இஃதிகாப்

5249

இஃதிகாப்

மொழியில் ரீதியில் இஃதிகாபின் விளக்கம்

ஒன்றைப் பற்றிப்பிடத்து, அதிலேயே மனதைக் கட்டுப்படுத்தி வைத்தல்.

இஸ்லாத்தில் இஃதிகாபின் விளக்கம்

அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளியில் தரித்தல்

இஃதிகாப் சட்டமயமாதல்

இஃதிகாப் சிறந்த, மகத்தான வணக்கங்களில் ஒன்று. . ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். பின்பு அன்னாரின் மனைவியரும் இருந்தார்கள். »
(ஆதாரம் புஹாரி).

இஃதிகாப் எமக்கும், முன் சென்ற சமூகத்திற்க்கும் மார்க்கமாக்கப்பட்டது. அல்லாஹ் கூறுகின்றான்: {இன்னும் என் வீட்டைச் சுற்றிவருபவர்கள், தங்கியிருப் பவர்கள் ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மை யாக அதனை வைத்திருக்க வேண்டு மென இப்ரீஹீமிடமிருந்தும், இஸ்மாஈலி டமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கி னோம்} [அல்குர்ஆன் 2 125].

இஃதிகாபின் சட்டம்

இஃதிகாப் அனைத்துக் காலங்களிலும் செய்யப்படும் ஸுன்னத்தான வணக்கம். ரமழானின் இறுதிப்பத்தில் இருப்பது மிகச் சிறந்தது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அக்காலங்களில் தொடராக இஃதிகாப் இருந்து வந்துள்ளார்கள். (ஸாதுல் மஆத்).

இஃதிகாபின் நிபந்தனைகள்

1. நிய்யத் வைத்தல்

அல்லாஹ்வை நெருங்கவும், அவனை வணங்கவும் பள்ளியில் தரிப்பதாக உள்ளத்தால் நினைத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின் றன» (புஹாரி முஸ்லிம்).

2. ஜமாஅத் தொழுகை நடைபெறும் பள்ளியில் தான் இஃதிகாப் இருக்க வேண்டும்.

பள்ளி அல்லாதவற்றில் இஃதிகாப் இருந்தால் செல்லுபடியாக மாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான்:

ஜும்ஆப் பள்ளி

{இன்னும் நீங்கள் பள்ளியில் தனித்து இஃதிகாபில் இருக்கும் போது உங்கள் மனைவிய ருடன் கூடாதீர்கள்} [அல்குர்ஆன் 2 : 187]. நபி (ஸல்) அவர்களும் பள்ளியில்தான் இருந்துள்ளார்கள். ஜமாஅத் தொழுகை நடைபெறாத பள்ளியில் இஃதிகாப் இருப்பதானது கடமையான ஜமாஅத் தொழுகையை விட நேரிடும், அல்லது ஒவ்வொரு நேரமும் பள்ளியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும். இது இஃதிகாபுடைய நோக்கத்திற்கு முரண் படுகின்றது.

பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் ஜமாஅத் தொழுகை நடைபெற்றாலும், நடைபெறாவிட்டாலும் சகல பள்ளிகளி லும் பித்னா இல்லாவிடின் இஃதிகாப் இருக்கலாம். அவர்கள் இருப்பதால் பாலியல் ரீதியான பித்னாக்கள் ஏற்படு மென்றால் இஃதிகாப் இருக்க முடியாது.

இஃதிகாப் இருக்கும் பள்ளி ஜும்ஆப் பள்ளியாக இருப்பது நல்லது, எனினும் அது நிபந்தனை கிடையாது.

3. பெருதொடக்கிலிருந்து (குளிப்பு கடமையாவதில் இருந்து) சுத்தமாகி இருத்தல்.

குளிப்புக் கடமையானவர், மாதவிடாய்ப் பெண், பிரசவ இரத்தம் ஏற்பட்ட பெண் ஆகியோர் இஃதிகாப் இருக்க முடியாது.

நோன்பு இஃதிகாப் இருப்பதற்கான நிபந்தனையில்லை.

நோன்பு இஃதிகாப் இருப்பதற்கான நிபந்தனையாகக் கருதப்பட மாட்டாது. உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்க ளிடம் “நான் அறியாமைக் காலத்தில் மஸ்ஜிதுல் ஹராமில் ஓரிரவு இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைத்திருந்தேன்” என்று கேட்டார்கள். நபியவர்கள் «நீர் உம்முடைய நேர்ச்சையை நிறைவேற் றும்” என்றார்கள்»(ஆதாரம் புஹாரி).

நோன்பு இஃதிகாபிற்கான நிபந்தனை யாக இருந்தால் இரவில் அதனை நிறை வேற்ற முடியாது. ஏனெனில் இரவில் நோன்பு நோற்பதில்லை. அத்துடன் ஷவ்வால் மாதத்தின் முதல் பத்து தினங் களில் நபியவர்கள் இஃதிகாப் இருந்துள் ளார்கள். (ஆதாரம் முஸ்லிம்)

இந்தப் பத்து தினங்களில் நோன்பு நோற்க ஹராமான பெருநாள் தினமும் அடங்கும். மேலும் நோன்பு, இஃதிகாப் ஆகிய இரண்டும் வெவ்வேறான வணக்கங்கள், அதில் ஒன்று செல்லு படியாக மற்றது நிபந்தனையாக இடப் படமாட்டாது.

இஃதிகாப் இருக்கும் காலம்

எத்தனை நாளும், எவ்வளவு காலமும் இஃதிகாப் இருக்கலாம். எனினும் அதன் காலம் ஒரு நாளை விடக் குறையாமல் இருப்பது சிறந்தது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அவ்வாறு குறைவாக இருந்ததாக எவ்வித ஆதாரமும் இல்லை.

ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருத்தல்

இஃதிகாபிற்கு மிகச் சிறந்த காலம் இதுவே. ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். பின்பு அன்னாரின் மனைவியரும் இருந்தார்கள்»
(ஆதாரம் புஹாரி).

ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருக்க விரும்புபவர் எப்பள்ளியில் இருக்க விரும்புகின்றாரோ அதில் ரமழான் 21ம் நாள் பஜ்ர் கொழுகையுடன் நிய்யத் வைத்து இவ்வணக்கத்தில் நுழைய வேண்டும். ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமழானிலும் இஃதிகாப் இருப்பார்கள். பஜ்ர் தொழுததும் தான் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்» ( ஆதாரம் புஹாரி).

ரமழனின் இறுதிநாள் சூரிய அஸ்தமனத்துடன் இஃதிகாப் நிறைவுக்கு வந்துவிடும். பெருநாள் தினத்தின் பஜ்ருக்கு பள்ளியிலிருந்து வெளியாகு வதே அதிகமான ஸலபுகளின் முன்னோர் வழிமுறையாகும்.

இஃதிகாபின் நோக்கம்

இஃதிகாபின் நோக்கம் உலகத்தையும், அதில் லயித்திருப்பதையும் விட்டு சிறுது காலம் வணக்கத்திற்காக மாத்திரம் ஒதுங்குவதாகும், எனவே அதற்காக உள்ளத்தை உலக மோகங்களிலிருந்து விடுவித்துக் கொள்வது இஃதிகாப் இருப்பவருக்கு அவசியமாகும்.

இஃதிகாப் இருப்பவர் செய்ய அனுமதிக்கப்பட்டவை

1. உண்ணல், பருகல்- அவற்றை எடுத்து வர யாருமில்லையெனின்-, மலசலகூடம் செல்லல் போன்ற அவசியத் தேவைகளுக் காக பள்ளியிலிருந்து வெளியேறுதல். ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது தனது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை சீவி விடுவேன். (தலையை வாருதல்) அவர்கள் அடிப்படைத் தேவைக்காகவே தவிர (இஃதிகாப் இருக்கும் போது) வீட்டிற்கு வர மாட்டார்கள்»(ஆதாரம் முஸ்லிம்) .

2. முடி சீவுதல், இதற்கு ஆதாரமாக மேற்கண்ட நபிமொழியைக் கூறலாம்.

3. மக்களுடன் பயனுள்ள விடயங்களைப் பேசுதல், அவர்களின் நிலை பற்றி வ கேட்டறிதல், எனினும் இஃதிகாபின் நோக்கத்தைக் கருதி அவற்றை அளவுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

4. தனது மனைவி, உறவினர்களை சந்தித்தல், அவர்களை வழியனுப்புவதற்காக இஃதிகாப் இருக்கும் இடத்திலிருந்து வெளியே வருதல். ஸபிய்யா பின்து ஹுயைய் ரலி அவர்கள் கூறுகின்றார்கள் «நபி ஸல் அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது இரவு நேரத்தில் நான் அவர்களை சந்திக்கச் சென்று, அவர்களுடன் பேசினேன். பின்பு நான் வீடு திரும்ப எத்தனித்த போது அவர்களும் என்னுடனே சேர்ந்து வந்தார்கள்»
(எனது வீட்டிற்கு)» (புஹாரி முஸ்லிம்) .

இஃதிகாபை முறிப்பவை

1. அவசியமின்றி வேண்டுமென்றே பள்ளியிலிருந்து வெளியே வருதல். அது குறைவான நேரமாக இருந்தாலும் சரி. ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: «நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது அடிப்படைத் தேவைக்காகவே தவிர வீட்டிற்கு வர மாட்டார்கள்» (ஆதாரம் முஸ்லிம்),அத்துடன் அவ்வாறு வெளியேறும் போது இஃதிகாபின் கட்டாயக் கடமையான பள்ளியில் தரிப்பது இல்லாமல் போய் விடுகின்றது.

2. மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல். அது இரவிலானாலும் சரி. அல்லாஹ் கூறுகின்றான் : .{இன்னும் நீங்கள் பள்ளியில் தனித்து இஃதிகாபில் இருக்கும் போது உங்கள் மனைவிய ருடன் கூடாதீர்கள்}[அல்குர்ஆன் 2 : 187].

உடலுறவைப் போன்றுதான் சுயஇன்பம் அனுபவித்தல், மனைவியுடன் உடலுறவல்லாமல் வேறு விதத்தில் அனுபவித்தல் போன்ற காரணத்தால் விந்து வெளியாக்குதலும் இஃதிகாபை முறித்து விடும்.

3. இஃதிகாபை முறிப்பதாக உறுதி கொள்ளல்.

சில குறிப்பிட்ட தினங்கள் இஃதிகாப் இருக்க நிய்யத் வைத்துவிட்டு, பின்பு அதை இடைநிறுத்தினால் மீண்டும் அதனைக்க் கழாச் செய்யலாம்.

ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க விரும்பினால் பஜ்ர் தொழுததும் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (பள்ளியில் இஃதிகாப் இருக்கும் இடம்) ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருக்க விரும்பிய போது தனக்கொரு கூடாரம் அமைக்க ஏவி, (கூடாரம்) கூடாரமும் அமைக்கப்பட்டது. ஸைனப் (ரலி) அவர்களும் கூடாரம் அமைக்க ஏவி, கூடாரமும் அமைக்கப்பட்டது. ஏனைய மனைவியரும் கூடாரம் அமைக்க ஏவி, கூடாரமும் அமைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுததும் பள்ளியில் நிறைய கூடாரங்கள் இருக்கக் கண்டார் கள். நீங்கள் நல்ல விடயத்தையா விரும்பு கின்றீர்கள்?, (அதிலிருந்து நபியவர்கள் பயந்தார்கள்) என்று கேட்டுவிட்டு, தனது கூடாரத்தைக் கலைக்குமாறு பணித்தார்109 கள், இஃதிகாபையும் ரமழானில் இடை நிறுத்தினார்கள். (கூடாரத்தை அவிழ்த்தல்) ஷவ்வால் மாதத்தின் முதல்பத்தில் இஃதிகாப் இருந்தார்கள்»( புஹாரி முஸ்லிம்)

4. இஃதிகாப் இருப்பவர் நோய் விசாரிக்க செல்லவோ, ஜனாஸாவைப் பின்தொட ரவோ முடியாது, தனது இஃதிகாப் இருக்கும் இடத்தில் அல்லாஹ்வை வணங்குவதிலேயே தொடர்ந்திருப்பார்.