

இது நஜீஸ் நீரில் கலந்து விடுவதை குறிக்கும். உதாரணம். சிறுநீர், செத்தவை. இதன் காரணமாக அந்த நீரின் பண்புகளான நிறம், மணம், சுவை ஆகியவையோ அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றோ மாற்றமடைந்தால் அந்த நீர் நஜீஸ் என்பது (இமாம்களின்) ஏகோபித்த முடிவாகும். இதனை பயன்படுத்த முடியாது.

செத்தவை கலந்து மாற்றமடைந்த தண்ணீர்

செத்தவை கலந்து மாறாத தண்ணீர்

கேள்வி

1. நீர் அடிப்படையில் சுத்தமானது. ஆனால் ஒரிடத்தில் தண்ணீர இருக்கிறது அது சுத்தமானதா? நஜீஸானதா? (என கேட்டால்) அடிப்படையில் அது சுத்தமானது. அதில் கஷ்டப்பட்டு தேடுவது அவசியமில்லை. மேலும் நஜீஸான நீரில் ஒருவர் இது சந்தேகம் கொண்டால் அது அடிப்படையில் நஜீஸ் ஆகும்.

2. ஸம்ஸம் நீரை கொண்டு சுத்தம் செய்யலாம். இதனை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகின்றது. நபியவர்கள் ஸம்ஸம் நீர் உள்ள வாளியை கொண்டு வரச் செய்தார்கள். பின்னர் அதனை பருகிவிட்டு, வுழுச் செய்தார்கள் (ஸஜ்ல் – பெரிய வாளி)