உழ்கிய்யா

822

உழ்கிய்யா

உழ்கிய்யா

அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக பலியிடும் நாளில் அறுக்கப்படும் பிராணிகள்

உழ்கிய்யாவின் சட்டம்

அது வலியுருத்தப்பட்ட சுன்னத்தாகும். அல்லாஹ் கூறுகிறான் {இன்னும் அவனுக்காக அறுத்துப் பலிடுவீராக} [அல்கவ்தர் – 12].

அனஸ் ரழி கூறினார்கள்«நிச்சயமாக நபி ஸல் அவர்கள் கொம்புள்ள (அம்லஹ் என்றால் கறுப்பும் வெள்ளையும் வந்தது. ஆனால் வெள்ளை அதிகமாக இருக்கும் )இரண்டு ஆடுகளை (அக்ரன் என்றால் கொம்புள்ளது ஆகும்)உழ்கிய்யா கொடுத்தார்கள். பிஸ்மில் சொல்லி தக்பீர் சொனார்கள். அவைகளின் மேலில்(அது கழுத்திற்கு பக்கமாக உள்ள பகுதியாகும்.கால் வைத்தார்» (ஆதாரம் புகாரி)

உழ்கிய்யா பலியிடுவதற்கான நேரம்

அதனுடைய நேரம் பெருநாள் தொழுததில் இருந்து இறுதி அய்யாமுத்தஸ்ரிகின் சூரியன் மறையும் நேரமாகும்.

(துல் ஹஜ் மாதம் 11 12 13வது நாள் ஆகும்)

உழ்கிய்யா கொடுக்கப்படுபவர்கள்

01- ஓர் ஆடு ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படும். அவரோடு விரும்பியவர்களை சேர்த்துக் கொள்ளலாம் நபி ஸல் அவர்கள் உழ்கிய்யாவை பலியிடும் போது «பிஸ்மில் சொல்லி முஹம்மதையும் முஹம்மதின் குடும்பத்தையும் முஹம்மதின் சமூகத்தையும் பொருந்திக்கொல்வாயாக». (புஹாரி முஸ்லிம்) என்றார்கள்

02-ஏழு பேருக்காக மாட்டையும் ஒட்டகத்தையும் வழங்கலாம். ஏழு பேர் மாட்டிலும் ஒட்டகத்திலும் சேர்ந்து கொள்ள முடியும். «நபி ஸல் அவர்கள் ஒட்டகத்திலும்(பதனா: ஆண் ஒட்டகம் அல்லது பெண் ஒட்டகம்)மாட்டிலும் ஒவ்வெரு ஏழு பேரையும் சேர சொன்னார்கள்». (ஆதாரம் முஸ்லிம்) என ஜாபிர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உழ்கிய்யா கொடுப்பதில் சுன்னத்தானவர்கள்

1-ஆறு மாதம் வயதுடைய செம்பரி ஆடு.

2- ஒரு வயதுடைய நாட்டு ஆடு.

3-இரண்டு வயதுடைய மாடு.

4-ஐந்து வயதுடைய ஒட்டகம்.

உழ்கியாக்களில் மிக சிறந்தது

மிகச்சிறந்தது ஒட்டகத்தை பூரணமாக கொடுப்பது. அது பொறுமதி கூடியதானதும் ஏழைகளுக்கு மிக பிரயோசனமானதாகும். பின்னர் மாட்டை பூரணமாக கொடுப்பது. பின்னர் ஆடு. பின்னர் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகம். பின்னர் ஏழு பேர் சேர்ந்து ஓர் மாடு ஆகும்.

உழ்கியாவின் குறைகள்

01-கொடுப்பதற்கு தடையுள்ள குறைகள் (கொடுப்பதற்கு தடையானது : உழ்கிய்யா கொடுக்க முடியாதது)

-குறுடான மிருகம்

பார்வையில் குரையுள்ளது மேலும் பார்வையற்றது

-முடமான மிருகம்

நடக்க சக்தி அல்லாதது

-மெலிந்த மிருகம்

வேடிக்கையானது மூளை இல்லாதது

-நோயுள்ள மிருகம் என அறியப்பட்ட மிருகம்

அதற்கு ஆதாரம், பராஃ பின் ஆஸிப் ரழி அறிவிக்கிறார்கள். நிச்சயமாக நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «கண்குருடான, நொண்டி, சுகயீணமுற்ற, மெலிந்த மிருகங்களை (மூளை அற்றது) உழ்கிய்யா கொடுக்கக் கூடாது” என்றார்கள் »
(ஆதாரம் முஸ்லிம்) இப்படி குறையுற்றவற்றையும் அது போல உள்ளவைகளையும் குறிக்கின்றது.

2-கொடுப்பதற்கு தடை அல்லாத குறைகள்

-வால் அற்றது

வால் அற்றது

-கொம்பு அற்றது

கொம்பு படைக்கப்படாதது

-விதை துண்டிக்கப்பட்டது

விதை துண்டிக்கப்பட்டதைக் குறிக்கும்

-காது கிழிந்தது, கொம்பு உடைந்தது.

உழ்கிய்யாவில் கொடுக்க முடியும், கொடுக்க முடியாது என்பதை போல தான் பித்யாவிலும் ஹத்யுவிலும் சொல்லப்படும் .

மூளை இல்லாதது

குறுடானது

நொண்டியானது

கொம்பு உடைந்தது

கொம்பு இல்லாதது

வால் இல்லாதது

உழ்கிய்யாவை பங்கு பிரித்தல்

அதற்கு சொந்தக்காரர் 1/3 பங்கை உண்ண முடியும். 1/3 பங்கை ஹத்யு கொடுப்பார். 1/3 பங்கை ஸதகா கொடுப்பார்.

அனைத்தையும் ஸதகா கொடுத்தாலும் கூடும். அதற்கு அதிகமாக உண்ணவும் முடியும்.

பயன்கள்

யார் உழ்கியாவை நாடுகிறாரோ அவர் 10 நளைக்கு அறுக்கும் வரையில் அவருடைய முடியையும் நகத்தையும் அவருடைய உடம்பில் இருந்து எடுக்கக் கூடாது.

உம்மு ஸலமா அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «10வது நாள் வந்து உங்களில் ஒருவர் உழ்கிய்யா கொடுக்க நாடினால் அவரின் உடம்பிலிருந்து எதையும் அகற்ற மாட்டார்»
(ஆதாரம் முஸ்லிம்), உழ்கிய்யா கொடுப்பவரின் குடும்பம் உழ்ஹியாவை எடுப்பதற்கு தடை கிடையாது.