இயற்கையான சுன்னத்துகள்

1431

இயற்கையான சுன்னத்துகள்

அழகிய குணங்களை, அழகான அம்சங்களையும் மனிதர்கள் மீது அல்லாஹ் இயற்கையாகவே ஏற்படுத்தியுள்ளான்.

ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் «இயற்கை மரபுகள் பத்தாகும். (அவை) மீசையை கத்தரிப்பது,தாடியை வளரவிடுவது, பற்துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் இடைகளை கழுவுதல், அக்குள் முடிகளை அகற்றுதல்,மர்ம உறுப்புக்களின் முடிகளை அகற்றுதல், (மலசலம் கழித்த பின்) தண்ணீரால் சுத்தம் செய்வது போன்றனவாகும்»(ஆதாரம் முஸ்லிம்)

பற்துலக்குதல்

அராக் மரத்தினுடைய தண்டு அல்லது அது போன்ற வற்றின் மூலம் பற்களை சுத்தம் செய்யலாம். அதன் மூலம் பற்களில் உள்ள அழுக்குகளையும் துர்நாற்றத்ததையும் நீக்கலாம்.

அனைத்து நேரங்களிலும் பற்துலக்குவது சுன்னதாக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் கூறினார்கள் «பற்துலக்குவது வாய்யை சுத்தப்படுத்துவதோடு அல்லாஹ்விடத்தில் விரும்பத்த ஒன்றுமாகும்»
(ஆதாரம் அஹ்மத்).

என்றாலும் பின்வரும் சந்தர்ந்ப்பங்களில் பற்துலக்கலாம்.

1. வுழுச் செய்யும் போது

நபியவர்கள் கூறினார்கள். «எனது உம்மத்திற்கு சிரமமில்லை எனின் ஒவ்வொரு வுழுவிலும் பற்துலக்குமாறு நான் ஏவியிருப்பேன்»(ஆதாரம் அஹ்மத்).என கூறினார்கள்

பற்துலக்குதல்

2. தொழுகையின் போது

நபியவர்கள் கூறினார்கள். «எனது உம்மத்திற்கு சிரமமில்லை எனின் ஒவ்வொரு தொழுகையிலும் பற்துலக்குமாறு நான் ஏவியிருப்பேன்» என கூறினார்கள்
(புஹாரி முஸ்லிம்).

3. வீட்டினுள் நுழைந்த பின்னர்

மிக்தாம் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் «ஆயிஷா ரழி அவர்களிடம் நபியவர்கள் வீட்டினுள் நுழைந்தால் எதனை முதலில் செய்வார்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ” பற்துலக்குவார்கள்»
(ஆதாரம் முஸ்லிம்).

4. தூக்கத்திலிருந்து எழுந்த பின்னர்

ஹூதைபா ரழி அவர்கள் கூறினார்கள் «நபியவர்கள் தூங்கி எழுந்தவுடன் பற்துலக்க கூடியவர்களாக இருந்தார்கள்»(ஆதாரம் புஹாரி).

5. குர்ஆன் ஓதுவதற்கு முன்னர்

அலி ரழி அவர்கள் பற்துலக்குமாறு ஏவினார்கள். பின்னர் நபியவர்கள் கூறியதாக அறிவித்தார்கள் «ஒரு அடியான் பற்துலக்கி தொழுகைக்காக எழுந்தால் அவருக்கு பின்னால் மலக்குமார்கள் நின்று கொண்டு அவரது கிராஅத்தை கேட்கிறார்கள். அவரது வாயோடு மிக நெருக்கமாக அம் மலக்கு இருப்பார். மலக்குடைய வாயின் உட்பகுதியில் குர்ஆனை தவிர வேறு ஏதும் உட்புகுவதில்லை. எனவே குர்ஆனுக்காக வேண்டி உங்களது வாய்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.»(ஆதாரம் பஸ்ஸார்).

பற்துலக்குவதன் பயன்கள்

இது இவ்வுலகில் வாய் சுத்தத்தையும் மறுமையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் ஏற்படுத்தி தருகின்றது. மேலும் பற்களுக்கு பலத்தை ஏற்படுத்துகின்றது. பற்களுடைய ஈறுகளை வலிமையாக்கி அழகிய குரலை வழங்குவதோடு ஓர் அடியானுக்கு உற்சாகத்தையும் அளிக்கின்றது.

2) வாய் கொப்பளித்தலும் நாசிக்கு நீர் செலுத்துதலும்.

வாய் கொப்பளித்தல்

வாயினுள் தண்ணீரை நுழைத்து வாயை அசைப்பதை இது குறிக்கின்றது.

நாசிக்கு நீர் செலுத்துதல்

மூக்கினுள் நீரை செலுத்தி சிந்துவதை இது குறிக்கும்.

வாய் கொப்பளித்தல்

நாசிக்கு நீர் செலுத்துதல்

3) தண்ணீரால் சுத்தம் செய்தல்

தண்ணீரால் சுத்தம் செய்தல்

முன், பின் துவாரங்களால் ஏதேனும் வெளியேறினால் அவற்றை தண்ணீரை கொண்டு சுத்தம் செய்வதை இது குறிக்கும்.

4) மீசையை கத்தரித்தல்

அழகிற்காகவும், நேர்த்தியாக வைத்திருப்பதற்காகவும் மேலும் காபிர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாம் மீசையை கத்தரிப்பதை சுன்னத்தாக்கியுள்ளது.

5) தாடியை வளர விடுதல்.

அது வரும் போது வெட்டாமல் விட வேண்டும்.

தாடியை வெட்டுதல்

தாடியை வெட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாடியை வெட்டாமல் விட்டு விடும் படி ஏவல்கள் வந்துள்ளன. நபியவர்கள் கூறினார்கள். «மீசையை கத்தரியுங்கள்,(தாடியை கத்தரித்தல்)தாடியை வளர விடுங்கள்,(தாடியை வெட்டாமல் விட்டு விடுகள். அதில் மாற்றம் செய்ய வேண்டாம்.)நெருப்பு வணங்கிகளுக்கு மாறு செய்யுங்கள் ”(தாடியை வெட்டாமல் விட்டு விடுகள். அதில் மாற்றம் செய்ய வேண்டாம்) என கூறினார்கள்.» (ஆதாரம் முஸ்லிம்).

6) மர்ம உறுப்பைச் சுற்றியுள்ள முடிகளை அகற்றுதல்

மர்ம உறுப்பைச் சுற்றியுள்ள முடிகளை அகற்றுதல்

மர்ம உறுப்பை சூழ உள்ள முடிகளை அகற்றுவதை இது குறிக்கின்றது.

மர்ம உறுப்பைச் சுற்றியுள்ள முடிகளை அகற்றுவதன் நன்மைகள்

மர்ம உறுப்பைச் சுற்றியுள்ள முடிகளை அகற்றுவது ஒரு மனிதனது உடலினது ஆரோக்கியத்திற்கும், உடற் சக்திக்கும், அமைதிக்கும் உந்து சக்கியாக அமைகின்றது. ஏனனில் மர்ம உறுப்புக்களில் அதிகமான முடிகள் வளர்ந்திருந்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பற்றிரீயாக்கள் தோற்றம் பெற காரணமாகின்றன.

7) (ஆண்,பெண்) கத்னா செய்தல்

ஆண்களுக்கான கத்னா

ஆணுறுப்பில் முன்னால் (தலைப்பகுதியில்) உள்ள தோலை நீக்குதல்.

பெண்களுக்கான கத்னா

இது பெண்ணுறுப்பில், ஆண்குறி நுழையும் இடத்தில் உள்ள மேலதிகமான துண்டை நீக்குவதை குறிக்கும்.

நபியவர்கள் உம்மு அதிய்யாவிற்கு கூறினார்கள் «கத்னா செய்து கொள், உன் இச்சையை நீக்கிக் கொள்ளாதே. அது முகத்திற்கு பிரகாரமாகும். அது உன் கணவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும்»
(ஆதாரம் ஹாகிம்.).

ஆண்களுக்கு கத்னா செய்வது வாஜிப் ஆகும். பெண்களுக்கு சுன்னத் ஆகும். சுன்னத் செய்வதுடைய நுட்பம் – ஆண்களுடைய ஆண்குறியின் முன் பகுதியில் உள்ள தோலை நீக்குவதன் மூலம் தோலில் ஏற்படும் நஜீஸ்களை சுத்தம் செய்யலாம். பெண்களுடைய கத்னாவை பொறுத்த வரை அது அழகிற்காகவாகும்.

8) நகங்களை வெட்டுதல்

இது நீளமாக நகங்களை வளர விடாமல் வெட்டுவதை குறிக்கின்றது.

நகம் வெட்டுதல்

9) அக்குள் முடிகளை நீக்குதல்

இது அக்குள் பகுதிகளில் உள்ள முடிகளை அகற்றுவதை குறிக்கின்றது. இதன் மூலம் துர்நாற்றம் போன்ற விடயங்களில் இருந்து துப்பரவாகிக் கொள்ளலாம்.

அக்குள் முடிகளை அகற்றுதல்

10) விரல்களின் ஓரங்களை கழுவுதல்

ஓரங்கள்

விரல்களுக்கிடையுள்ள இடவுகளை குறிக்கின்றது.

சில உலமாக்கள் காதின் ஓரம், கழுத்தின் ஓரம் போன்ற மடிப்புக்கள் உள்ள உடற்பகுதிகளையும் இது உள்ளடக்குவதாக குறிப்பிடுகின்றனர்.

மடிப்புக்கள்

நாற்பது நாட்கள்

நகங்களை வெட்டுதல், அக்குள் முடிகளை அகற்றுதல், மீசையை கத்தரித்தல் போன்ற விடயங்களை நாற்பது நாட்களுக்கு மேல் அகற்றாமல் இருப்பது வெறுக்கத்தக்க ஒன்றாகும்.

அனஸ் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் «நாற்பது நட்களுக்கு மேல் மீசையை கத்தரிக்காமல், நகங்களை வெட்டாமல், அக்குள் முடிகளை வெட்டாமல், விட வேண்டாம் என நபியர்கள் அதனுடைய கால எல்லையை எமக்கு கூறினார்கள்» (அதாரம் திர்மிதி).