எட்டாவது பாடம் (இரண்டு காலுறை, பாதணி, பெண்டச், காய கட்டு போன்றவைகளில் மஸ்ஹ் செய்தல்

1037

எட்டாவது பாடம் (இரண்டு காலுறை, பாதணி, பெண்டச், காய கட்டு போன்றவைகளில் மஸ்ஹ் செய்தல்

காலுறை

காலில் அணியப்படும் தோலிலினால் செய்யப்பட்ட (காலணி)

காலுறை (சொக்ஸ்)

காலில் அணியப்படும் பஞ்சை கொண்டு செய்யப்பட்ட காலுறை

(காலில் அணியப்படும் தோல் ,பஞ்சை கொண்டு செய்யப்பட்ட ) காலுறை மீது மஸ்ஹ் செய்வதன் சட்டம்

(காலில் அணியப்படும் தோலிலினால் செய்யப்பட்ட (காலணி) காலில் அணியப்படும் பஞ்சை கொண்டு செய்யப்பட்ட ) காலுறை மீது மஸ்ஹ் செய்வதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. அது தொடர்பாக அதிகமான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. அனஸ் இப்னு மாலிக் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். «காலுறையின் மீது செய்வது பற்றி கேட்கப்பட்ட போது அவர்கள் கூறினார்கள் ” நபியவர்கள் அவ்விரண்டின் மீதும் மஸ்ஹ் கூடியவர்களாக இருந்தார்கள்»
(புஹாரி முஸ்லிம்).

(காலில் அணியப்படும் தோல் ,பஞ்சை கொண்டு செய்யப்பட்ட ) காலுறை மீது மஸ்ஹ் செய்வதின் நிபந்தனைகள்

1. சுத்தமானதின் பின்னரே அவற்றை அணிய வேண்டும். முகிரா ரழி அறிவிக்கின்றார்கள் ” «நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது (வுழு செய்யும் வேளை) நபியவர்களை காலுறையை கழற்ற முன்றேன். நபியவர்கள் அதற்கு ”அதனை விடுங்கள் அவற்றை சுத்தமாகவே அணிந்துள்ளேன்” என்றார்கள். பின்னர் அதன் மீது மஸ்ஹ் செய்தார்கள்.»(புஹாரி முஸ்லிம்).

2. காலுறை கரண்டை கால் வரை முழுவதும் மறைக்கப்பட வேண்டும். கரண்டையை மறைக்காத காலுறை மீது மஸ்ஹ் செய்ய முடியாது.

3. காலுறை சுத்தமான பொருட்களால் செய்யப்படிருக்க வேண்டும்.

4. ஆகுமான பொருட்களால் காலுறை செய்யப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக ஆண்களுக்கு பட்டாலான காலுறை அணிய முடியாது.

5 .காலுறை மஸ்ஹ் செய்ய அனுமதிக்கப்பட்ட காலம். நபியவர்கள் கூறினார்கள் ” ஊரில் இருப்பவருக்கு ஒரு நாளும் ஒரு இரவுமாகும். பிரயாணிக்கு மூன்று நாட்களாகும்” அதை விட அதிகமாக செய்ய முடியாது.

6.சிறு தொடக்கிற்கு மாத்திரமே மஸ்ஹ் அனுமதிக்கப்பட்டுள்ளது. பெருந்தொடக்கிற்கு மஸ்ஹ் செய்ய முடியாது. ஸப்வான் பின் அஸ்ஸால் ரழி அறிவிக்கின்றார்கள் «நீங்கள் பிரயாணியாக இருந்தால் காலுறை மீது மஸ்ஹ் செய்யும் படி நபியவர்கள் ஏவினார்கள். பின்னர் குளிப்பு கடமையாக்கும் செயற்பாட்டை தவிர சிறுநீர், மலம், தூக்கம் போன்றன ஏற்படும் சந்தர்ப்பங்களில் காலுறையை கழட்ட தேவையில்லை »(ஆதாரம் புஹாரி). என கூறினார்கள்.

இங்கு குளிப்பு கடமையாக்கும் நிகழ்வு ஏற்பட்டால் குளிப்பதற்காக காலுறையை கழட்ட வேண்டும். பின்னர் மீண்டும் அணிய வேண்டும்.

(காலில் அணியப்படும் தோல் ,பஞ்சை கொண்டு செய்யப்பட்ட ) காலுறை மீது மஸ்ஹ் செய்யும் முறை

ஈரக் கையால் இரண்டு கால்களின் மேற்பரப்பை மாத்திரம் மஸ்ஹ் செய்ய வேண்டும். காலின் ஆரம்பத்திலிருந்து விரல் வரை ஒரு தடவை தடவ வேண்டும். வலது காலுக்கு வலக்கரத்தையும் இடக்காலுக்கு இடக்கரத்தையும் முற்படுத்த வேண்டும். காலின் கீழ் பகுதியை மஸ்ஹ் செய்ய கூடாது. அலி ரழி அவர்கள் கூறினார்கள் «காலுறையை கீழே மஸ்ஹ் செய்வதை மேற் பகுதியில் மஸ்ஹ் செய்வதே மார்க்க நிலைப்பாடாகும். ஏனனில் நபியவர்கள் காலுறையின் (மேற்பகுதியில்) வெளிப்பகுதியில் மஸ்ஹ் செய்வதை நான் கண்டேன்»(ஆதாரம் அபூதாவுத்). என்றார்கள்

இரண்டு கைகளாலும் மஸ்ஹ் செய்தல்

(காலில் அணியப்படும் தோல் ,பஞ்சை கொண்டு செய்யப்பட்ட ) காலுறை மீது மஸ்ஹ் செய்யும் கால அளவு

ஊரில் உள்ளவருக்கு ஒரு நாளும் ஒரு இரவுமாகும். பிரயாணிக்கு மூன்று நாட்களாகும். அலி ரழி அவர்கள் கூறினார்கள். நபியவர்கள் «பிரயாணிக்கு மூன்று நாட்களும், ஊரில் உள்ளவர்களுக்கு ஒரு நாளும் (மஸ்ஹ் செய்யும் காலமாக) ஆக்கினார்கள் »
(ஆதாரம் நஸாயி).

மஸ்ஹ் செய்யும் காலத்தின் கணிப்பு

தொடக்கின் பின்னர் முதலாவது மஸ்ஹ் ஆரம்பமாகும். ஒருவர் சுத்தமான நிலையில் காலுறை அணிந்து பின்னர் தொடக்கு (சிறுநீர்,மலம்) ஏற்பட்டு பின்னர் அவர் வுழு செய்து மஸ்ஹ் செய்தால் அவருக்கு அதிலிருந்து ஒரு நாளும் ஒரு இரவும் கணக்கிலப்படும் (24 மணித்தியாலம்.)

உதாரணமாக. – ஒரு மனிதர் வுழுச் செய்து கால்களை கழுவி பின்னர் காலுறை அணிகிறார். பின்னர் சுபஹ் தொழுகிறார். காலை 10 மணியளவில் அவருக்கு (மலமே,சிறுநீரோ) சிறு தொடக்கு ஏற்பட்டு அவருடைய வுழு முறிந்து விடுகிறது. இப்போது 11 மணியளவில் லுஹா தொழ வேண்டும் என எண்ணி அவர் வுழு செய்கிறார். அப்போது காலுறை மீது மஸ்ஹ் செய்கிறார் எனின் அடுத்த நாள் காலை 11 மணி வரை அவர் காலுறை மீது தொடராக மஸ்ஹ் செய்யலாம்.

இது ஊரில் உள்ள ஒருவருக்குரிய சட்டமாகும். பிரயாணி இது போன்று மூன்று நாட்களுக்கு செய்ய வேண்டும்.

(காலில் அணியப்படும் தோல் ,பஞ்சை கொண்டு செய்யப்பட்ட ) காலுறை மீது மஸ்ஹ் செய்வதை முறிக்கும் காரியங்கள்.

1.காலம் முடிவடைதல்

2.இரண்டு காலுறையையோ அல்லது அதில் ஒன்றையோ கழட்டுதல்.

3.பெருந்தொடக்கு ஏற்படுதல். ஸப்வான் பின் அஸ்ஸால் ரழி அறிவிக்கின்றார்கள் «நீங்கள் பிரயாணியாக இருந்தால் காலுறை மீது மஸ்ஹ் செய்யும் படி நபியவர்கள் ஏவினார்கள். பின்னர் குளிப்பு கடமையாக்கும் செயற்பாட்டை தவிர சிறுநீர், மலம், தூக்கம் போன்றன ஏற்படும் சந்தர்ப்பங்களில் காலுறையை கழட்ட தேவையில்லை » (ஆதாரம் திர்மிதி). என கூறினார்கள்.

காலுறையின் மேற்பகுதியில் மஸ்ஹ் செய்தல்.

கரண்டையை மஸ்ஹ் செய்தல்

காலுறையை கழட்டுவது மஸ்ஹை முறித்து விடும்.

பெண்டச் கட்டு, பெண்டச், ப்ளாஸ்டர் ஆகியவை மீது மஸ்ஹ் செய்தல்.

பெண்டச் கட்டு

முறிவுகள் ஏற்படும் போது ஏதாவது பொருட்களை வைத்து சுற்றி கட்டுப் போடுவதை குறிக்கின்றது.

பெண்டச்

காயம், எரி காயத்தின் போது துணி போன்றவற்றால் மருந்தை வைத்து சுற்றி வைப்பதை குறிக்கும்.

பிளாஸ்டர்

மருந்தை வைத்து காயத்தின் மீது ஒட்டும் பிளாஸ்டரை குறிக்கும்.

பெண்டச் மீது மஸ்ஹ் கூடும் என்பதற்கான ஆதாரம்

ஜாபிர் ரழி அவர்கள் கூறினார்கள் «நாங்கள் பிரயாணம் சென்றோம். அப்போது எங்களில் ஒருவருக்கு கல் பட்டு காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு குளிப்பு கடமையான நிலை ஏற்பட்ட போது அவர் ஸஹாபாக்களிடம் கேட்டார், எனக்கு தயமம் செய்வதற்குரிய சலுகைகள் உண்டா? என. அப்போது ஸஹாபாக்கள் நீர் தண்ணீரை பெற்றால் உனக்கு தயமம் செய்ய சலுகை இல்லை என அவர்கள் கூறினார்கள். அப்போது அம் மனிதர் குளித்தார். பின்னர் மரணித்து விட்டார். ஸஹாபாக்கள் நபியவர்களிடம் வந்து நடந்தவற்றை கூறினார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள் ” அவரை கொலை செய்து விட்டீர்கள், அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது உண்டாவதாக நீங்கள் அறியாதவைகளை மற்றவர்களுக்கு சொல்லாதீர்கள். அறியாமைக்கு உரிய நிவாரணம் கற்றலாகும். அவருடைய காயத்தில் துணியால் கட்டி விட்டு அதன் மீது செய்திருக்கலாம். பின்னர் உடலின் ஏனையை பகுதிகளை அவர் கழுவியிருக்கலாம் என்று கூறினார்கள்»(ஆதாரம் அபூதாவுத்).

பெண்டச், பிளாஸ்டர் மீது மஸ்ஹ் செய்வதற்கான நிபந்தனைகள்

1. பெண்டச் காயத்தில் மாத்திரமே அணியப்பட வேண்டும். அதற்கு மேலதிகமான இடங்களில் அணியக் கூடாது.

2. அதனை கட்டும் போது வுழுவில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கென்று கால எல்லை கிடையாது. அதனை அணியும் காலமெல்லாம் மஸ்ஹ் செய்யலாம். தொடக்குகள் ஏற்பட்டாலம் மஸ்ஹ் செய்வது கூடும். எப்போது காய கட்டை கழட்ட வேண்டம் என்ற அவசியம் ஏற்படுகின்றதோ அப்போது அதனை அவசியம் கழட்ட வேண்டும். வுழுச் செய்யும் போது அதன் மீது கழுவ வேண்டும்.

3. ப்ளாஸ்டரை பொருத்தவரை அதனை கழட்டுவதும் அதனை ஒட்டுவதும் இலகுவான ஒன்றாகும். அதில் கவனிக்க –

- அதனை கழட்டுவது இலகுவான சந்தர்ப்பங்களில் பாதிப்பு இல்லை என்ற போது அதன் கீழுள்ளவற்றை கழுவ வேண்டும். அதனை கழட்டுவதால் காயம் இலேசாகாது எனின் அதன் கீழுள்ளவைகளை கழுவி பின்னர் ஒட்டலாம்.

- அதனை கழட்டுவது கஷ்டம் எனின் பாதிப்பு ஏற்படாது எனின் அதன் கீழுள்ள பகுதியை கழுவ வேண்டும். அதனை கழட்டுவது காயம் குணமடைய தாமதம் ஏற்படும் என்றிருப்பின் வுழுவுடைய அந்த உறுப்பை மஸ்ஹ் செய்ய வேண்டும்.

பெண்டச், பிளாஸ்டர் மீது மஸ்ஹ் செய்யும் முறை

ஒருவர் அவ்வுறுப்பை சுத்தம் செய்ய வேண்டி வந்தால் அதில் அப்பொருள் ஏதாவது இருப்பின் அதனை சூழ உள்ளவற்றை கழுவ வேண்டும். பின்னர் அது பூராகவும் மஸ்ஹ் செய்ய வேண்டும். போடப்பட்டுள்ள கட்டு அல்லது பேன்டேச் உறுப்பை விட்டு தாண்டியதாக இருந்தால் அதனை சுத்தம் செய்வது அவசியமாகும். அதன் மீது மஸ்ஹ் செய்ய தேவையில்லை.

பெண்டச் (பெரியது) மீது மஸ்ஹ் செய்யும் முறை

காய கட்டு மீது மஸ்ஹ் செய்யும் முறை

ப்ளாஸ்டர் மீது மஸ்ஹ் செய்தல்.

மஸ்ஹ் செய்யும் காலத்தை கணக்கிடுவது எப்படி?

ஒரு மனிதர் வுழுச் செய்து கால்களை கழுவி பின்னர் காலுறை அணிகிறார். பின்னர் சுபஹ் தொழுகிறார். காலை 10 மணியளவில் அவருக்கு (மலமே,சிறுநீரோ) சிறு தொடக்கு ஏற்பட்டு அவருடைய வுழு முறிந்து விடுகிறது. இப்போது 11 மணியளவில் லுஹா தொழ வேண்டும் என எண்ணி அவர் வுழு செய்கிறார். அப்போது காலுறை மீது மஸ்ஹ் செய்கிறார் எனின் அடுத்த நாள் காலை 11 மணி வரை அவர் காலுறை மீது தொடராக மஸ்ஹ் செய்யலாம்.

இது ஊரில் உள்ள ஒருவருக்குரிய சட்டமாகும். பிரயாணி இது போன்று மூன்று நாட்களுக்கு செய்ய வேண்டும்.